Tamil News Today: லடாக்கில் இருந்து லே பகுதியை இணைக்கும் உலகின் மிக நீண்ட சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைக்கு செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அங்கீகார சான்றிதழ் கொடுத்து பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நுகரும் தன்மை இழப்பு கொரோனாவுக்கான முக்கிய அறிகுறி என இங்கிலாந்து ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வந்த விஜயகாந்த் வீடு திரும்பினார். ஹத்ராஸ் கூட்டு பாலியல் வழக்கில், எஸ்.பி, டி.எஸ்.பி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil News Today Live
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
मैं हाथरस के पीड़ित परिवार से मिला और उनका दर्द समझा। मैंने उन्हें विश्वास दिलाया कि हम इस मुश्किल वक़्त में उनके साथ खड़े हैं और उन्हें न्याय दिलाने में पूरी मदद करेंगे।
UP सरकार चाह कर भी मनमानी नहीं कर पाएगी क्यूँकि अब इस देश की बेटी को इन्साफ़ दिलाने पूरा देश खड़ा है।
— Rahul Gandhi (@RahulGandhi) October 3, 2020
ஹத்ராஸ் கிராமத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்தேன். அவர்களின் வலியை புரிந்துகொண்டேன். இந்த கடினமான நேரத்தில் நாங்கள் அவர்களுடன் உறுதுணையாய் நின்று, நீதி கிடைக்க உதவுவேன் என்று நான் அவர்களுக்கு உறுதியளித்தேன்.
உ.பி. அரசு, தான் விரும்பியதை எல்லாம் தன்னிச்சையாக செய்ய முடியாது. இப்போது முழு நாடும் நாட்டின் மகளுக்கு நீதி கேட்டு நிற்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
இந்திய அரசியலின் திசையை மாற்றப்போகும் இரண்டு புகைப்படங்கள்
திரு ராகுல்காந்தி அவர்களுக்கும்
திரு பிரியங்கா அவர்களுக்கும்
நன்றி pic.twitter.com/ANf4dzdwaT— Dr Ravikumar M P (@WriterRavikumar) October 3, 2020
வங்கி தவணையை திருப்பி செலுத்துவதற்காக வழங்கப்பட்ட ஆறு மாத கால அவகாசத்திற்கு வட்டியை தள்ளுபடி செய்ய தயாராக உள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பத்திரத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு இந்த சலுகையை வழங்க அரசு தயாராக இருப்பதாகவும், இதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறு-குறு தொழில் துறையினர் பெற்ற கடன்கள் மற்றும் கல்வி, வீட்டுவசதி, நுகர்வோர் மற்றும் வாகன கடன்களுக்கு இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
मुख्यमंत्री श्री @myogiadityanath जी ने सम्पूर्ण हाथरस प्रकरण की जांच सीबीआई से कराए जाने के आदेश दिए हैं।
— CM Office, GoUP (@CMOfficeUP) October 3, 2020
ஹத்ராஸ் கூட்டு வல்லுறவு வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
Watch-@priyankagandhi meets, hugs & consoles the mother of Hathras victim inside latter's home.
The moment to avoid which CM Adityanth put everything at stake. pic.twitter.com/CnMu8GY3n0
— Saahil Murli Menghani (@saahilmenghani) October 3, 2020
பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியில் எதிர்வரும் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தேஜாஷ்வி யாதவ் அறிவித்தார்.
ஆர்ஜேடி 144 இடங்களில் போட்டியிடும், காங்கிரசுக்கு 70 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. தவிர,சிபிஐ-எம்எல் (19), சிபிஐ (6), சிபிஎம் (4) ஆகிய மூன்று இடது சாரிக்கட்சிகளுக்கு மொத்தம் 29 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Congress leaders Rahul Gandhi and Priyanka Gandhi Vadra arrive at the residence of Hathras victim.
📸 by @somyalakhani
Follow LIVE 👇https://t.co/t2Uwx2lxAA pic.twitter.com/Z6s9MvIVHN
— The Indian Express (@IndianExpress) October 3, 2020
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ஹத்ராஸ் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் வீட்டை அடைந்தனர்.
விளையாட்டு வீரர்களின் ஆரோக்கியம் மற்றும் உடல் உறுதியை மனதில் கொண்டு, இந்திய விளையாட்டு ஆணையத்தின் மையங்களில் பயிற்சி எடுத்துக்கொள்ளும் கொவிட்-19 பாதிக்கப்பட்ட சிறப்பாக செயல்படும் விளையாட்டு வீரர்கள் படிப்படியாக போட்டிகளுக்கு திரும்புவதற்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை இந்திய விளையாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது.
படிப்படியாக விளையாட்டுக்கு திரும்புதல் என்னும் தலைப்பிலான இந்த வழிகாட்டுதல்களின் கீழ், இந்திய விளையாட்டு ஆணையத்தின் மையங்களில் பயிற்சி எடுத்துக்கொள்ளும் கொவிட்-19 பாதிக்கப்பட்ட வீரர்களின் மேம்பாட்டை கண்காணிக்குமாறு இந்திய விளையாட்டு ஆணையத்தின் அதிகாரிகளும் மையங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
மறைந்த குவைத் மன்னர் ஷேக் சபாஹ் அல்-அகமது அல்-ஜபெர் அல்-சபாஹ் அரசருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாளை ஒரு நாள் துக்கத்தை நாடு முழுவதும் அனுஷ்டிக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது.
தேசிய கொடி வழக்கமாக பறக்கும் நாடு முழுவதுமுள்ள அனைத்து கட்டிடங்களிலும் அன்று அது அரை கம்பத்தில் பறக்கும். அன்றைய தினம் எந்த அரசு நிகழ்ச்சியும் நடைபெறாது.
குவைத் மன்னர் ஷேக் சபாஹ் அல்-அகமது அல்-ஜபெர் அல்-சபாஹ் கடந்த செப்டம்பர் 29 அன்று மறைந்தார்.
உத்தரபிரதேசம், ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை கொலை சம்பவத்தைக் கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சனிக்கிழமை கொல்கத்தாவில் பேரணி நடத்தினார். இந்த பேரணி பிர்லா கோளரங்கத்தில் தொடங்கி சுமார் 2 கி.மீ தூரத்தில் மாயோ சாலையில் உள்ள காந்தி சிலையில் முடிந்தது. மம்தா பானர்ஜி, வியாழக்கிழமை உத்தரபிரதேசத்தில் உள்ள பாஜக அரசாங்கத்திடம், ராவணனால் கடத்தப்பட்ட பின்னர், சீதா தேவி ராமாயணத்தில் 'அக்னி பரீட்சை செய்தது போல, ஹத்ராஸில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையானதைக் கூறி இறந்த தலித் பெண்ணின் உடல் இரவில் தகனம் செய்யப்பட்டதா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
மதுரை மத்திய சிறையில் விசாரணைக் கைதி சுடலை மாரியப்பன் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த செப்டம்பர் 30ம் தேதி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சுடலை மாரியப்பன் மதுரை மத்திய சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி காங். எம்.பி.க்களுடன் உ.பி எல்லையை அடைந்தார். அங்கே ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட 5 பேர் ஹத்ராஸ் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
ஹத்ராஸில் கூட்டு பாலியல் கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மீண்டும் ஹத்ராஸ் செல்கிறார். ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் காங். எம்.பி.க்களுடன் ஹத்ராஸ் செல்ல உ.பி எல்லையை அடைந்தனர். உ.பி எல்லையில் ஆயிரக் கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்துள்ளனர். உ.பி. எல்லையில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், திமுகவில் புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிவித்துள்ளார்.
திமுக தேர்தல் பணிக்குழு இணைத் தலைவராக ராஜகண்ணப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை பரணி, இ.ஏ.கார்த்திகேயன், வேலூர் ஞானசேகரன், டாக்டர் விஜய் தேர்தல் பணிக்குழு செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை ஆர்.டி.அரசகுமார் திமுக தலைமைக் கழக செய்தித்தொடர்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம், ஹத்ராஸில் கூட்டு பாலியல் கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், காங்கிரஸ் எம்.பி.க்கள் பேருந்தில் செல்கின்றனர்.
இது குறித்து கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்பி க்கள் தனது மகளை கொடூரமான பாலியல் வன்புணர்வுக்கும்,இரக்கமற்ற பிஜேபி அரசின் அராஜகத்திற்கும் பறிகொடுத்துவிட்டு,ஒரு கைதியைப் போல அரசால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பரிதாபத்திற்குரிய குடும்பத்தை சந்தித்து ஆறுதல் சொல்ல செல்கிறோம். இந்த கொடுமையான சூழலில் அக்குடும்பத்துடன் நிற்கவேண்டியதும்,கொலை செய்யப்பட்ட நமது சகோதரிக்கு நீதி கேட்பதும் நமது ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.” என்று பதிவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 2 வாரங்களுக்கு முன்பு கூட்டு பாலியல் தாக்குதல் மூலம் 19 வயது தலித் பெண் கொலை செய்யப்பட்டார். 2 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்திக்க சென்றபோது, அவர் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூற மீண்டும் ஹத்ராஸ் செல்கிறார். காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் பேருந்தில் ஹத்ராஸுக்கு புறப்பட்டுள்ளனர்.
அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின், இந்திய வம்சாவளி விஞ்ஞானியான மறைந்த கல்பனா சாவ்லா பெயரை தாங்கிய விண்கலம், பொருட்களை ஏற்றிக் கொண்டு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டது. விண்வெளி பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான நார்த்ரூப் கிரம்மானின் அன்டரேஸ் ராக்கெட் அமெரிக்காவின் விர்ஜினியாவில் இருந்து விண்கலத்தை சுமந்துகொண்டு புறப்பட்டது. நேற்று கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் இன்று விண்ணில் பாய்ந்தது, கல்பனா சாவ்லா சரக்கு போக்குவரத்து விண்கலம்
நாமக்கல்லில் வரலாறு காணாத அளவாக முட்டை விலை 20 காசுகள் உயர்ந்துள்ளது. ரூ.5.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முட்டை கொள்முதல் விலை ரூ.5.16 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்ததே அதிகபட்ச விலையாக இருந்தது. தற்போது அந்த ரெக்கார்டு பிரேக் செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights