பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63, காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
புல்வாமா பயங்கரவாத நினைவு தினம்
இன்று காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40 வீரர்கள் பலியான தினம் . கடந்த 2019ம் ஆண்டு பிப்.14ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
நீர் நிலவரம்
கண்ணன்கோட்டை ஏரி முழு கொள்ளளவான 500 மில்லியன் கனஅடியை எட்டியது; ஏரிக்கு நீர்வரத்து 55 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. புழல் ஏரியில் நீர்இருப்பு 3108 மில்லியன் கனஅடியாக உள்ளது; 159 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 20 கனஅடியாக உள்ளது; நீர்இருப்பு 831 மில்லியன் கனஅடியாக உள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பொங்கலூரில் பிப்ரவரி 19ல் நடக்க இருந்த ரேக்ளா போட்டிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் நடக்க இருந்த நிலையில், அனுமதி மறுக்க்ப்பட்டதால் ரேக்ளா பொட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏர்பஸ் போயிங் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து 470 விமானங்களை வாங்க ஏர் இந்தியா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் 80 பில்லியன் டாலர் மதிப்பில் இருக்கும் என தகவல். போயிங் நிறுவனத்தில் இருந்து சுமார் 200 விமானங்களை வாங்கும் முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்கது என அமெரிக்க அதிபர் ஜோ பைடென் வரவேற்றுள்ளார்.
தஞ்சாவூரில் கடந்த 2018-ம் ஆண்டு 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பால்ராஜ் என்பவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனண்தராஜ் என்பவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருமணம் செய்யாமல் ஆனந்தராஜ் சிறுமியுடன் சேர்ந்து வாழ்ந்த நிலையில், பால்ராஜ் அச்சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமாகவே இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டியுள்ளனர். டி.என்.ஏ. பரிசோதனையில் பால்ராஜ் இக்குற்றத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
நாக்பூரில் இருந்து சுமார் 90 கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் (Rake) காணாமல் போயிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது. இது குறித்து தி.மு.க எம்.எல்.ஏ ராஜா ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பி.பி.சி நிறுவனம் மோடி குறித்த கேள்வி ஆவணப்படம் வெளியிட்ட நிலையில், டெல்லியில் உள்ள பி.பி.சி அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனையில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“எந்தவொரு துடிப்பான ஜனநாயகத்துக்கும், வெளிப்படைத் தன்மையோடும் சுதந்திரமாகவும் செயல்படும் அமைப்புகள் இன்றியமையாதவை. அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் அரசியல் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன. ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, இந்திய ஜனநாயகத்தையும், ஊடகச் சுதந்திரத்தையும் பாழடித்து வருபவர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள்” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநில அரசு காட்டுப்பன்றிகளை கொல்ல 13 தொழில்முறை துப்பாக்கி சுடும் வீரர்களை பணியமர்த்தியுள்ளது. விவசாய தோட்டங்களில் புகுந்து காட்டுப் பன்றிகள் பயிர்களை அழிப்பதாகவும், விவசாயிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் புகார்கள் வந்ததையடுத்து இந்த நடவடிக்கையை மாநில அரசு எடுத்துள்ளது.
இந்திய விமானப் போக்குவரத்துத் துறைக்கு அடுத்த 15 ஆண்டுகளில் 2,000க்கும் மேற்பட்ட விமானங்கள் தேவைப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், பிராந்தியத்தில் விமானப் போக்குவரத்துத் துறைக்கான பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாற்றியமைத்தல் (MRO) மையமாக இந்தியா மாறலாம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
நாட்டில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்தும் அனைத்து வகையான நடவடிக்கையையும் எதிர்த்து மிசோரம் சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதற்கு தெலங்கானா முதல் அமைச்சர் சந்திரசேகர் ராவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அக்கட்சியின் அறிக்கையில், “தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ.யை பொம்மை போல் வைத்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பி.பி.சி. அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஆய்வுக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தியதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதற்குப் பதிலடி கொடுத்துள்ள பாஜக, “இந்திரா காந்தி பிபிசியை தடை செய்தார் என்பதை காங்கிரஸ் நினைவில் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
குரூப் 4 விடைத்தாள்களின் இருபாகங்கள் தனித்தனியாக ஸ்கேன் செய்யப்படுவதால் 36 லட்சத்திற்கும் அதிகமான விடைத்தாள்களை சரிபார்க்க வேண்டியுள்ளதால் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம்
சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய நிதித்துறை செயலாளரை தலைவராக கொண்டு 3 பேர் கொண்ட குழுவை அமைத்து பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலை வழக்கில், கைதான 7 பேரில் 2 பேரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். கோத்தகிரியில் இருந்து அவர்களை அழைத்துவரும் போது ஜோஸ்வா, கொளதம் இருவரும் மேட்டுப்பாளையம் அருகே தப்பி ஓட முயற்சிக்கும் போது இருவரையும் போலீசார் சுட்டுப்பிடித்தனர்
கோவை நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலை வழக்கில், கைதான 7 பேரில் 2 பேரை போலீசார் சுட்டுப்பிடித்தனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கோத்தகிரியில் இருந்து அவர்களை அழைத்துவரும் போது ஜோஸ்வா, கொளதம் இருவரும் மேட்டுப்பாளையம் அருகே தப்பி ஓட முயற்சிக்கும் போது இருவரையும் போலீசார் சுட்டுப்பிடித்தனர் எனக் கூறப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை: சீர்காழி அருகே பூம்புகார் கலைக் கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதி கோரி 2 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தியதை அடுத்து நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை வகுப்புகளை ரத்து செய்து கல்லூரி முதல்வர் அறிவிப்பு
மறைந்த பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு அரசு மரியாதை அளித்தமைக்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ‘தென்னிந்திய நடிகர் சங்கம்' நன்றி தெரிவித்து கடிதம்!
18.36 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் – டி.என்.பி.எஸ்.சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மலையடிவாரப் பகுதியில் விவசாயி ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த கரடி, 8 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
சென்னையில், கடந்த 3 வாரங்களில் 43,397 வாகனங்களிலிருந்த முறையற்ற வாகன பதிவு எண்களை, சரிசெய்து இருப்பதாக சென்னை போக்குவரத்து போலீஸ் தகவல்!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில், விரைவில் அப்துல் கலாம் சிலை அமைக்கப்பட உள்ளது என சென்னையில் நடைபெற்ற தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் ஐ.டி. ரெய்டு வருமான வரித்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் – பிபிசி
புதுக்கோட்டையில் ரூ.9 கோடி மதிப்பில் தயாராகிவரும் அறிவியல் தொழில்நுட்ப பூங்காவில், 10 அடி உயரத்தில் பேனா சிலை அமைக்கப்பட்டு வருகிறது
வாக்குப்பதிவு இயந்திரங்களின் பரிசோதனையை முடித்துள்ளோம். தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். புகார் மனுக்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்போம் என ஈரோடு தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி கூறியுள்ளார்
இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணப்புழக்கம் உள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35000 வழங்கக்கோரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் மறியல் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது
உயர்சிகிச்சை மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்பட்ட தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு எதிராக கார்த்திகேயன் என்பவர் தாக்கல் செய்த ரிட் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரை பணிகளுக்காக வந்த கடலூர் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த கந்தன், நெஞ்சுவலியால் உயிரிழந்துள்ளார். அக்ரஹாரம் பகுதியில் பரப்புரை செய்துகொண்டிருந்தபோது உயிரிழந்தார். அவர் அ.தி.மு.க.,வின் ஒன்றிய செயலாளரகவும் இருந்து வருகிறார்
கோவை நீதிமன்ற வளாகத்தில் நேற்று 2 பேரை வெட்டப்பட்ட வழக்கில், 5 பேர் கோத்தகிரியில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை கைது செய்ய முயற்சித்து வருகின்றனர். இக்கும்பலை சேர்ந்த ஒருவரின் செல்போன் சிக்னல் நீலகிரியில் பதிவான நிலையில், தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு பிடிக்கப்பட்டுள்ளனர்
பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனைக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
மோடி தலைமையிலான பாஜக அரசு விமர்சனங்களுக்கு பயப்படுவதையே இது காட்டுகிறது. ஜனநாயக விரோத சர்வாதிகார போக்கை இனியும் தொடர அனுமதிக்க முடியாது – காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்
2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு போட்டி என்பதே இல்லை – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
மின்னேற்ற, பொதுமின்கல மாற்று நிலையங்களுக்கான ஊக்க சலுகைகள், (31.12.2025) வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஹிண்டன்பர்க் அறிக்கை அடிப்படையில் அதானி குழுமம் மீது விசாரணை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள பி.பி.சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் வருமான வரித்துறை அதிகாரிகள்
கோவை நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டி கொல்லப்பட்ட வழக்கு
தொடர்புடையதாக கருதப்படும் நபர் உதகையில் பதுங்கி இருப்பதாக போலீசார் தகவல்
கொலையாளியின் செல்போன் எண் உதகை எல்லையை காட்டுவதாக போலீசார் தகவல்
நீலகிரி மாவட்ட எல்லையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ள போலீசார்
குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் தீவிர வாகன தணிக்கை
திருப்பத்தூரில் கண்ணாடி சேதமான காரில் இருந்த நபரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை
திருவண்ணாமலை மற்றும் கேரளா ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட நபரா என போலீஸ் சந்தேகம்
சாலை ஓரம் நின்றிருந்த காரை சுற்றி மஞ்சள் பொடி தூவப்பட்டிருந்ததால் மக்கள் அச்சம்
நாமக்கல் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை – போலீசார் விசாரணை
நாமக்கல், குமாரபாளையம் கொங்குநகர் பகுதியில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 120 சவரன் நகை கொள்ளை – போலீசார் விசாரணை
நில அபகரிப்பு வழக்கு ரத்து விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீடு மனு
4 வாரங்களுக்குள் பதிலளிக்க அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
பெரம்பூர் நகைக் கடையில் 9 கிலோ தங்கம், வைரம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு
வடமாநில கும்பல் கொள்ளையில் ஈடுபட்டதா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை
ஆந்திர, பெங்களூரு, ஐதராபாத்தில் முகாமிட்டு தனிப்படை போலீசார் விசாரணை
தென்காசியில் பெற்றோர்களால் இளம்பெண் கடத்தப்பட்ட விவகாரம்
கிருத்திகாவை உறவினர்களுடன் அனுப்ப காவல்துறை தரப்பு எதிர்ப்பு
உறவினர்களுடன் அனுப்பினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என காவல்துறை விளக்கம்
தென்காசி காவல்துறையினர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் – நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
ஆளும் அரசை எதிர்க்கட்சியினர் ஒரு போதும் பாராட்டமாட்டார்கள். எதிர்காலத்தை அதிமுகவினர் தான் நிர்ணயம் செய்ய வேண்டும் – அமைச்சர் துரைமுருகன்
உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், போலி பத்திர பதிவை ரத்து செய்யக் கோரலாம்
மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கும் உரிமையை பறிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்
மோசடி ஆவணங்கள் குறித்து விசாரிக்க மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது – தமிழக அரசு
சென்னை ஐ.ஐ.டியில் முதுநிலை ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த மாணவர் ஸ்டீபன் சன்னி ஆல்பட் தற்கொலை
விடுதி அறையில் தூக்கில் தொங்கிய மாணவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி
தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மருத்துவமனையில் மாணவர் ஸ்டீபன் உயிரிழப்பு.
மற்றொரு மாணவர் மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சி – மருத்துவமனையில் அனுமதி
சென்னை, கிண்டி காந்தி மண்டபத்தில் ரூ. 95 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சாதியிழிவு ஒழிந்த சமநிலைச் சமூகத்தைக் கொணர, பெருங்கருவியாய் இருப்பது காதல். காதல்தான் இவ்வுலகத் தலைமையின்பம் என்பான் பாரதி. உலகளாவிய அன்பைச் செழிக்கச் செய்ய நாமும் கொண்டாடுவோம் காதலர் தினம்.
“இன்னும் எத்தனை உயிர்கள் பலியானால், ஆன்லைன் ரம்மி சட்டத்துக்கு கையெழுத்து போடுவீர்கள்?” – ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் கேள்வி
வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்த அதிமுகவுடன் பாஜக கூட்டணி ஏன்?. திமுக ஆட்சியை காங்கிரஸ் கலைத்தது என்ற பிரதமரின் விமர்சனத்திற்கு முதல்வர் பதில்
பிபிசி ஆவணப்படம், அதானி விவகாரம் போன்ற சர்ச்சைகளுக்கு பிரதமர் பதிலளிக்கவில்லை. திமுக எம்.பி-க்களின் கேள்விகளுக்கு பிரதமர் பதில் சொல்லவில்லை என்றும் விமர்சனம் – முதல்வர் ஸ்டாலின்
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதில் மக்களுக்கான எதுவுமே இல்லை. பிரதமர் பதிலுரையில் வார்த்தை ஜாலம் மட்டுமே இருந்தது. முதல்வர் ஸ்டாலின்
80% வாக்குறுதிகள் நிறைவேற்றம்; மீதம் உள்ள வாக்குறுதிகளையும் ஓராண்டில் நிறைவேற்றுவோம். உங்களில் ஒருவன் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் உள்ள முக்கிய நிறுவனங்களில் வருமானவரித்துறை சோதனை. சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை