சென்னை, ஈ.வெ.ரா. சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சனிக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி கோயம்பேட்டிலிருந்து அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வளைவில் இடதுபுறமாக திருப்பிவிடப்படும். நெல்சன் மாணிக்கம் சாலைக்கு செல்ல விரும்புவோர் மேம்பாலத்தின் வழியாக சென்றடையலாம் என. இது இன்று முதல் 10 நாட்களுக்கு சோதனை ஓட்டமாக அமல்படுத்த உள்ளது.
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
போரிஸ் ஜான்சன் ராஜினாமா
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே, அவரைக் கண்டித்து அந்நாட்டின் நிதியமைச்சர் ரிஷி சுனக், சுகாதார அமைச்சர் ஷாஜித் ஜாவேத் ஆகியோர் பதவி விலகினர். மேலும் 50 அமைச்சர்கள் பிரதமர் போரிஸ் ஜான்சன் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
சொந்த கட்சியில் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். போரிஸ் ஜான்சனின் ராஜினாமா முடிவை தொழிலாளர் கட்சி ‘நல்ல செய்தி’ என்று வரவேற்றுள்ளது.
Tamil News Latest Updates
லீனா மணிமேகலைக்கு லுக்அவுட் நோட்டீஸ்
‘காளி’ ஆவணப்படத்தின் போஸ்டர் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், போபால் காவல்துறை இயக்குநர் லீனா மணிமேகலைக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
விவசாய நிலங்களில் வண்டல் மண் பயன்படுத்த சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற தேவையில்லை என்றும் ஏரி மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண் எடுப்பது குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
அமர்நாத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலர் மாயமாகியுள்ளதாகவும் 4 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ்: “லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். ஒற்றை தலைமையை தடுக்க முயற்சிக்கின்றனர். சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை ” என்று கூறினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு தொடர்பான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.41.06 லட்சம் பணம், 963 சவரன் நகை சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளன.
காலை 5.30 மணியில் இருந்து நடைபெற்ற சோதனையில் 24 கிலோ வெள்ளி பொருட்கள், ஐபோன் உள்ளிட்டவைகளும் சிக்கின!
ரூ.15.5 லட்சம் கணக்கில் வராத பணம் தொடர்பான ஆவணங்கள், வங்கிப் பெட்டக சாவி, பென்டிரைவ் உள்ளிட்ட கருவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன!
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓபிஎஸ் மனு மீது வரும் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஜூலை 11ம் தேதி காலை 10 மணிக்கு அதிமுக பொதுக்குழு என அறிவிக்கப்பட்ட நிலையில், காலை 9 மணிக்கு தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை, தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ள விக்ரம் மேலாளர் லேசான நெஞ்சுவலிக்காக சிகிச்சை பெற்ற நடிகர் விக்ரம் தற்போது நலமுடன் உள்ளார் என்று கூறியுள்ளார்.
பொதுக்குழு ஒப்புதல் வழங்காததால் இரு பதவிகளும் காலாவதியாகி விட்டதாக முன் வைத்த வாதம் தவறு என்றும் தலைவர்கள் உயிருடன் இல்லாத போது தான் பதவி காலி என கருத முடியும் என்றும் கட்சி விதி திருத்தங்களுக்கு பொதுக்குழு ஒப்புதல் தேவையில்லை என ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது.
மேலும் சிறப்பு பொதுக்குழுவாக இருந்தாலும், வழக்கமான பொதுக்குழுவாக இருந்தலும் கட்சி விதிப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் கூட்ட வேண்டும் எனவும் கூறியுள்ளார் ஓபிஎஸ்
பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டுவரவும், நிறைவேற்றவும் அதிகாரம் உள்ளது அங்கு எந்த பிரச்சினை குறித்தும் விவாதிக்க உரிமை உள்ளது எதிர் கருத்து இருந்தால் பொதுக்குழுவில் விவாதிக்கலாம் அதை விடுத்து நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற முடியாது என்று இபிஎஸ் தரப்பு கூறியுள்ளது.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய ஓபிஎஸ் மனு மீது உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜூன் 23ல் நடந்த பொதுக் குழு கூட்டத்தில் தான் ஜூலை 11 கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது அதனால் பொதுக்குழு குறித்து கடைசி நேரத்தில் நோட்டீஸ் அனுப்பியதாக கூற முடியாது என்று ஈபிஎஸ் தரப்பு கூறியுள்ளது.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய ஓபிஎஸ் மனு மீது உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், அதற்கு இ.பி.எஸ் தரப்பு பதில் அளித்துள்ளது பின்வருமாறு:-
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை. கட்சி விதிகளில் திருத்தம் செய்ய பொதுக்குழுவுக்கு முழு அதிகாரம் உண்டு. அதிமுக பொதுக்குழுவை நடத்த உச்சநீதிமன்றமே அனுமதி வழங்கியுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கு 2,190 உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதிமுக பொதுக்குழு நிகழ்ச்சி நிரல்கள் கட்சி அலுவலகத்தால் விநியோகிக்கப்பட்டவை. வரைவு நிகழ்ச்சி நிரலுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் வழங்கவில்லை. ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலியானாலும் எந்த வெற்றிடமும் ஏற்படாது என கட்சி விதி கூறுகிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஜூலை 9-ஆம் தேதி இந்தியா முழுவதும் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
As a mark of our deepest respect for former Prime Minister Abe Shinzo, a one day national mourning shall be observed on 9 July 2022.
— Narendra Modi (@narendramodi) July 8, 2022
அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய ஓபிஎஸ் மனு மீது உயர்நீதிமன்றத்தில் தற்போது விசாரணை தொடங்கியது
பிரசாரத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (67) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரசாரத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவியாக வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இல்லம் தேடி கல்வி திட்டத்தின் 2 லட்சமாவது மையத்தின் தொடக்க விழா திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிபாடி கிராமத்தில் நடைபெற்றது. தொடர் வாசிப்பு இறுதிப் போட்டியில் வெற்றியாளர்களுக்கு கோப்பை வழங்கினார் முதல்வர் முக ஸ்டாலின்.
நடிகர் விக்ரமுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர்: நிர்மலா சீதாராமன் பதவியேற்பு!
மாநிலங்களவை உறுப்பினராக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பதவியேற்றுக்கொண்டார். கர்நாடகாவில் இருந்து 2வது முறையாக அவர் மாநிலங்களவைக்கு தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது நிறுவனத்தில் உயர் பதவியில் உள்ள ஷிவான் சிலிஸ் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையார் எலான் மஸ்க். அவர் இரட்டையர்கள் வரவால் மொத்தம் 9 குழந்தைகளுக்கு அப்பாவாகியுள்ளார்.
இந்நிலையில், மக்கள்தொகை குறைந்து வருவதை தடுக்க தான் உதவுவதாக ட்விட்டரில் மஸ்க் பதிவிட்டுள்ளார்.
கரூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தனியார் பள்ளியின் தாளாளர் யுவராஜ் கைது செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ் ஆசிரியர் நில ஒளி (40) கைது செய்யப்பட்ட நிலையில், தாளாளரும் கைது செய்யப்பட்டுள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழ்நாட்டில் தனி மனிதனுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் சோதனை நடத்துவதில் கவனம் செலுத்துகிறார்கள் – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
செங்கல்பட்டு அருகே மதுராந்தகத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் – பிரதமர் மோடி
எனது அருமை நண்பர் ஷின்சோ அபே மீதான தாக்குதல் செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன் . எங்களின் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் ஷின்சோ அபேவின் குடும்பத்தினர் மற்றும் ஜப்பான் மக்கள் மீது உள்ளன – பிரதமர் மோடி
ஷின்சோ அபேவை காப்பாற்றுவதற்கான அனைத்து சிகிச்சைகளையும் மருத்துவர்கள் வழங்கி வருகின்றனர். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தகவல் தெரிவித்துள்ளார். ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீதான துப்பாக்கிச்சூடு காட்டுமிராண்டித்தனமானது என்று ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.
டெல்லியில், மாநிலங்களவையின் புதிய எம்.பி.க்களாக தேர்வான 24 பேர் பதவியேற்பு. மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பதவியேற்பு
என்.எஸ்.இ. அதிகாரிகளின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டதாக என்எஸ்இ முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணா மீது புதிய வழக்குப்பதிவு. மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் நாடு முழுவதும் சிபிஐ சோதனை.
முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதும், அவரது நண்பர்கள், உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது. அதிமுகவை நேரடியாக எதிர்கொள்ள முடியாததால் முன்னாள் அமைச்சர் மீது அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தப்படுகிறது என இபிஎஸ் விமர்சித்துள்ளார்.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், அவர் உடல் அசைவு எதுவுமின்றி மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷின்சோ அபேவை கொல்ல முயன்ற நபரை காவல்துறை கைது செய்தது.
கேரள அரசின் லைஃப் மிஷன் திட்டம் தொடர்பான வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் ஜூலை 11ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராக சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 18,815 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்தனர். மேலும் 15,899 பேர் கொரோனாவில் குணமடைந்துள்ளனர். 1.22 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்
தேனி ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேலும் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 31ஆக உயர்ந்துள்ளது. மாணவர்களின் பெற்றோர்கள் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாக பொறியியல் கல்லூரி தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.
5,063 ஆசிரியர் பணியிடங்களை குறைத்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டது. 13,331 ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு பதிலாக 8,268 பணியிடங்களுக்கு மட்டும் போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது.
மன்னார்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு உள்பட, அவருக்கு தொடர்புடைய 41 இடங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.