Advertisment

Tamil news Highlights: டெல்லியில், திமுக தலைமையில் அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 02 -04- 2023 இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil news Highlights: டெல்லியில், திமுக தலைமையில் அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

லக்னோ அணி வெற்றி

ஐபிஎல் 2023 - டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி . 194 ரன்கள் இலக்குடன் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்களே எடுத்தது.

தண்ணீர் நிலவரம்

புழல் ஏரியில் நீர்இருப்பு 2417 மில்லியன் கனஅடியாக உள்ளது; 159 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 10 கனஅடியாக உள்ளது; நீர்இருப்பு 819 மில்லியன் கனஅடியாக உள்ளது, கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 500 மில்லியன் கனஅடியாக உள்ளது; நீர்வரத்து 10 கனஅடியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:54 (IST) 02 Apr 2023
    இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து தோல்வி

    ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து தோல்வி அடைந்துள்ளார். இறுதிப்போட்டியில் இந்தோனேசிய வீராங்கனை டன்ஜங் 21-8, 21-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்



  • 22:41 (IST) 02 Apr 2023
    மேற்கு வங்க ஊர்வலத்தில் கலவரம்; அமித்ஷாவுக்கு கடிதம்

    மேற்கு வங்கத்தில் பா.ஜ.க ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் சுகாந்த மஜூம்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்



  • 21:52 (IST) 02 Apr 2023
    172 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில், 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது



  • 20:19 (IST) 02 Apr 2023
    மின்கசிவால் எல்.ஐ.சி கட்டடத்தில் தீ விபத்து; தீயணைப்புத்துறை விளக்கம்

    சென்னையில் எல்.ஐ.சி கட்டடத்தில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை கூடுதல் இயக்குனர் விஜயசேகர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், ஊழியர்கள் யாருக்கும் பாதிப்பில்லை. அதிக அளவில் பொருட்சேதங்கள் ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்களின் முயற்சியால் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்



  • 19:44 (IST) 02 Apr 2023
    பா.ஜ.க தலைவர் திலீப் கோஷின் கான்வாய் மீது கல்வீச்சு

    மேற்கு வங்கத்தில் ஹவுராவை தொடர்ந்து ஹூக்ளி நகரில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க தலைவர் திலீப் கோஷின் கான்வாய் மீது கல்வீச்சு தாக்குதல் நிகழ்ந்துள்ளது. திலீப் கோஷ் பேரணி நடத்திய நேரத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளது



  • 19:16 (IST) 02 Apr 2023
    சென்னை, எல்.ஐ.சி. கட்டடத்தில் பற்றிய தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்

    சென்னை, எல்.ஐ.சி. கட்டடத்தில் பற்றிய தீ, கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேர போராட்டத்துக்குப் பின் தீயை அணைத்தனர்.



  • 18:29 (IST) 02 Apr 2023
    சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டடத்தின் மேல் தளத்தில் தீ விபத்து

    சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டடத்தின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க 4 தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்



  • 17:58 (IST) 02 Apr 2023
    இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய விஜய்; ரசிகர்கள் உற்சாகம்

    நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கு தொடங்கியுள்ளார். அவர் கணக்கு தொடங்கிய சில நிமிடங்களில் லட்சக்கணக்கான FOLLOWERS அவரை பின் தொடர்கின்றனர்.



  • 17:41 (IST) 02 Apr 2023
    இந்திய கிரிக்கெட் வீரர் சலீம் துரானியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

    இந்திய கிரிக்கெட் வீரர் சலீம் துரானியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் உலகில் இந்தியாவின் எழுச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் சலீம் துரானி. அவரது பன்முக ஆளுமையால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்



  • 17:12 (IST) 02 Apr 2023
    நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை வெற்றி

    டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றது.

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், சூப்பர் ஓவரில் இலங்கை த்ரில் வெற்றி பெற்றது. ஆக்லாந்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.

    197 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணியில், மிட்செல் 66 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி பந்தை இஷ் சோதி சிக்சருக்கு பறக்கவிட்டார்.

    தொடர்ந்து சூப்பர் ஓவரில் இலங்கை த்ரில் வெற்றி பெற்றது.



  • 17:11 (IST) 02 Apr 2023
    நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை வெற்றி

    டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றது.

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், சூப்பர் ஓவரில் இலங்கை த்ரில் வெற்றி பெற்றது. ஆக்லாந்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.

    197 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணியில், மிட்செல் 66 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி பந்தை இஷ் சோதி சிக்சருக்கு பறக்கவிட்டார்.

    தொடர்ந்து சூப்பர் ஓவரில் இலங்கை த்ரில் வெற்றி பெற்றது.



  • 16:29 (IST) 02 Apr 2023
    கடலூர் விபத்து.. போக்குவரத்து காவலர் காயம்

    கடலூர், பண்ருட்டி அருகே வாகன சோதனையின் போது போக்குவரத்து காவலர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

    இதில், போக்குவரத்து உதவி ஆய்வாளர், இருசக்கர வாகனத்தில் வந்த 2 சிறுவர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • 15:57 (IST) 02 Apr 2023
    3824 பேருக்கு கொரோனா பாதிப்பு.. கேரளத்தில் ஒருவர் உயிரிழப்பு

    நாடு முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 3,824 பேருக்கு கொரொனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையில் டெல்லி, கேரளம், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.



  • 15:43 (IST) 02 Apr 2023
    ஆப்கானில் இங்கிலாந்து நாட்டினர் கைது

    ஆப்கானிஸ்தானில் இங்கிலாந்து நாட்டினர் 3 பேர் தாலிபான் பயங்கரவாதிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்தத் தகவலை பிரிட்டிஷ் தூதரகம் உறுதிப்படுத்தி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



  • 15:28 (IST) 02 Apr 2023
    உத்தரகண்ட் பேருந்து விபத்து

    உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் முசோரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.

    டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 22 பேர் காயமுற்றனர்.



  • 14:39 (IST) 02 Apr 2023
    ஆன்லைன் ரம்மியால் பறிபோகும் ஒவ்வொரு உயிருக்கும் ஆளுநர்தான் பொறுப்பு - செல்வப்பெருந்தகை

    “ஆன்லைன் ரம்மியால் பறிபோகும் ஒவ்வொரு உயிருக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவி தான் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும்” என்று காங்கிரஸ் சட்டபேரவை குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.



  • 14:26 (IST) 02 Apr 2023
    கூட்டணியை தேசிய தலைமையே முடிவெடுக்கும் - அண்ணாமலை

    தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேட்டி: “அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இல்லை என நான் கூறவில்லை. கூட்டணி குறித்த இறுதி முடிவை தேசியத் தலைமைதான் முடிவு செய்யும். கட்சியை வளர்ச்சியடைய செய்வதே தலைவராக எனது பொறுப்பு. பா.ஜ.க தேசிய தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவோம்” என்று கூறினார்.



  • 14:23 (IST) 02 Apr 2023
    சென்னை ஐ.சி.எஃப் காவல் நிலையத்தில் டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆய்வு

    சென்னை ஐ.சி.எஃப் காவல் நிலையத்தில் டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார். பதிவேடுகளையும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். காவல் நிலைய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி சிறப்பாக பணிபுரிந்த காவலர்களை பாராட்டி ரொக்கப் பரிசு வழங்கினார்.



  • 13:59 (IST) 02 Apr 2023
    அதிமுக கூட்டணியில் பா.ஜ.க இல்லை என நான் ஒருபோதும் கூறவில்லை - அண்ணாமலை

    பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை: “அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இல்லை என நான் ஒருபோடும் கூறவில்லை. அ.தி.மு.க கூட்டணியை அமித்ஷா உறுதி செய்தார் என்று சொல்ல முடியாது. கூட்டணியில் இருக்கிறோம் என்றுதான் கூறினார்” என்று தெரிவித்தார்.



  • 13:52 (IST) 02 Apr 2023
    தஞ்சைக்கு சுற்றுலா வந்த கேரள பேருந்து விபத்து - முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

    தஞ்சைக்கு சுற்றுலா வந்த கேரள பேருந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.



  • 13:51 (IST) 02 Apr 2023
    விசாரணை கைதிகள் பற்களை பிடுங்கிய விவகாரம்: காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

    குற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் விக்கிரமசிங்கபுரம் தனிப்பிரிவு காவலர் போகன், கல்லிடைகுறிச்சி தனிப்பிரிவு காவலர் ராஜ்குமார் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டார்.



  • 13:20 (IST) 02 Apr 2023
    நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரலாம் - இ.பி.எஸ் பேச்சு

    விழுப்புரத்தில், அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு: நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரலாம். அ.தி.மு.க-வை யாராலும் தொட முடியாது.

    வழக்குகளால் அச்சுறுத்த முடியாது. அ.தி.மு.க-வை சீண்டி பார்ப்பவர்கள் அழிந்து போவார்கள்” என்று பேசினார்.



  • 13:11 (IST) 02 Apr 2023
    அதிமுகவை சீண்டி பார்ப்பவர்கள் அழிந்து போவார்கள் - இ.பி.எஸ்

    நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரலாம்.

    அதிமுகவை யாராலும் தொட முடியாது. வழக்குகளால் அச்சுறுத்த முடியாது.

    அதிமுகவை சீண்டி பார்ப்பவர்கள் அழிந்து போவார்கள்- விழுப்புரத்தில், தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு



  • 13:04 (IST) 02 Apr 2023
    தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

    இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதி, மண்டபம் பகுதி மீனவர்களின் படகு சேதம்

    கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

    மீனவர்களிடம் இருந்து நண்டு, மீன், பணத்தை இலங்கை கடற்படையினர் பறித்ததாக புகார்



  • 12:49 (IST) 02 Apr 2023
    நிர்மலா சீதாராமன் உடன் வேலுமணி, அண்ணாமலை சந்திப்பு

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் எஸ்.பி.வேலுமணி, அண்ணாமலை தனித்தனியே சந்திப்பு

    சென்னை விமான நிலையத்தில் நடந்த சந்திப்பில் கூட்டணி குறித்து ஆலோசித்ததாக தகவல்



  • 12:48 (IST) 02 Apr 2023
    அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி வலுவாக உள்ளது

    அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த பிரச்சினையுமில்லை; கூட்டணி தொடர்கிறது

    அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக உள்ளது

    கூட்டணி குறித்து, நிர்வாகிகள் மத்தியில் அண்ணாமலை பேசியதில் எந்த சர்ச்சையும் இல்லை - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி



  • 12:28 (IST) 02 Apr 2023
    மத்திய பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

    மத்திய பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு



  • 12:28 (IST) 02 Apr 2023
    ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் நாட்களில் போக்குவரத்து மாற்றம்

    சென்னை, சேப்பாக்கத்தில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் நாட்களில் போக்குவரத்து மாற்றம்

    ஏப். 3,12,21, மே.10,14 ஆகிய தேதிகளில் மாலை 5 மணி முதல் 11 மணி வரையும், ஏப்.20, மே 6 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1 மணி முதல் 8 மணி வரையும் போக்குவரத்து மாற்றம்.

    விக்டோரியா ஹாஸ்டல் ரோடு, பெல்ஸ் சாலை, பாரதி சாலை, வாலாஜா சாலை, காமராஜர் சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் - போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு



  • 12:13 (IST) 02 Apr 2023
    விடுதலை திரைப்படம்.. பெண் மீது வழக்குப்பதிவு

    விடுதலை படத்திற்கு குழந்தைகளை அனுமதிக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரத்தில், திரையரங்கு மேலாளர் அளித்த புகாரின்பேரில் சம்பந்தப்பட்ட பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.



  • 11:31 (IST) 02 Apr 2023
    காரைக்காலில் ஓர் ஆண்டுக்கு பிறகு கொரானா தொற்று

    காரைக்கால் மாவட்டத்தில் ஒரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் கொரானா தொற்று

    கடந்த மூன்று நாட்களில் 20க்கு மேற்பட்டவருக்கு கொரோனா தொற்று பதிவு



  • 11:15 (IST) 02 Apr 2023
    ஐ.பி.எல் தொடரில் இருந்து வில்லியம்சன் விலகல்

    ஐ.பி.எல் தொடரில் இருந்து காயம் காரணமாக வில்லியம்சன் விலகல்

    வில்லியம்சன் விலகலை அதிகாரபூர்வமாக அறிவித்தது குஜராத் அணி நிர்வாகம்



  • 10:46 (IST) 02 Apr 2023
    கடந்த 24 மணி நேரத்தில் 3,824 பேருக்கு கொரோனா தொற்று

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,824 பேருக்கு கொரோனா தொற்று உறுதி . கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,389 ஆக உயர்ந்துள்ளது .



  • 10:11 (IST) 02 Apr 2023
    போப் பிரான்சிஸ் குணமடைந்து வீடு திரும்பினார்

    சுவாச தொற்றுநோய் காரணமாக ரோமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் குணமடைந்து வீடு திரும்பினார்.



  • 10:09 (IST) 02 Apr 2023
    ஓசன்னா பாடலை பாடி திரளான கிறிஸ்தவர்கள் மனம் உருக பிரார்த்தனை செய்தனர்.

    காரைக்கால் புனித தூய தேற்றரவு அன்னை பேராலயத்தில் விமர்சையாக நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனி . குருத்தோலைகளை கைகளில் ஏந்தியவாறு ஓசன்னா பாடலை பாடி திரளான கிறிஸ்தவர்கள் மனம் உருக பிரார்த்தனை செய்தனர்.



  • 10:04 (IST) 02 Apr 2023
    கிரிக்கெட் வீரர் சலீம் துரானி மரணமடைந்தார்

    இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீம் துரானி(88) காலமானார்



  • 09:20 (IST) 02 Apr 2023
    பாலியல் குற்றச்சாட்டு : கலாஷேத்ரா கல்லூரியின் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் திடீர் தலைமறைவு

    பாலியல் தொல்லை தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு அழைக்கப்பட்ட சென்னை கலாஷேத்ரா கல்லூரியின் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் திடீர் தலைமறைவு. கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகக் கடந்த 30ம் தேதி மாணவ மாணவிகளுடன் ஹைதராபாத் சென்றிருந்தார், அவர் சென்னை திரும்பிய நிலையில், தலைமறைவாகியுள்ளார் என காவல்துறை தகவல்



  • 09:15 (IST) 02 Apr 2023
    பாலியல் குற்றச்சாட்டு : கலாஷேத்ரா கல்லூரியின் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் திடீர் தலைமறைவு

    பாலியல் தொல்லை தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு அழைக்கப்பட்ட சென்னை கலாஷேத்ரா கல்லூரியின் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் திடீர் தலைமறைவு. கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகக் கடந்த 30ம் தேதி மாணவ மாணவிகளுடன் ஹைதராபாத் சென்றிருந்தார், அவர் சென்னை திரும்பிய நிலையில், தலைமறைவாகியுள்ளார் என காவல்துறை தகவல்



  • 08:51 (IST) 02 Apr 2023
    கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்

    தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம் . உதகையில் மாரத்தானை தொடங்கி வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி



  • 08:08 (IST) 02 Apr 2023
    ஐபிஎல் : இன்று

    பிற்பகல் 3.30 மணிக்கு ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதல் . இரவு 7.30 மணிக்கு மும்பை - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை.



  • 08:07 (IST) 02 Apr 2023
    விபத்து இருவர் உயிரிழப்பு

    தஞ்சைக்கு சுற்றுலா வந்த கேரள பேருந்து, ஒரத்தநாடு அருகே விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழப்பு கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது . படுகாயமடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதி



  • 08:07 (IST) 02 Apr 2023
    ஏப்ரல் 7ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்

    எடப்பாடி தலைமையில், ஏப்ரல் 7ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு தொடங்கும் கூட்டம் எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெறுகிறது.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment