Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியா அபார வெற்றி!
இந்தியா- தென்னாப்பிரிக்கா, 4வது டி-20 கிரிக்கெட் போட்டியில், 82 ரன்கள் வித்தியாசத்தில் தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தி, இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 170 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்க அணி 87 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடரில் இரு அணிகளும் தலா 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளனர்.
Tamil News Latest Updates
சென்னை, செங்கல்பட்டில் கொரோனா அதிகரிப்பு!
சென்னை, செங்கல்பட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் சென்னையில் 286 பேர், செங்கல்பட்டில் 119 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. சென்னையில் 1,311 பேரும், செங்கல்பட்டில் 552 பேரும் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு 2,694 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பீகார், உ.பி. ரயில் சேவைகள் ரத்து!
அக்னிபத் போராட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில், தென்னக ரயில் கோட்டத்தில் இருந்து பீகார், கிழக்கு உத்தர பிரதேசம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ரயில்களை ரத்து செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அக்னிபத் திட்டம்- காங்கிரஸ் போராட்டம்
டெல்லியில், மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம். காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பங்கேற்பு
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
ஆப்கானிஸ்தானில் நடந்த குருத்வாரா தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 100 படுக்கைகளை தயார் நிலையில் வைக்க மருத்துவத்துறை செயலாளர் உத்தரவிட்டு, மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், வீட்டு தனிமையில் உள்ளவர்களை தொலைபேசி மூலம் தினசரி கண்காணிக்க வேண்டும் என்றும் மருத்துவத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் சந்தித்து பேசினார். இ.பி.எஸ்-ஐ சந்தித்த பின் ஓ.பி.எஸ் உடன் அவர் ஆலோசனை செய்தார்
அக்னிபத் திட்டம் மூலம் ஆர்.எஸ்.எஸ், பாஜக கொள்கையை இளைஞர்களுக்கு திணிக்க முயற்சி நடக்கிறது. ராணுவத்தில் சேர்ந்தால்தான் தேசப்பற்று என்றால் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் ஏன் ராணுவத்தில் சேரவில்லை? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்
பொதுக்குழுவில் தாக்கல் செய்யப்பட உள்ள தீர்மானம் இறுதி செய்யப்படவில்லை என்றும், 'பொதுச் செயலாளர்' என்ற கோஷத்தை விளம்பரத்திற்காக எழுப்புகின்றனர் என்றும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறியுள்ளார்
சென்னையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று தனது 100ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், திரு, நரேந்திர மோடி, உங்கள் அம்மா 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
அம்மா மீது உங்களுக்கு இருக்கும் அன்பை நான் நன்கு அறிவேன், ஒவ்வொரு முறை சென்னைக்கு வரும் போதும் என் அம்மாவின் உடல்நிலை குறித்து விசாரித்ததை அன்புடன் நினைவு கூர்கிறேன்.
இந்த சிறப்பான நாளில் உங்கள் இருவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனப் பதிவிட்டுள்ளார்.
தேச நலனுக்கு எதிரான அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். அக்னிபத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
திருநெல்வேலி, பேட்டை நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவித்த பெண் மீது டைல்ஸ்கள் பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. முறையாக சுவற்றில் ஒட்டப்படாத டைல்ஸ் கற்கள் தொடர்ந்து பெயர்ந்து விழுந்து வருகிறது
சென்னையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசினார்
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு இபிஎஸ் ஏன் வரவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 12 பேர் கொண்ட குழுதான் இதை முடிவு செய்கிறது. அண்ணன் ஒபிஎஸ் வந்தார் அது அவரது விருபபம் ஆனால் இபிஎஸ் ஏன் வரவில்லை என்று கேட்க கூடாது என்று பதில் அளித்துள்ளார்.
மேலும், ஒற்றையா ரெட்டையா என்பதை கட்சி முடிவு செய்யும் அதற்காக ஒருங்கிணைப்பாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் இருக்கிறார்கள். ஜெயக்குமார் இதில் முடிவு எடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.
சிதம்பர ரகசியத்தையா நான் போட்டு உடைத்தேன்? பெரும்பான்மையினர் ஒற்றைத் தலைமை வேண்டுமென்று கேட்டார்கள். அது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.. அதைத்தான் நான் சொன்னேன்.. அதில் என்ன தவறு உள்ளது?” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானத்தை இடம்பெற செய்வது குறித்து முடிவு எட்டப்படவில்லை என்றும் இது தொடர்பாபாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் என்றும் முன்னாள் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் தீர்மான குழு கூட்டம் நிறைவடைந்த நிலையில் சென்னை, கிரீன்வேஸ் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி உடன் ஜெயக்குமார், சிவி சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சந்திப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுகவில் 90% மாவட்டச் செயலாளர்கள் ஒற்றை தலைமையையே எதிர்பார்க்கின்றனர் என்று தெரிவித்துள்ள ராஜன் செல்லப்பா, கட்சியை காப்பாற்றும் ஒருவருக்காக, மற்றொருவர் தலைமையை விட்டுக் கொடுக்க வேண்டும். போராட்டத்தின் மூலம் கிடைக்கும் தலைவர்களையே அதிமுக தொண்டர்கள் ஏற்பார்கள். அதிமுகவுக்கு மிகத் திறமையான தலைமை வேண்டும். என்று கூறியுள்ளார்.
அதிமுக அலுவலகத்தில் இருந்து வெளியே வரவிடாமல் ஜெயக்குமாரை முற்றுகையிட்டு தொண்டர்கள் கோஷமிட்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், ஒற்றைத் தலைமை விவகாரத்தில் நான் ஒன்றும் சிதம்பர ரகசியத்தை உடைக்கவில்லை. அதிமுக ஒற்றைத் தலைமை கோரிக்கை உள்ளங்கை நெல்லிக்கனி போன்றது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தொண்டர்களின் உணர்வைத்தான் பிரதிபலித்தேன். அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து இன்று 3ஆம் கட்டமாக ஆலோசனை செய்தோம்.” என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 60க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் ஆதரவு என தகவல் வெளியாகியுள்ளது. நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் ஈபிஎஸ் ஒற்றை தலைமை ஏற்க ஆதரவு எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார் ஓ.பன்னீர்செல்வம். அவர் தீர்மான குழு கூட்டத்தில் பங்கேற்ற நிலையில் தற்போது அங்கிருந்து புறப்பட்டார்.
“இந்த படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?” – அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக தொண்டர்கள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர்.
சென்னை, அதிமுக அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு கோரி காவல் துறைக்கு அதிமுக சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேகதாது அணை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விவாதிக்கும் என அதன் தலைவர் கூறியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், காவிரி உரிமையை காக்க தமிழ்நாடு அரசு போராடும்; ஒருபோதும் மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் என முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஓ.பி.எஸ். ஆதரவு எதிர்ப்பு கோஷங்களால் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அ.தி.மு.க. அலுவலகத்தில் பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது. ஈ.பி.எஸ். ஆதரவு கோஷங்களும் ஒலிப்பதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமையின் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் என நெய்வேலியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அருள்மொழித்தேவன் தெரிவித்துள்ளார்.
3 லட்ச விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.61.00 கோடி மதிப்பில் குறுவை தொகுப்பு திட்டம் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு,காஞ்சி, திருவள்ளூர், வேலூர்,திருப்பத்தூர்,நீலகிரி,கோவை, திருப்பூர்,தேனி, திண்டுக்கல்,ஈரோடு, நாமக்கல்,சேலம்,தருமபுரி,கள்ளக்குறிச்சி, சிவகங்கை ராமநாதபுரம்,விருதுநகர் ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை மண்டல ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தியாகசீலர் கக்கனின் பிறந்தநாளில் அவர்தம் பெருமையை போற்றி வணங்குகிறேன். நேர்மை, எளிமை இரண்டையும் தன் அருங்குணங்களாக கொண்டு தன் வாழ்நாளெல்லாம் வாழ்ந்த அவருக்கு நிகர் அவரே.” என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ட்வீட் செய்துள்ளார்.
அதிமுக அலுவலகத்தில் தாக்கப்பட்ட முன்னாள் பகுதி செயலாளர் பெரம்பூர் மாரிமுத்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்கு சென்றுள்ளார். தற்போது பழனிச்சாமி இல்லம் முன் அவரது ஆதரவு மாவட்ட செயலாளர்கள், ஆதரவாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் வாகனத்தை சுற்றி ஜெயக்குமார் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி முழக்கமிட்டு வருகின்றனர்.
சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் தீர்மான குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார். தீர்மானக் குழு கூட்டத்தில் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோருடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் தனியாக ஆலோசனை நடத்திய நிலையில் தீர்மானக் குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் மீது தாக்குதல் நடந்துள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயக்குமாருடன் வந்த பெரம்பூர் நிர்வாகி மாரிமுத்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மாரிமுத்து ரத்தக் கறையுடன் வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் வந்த ஓ.பி.எஸ் தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதிமுக அலுவலகத்தில் ஒரு பக்கம் தீர்மான குழு ஆலோசனை நடைபெறுகிறது. மற்றொரு பக்கம் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
அதிமுக அலுவலகம் வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக கட்சி தொண்டர்கள் முழக்கமிட்டதால், அங்கு பரபரப்பு நிலவியது.
அதிமுக அலுவலகம் வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக கட்சி தொண்டர்கள் முழக்கமிட்டதால், அங்கு பரபரப்பு நிலவியது.
சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தார். ஆனால், ஈ.பி.எஸ் அலுவலகம் செல்லாமல், கிரீன்வேஸ் இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில், முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், விஜயபாஸ்கர், முக்கூர் சுப்ரமணியன், செல்லூர் ராஜூ, மோகன், பி.வி.ரமணா பங்கேற்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தான், காபூல் பகுதியில் குருத்வாராவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த செய்தி கவலை அளிக்கிறது. ஆப்கன் நிலவரம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என மத்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
வேளாண் சட்டங்களைப் போல அக்னிபாத் திட்டத்தையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்தில் 3வது நாள் தீர்மானக் குழு கூட்டம் தொடங்கியது. பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து இன்று இறுதி ஆலோசனை நடக்கிறது. பொதுக்குழு தீர்மானம் இன்று இறுதி செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படுகிறது.
டெல்லியில், மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை பங்கேற்கின்றனர்.
சென்னை, அதிமுக அலுவலகத்திற்கு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோர் இன்று வருகை தர வாய்ப்பு உள்ளது. பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து இன்றும் ஆலோசிக்க உள்ளோம். ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கலந்து ஆலோசித்தால் சுமூக முடிவு எட்ட வாய்ப்பு – வைகைச் செல்வன்
சென்னை கிரீன்வேஸ் சாலையில், ஓ.பி.எஸ் இல்லம் முன்பு அதிமுக தொண்டர்கள் அதிகளவில் திரண்டுள்ளனர். அதேநேரம் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ , முக்கூர் சுப்பிரமணியம் ஈபிஎஸ் இல்லத்துக்கு வருகை தந்துள்ளனர்.
ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை 2 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை, போர் நினைவுச்சின்னம் அருகே அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 300க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்துகின்றனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 13,216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 8,148 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும் 68,108 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லியில், மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை பங்கேற்கின்றனர்.
அக்னிபாத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவ படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10% ஒதுக்கீடு அளிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
அக்னிபாத் போராட்டத்தின் காரணமாக பின்வரும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. இப்போது இந்த ரயில்கள் கீழே உள்ள விவரங்களின்படி இயக்கப்படும்!
The following trains were earlier announced as cancelled on account of agitation. Now these trains will be run as per the details below pic.twitter.com/k1U6rkPuqL
— Southern Railway (@GMSRailway) June 17, 2022
பிரதமர் மோடி தனது தாய் ஹீராபென் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
Took blessings of my mother today as she enters her 100th year… pic.twitter.com/lTEVGcyzdX
— Narendra Modi (@narendramodi) June 18, 2022
தெலங்கானா அக்னிபத் எதிர்ப்பு போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ராகேஷ் குடும்பத்தினருக்கு, ரூ. 25 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.