Tamil News Highlights: ஹத்ராஸ் கூட்டு பாலியல் வல்லுறவு வழக்கு சிபிஐக்கு மாற்றம் – உ.பி அரசு

சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 84.14-க்கும், டீசல் ரூ.75.95-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

By: Oct 3, 2020, 10:31:18 PM

Tamil News Today: லடாக்கில் இருந்து லே பகுதியை இணைக்கும் உலகின் மிக நீண்ட சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைக்கு செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அங்கீகார சான்றிதழ் கொடுத்து பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நுகரும் தன்மை இழப்பு கொரோனாவுக்கான முக்கிய அறிகுறி என இங்கிலாந்து ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வந்த விஜயகாந்த் வீடு திரும்பினார். ஹத்ராஸ் கூட்டு பாலியல் வழக்கில், எஸ்.பி, டி.எஸ்.பி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Live Blog
Tamil News Today Live சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
22:31 (IST)03 Oct 2020
அவர்களுடன் உறுதுணையாய் நின்று, நீதி கிடைக்க உதவுவேன் - ராகுல் காந்தி

ஹத்ராஸ் கிராமத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்தேன். அவர்களின் வலியை புரிந்துகொண்டேன். இந்த கடினமான நேரத்தில் நாங்கள் அவர்களுடன் உறுதுணையாய் நின்று, நீதி கிடைக்க உதவுவேன் என்று நான் அவர்களுக்கு உறுதியளித்தேன்.

உ.பி. அரசு, தான் விரும்பியதை எல்லாம் தன்னிச்சையாக செய்ய முடியாது. இப்போது முழு நாடும்  நாட்டின் மகளுக்கு நீதி கேட்டு நிற்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.  

22:17 (IST)03 Oct 2020
இந்திய அரசியலின் திசையை மாற்றப்போகும் இரண்டு புகைப்படங்கள்
22:16 (IST)03 Oct 2020
வங்கி தவணையை திருப்பி செலுத்த வழங்கப்பட்ட 6 மாத கால அவகாசத்திற்கு வட்டியை தள்ளுபடி செய்ய தயார் -மத்திய அரசு

வங்கி தவணையை திருப்பி செலுத்துவதற்காக வழங்கப்பட்ட ஆறு மாத கால அவகாசத்திற்கு வட்டியை தள்ளுபடி செய்ய தயாராக உள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பத்திரத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.


2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு இந்த சலுகையை வழங்க அரசு தயாராக இருப்பதாகவும், இதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறு-குறு தொழில் துறையினர் பெற்ற கடன்கள் மற்றும் கல்வி, வீட்டுவசதி, நுகர்வோர் மற்றும் வாகன கடன்களுக்கு இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

21:09 (IST)03 Oct 2020
ஹத்ராஸ் கூட்டு பாலியல் வல்லுறவு வழக்கு சிபிஐக்கு மாற்றம் - உ.பி அரசு

ஹத்ராஸ் கூட்டு வல்லுறவு வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.  

20:19 (IST)03 Oct 2020
பிரியங்கா காந்த உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறும் வீடியோ
20:18 (IST)03 Oct 2020
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வருத்தம்

20:14 (IST)03 Oct 2020
பீகார் சட்டமன்றத் தேர்தல், ராஷ்டிரிய ஜனதா தளம்-144 , காங்கிரஸ்- 70 இடங்கள்

பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியில் எதிர்வரும் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தேஜாஷ்வி யாதவ் அறிவித்தார்.

ஆர்ஜேடி 144 இடங்களில் போட்டியிடும், காங்கிரசுக்கு 70 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. தவிர,சிபிஐ-எம்எல் (19), சிபிஐ (6), சிபிஎம் (4) ஆகிய மூன்று இடது சாரிக்கட்சிகளுக்கு மொத்தம் 29 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

20:03 (IST)03 Oct 2020
இளங்கலை பொறியியல் மாணவர்கள் சேர்க்கை

இளங்கலை பொறியியல் மாணவர் சேர்க்கைக்காக தற்போது நடைபெற்று வரும் சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங்கில் இதுவரை 721 பேர் தங்களது விருப்பப் பாடம் மற்றும் கல்லூரிகளை தேர்வு செய்துள்ளார்கள்

19:48 (IST)03 Oct 2020
ஹத்ராஸ் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின்    வீட்டை அடைந்தார் ராகுல் காந்தி

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ஹத்ராஸ் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின்    வீட்டை அடைந்தனர்.

19:45 (IST)03 Oct 2020
விளையாட்டு வீரர்கள் படிப்படியாக போட்டிகளுக்கு திரும்புவதற்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகள்

விளையாட்டு வீரர்களின் ஆரோக்கியம் மற்றும் உடல் உறுதியை மனதில் கொண்டு, இந்திய விளையாட்டு ஆணையத்தின் மையங்களில் பயிற்சி எடுத்துக்கொள்ளும் கொவிட்-19 பாதிக்கப்பட்ட சிறப்பாக செயல்படும் விளையாட்டு வீரர்கள் படிப்படியாக போட்டிகளுக்கு திரும்புவதற்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை இந்திய விளையாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது.

படிப்படியாக விளையாட்டுக்கு திரும்புதல் என்னும் தலைப்பிலான இந்த வழிகாட்டுதல்களின் கீழ், இந்திய விளையாட்டு ஆணையத்தின் மையங்களில் பயிற்சி எடுத்துக்கொள்ளும் கொவிட்-19 பாதிக்கப்பட்ட வீரர்களின் மேம்பாட்டை கண்காணிக்குமாறு இந்திய விளையாட்டு ஆணையத்தின் அதிகாரிகளும் மையங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

19:44 (IST)03 Oct 2020
நாளை ஒரு நாள் துக்கத்தை நாடு முழுவதும் அனுஷ்டிக்க இந்திய அரசு முடிவு

மறைந்த  குவைத் மன்னர் ஷேக் சபாஹ் அல்-அகமது அல்-ஜபெர் அல்-சபாஹ் அரசருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாளை ஒரு நாள் துக்கத்தை நாடு முழுவதும் அனுஷ்டிக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது.

தேசிய கொடி வழக்கமாக பறக்கும் நாடு முழுவதுமுள்ள அனைத்து கட்டிடங்களிலும் அன்று அது அரை கம்பத்தில் பறக்கும். அன்றைய தினம் எந்த அரசு நிகழ்ச்சியும் நடைபெறாது.

குவைத் மன்னர் ஷேக் சபாஹ் அல்-அகமது அல்-ஜபெர் அல்-சபாஹ் கடந்த செப்டம்பர் 29 அன்று மறைந்தார்.

18:14 (IST)03 Oct 2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,622 பேருக்கு கொரோனா; 65 பேர் பலி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,622 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 65 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

17:30 (IST)03 Oct 2020
ஹத்ரா கூட்டு பாலியல் கொலையைக் கண்டித்து மம்தா பானர்ஜி பேரணி

உத்தரபிரதேசம், ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை கொலை சம்பவத்தைக் கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சனிக்கிழமை கொல்கத்தாவில் பேரணி நடத்தினார். இந்த பேரணி பிர்லா கோளரங்கத்தில் தொடங்கி சுமார் 2 கி.மீ தூரத்தில் மாயோ சாலையில் உள்ள காந்தி சிலையில் முடிந்தது. மம்தா பானர்ஜி, வியாழக்கிழமை உத்தரபிரதேசத்தில் உள்ள பாஜக அரசாங்கத்திடம், ராவணனால் கடத்தப்பட்ட பின்னர், சீதா தேவி ராமாயணத்தில் 'அக்னி பரீட்சை செய்தது போல, ஹத்ராஸில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையானதைக் கூறி இறந்த தலித் பெண்ணின் உடல் இரவில் தகனம் செய்யப்பட்டதா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

16:32 (IST)03 Oct 2020
மதுரை மத்திய சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை

மதுரை மத்திய சிறையில் விசாரணைக் கைதி சுடலை மாரியப்பன் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த செப்டம்பர் 30ம் தேதி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சுடலை மாரியப்பன் மதுரை மத்திய சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

16:11 (IST)03 Oct 2020
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் 5 பேர் ஹத்ராஸ் செல்ல அனுமதி

ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி காங். எம்.பி.க்களுடன் உ.பி எல்லையை அடைந்தார். அங்கே ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட 5 பேர் ஹத்ராஸ் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

15:38 (IST)03 Oct 2020
உ.பி. எல்லையை அடைந்தனர் ராகுல், பிரியங்கா

ஹத்ராஸில் கூட்டு பாலியல் கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மீண்டும் ஹத்ராஸ் செல்கிறார். ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் காங். எம்.பி.க்களுடன் ஹத்ராஸ் செல்ல உ.பி எல்லையை அடைந்தனர். உ.பி எல்லையில் ஆயிரக் கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்துள்ளனர். உ.பி. எல்லையில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

15:31 (IST)03 Oct 2020
திமுக புதிய பொறுப்பாளர்கள் நியமனம் - பொதுச் செயலாளர் துரை முருகன் அறிவிப்பு

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், திமுகவில் புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிவித்துள்ளார்.

திமுக தேர்தல் பணிக்குழு இணைத் தலைவராக ராஜகண்ணப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை பரணி, இ.ஏ.கார்த்திகேயன், வேலூர் ஞானசேகரன், டாக்டர் விஜய் தேர்தல் பணிக்குழு செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை ஆர்.டி.அரசகுமார் திமுக தலைமைக் கழக செய்தித்தொடர்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

14:55 (IST)03 Oct 2020
ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஹத்ராஸ் பயணம்

உத்தரப் பிரதேசம், ஹத்ராஸில் கூட்டு பாலியல் கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், காங்கிரஸ் எம்.பி.க்கள் பேருந்தில் செல்கின்றனர்.

இது குறித்து கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்பி க்கள் தனது மகளை கொடூரமான பாலியல் வன்புணர்வுக்கும்,இரக்கமற்ற பிஜேபி அரசின் அராஜகத்திற்கும் பறிகொடுத்துவிட்டு,ஒரு கைதியைப் போல அரசால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பரிதாபத்திற்குரிய குடும்பத்தை சந்தித்து ஆறுதல் சொல்ல செல்கிறோம். இந்த கொடுமையான சூழலில் அக்குடும்பத்துடன் நிற்கவேண்டியதும்,கொலை செய்யப்பட்ட நமது சகோதரிக்கு நீதி கேட்பதும் நமது ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.” என்று பதிவிட்டுள்ளார்.

14:49 (IST)03 Oct 2020
காங்கிரஸ் எம்.பி.க்களுடன் மீண்டும் ஹத்ராஸ் செல்லும் ராகுல் காந்தி

உத்தரப் பிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 2 வாரங்களுக்கு முன்பு கூட்டு பாலியல் தாக்குதல் மூலம் 19 வயது தலித் பெண் கொலை செய்யப்பட்டார். 2 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்திக்க சென்றபோது, அவர் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூற மீண்டும் ஹத்ராஸ் செல்கிறார். காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் பேருந்தில் ஹத்ராஸுக்கு புறப்பட்டுள்ளனர்.

13:41 (IST)03 Oct 2020
வானிலை நிலவரம்

தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் மிதமான மழைக்கும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

12:57 (IST)03 Oct 2020
மெட்ரோ ரயில் சேவை

சென்னையில் நாளை காலை 7 மணிக்கு பதிலாக காலை 6 மணிக்கே மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

11:58 (IST)03 Oct 2020
தங்கம் விலை நிலவரம்

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைவு. ஒரு கிராம் தங்கம் ரூ.4,850 ஆகவும், ஒரு சவரன் தங்கம் ரூ.38,800-க்கும் விற்பனையாகிறது. 

11:41 (IST)03 Oct 2020
ராகுல் காந்தி மீண்டும் ஹத்ராஸ் பயணம்

ராகுல்காந்தி மற்றும் காங். எம்பிக்கள் குழு இன்று மீண்டும் ஹத்ராஸ் பயணம். ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திப்பதை, உலகில் எதுவும் தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். 

11:22 (IST)03 Oct 2020
விண்ணில் பாய்ந்தது கல்பனா சாவ்லா விண்கலம்

அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின், இந்திய வம்சாவளி விஞ்ஞானியான மறைந்த கல்பனா சாவ்லா பெயரை தாங்கிய விண்கலம், பொருட்களை ஏற்றிக் கொண்டு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டது. விண்வெளி பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான நார்த்ரூப் கிரம்மானின் அன்டரேஸ் ராக்கெட் அமெரிக்காவின் விர்ஜினியாவில் இருந்து  விண்கலத்தை சுமந்துகொண்டு புறப்பட்டது. நேற்று கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட  கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் இன்று விண்ணில் பாய்ந்தது, கல்பனா சாவ்லா சரக்கு போக்குவரத்து விண்கலம்

11:20 (IST)03 Oct 2020
2 கோடி வரையிலான கடனுக்கு வட்டியில்லை

வங்கி மாதத் தவணை விவகாரத்தில் ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டியில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. கொரோனா காலத்தில் வங்கிக் கடனுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கும் நடைமுறையை எதிர்த்து வழக்கு பதில். 

11:08 (IST)03 Oct 2020
2 பேர் பணியிடை நீக்கம்

சேலம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் கொரோனா பரிசோதனை மாதிரிகள் சாலையில் கிடந்த விவகாரம். பரிசோதனை மாதிரிகளை தவறவிட்ட களப்பணியாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

10:37 (IST)03 Oct 2020
அடல் சுரங்கப்பாதை விபரம்

இமாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான அடல் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்! மணாலி - லே நெடுஞ்சாலையில் கடல் மட்டத்தில் இருந்து 3,000 மீட்டர் உயரத்தில் 9.02 கி.மீ தூரத்தில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது!

10:35 (IST)03 Oct 2020
அடல் சுரங்கப்பாதை திறப்பு

இமாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக உயரமான, நீளமான அடல் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்!!

10:02 (IST)03 Oct 2020
ராணுவ மருத்துவமனையில் ட்ரம்ப்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் சிகிச்சைக்காக இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

09:47 (IST)03 Oct 2020
கொரோனாவால் 1 லட்சம் பேர் இறப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. 9 மாதங்களில் 1 லட்சம் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

09:23 (IST)03 Oct 2020
நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு

நாமக்கல்லில் வரலாறு காணாத அளவாக முட்டை விலை 20 காசுகள் உயர்ந்துள்ளது. ரூ.5.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முட்டை கொள்முதல் விலை ரூ.5.16 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்ததே அதிகபட்ச விலையாக இருந்தது. தற்போது அந்த ரெக்கார்டு பிரேக் செய்யப்பட்டுள்ளது. 

Tamil News Today: அதிமுக முதல்வர் வேட்பாளராக களம் இறங்குவதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். இனியும் தாமதிக்காமல் 7-ம் தேதி இதை அறிவித்தே ஆக வேண்டும் என்பதே முதல்வரின் நிலைப்பாடு. இதற்காக ஆதரவு திரட்டும் ஒரு நடவடிக்கையாக 6–ம் தேதியே சென்னைக்கு வந்துவிடும்படி எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் வேட்பாளர் யார்? என்கிற விவகாரம், அதிமுக.வில் சலசலப்பைக் கிளப்பியிருக்கிறது. கடந்த 28-ம் தேதி சென்னையில் அதிமுக செயற்குழுவில் இது குறித்து முடிவு எட்டப்பட வில்லை. செயற்குழு முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ‘அக்டோபர் 7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பை இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் இணைந்து வெளியிடுவார்கள்’ என குறிப்பிட்டார்.

Web Title:Tamil news today live aiadmk cm candidate hathras case coronavirus

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X