/indian-express-tamil/media/media_files/iuMLwYzZrDQjpJU8ksnd.jpg)
IE Tamil Updates
பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2024-2025ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2024-2025ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது, பல்வேறு புதிய திட்டங்களை அவர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து இன்று சட்டப்பேரவையில் தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது .
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Feb 21, 2024 05:59 IST
நாகர்கோவில் அருகே தண்டவாளத்தில் கற்கள், மாட்டின் தலையை வைத்து ரயிலை கவிழ்க்க சதி?
நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில், தண்டவாளத்தில் கற்கள், மாட்டின் தலையை வைத்து ரயிலை கவிழ்க்க சதி. தண்டவாளத்தில் இருந்த பாறைகள், மீது காந்திதாம் ஹம்சஃபர் விரைவு ரயில் மோதி நின்றது. ரயில் ஓட்டுநர் அருகிலுள்ள கேட்கீப்பரிடம் தகவல் தெரிவித்த நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Feb 21, 2024 05:59 IST
நாகர்கோவில் அருகே தண்டவாளத்தில் கற்கள், மாட்டின் தலையை வைத்து ரயிலை கவிழ்க்க சதி?
நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில், தண்டவாளத்தில் கற்கள், மாட்டின் தலையை வைத்து ரயிலை கவிழ்க்க சதி. தண்டவாளத்தில் இருந்த பாறைகள், மீது காந்திதாம் ஹம்சஃபர் விரைவு ரயில் மோதி நின்றது. ரயில் ஓட்டுநர் அருகிலுள்ள கேட்கீப்பரிடம் தகவல் தெரிவித்த நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Feb 20, 2024 21:46 IST
வெள்ள பாதிப்பில் வீடுகளை சீரமைக்க, புதியதாக கட்ட ரூ. 382 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
சென்னை மற்றும் புறநகர், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் வீடுகளை சீரமைக்க, புதியதாக கட்ட 382 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. 4,577 புதிய வீடுகள் கட்ட ரூ. 199 கோடி, 9,975 வீடுகளுக்கு பழுது நீக்கம் பணிகளை மேற்கொள்ள ரூ. 182 கோடி என்று மொத்தம் ரூ. 382 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஊரக வளர்ச்சித் துறை மூலம் முழுவதுமாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாகக் கட்டுவதற்கு ரூ. 4 லட்சம் வழங்கிடவும், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ. 2 லட்சம் வரை வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
-
Feb 20, 2024 20:55 IST
சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கு: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நீதியின் கலங்கரை விளக்கம் - மு.க.ஸ்டாலின் வரவேற்பு
“சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, நீதியின் கலங்கரை விளக்கம். அரிதாகப் பயன்படுத்தும் சட்டப்பிரிவு 142-ன் கீழ் நியாயத்தை நிலை நிறுத்தியது மட்டுமல்லாமல், தேர்தல் அதிகாரியின் முறைகேட்டையும் தீர்க்கமாக ஒதுக்கியுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க-வின் சூழ்ச்சித் தந்திரங்களுக்கு எச்சரிக்கை மணியையும் இந்த தீர்ப்பு அடித்துள்ளது” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். -
Feb 20, 2024 20:51 IST
மனது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கோருகிறேன்: ஏ.வி.ராஜு
அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி. ராஜு, முன்னணி நடிகை குறித்து ஆபாச அவதூறு பேசியதாக வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், “என் கருத்தால் மனது புண்பட்டிருந்தால் த்ரிஷாவிடம் மன்னிப்பு கோருகிறேன். வேறொருவர் சொன்னதைத்தான் நான் குறிப்பிட்டேன். வலைதளங்களில் சிலர் என் மீது அவதூறான வதந்திகளை பரப்பி வருகிறார்கள்” என்று ஏ.வி. ராஜு தெரிவித்துள்ளார்.
-
Feb 20, 2024 20:43 IST
நடிகை குறித்து ஆபாச அவதூறு வீடியோ: நான் அப்படி பேசவில்லை - ஏ.வி. ராஜு பேட்டி
அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி. ராஜு, முன்னணி நடிகை குறித்து ஆபாச அவதூறு பேசியதாக வீடியோ வெளியான நிலையில், நான் அப்படி பேசவில்லை, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது, சேரன், விஷால் மற்றும் திரைத்துறையினர் பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஏ.வி. ராஜு தெரிவித்துள்ளார்.
-
Feb 20, 2024 19:49 IST
முன்னணி நடிகை குறித்து அவதூறு: மன்னிப்பு கோரினார் ஏ.வி.ராஜு
முன்னாள் அ.தி.மு.க நிர்வாகி ஏ.வி. ராஜு, தமிழ் சினிமா முன்னணி நடிகை குறித்து அவதூறு பேசியதாக வீடியோ வெளியான நிலையில், திரைத்துறையினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஏ.வி. ராஜு மன்னிப்பு கோரியுள்ளார். தன்னுடைய பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்றும் சேரன், விஷால் உள்ளிட்ட திரைப் பிரபலங்களில் மன்னிப்பு கோரியுள்ளார்.
-
Feb 20, 2024 19:35 IST
ஜனநாயகத்தை உச்ச நீதிமன்றம் காப்பாற்றியுள்ளது - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: “சூழ்ச்சியை நாடிய எதேச்சதிகர பா.ஜ.க-விடம் இருந்து ஜனநாயகத்தை உச்ச நீதிமன்றம் காப்பாற்றியுள்ளது; ஜனநாயகத்தை நசுக்கும் மோடி - அமித்ஷாவின் சதியின் ஒரு பகுதியே சண்டிக மேயர் தேர்தல் மோசடி. அரசியலமைப்பு மீதான தாக்குதலை இந்தியர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
-
Feb 20, 2024 19:04 IST
நடிகைகள் குறித்து அவதூறு பேசிய முன்னாள் அ.தி.மு.க நிர்வாகிக்கு மன்சூர் அலிகான் கண்டனம்
கூவத்தூர் விவகாரத்தில் நடிகையை தொடர்புபடுத்தி அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசியதற்கு நடிகர் மன்சூர் அலிகான் கண்டனம் தெரிவித்துள்ளார். போகிற போக்கில் நடிகைகள் குறித்து கேவலமாக பேசியிருப்பது தனது மனதை நோகச் செய்கிறது. சமூகத்தை பாதிக்கும் ஆபத்தான செயல் என மன்சூர் அலிகான் ஆடியோ வெளியிட்டுள்ளார்.
-
Feb 20, 2024 19:02 IST
நடிகை த்ரிஷா குறித்து அவதூறு - ஃபெப்சி அமைப்பு கண்டனம்
அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி. ராஜு, திரைத்துறையைக் குறித்தும் நடிகை திரிஷா குறித்தும் அவதூறு பரப்பியதற்கு ஃபெப்சி (FEFSI) அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
-
Feb 20, 2024 17:56 IST
எல். முருகன் போட்டியின்றி தேர்வு
மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். எல். முருகன் 2வது முறையாக மாநிலங்களவையில் இருந்து தேர்வாகி உள்ளார். -
Feb 20, 2024 17:52 IST
அதிமுக முன்னாள் நிர்வாகி மீது சட்ட நடவடிக்கை: நடிகை திரிஷா
கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகை த்ரிஷா ஆவேசமாக கூறியுள்ளார்.
-
Feb 20, 2024 16:47 IST
சண்டிகர் மேயர் தேர்தல்; ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி
சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக தில்லுமுல்லில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரி அனில் மசிக் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Feb 20, 2024 16:28 IST
சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அதிரடி
சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில், ஆம் ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவாக போடப்பட்ட 8 வாக்குகளை தேர்தல் அதிகாரி திட்டமிட்டு செயலிழக்க முயற்சித்துள்ளார் என்பது தெளிவாகிறது. 8 வாக்குச் சீட்டுகளும் சிதைக்கப்பட்டதால்தான் பேனாவால் குறியிட்டதாக தேர்தல் அதிகாரி நேற்று நீதிமன்றத்தில் ஆணித்தரமாக அறிக்கை அளித்தார். ஆனால் வாக்குச் சீட்டுகள் எதுவும் சிதைக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது எனறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது.
-
Feb 20, 2024 15:06 IST
வேளாண் பெருமக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு : மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
"3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்து உழவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒன்றிய பாஜக அரசு, அவர்களின் எதிர்ப்பினால் பின்வாங்கியது. போராடி வரும் விவசாயிகள் மீது தற்போது இரக்கமற்ற தாக்குதல் நடைபெறுகிறது. பசிப்பிணி போக்கும் வேளாண் பெருமக்களின் கோரிக்கைகளை செவிமடுக்கக்கூட மனமில்லாத வகையில் ஒன்றிய அரசு உள்ளது
-
Feb 20, 2024 14:54 IST
மேட்டுப்பாளையம் பழைய பேருந்து நிலையத்தில் நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆய்வு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, புதிய பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகங்கள் கட்டப்பட உள்ள நிலையில், நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆய்வு மேற்கொண்டார். இதற்காக ரூ8.63 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்
-
Feb 20, 2024 14:09 IST
தென்னிந்திய மாநிலங்களில் பானை சின்னத்தில் போட்டி : திருமாவளவன் அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில், பானை சின்னத்தை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த பின் பேட்டி அளித்த வி.சி.க தலைவர் திருமாவளவன் “வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய 5 மாநிலங்களில் விசிக போட்டியிடும்” என தெரிவித்துள்ளார்.
-
Feb 20, 2024 14:06 IST
விரைவில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வுகள் : மத்திய கல்வித்துறை அறிவிப்பு
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டிற்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்தும் திட்டம் 2025-26ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும், தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்காகவும் தேசிய கல்விக் கொள்கையின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
-
Feb 20, 2024 14:00 IST
ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் வாபஸ்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உறுதி அளித்த நிலையில் 3 நாட்களாக நடத்தி வந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ராமேஸ்வரம் மீனவர்கள் திரும்பப் பெற்றனர்.
-
Feb 20, 2024 13:13 IST
பானை சின்னம் ஒதுக்க கோரி வி.சி.க மனு
மக்களவை தேர்தலுக்கு பானை சின்னம் ஒதுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது
-
Feb 20, 2024 12:42 IST
டி20 உலக கோப்பை கேப்டனுக்கு ரோஹித் ஷர்மாதான் சரியான ஆள் - சவுரவ் கங்குலி
டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியை தலைமை தாங்குவதற்கு ரோஹித் ஷர்மாதான் சரியான தேர்வாக இருப்பார் என இந்திய முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்
-
Feb 20, 2024 12:24 IST
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக 2018ஆம் ஆண்டு அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
-
Feb 20, 2024 12:08 IST
பிரதமர் நாடாளுமன்றத்தை கூட்டி குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டத்தை கொண்டு வர வேண்டும் – விவசாய சங்கம்
பிரதமர் ஒரு நாள் நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதத்தின் மீது சட்டம் கொண்டு வர வேண்டும். மத்திய அரசு குறைந்த ஆதரவு விலை சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தால், காங்கிரஸிடம் இருந்து வாக்களிப்போம் என்ற நிலைப்பாட்டை அனைத்து எதிர்க்கட்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும். அகாலிதளம், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.." என்று விவசாயி தலைவர் சர்வான் சிங் பாந்தர் செவ்வாய்க்கிழமை கூறினார்.
-
Feb 20, 2024 11:10 IST
மராத்தியர்களுக்கு 10% இடஒதுக்கீடு; மகாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல்
மராத்தா சமூகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நிலை குறித்த மகாராஷ்டிர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கை செவ்வாய்க்கிழமை அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மராத்தா சமூகம் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினராக இருப்பதோடு, பொதுப் பணிகளில் மற்றும் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைகளில் முறையே சமூகத்திற்கு 10 சதவீத இடஒதுக்கீடு அவசியம் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
-
Feb 20, 2024 09:59 IST
எல்லை தாண்டும் மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை
எல்லை தாண்டும் மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை இலங்கை நீதிமன்ற உத்தரவுக்கு கண்டனம் ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இருந்து மீனவர்கள் நடை பயணம் 3 நாட்கள் நடைபயணமாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட திட்டம் பதாகைகளை கையில் ஏந்தியபடி நடைபயணம் - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
-
Feb 20, 2024 09:56 IST
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு 15வது ஊதிய குழு உட்பட 6 அம்ச கோரிக்கை தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள், போக்குவரத்துத்துறை உடன் ஆலோசனை இணை ஆணையர் முன்னிலையில் நாளை மதியம் 3 மணிக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை
-
Feb 20, 2024 09:23 IST
அனுமதியின்றி கொடிக் கம்பங்களை வைத்த, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது வழக்கு
உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையிடம் உரிய அனுமதியின்றி த.வெ.க சார்பில் கொடியேற்றியதால் மாவட்ட பொறுப்பாளர் பரணிபாலாஜி உள்பட 20 பேர் மீது வழக்கு
-
Feb 20, 2024 08:44 IST
ஆதார் அட்டைகள் முடக்கம் - பிரதமருக்கு மம்தா கடிதம்
மேற்கு வங்கத்தில் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவினரின் ஆதார் அட்டைகள் முடக்கப்படுவதற்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்.மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசு மக்களுக்கு வழங்கும் நலத்திட்டங்களை தடுக்கும் விதமாக ஆதாரை முடக்கியுள்ளதாக குற்றச்சாட்டு; ஆதார் அட்டை இல்லையென்றாலும் நலத்திட்ட உதவிகளைப் பெறலாம் என அறிவிப்பு.ஆதார் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும், விளக்கம் கேட்டும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம்
-
Feb 20, 2024 07:57 IST
இன்று முதல் ஹால் டிக்கெட்
12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறவுள்ள நிலையில், மாணவ, மாணவிகளின் ஹால் டிக்கெட்டுகளை பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று பிற்பகல் முதல் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு
-
Feb 20, 2024 07:54 IST
கர்நாடக கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க உத்தரவு
கர்நாடக கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் நகைகளான 28 கிலோ தங்கம், வைர நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகள், 11,344 விலை உயர்ந்த பட்டுப் புடவைகள், 740 விலை உயர்ந்த செருப்புகள் என மொத்தமாக 5 ட்ரங் பெட்டிகளில் உள்ள ஆபரணங்கள் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு தமிழ்நாடு அரசின் கருவூலத்தில் வைக்கப்படவுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.