Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஓபிஎஸ் கேவியட் மனு தாக்கல்!
அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டால், தனது கருத்தையும் கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
Tamil News Latest Updates
வசூல்படி அதிகரிப்பு!
தமிழக அரசின் சாதாரண பயண கட்டண பேருந்துகளில், மகளிர் இலவசமாக பயணம் செய்ய அனுமதித்ததை தொடர்ந்து, ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்துக்கு பாகிஸ்தான் கோரிக்கை!
ஈரான்,துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளின் பாகிஸ்தான் தூதரக ட்விட்டர் பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முடக்கப்பட்ட பாகிஸ்தான் தூதரகங்களின் ட்விட்டர் பக்கங்களை மீட்க வேண்டும் என ட்விட்டர் நிறுவனத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் எரிபொருள் நெருக்கடி!
இலங்கையில் எரிபொருள் நெருக்கடி காரணமாக, ஜூலை 10ஆம் தேதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும். மேலும் ஜுலை 10ஆம் தேதி வரை நகர்ப்புற பள்ளிகள், அத்தியாவசியம் இல்லாத சேவைகள் இயங்காது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
தமிழகத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் அலுவலகத்தில் தெர்மல் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என என மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் ஆட்சியில்உள்ள சிவனே எம்எல்ஏக்கள் சிலர் அதிருப்தியில் உள்ள நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே அதிருப்தி எம்எல்ஏக்களிடம் பேச்சுவார்த்தைக்கு வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும்“யாருடைய தவறான எண்ணங்களுக்கும் இரையாகாதீர்கள். உங்களுக்கு சிவசேனா கொடுத்த மரியாதை எங்கும் கிடைக்காது. தாங்கள் முன் வந்து பேசினால் பிரச்னைகளை தீர்த்து வைப்போம். சிவசேனா கட்சித் தலைவர் மற்றும் குடும்பத் தலைவர் என்ற முறையில் நான் இன்னும் உங்களைப் பற்றி கவலைப்படுகிறேன் என்றார்.
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ளார். இதில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது உள்ளாட்சி தேர்தலின் போது விதிகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பதிவான வழக்கு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2019-ம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக அறிவிப்பு அறிவித்துள்ளார்
நடப்பாண்டு 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் பொறியியல் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது இதில் தற்போதுவரை பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது
அதிமுக பொதுக்குழு வழக்கமாக நடைபெறும் சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலை 11 ஆம் தேதி கூடும் பொதுக்குழுவிற்கான இடம் குறித்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்த நிலையில் தற்போது மீண்டும் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது
திருமணத்திற்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பிய நயன்தாரா மும்பையில் நடைபெறும் ஷாருக்கான் – அட்லியின் ஜவான் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டார்.
ஜியோ நிறுவனத்தின் தலைவராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரிலையன்ஸ் ஜியோ இயக்குனர் பதவியில் இருந்து முகேஷ் அம்பானி ராஜினாமா செய்துள்ளார்.
அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.
ஜியோ நிறுவனத்தின் தலைவராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரிலையன்ஸ் ஜியோ இயக்குனர் பதவியில் இருந்து முகேஷ் அம்பானி ராஜினாமா செய்துள்ளார்.
கொரோனா பரவல் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பண்டிகை காலம் வருவதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரிய திருவிழாக்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும்
பொதுக்கூட்டங்கள் மற்றும் வழிபாட்டு கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் காற்றோட்ட வசதிகளை உறுதி செய்ய வேண்டும்
மருத்துவ வசதி, மருந்துகள் இருப்பு, ஆக்சிஜன் இருப்பு உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜூலை 11 ஆம் தேதி கூடும் பொதுக்குழுவிற்கான இடம் குறித்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்த நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கமாக நடைபெறும் சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்: “உலகெங்கும் கொரோன தொற்று அதிகரிப்பதால் முகக்கவசம் அணிவதில் மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் 30%-40%-க்கும் மேற்பட்டவர்கள் முகக்கவசம் அணிவது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் இதனை கூடுதல் ஆக்கும் விதத்தில் நாளை மைலாப்பூரில் 50,000 பேருக்கு மாஸ்க் வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த உள்ளோம்” என்று கூறினார்.
தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தொழிலதிபர் முகமது எஹியா ரூ. 1 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டியை அமைத்துக்கொடுத்துள்ளார்; மலேசிய அமைச்சர் சரவணன் இதனை தொடக்கி வைத்தார்.
தஞ்சை நடுக்கடையை பூர்வீகமாக கொண்ட முகமது எஹியா, பல நாடுகளில் மலர் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார்.
வழக்கறிஞர்கள் கறுப்பு கோட், கறுப்பு கவுன் அணிய தேவையில்லை – ஐகோர்ட்
கொரோனா பரவலைத் தடுக்க, வழக்கறிஞர்கள் செப்டம்பர் 7 முதல் கறுப்பு கோட், கறுப்பு கவுன் அணிய தேவையில்லை வெள்ளை சட்டையுடன் கழுத்துப்பட்டை (NECK BAND) மட்டும் அணிந்து நேரடி விசாரணைக்கு ஆஜராகலாம் என்று சென்னை உயர் நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவாமல் தடுக்க மெட்ராஸ் பார் அசோசியேஷன் அளித்த கோரிக்கையை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவையில் ஒரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அவகாசம் வழங்கி அமலாக்கத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, நில மோசடி வழக்கில் இன்று ஆஜராகி விளக்கமளிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது
அசாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 135ஆக அதிகரித்துள்ளது. மீட்பு பணி மற்றும் நிவாரணப் பொருட்கள் விநியோகத்தில் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் விமானப் படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்
நாடு முழுவதும் ஜூலை 1 முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதித்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது
அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கான மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்ட நிலையில் அது மீறப்பட்டதாக சண்முகம் வழக்கு தொடுத்துள்ளார்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தனித்துவமான வேத சம்பிரதாயம் பின்பற்றப்படுகிறது. மத மற்றும் நிர்வாக உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஆய்வு நடவடிக்கையை கைவிட வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு சிதம்பரம் தீட்சிதர்கள் கடிதம் எழுதியுள்ளனர்
இரண்டு விமானிகள் உட்பட ஒன்பது பேரை ஏற்றிச் சென்ற ONGC ஹெலிகாப்டர் செவ்வாயன்று அரபிக்கடலில் உள்ள அந்த நிறுவனத்தின் ரிக் அருகே அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒன்பது நபர்களில் நான்கு பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர், மற்றவர்களை பாதுகாப்பாக கொண்டு வர முயற்சிகள் நடந்து வருவதாக நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆறு ஓஎன்ஜிசி பணியாளர்கள் மற்றும் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்ததாரர் ஆகியோருடன் சென்ற ஹெலிகாப்டர், கரையிலிருந்து கடல் நிறுவல்களுக்கு பணியாளர்கள் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்லும் ஹெலிகாப்டர்களுடன் இணைக்கப்பட்ட மிதவைகளைப் பயன்படுத்தி தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் இன்று அமைச்சரவை கூடுகிறது. மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில் இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது
மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் உள்ள உயர்மட்ட நீர்வரத்து கால்வாயில் குப்பைகளை அகற்ற கோரிய வழக்கை முடித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வைத்துள்ளது
கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய நடவடிக்கை எடுக்காமல் அறநிலையத்துறை தூங்கிக்கொண்டு இருக்கிறது. ஆக்கிரமிப்புகளை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டிய அதிகாரிகள் வெறும் சம்பளத்தை மட்டும் வாங்கி கொண்டு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. வரலாற்று சிறப்பு மிக்க பல்வேறு கோவில்கள் இன்னும் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதற்கும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செயல்படாத நிலையே காரணம் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சென்னையில் 2019-ல் போராட்டம் நடத்தியதாக வழக்கு தொடப்பட்டிருந்தது. சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் மீதான வழக்கு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைபாளர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவிற்கு தடை கோருவதுடன், கட்சிப் பதவிகளில் மாற்றம் கொண்டுவர தற்காலிக தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்துளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈ.சி.ஆர். விஜிபியில் அதிமுக பொதுக்குழு நடத்தும் ஏற்பாடுகள் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் அதிமுக பொதுக்குழு நடைபெறுவதில் குழப்பம் நீடிக்கிறது.
கர்நாடகா, குடகு மாவட்டத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.5ஆக பதிவு . தட்சிண கன்னடா மாவட்டத்லும் நில அதிர்வு, ரிக்டர் அளவில் 2.3 ஆக பதிவு . கர்நாடகாவில் ஒரே வாரத்தில் 2வது முறையாக நில அதிர்வால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அனைவருக்குமான, அனைத்து துறைக்குமான ஆட்சி நடந்து வருகிறது – முதல்வர் ஸ்டாலின் பேச்சு
அதிமுக அலுவலகத்தில் கடந்த 18ம் தேதி மாரிமுத்து என்பவர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறைக்கு திமுக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறுவது நமக்கு பெருமை. செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதால் உலகமே தமிழகத்தை உற்றுநோக்க உள்ளது என சென்னையில் நடைபெறும் விளையாட்டு வீரர்களுக்கான மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஓபிஎஸ் ஆதராவாளராக உள்ள நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 9 பேர் தங்களது ஆதரவை தெரிவிக்கும் விதமாக, இபிஎஸ் இல்லத்துக்கு வருகை தந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ந்த மற்றும் கீழே விழும் நிலையில் உள்ள மரங்கள்,மரக்கிளைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 11,793 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்தனர். 96,700 பேர் கொரோனாவுக்கு சிகிச்சையில் உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கொடுத்த அறிக்கையில், தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்து 17 பேர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொண்டு வரப்பட்ட சட்டத்தை கைவிட்டு, புதிய சட்டத்தை கொண்டு வர அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஒற்றை தலைமை விவகாரம் குறித்து இ.பி.எஸ் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதனிடையே, உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ள ஓ.பி.எஸ் இன்று சட்ட வல்லுநர்களுடன் 2வது நாளாக ஆலோசிக்க முடிவு செய்துள்ளார்.
உக்ரைனில் உள்ள வணிக வளாகம் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு, ரஷ்யாவின் இந்த செயல் மிகப்பெரிய போர் குற்றம் என ஜி7 அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.