/indian-express-tamil/media/media_files/FdEuJTSS7BgStt2Np6Pj.jpg)
IE Tamil Updates
Tamil news updates: பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 604-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Jan 17, 2024 21:52 IST
இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.1.20 கோடி அபராதம்
விமானங்கள் நிறுத்துமிடத்தில், பயணிகள் அமர்ந்து சாப்பிட்ட விவகாரத்தில் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.1.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
-
Jan 17, 2024 21:10 IST
சென்னையில் போக்குவரத்து நெரிசல்
தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் காரணமாக சிங்கபெருமாள்கோவில் அருகே வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
-
Jan 17, 2024 20:49 IST
பிரதமர் நரேந்திர மோடி வருகை; திருச்சியில் ட்ரோன் பறக்க தடை
பிரதமர் நரேந்திர மோடி திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரம் ராமநாத சாமி கோவிலில் தரிசனம் மேற்கொள்ள தமிழ்நாடு வருகிறார்.
இந்த நிலையில் ஜன.17ஆம் தேதி முதல் 20ஆம் தேதிவரை திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. -
Jan 17, 2024 20:47 IST
அதிக டக்.. விராத் கோலி மோசமான சாதனை
அதிக டக் அவுட் ஆன இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் தெண்டுல்கரை பின்னுக்கு தள்ளினார் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். தற்போது, சச்சின் 34 டக் அவுட்களுடன் 2 இடத்தில் உள்ளார்.
-
Jan 17, 2024 20:13 IST
அயோத்தி அழைப்பிதழ் கிடைக்கவில்லை; அரவிந்த் கெஜ்ரிவால்
“ஜனவரி 22ஆம் தேதிக்கு பின்னர் அயோத்திக்கு குடும்பத்துடன் செல்வேன்; ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கான அழைப்பிதழ் கிடைக்கவில்லை” என டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
-
Jan 17, 2024 19:43 IST
மதுரை வெள்ளக்காளி காளைக்கு பரிசு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 810 காளைகள் களம் கண்ட நிலையில், முதலிடம் பிடித்த மதுரை வெள்ளைக்காளி செளந்தர் காளைக்கு கார் பரிசு வழங்கப்படடது.
-
Jan 17, 2024 19:42 IST
மினி பேருந்து பறிமுதல்
ரூ.2க்கு டிக்கெட் கொடுத்து ₹10 வசூலித்த மினி பேருந்தை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
-
Jan 17, 2024 19:41 IST
பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல்
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
-
Jan 17, 2024 19:10 IST
18 காளைகளை அடக்கிய கார்த்தி; முதல் பரிசு வழங்கிய அமைச்சர்
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 18 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் கருப்பாயூரணி கார்த்திக்கு அமைச்சர் மூர்த்தி காரை பரிசாக வழங்கினார்.
-
Jan 17, 2024 18:13 IST
மதுரையில் ஜனவரி 24-ல் ஏறுதழுவுதல் அரங்கம் திறப்பு
மதுரையில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை ஜனவரி 24-ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம். எக்காலத்திலும் பண்பாட்டைக் காப்போம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
Jan 17, 2024 17:56 IST
மெரினா கடற்கரையில் குவிந்த மக்கள் கூட்டம்
காணும் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூடி காணும் பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.காணும் பொங்கலையொட்டி மெரினா கடற்கரை காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
-
Jan 17, 2024 17:18 IST
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு: ராம்நாத் கோவிந்த் குழுவுக்கு தி.மு.க கடிதம்
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழுவிற்கு தி.மு.க கடிதம் எழுதியுள்ளது. “ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்திற்கு எதிரானது. அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள சுதந்திரமான நேர்மையான தேர்தலுக்கு முற்றிலும் எதிரானது. இது ஒன்றிய மாநில அரசு உறவுகளில் மட்டுமல்ல, ஒன்றியத்திற்கே கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்து மிக்க முயற்சி” கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Jan 17, 2024 16:50 IST
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி
7வது சுற்று முடிவில்;
அனுமதிக்கப்பட்ட காளைகள் - 636
தகுதி நீக்கம் செய்யப்பட்ட காளைகள் - 16
ஆன்லைன் மூலமாக முன்பதிவு பெற்று மொத்த காளைகள் - 1200
-
Jan 17, 2024 16:50 IST
‘ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு‘ எதிர்ப்பு
‘ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு‘ எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழுவிற்கு திமுக கடிதம்
"அரசியல் சட்டத்திற்கும் - அச்சட்டம் தந்த கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிராக - ஒன்றிய மாநில உறவை மட்டுமின்றி, ஒன்றியத்திற்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை கைவிட வேண்டும்" – திமுக
-
Jan 17, 2024 16:07 IST
நீதிமன்றங்களை மாற்றுவது குறித்து பரிசீலனை
"செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்களை, காஞ்சிபுரத்துக்கு மாற்றுவது குறித்து பரிசீலனை"
நீதிமன்றங்களை மாற்றக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தகவல்
-
Jan 17, 2024 16:04 IST
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - 7வது சுற்று நிறைவு
மூன்று காளையர்கள் தலா 11 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளனர்.
2 பேர் தலா 7 காளைகளை அடக்கி இரண்டாவது இடத்தில் உள்ளனர்
-
Jan 17, 2024 15:45 IST
“தமிழும் திமிலும்” எமது பேரடையாளம்
ஏறுதழுவல் என்னும் ஜல்லிக்கட்டின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது ஒரு கூட்டம்.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) January 17, 2024
"தீய உள்நோக்கங்கொண்ட பிரிவினைவாதம்" என @nsitharaman
கூறுகிறார்.
உலகம் அதிர உரக்கச்சொல்வோம்...
கீழடி அகழாய்வு தொடங்கி அலங்காநல்லூர் வாடிவாசல் வரை “தமிழும் திமிலும்” எமது பேரடையாளம்.#jallikattu… pic.twitter.com/BFbrA3HtcY -
Jan 17, 2024 15:43 IST
ஜெயக்குமார் பேட்டி
“அண்ணாமலை முதலமைச்சர் ஆவதெல்லாம் இலவு காத்த கிளி போலத்தான். அதெல்லாம் நடக்காத விஷயம்” – ஜெயக்குமார்
-
Jan 17, 2024 15:42 IST
எடப்பாடி- ஓ.பி.எஸ். இடையே அடிதடி மோதல்
MGR பிறந்தநாள் விழாவில் அதிமுக கொடியேற்ற எடப்பாடி தரப்பு - ஓ.பி.எஸ். தரப்பு இடையே அடிதடி மோதல்
— Sun News (@sunnewstamil) January 17, 2024
ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது#SunNews | #ADMK | #OPS | #EPS pic.twitter.com/pLdXf7YVfv -
Jan 17, 2024 15:13 IST
எம்.ஜி.ஆர். பாடல்களை பாடிய ஜெயக்குமார்
#WATCH | செய்தியாளர் சந்திப்பில் அடுத்தடுத்து எம்.ஜி.ஆர். பாடல்களை பாடிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!#SunNews | #Jayakumar | #MGR107 | @djayakumaroffcl pic.twitter.com/YkEOrs9J1b
— Sun News (@sunnewstamil) January 17, 2024 -
Jan 17, 2024 15:11 IST
நாளை கடையடைப்பு போராட்டம்
பழனி முருகன் கோவில் மலையடிவாரம் பகுதியில் நாளை கடையடைப்பு போராட்டம்
ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டம் அறிவிப்பு
-
Jan 17, 2024 14:38 IST
கொடைக்கானல்: மாயமான இளைஞர்கள் சடலமாக மீட்பு
கொடைக்கானல் பேத்துபாறை பகுதியில் உள்ள அஞ்சு வீடு அருவியில் குளிக்கும் போது மாயமான நசீர், கோகுல் ஆகிய இரு இளைஞர்களும் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளனர்.
பொங்கல் விடுமுறையை ஒட்டி நண்பர்களுடன் அவர்கள் குளிக்க வந்தது விசாரணையில் தெரியவந்தது.
-
Jan 17, 2024 14:37 IST
பழனி முருகன் கோவில்: நாளை கடையடைப்பு
பழனி முருகன் கோவில் மலையடிவாரம் பகுதியில் நாளை கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jan 17, 2024 14:36 IST
அங்கித் திவாரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு
திண்டுக்கல்லில் அரசு மருத்துவரை மிரட்டி ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகி நீதிமன்றக் காவலில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை, தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை மனுவை திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் கடந்த 12ம் தேதி தள்ளுபடி செய்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறையீடு செய்துள்ளது.
-
Jan 17, 2024 13:46 IST
ஆயி பூரணம் அம்மாளை சந்தித்த அமைச்சர் உதயநிதி
கொடிக்குளம் அரசுப்பள்ளிக்கு ரூ. 7 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக கொடுத்த ஆயி பூரணம் அம்மாளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
Jan 17, 2024 13:39 IST
ஆம்லெட் போட்டு கொடுத்த கே.சி.வீரமணி!
திருப்பத்தூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாளை முன்னிட்டு, வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் உள்ள அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, அங்குள்ளவர்களுக்கு ஆம்லெட் போட்டு கொடுத்துள்ளார்.
-
Jan 17, 2024 13:33 IST
இ.பி.எஸ் உடன் இலங்கை அமைச்சர் சந்திப்பு
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், இலங்கை நீர்வளத்துறை அமைச்சர் ஜீவன் தொண்டமான் மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடத்தினார்.
-
Jan 17, 2024 13:29 IST
சிறாவயல் மஞ்சுவிரட்டு: இருவர் பலி
சிவகங்கை, சிறாவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே சிறுவன் உயிரிழந்த நிலையில், தற்போது அடையாளம் தெரியாத மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளார்.
சிறாவயல் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 75 பேர் காயமடைந்துள்ளனர்.
-
Jan 17, 2024 12:56 IST
ஓ.பி.எஸ் உடன் இணைந்து செயல்பட முடிவு: டிடிவி தினகரன்
ஓ.பன்னீர்செல்வமும், நானும் வருங்கால அரசியலில் இணைந்து செயல்பட வேண்டும் என ஒரு முடிவை எடுத்துள்ளோம்.
கூட்டணி பற்றி உரிய நேரத்தில் முடிவை அறிவிப்போம் - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
திருவள்ளுவருக்கு காவி ஆடை விவகாரத்தில் ஆளுநர் அவரது பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக உள்ளது - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
-
Jan 17, 2024 12:49 IST
ராமர் கோயில் திறப்பு விழா அழைப்பை நிராகரித்த லாலு பிரசாத்
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு செல்ல மாட்டேன் என RJD தலைவர் லாலு பிரசாத் பேட்டி.
-
Jan 17, 2024 12:48 IST
ராமர் கோயில் திறப்பு விழா நாளில் ‘மத நல்லிணக்க பேரணி' : மம்தா
ராமர் கோயில் திறப்பு விழா நாளில் ‘மத நல்லிணக்க பேரணி’ நடத்தப்படும் என மேற்கு வங்க முதலமைசர் மம்தா பானர்ஜி அறிவிப்பு.
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ள 22-ம் தேதி மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ‘மத நல்லிணக்க பேரணி’ நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு.
முதலில் காளி கோயிலில் பூஜை முடித்துவிட்டு கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், குருத்துவாராக்களுக்கு சென்று வழிபடப் போவதாக அறிவிப்பு.
-
Jan 17, 2024 12:40 IST
சிவகங்கையில் காளை முட்டியதில் சிறுவன் பலி
சிவகங்கை, சிராவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் வலயபட்டியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் உயிரழப்பு. காளை முட்டியதில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பாஸ்கரன் என்ற சிறுவன் உயிரிழப்பு
-
Jan 17, 2024 12:32 IST
ஸ்டார்ட் அப் தரவரிசையில் தமிழ்நாடு முதலிடம்
கடந்த ஆட்சிக் காலத்தில் 2018ல் ஸ்டார்ட் அப் தரவரிசையில் கடைசித் தரநிலையில் இருந்த தமிழ்நாடு, 2022ம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒட்டுமொத்தமாக நமது அரசு முன்னெடுத்த மறுசீரமைப்பு முயற்சிகளாலேயே தமிழ்நாடு இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளது, தற்போது 7600 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன, அவற்றுள் 2022ம் ஆண்டில் மட்டும் 2,250 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதே நாம் நிகழ்த்திய பாய்ச்சலுக்குச் சான்று.
இந்தச் சாதனை மாற்றத்தைச் சாத்தியமாக்க உழைத்த அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கும், அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இந்த இடத்தைத் தக்கவைக்கவும், மேலும் உயரங்களைத் தொட உழைக்கவும் வேண்டுகிறேன் - முதல்வர்
-
Jan 17, 2024 12:29 IST
தென் மாவட்டங்களில் இன்று சிறப்பு ரயில் இயக்கம்
பொங்கல் பண்டிகை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்வதற்கு இன்று சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக இயக்கப்படுகிறது.
நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து மாலை 4:30 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு நாளை அதிகாலை 4.10 மணிக்கு வந்தடையும்
-
Jan 17, 2024 12:04 IST
குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு
கேரளா குருவாயூரப்பன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி குருவாயூர் கோயிலில் வழிபாடு
-
Jan 17, 2024 11:54 IST
எம்.ஜி.ஆர் பிறந்தநாள்: இ.பி.எஸ் மரியாதை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள்
சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை. அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்த எடப்பாடி பழனிசாமி
-
Jan 17, 2024 11:32 IST
தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு. தங்கம் ஒரு கிராம் ரூ.5,810க்கும், ஒரு சவரன் ரூ.46,480க்கும் விற்பனை
-
Jan 17, 2024 11:17 IST
ஸ்ரீரங்கம் கோயிலில் ஆளுநர் ரவி தூய்மை பணி
ஸ்ரீரங்கம் கோயிலில் தாயார் சன்னதி முன்பு உள்ள கம்பர் மண்டபத்தில் தண்ணீர் ஊற்றி கழுவி மனைவியுடன் சுத்தம் செய்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி
-
Jan 17, 2024 11:16 IST
நாடே ராமர் மயமாகி வருகிறது: திருச்சியில் ஆளுநர் ரவி பேச்சு
இந்தியா முழுவதும் தற்போது மீண்டும் ராமர் மயமாகி வருகிறது. ஒவ்வொரு இந்தியரின் இதயங்களிலும் ராம நாமமே ஒலித்து வருகிறது. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோயில்களை தூய்மையாக பராமரிப்பதில் பக்தர்களுக்கும் பெரும்பங்கு உண்டு- ஆளுநர் ஆர்.என் ரவி திருச்சியில் பேட்டி
-
Jan 17, 2024 10:50 IST
எம்.ஜி.ஆர்-ன் 107வது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர்கள் மரியாதை
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்-ன் 107வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் மலர் தூவி மரியாதை
-
Jan 17, 2024 10:47 IST
யானைகளுக்கு இன்று முதல் பசுந்தீவனம் வழங்கும் திட்டம் தொடக்கம்
நீலகிரி: முதுமலை தெப்பக்காடு முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு இன்று முதல் பசுந்தீவனம் வழங்கும் திட்டம் தொடக்கம்; மேலும் யானை பாகன்கள் மரங்களில் உள்ள இலை, தலைகளை வெட்ட மாட்டோம் என உறுதிமொழி எடுப்பு; இதன் மூலம் வனங்களில் உள்ள மரங்கள் பாதுகாக்கப்படும் என முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தகவல்
-
Jan 17, 2024 10:07 IST
மின்சாரம் தாக்கி உயிரிழப்பு முதல்வர் நிதியுதவி
நீலகிரி, சேரங்கோடு அருகே அரசு பேருந்து மின் கம்பத்தில் மோதியதில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் உயிரிழந்த பேருந்து ஓட்டுநர் நாகராஜ் (49) மற்றும் பேருந்தில் பயணம் செய்த பாலாஜி(51) ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ₨2 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் - முதல்வர்
-
Jan 17, 2024 09:55 IST
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 10 பேர் காயம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 10 பேர் காயமடைந்துள்ளனர் 2 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி
-
Jan 17, 2024 09:55 IST
குருவாயூர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
கேரளா, குருவாயூர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம். நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
-
Jan 17, 2024 09:35 IST
சென்செக்ஸ் 755 புள்ளிகள் வீழ்ச்சி; சந்தை 1% சரிவு
இந்திய பங்குச் சந்தைகள் இன்று தொடக்கம் முதலே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தன. சென்செக்ஸ் 755 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது. நிஃப்டி 203.50 புள்ளிகள் சரிந்தன. hdfc பங்குகள் 5% வரை சரிந்தன.இன்றைய பங்குச் சந்தை தொடக்கத்தில் சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் ஒரு சதவீதம் வரை சரிந்துள்ளன.
-
Jan 17, 2024 09:16 IST
தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர் எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு தலைவராகவும் திகழ்ந்தார் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாளையொட்டி அவரை நினைவுக் கூர்ந்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு சமூக நீதி கொண்ட அவரது படங்கள் வெள்ளித்திரைக்கு அப்பால் இதயங்களை வென்றன - பிரதமர் மோடி தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர் தமிழகத்தின் வளர்ச்சியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார்> அவரது பணி தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கிறது - பிரதமர் மோடி
-
Jan 17, 2024 08:54 IST
பொன்முடி வழக்கு : இரண்டு வாரங்களுக்கு பிறகு விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவு
சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சியின் மேல்முறையீடு மனு இரண்டு வாரங்களுக்கு பிறகு விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவு
-
Jan 17, 2024 08:17 IST
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் 2வது சுற்று தொடங்கியது
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் 2வது சுற்று தொடங்கியது 2வது சுற்றில் பிங்க் நிற சீருடையில் களமிறங்கியுள்ள வீரர்கள்
-
Jan 17, 2024 07:47 IST
அரவிந்த்சாமிக்கு பேனர் வைத்த அதிமுகவினர்
எம்.ஜி.ஆர் பிறந்தநாளுக்கு நடிகர் அரவிந்த்சாமிக்கு பேனர் வைத்த திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவினர்.
-
Jan 17, 2024 07:46 IST
மஞ்சள் நிற சீருடையில் களமிறங்கியுள்ள வீரர்கள்
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது முதல் சுற்றில் மஞ்சள் நிற சீருடையில் களமிறங்கியுள்ள வீரர்கள்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.