Latest Tamil News : அஇஅதிமுக தனது தேர்தல் பிரச்சாரத்தை டிசம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொடங்கவுள்ளது. முதல்முறையாக முன்னாள் முதல்வர் ஜே.ஜெயலலிதா இல்லாத நிலையில், எடப்பாடி கே பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இருவரும் இந்தக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். மேலும், கட்சியின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை ஜனவரி 9-ம் தேதி சென்னை புறநகரில் உள்ள வானகரத்தில் நடத்தவும் தலைமை முடிவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி கட்சியின் செயற்குழு கூட்டமும் அன்றைய தினம் நடைபெறும். கூட்டணி தொடர்பான பிரச்சினைகள் குறித்து எந்தவொரு முடிவையும் எடுக்க முதல்வர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அதிகாரங்களை வழங்குவதாக எதிர்பார்க்கப்படுவதால் இந்தக் கூட்டம் மிக முக்கியமானதாக இருக்கும். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காலை 10 மணியளவில் சென்னை ராஜ்பவனில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில், ஸ்டாலின் மற்றும் திமுகவின் சில முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீப காலமாக 2ஜி வழக்கு, சர்க்காரியா கமிஷன் அறிக்கை உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் பலர் திமுக மீதும், துறை ரீதியாக டெண்டர் முறைகளிலும் ஊழல் நடைபெறுவதாக அதிமுக மீது திமுக கட்சியும் மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றன. இந்நிலையில், தமிழக அரசு மீது சில ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆளுநரை சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் மனு அளிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்குத் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு. தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த மூன்று நாள்களுக்குத் தென்தமிழகத்தில் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் வடதமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. "தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Live Blog
News In Tamil : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
163 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்திற்கும் கீழ் (2,92,518) குறைந்து, 2.90%ஆக பதிவாகியுள்ளது. கடந்த ஜூலை 12-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 2,92,258 ஆக இருந்தது. இதேபோல் 173 நாட்களுக்குப் பிறகு ஒரு நாளின் பாதிப்பு 20,000-கும் கீழ் (19,556) குறைந்துள்ளது. கடந்த ஜூலை 2-ஆம் தேதி ஒரு நாளின் பாதிப்பு 19,148 ஆக இருந்தது.
சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நேதாஜியின் பிறந்தநாளான அடுத்த மாதம் 23-ம் தேதி முதல் ஓராண்டுக்கு நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் குறித்து இந்த குழு முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் பரவும் புதியவகை கோவிட்-19 பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய வீரியத்துடன் பரவும் தொற்று குறித்து அரசு முழுமையான எச்சரிக்கையுடன் இருப்பதாகத் தெரிவித்தார். எந்த விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து அரசு நன்கு அறிந்து செயல்படுவதாகவும் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.
பிரதமர் மோடிக்கு துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் வாழ்த்து!
India under the astute leadership of our Hon'ble Prime Minister Shri. Narendra Modi @narendramodi ji, is harvesting the best accolades and the award "Legion of Merit" presented by US President is a true recognition. My hearty congratulations to Hon'ble Prime Minister.
— O Panneerselvam (@OfficeOfOPS) December 22, 2020
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு வசதி . நடப்பு சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு . பெரும்பாலான கட்சிகள் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த கோரிக்கை விடுத்துள்ளன . தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் செலவினம் தீவிரமாக கண்காணிக்கப்படும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .
3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றுபவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் . ஒரு வாக்குச்சாவடியில் 1000 பேருக்கு மேல் இல்லாதவாறு கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் . தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்வு தளம், கழிவறை, மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தகவல்.
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதோடு 97 பக்க புகார் பட்டியலை ஆளுநரிடம் வழங்கி விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று சந்திக்கவுள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநரிடம் புகார் மனுக்கள் வழங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்குக் கூடுதலாக ரூ.1,805.48 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், சுமார் 2.50 லட்சம் பயனாளிகள் பயன்பெறுவார்கள் எனத் தமிழக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
இந்திய அமெரிக்க நட்புறவை மேம்படுத்துவதற்காக Legion of Merit எனும் உயரிய அமெரிக்க விருதை இந்தியப் பிரதமர் மோடிக்கு வழங்கியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்த விருதினை மோடியின் சார்பில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரஞ்சித் சிங் சாந்து பெற்றுக்கொண்டார்.
பிரிட்டனில் கொரோனா தீவிரமடைந்துள்ளதை அடுத்து தமிழக மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், பிரிட்டனிலிருந்து டெல்லி வழியே சென்னை வந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்றும் அந்நபர் வீட்டுத் தனிமையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார் என்றும் சென்னை விமான நிலையத்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights