கன்னியாகுமரி, திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில், 418 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதில், அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Latest Updates
தமிழக மீனவர்கள் கைது!
இலங்கை கடற்படை கைது செய்த 12 தமிழக மீனவர்களுக்கு 8ம் தேதி வரை சிறை தண்டனை விதித்து பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் 17 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
2,654 பேருக்கு கொரோனா!
தமிழகத்தில் திங்கள் கிழமை மேலும் 2,654 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. உயிரிழப்பு இல்லை. கொரோனாவுக்கு 15,616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முகக்கவசம் கட்டாயம்!
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சென்னையில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்தமான் நிலநடுக்கம்!
அந்தமான் போர்ட் பிளேர் பகுதியிலிருந்து 179 கி.மீ தொலைவில், இன்று காலை நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது. இதனால் உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்படவில்லை. அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
மின்சார வாரியத்தில் இளநிலை உதவியாளர், உதவிப் பொறியாளர், கள உதவியாளர், உதவி கணக்கு அலுவலர் உள்ளிட்ட காலியாக உள்ள 5,318 இடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறிவிப்பு அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கணினி வழித்தேர்வும் ரத்து; விண்ணப்ப கட்டணம் திருப்பித்தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், திருச்சி ஆகிய 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,662 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 1,512 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதே நேரத்தில், நீண்ட நாட்களுக்கு பிறகு, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் ஒருவர் மரணம் அடைதார். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகிய இணை நோய்கள் கொண்ட 77 வயது பெண் கொரோனா தொற்று காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.
அதிமுக ஒருங்கிணைப்பளர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்கள் உடன் ஆலோசனை நடத்துவதால் அவருடைய இல்லத்துக்கு மனோஷ் பாண்டியன், தர்மர் எம்.பி, கோவை செல்வராஜ் ஆகியோர் வந்துள்ளனர்.
ஜூலை 11-ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மக்களுக்கான திட்டங்களை அரசு குறிப்பிட்ட நேரத்தில் செயல்படுத்தி முடிப்பதில்லை. பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது
விஜய் மக்கள் இயக்கம் வலுவிழந்து விட்டது என்பதை விஜய் சிந்திக்க வேண்டும். விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைக்கப்படுவார்கள். நிர்வாகிகளை மீண்டும் இணைப்பது குறித்து பலமுறை விஜயிடம் பேசியுள்ளேன் என எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்
பசு தோல் போர்த்திய புலிகளின் கையில் சிக்கி அ.தி.மு.க சின்னாபின்னமாகி வருகிறது. தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னம் முடங்கி உள்ளது. எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க.,வை 3வது பெரிய கட்சியாக மாற்றியவர் ஜெயலலிதா. அ.தி.மு.க.,வில் நடப்பதை பார்த்து தி.மு.க.,வினர் ஆனந்தமாக உள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை இல்லாமல் போட்டியிட யார் அதிகாரம் கொடுத்தது? அ.தி.மு.க சட்டவிதிகளை மாற்ற யார் உங்களுக்கு அதிகாரம் தந்தது? என வி.கே.சசிகலா பேசியுள்ளார்
உத்தரபிரதேசம், வாரணாசியில் வரும் 7ம் தேதி உயர் கல்வி மாநாடு நடைபெறும் என யுஜிசி அறிவித்துள்ளது. 3 நாட்கள் நடைபெறும் மாநாட்டை பிரதமர் மோடி தொடக்கி வைக்கிறார். புதிய கல்விக் கொள்கை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும் என யுஜிசி தெரிவித்துள்ளது
தமிழகத்தில் அனைத்து முதியோர் இல்லங்களும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாத முதியோர் இல்லங்கள் செயல்பட அரசு அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இ.பி.எஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ண முராரி அடங்கிய அமர்வில் நாளை இந்த விசாரணை நடைபெறுகிறது
கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற சூழலை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு, தனியார் நிறுவனங்களுக்கு, ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3ல் விருதுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
பேரூராட்சி பகுதிகளில் விரைவில் 'கலைஞர் உணவகம்' திறக்கப்படும். அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் தமிழக அரசு நிறைவேற்றும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5வது டெஸ்ட்டில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதனால் இந்த டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
பொய் குற்றச்சாட்டுக்கள் தெரிவித்ததாக கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிராக இயக்குநர் சுசி கணேசன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் சுசி கணேசன் குறித்து கருத்து தெரிவிப்பது ஏன்? என்று லீனா மணிமேகலைக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டுள்ளது. டாலருக்கு நிகரான மதிப்பு 41 காசுகள் சரிந்து ரூ. 79.36ல் வர்த்தகமானது. இதேபோல், பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 100.42 புள்ளிகள் சரிந்து 53,134.35 ஆகவும், நிஃப்டி 24.50 புள்ளிகள் சரிந்து 15,810.85ல் வர்த்தகம் நிறைவுற்றது.
காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நாளை நடைபெற இருந்த கூட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கனவே ஜூன் 17, 23 தேதிகளில் நடைபெறவிருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், இன்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிவை, ஒற்றைத் தலைமை கோரி 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம், மேலும் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர்.
சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அக்னிபத் திட்டத்தின் கீழ் கடற்படை பணிக்கு 20% பெண்கள் முதல் தொகுப்பில் சேர்க்கப்படுவார்கள் என்றும் பணிக்கு தேர்வாகும் பெண்கள் பல இடங்களில் கடற்படை தளங்களுக்கு பயிற்சிக்கு அனுப்பபடுவார்கள் என்றும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் கடந்த 2020 ஜூலை மாதம் பதியப்பட்ட கஞ்சா வழக்கில் 3 பேருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 2 லட்சம் அபாராம் விதித்தும் போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடலூர் மேல்பாதி பகுதியில் வாரிசு சான்றிதழ் வழங்க ₨3,000 லஞ்சம் பெற்றதாக கிராம உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு தமிழ் பாடவேளை குறைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வாரத்திற்கு 7 பாடவேளைகள் எடுக்கப்படும் நிலையில் தற்போது 6ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில் ஆங்கில பாடத்திற்கான பாட வேளையும் குறைக்க்பபட்டுள்ளது.
ராமநாதபுரம் பரமக்குடியில் 3 டன் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இதன் காரணமாக ₨21,000 அபராதம் விதிப்பு நகராட்சி ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
டெல்லியில் இருந்து துபாய் செல்லும் ஸ்பெஸ்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக பாகிஸ்தானின் கராச்சியில் தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாளையங்கோட்டை சிறை கைதி முத்து மனோ இறப்புக்கு பழிக்கு பழியாக காண்டிராக்டர் கண்ணன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க நெல்லை நீதிமன்றத்துக்கு மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தை முற்றுகையிட்டு முதலீடு செய்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ₨1 லட்சம் கட்டினால் மாதம் ₨30 ஆயிரம் வட்டி தருவதாக கூறி ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்து்ளளது.
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் மது அருந்தியவரை தட்டி கேட்ட முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகம் முழுவதும் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம் . தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என குற்றச்சாட்டுகளை முன்வைத்து சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்பு .
ஆயிரம் பேர் அமரும் வகையில் கலைஞர் பெயரில் பெரும் அரங்கம் கட்டித்தரப்படும். தயாநிதி மாறனும், உதயநிதி ஸ்டாலினும் மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி வழங்க வேண்டும் .மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்லூரி வளாகத்திலேயே விடுதி கட்டி தரப்படும் – முதலமைச்சர் ஸ்டாலின்
ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவில் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. பொதுக்குழுவை நடத்தவிடாமல் செய்ய சமூக விரோதிகள் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. உரிய பாதுகாப்பு வழங்குவதாக டிஜிபி உறுதியளித்தார். அரசு அறிவிக்கும் கொரோனா விதிமுறைகள் பொதுக்குழுவில் பின்பற்றப்படும் – ஜெயக்குமார்
வரும் 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவிற்கு பாதுகாப்பு கோரி டிஜிபி-யிடம் இபிஎஸ் தரப்பு மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
” மிசா சட்டத்தை எதிர்த்ததால் அன்றைய திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. மிசா காலத்தில் சிறையில் இருந்த போது போலீஸ் காவலுடன் வந்து இந்த கல்லூரியில் தேர்வு எழுதினேன்”- மாநில கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பி உள்ளார்
அதிமுக பொதுக்குழுவிற்கு தடைகோரி ஓபிஎஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவை அவசர வழக்காக நாளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
கொடநாடு சம்பவம் குறித்து மருது அழகுராஜ் உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார். கொடநாடு வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கண்டுபிடித்தவர் முன்னாள் முதல்வர் இபிஎஸ். டிடிவி தினகரனை மறைமுகமாக ஓபிஎஸ் சந்தித்தது குறித்து மருது அழகுராஜ் சொல்லாதது ஏன்? திமுக உடன் கைகோர்க்கும் வண்ணம் ஓபிஎஸ் நடவடிக்கைகள் இருந்தன என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.56 உயர்ந்து, ரூ.38, 440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 13,086 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 பேர் உயிரிழந்தனர். கொரோனாவில் இருந்து மேலும் 12,456 பேர் குணமடைந்துள்ளனர். 1.13 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
திமுக அரசை கண்டித்து இன்று தமிழகத்தின் பல இடங்களில் பாஜக-வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கிறார்.
குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
ஆனி திருமஞ்சன திருவிழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோயிலில், இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் கோயிலுக்குள் தேரோட்டம் நடந்த நிலையில், இந்த ஆண்டு வழக்கம் போல நடைபெறுகிறது.