Advertisment

Tamil News : பழனியில் திருக்கல்யாண விழா

Latest Tamil news தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 22 பேர் உயிரிழப்பு

author-image
WebDesk
New Update
Tamil News : பழனியில் திருக்கல்யாண விழா

Tamil News Highlights : அலங்காநல்லூரில் காலை 7.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியில் 700 காளைகள், 300 காளையர்கள் பங்கேற்க உள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் தங்க நாணயம் பரிசு அறிவிப்பு. மாடுபிடி வீரர் ஆள்மாறாட்டம் செய்வதைத் தடுக்கவும், கண்காணிக்கவும் சிறப்புக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. சிறந்த காளைக்கு முதல்வர் சார்பிலும், சிறந்த மாடுபிடி வீரருக்கு உதயநிதி ஸ்டாலின் சார்பிலும் கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஒரே நாளில் 23,975 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 23,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெட்ரோல் - டீசல் விலை

சென்னையில் 74-வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் ரூ.101.40-க்கும், டீசல் ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 21:28 (IST) 17 Jan 2022
    சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின மகளிருக்கு ஒதுக்கீடு

    சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளை பெண்களுக்கு ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது


  • 21:16 (IST) 17 Jan 2022
    சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின மகளிருக்கு ஒதுக்கீடு

    சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளை பெண்களுக்கு ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது


  • 20:26 (IST) 17 Jan 2022
    குடியரசு தின விழாவில், தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம்- மத்திய அரசு விளக்கம்

    குடியரசு தின விழாவில், தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகள் பங்கேற்க வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்வதில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது


  • 19:54 (IST) 17 Jan 2022
    தமிழகத்தில் மேலும் 23,443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 20 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் மேலும் 23,443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 20 பேர் உயிரிழந்துள்ளனர்


  • 19:18 (IST) 17 Jan 2022
    2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில் ரூ1,43,902 கோடி முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாடு முதலிடம்

    2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில் 304 திட்டங்கள் மூலம் ரூ1,43,902 கோடி முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. 2022 நிதியாண்டில் முதல் 9 மாதங்களில் அதிகமான தொழில் முதலீடுகளை பெற்ற மிகச் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது


  • 19:14 (IST) 17 Jan 2022
    குடியரசு தின அலங்கார ஊர்தி குறித்து எதிர்கட்சியினர் பொய் பிரசாரம் செய்கின்றனர் - அண்ணாமலை

    ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநிலங்கள் மட்டுமே பங்கேற்க முடியும். குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பு குறித்து எதிர்கட்சியினர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்


  • 17:50 (IST) 17 Jan 2022
    குடியரசு தின விழாவில் தமிழக ஊர்தி இடம் பெற வேண்டும்; பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

    குடியரசு தின விழாவில் தமிழகத்தின் ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், குடியரசு தின விழாவில் தமிழகத்தின் ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. இதில் பிரதமர் உடனடியாக தலையிட்டு, விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


  • 17:43 (IST) 17 Jan 2022
    உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

    உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் 8 சுற்றுகளில் 1020 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.


  • 17:42 (IST) 17 Jan 2022
    அபுதாபியில் குண்டுவெடிப்பு - 2 இந்தியர்கள் உயிரிழப்பு

    அபுதாபியில் எண்ணெய் கிடங்குகள், கட்டிடம் ஒன்றி குண்டு வெடிப்பு ஏற்பட்டதில் 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் ட்ரோன் மூலம் வெடி குண்டு தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. ட்ரோன் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக ஹவ்தி என்ற தீவிரவாத இயக்கம் அறிவித்துள்ளது.


  • 17:28 (IST) 17 Jan 2022
    நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழக எம்.பி.க்கள் குழு அமித்ஷா உடன் சந்திப்பு

    நீட் விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷா உடன் தமிழக அனைத்து கட்சி பிரதிநிதிகள் சந்தித்தனர். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு தரக் கோரி அனைத்து கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தினர். தமிழ்நாடு அனைத்துக் கட்சி குழுவில் திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, பாமக, விசிக, சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.


  • 17:26 (IST) 17 Jan 2022
    நீட் தேர்வு விலக்கு கோரிக்கை மனுவை தமிழக எம்.பி.க்கள் அமித்ஷாவிடம் அளிப்பு

    நீட் தேர்வு விலக்கை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் கொடுத்தோம். மத்திய சுகாதார மற்றும் கல்வித்துறை அமைச்சர்களுடன் கலந்துரையாடிய பிறகு, தமிழக முதல்வருக்கு தீர்வை தெரிவிப்பேன் என அமித்ஷா உறுதியளித்துள்ளதாக டி.ஆர். பாலு தெரிவித்தார்.


  • 17:23 (IST) 17 Jan 2022
    தமிழகத்திற்கு தேவையான பேரிடர் நிதியை ஜனவரி 31ஆம் தேதிக்குள் தர அமித்ஷா உறுதி - டி.ஆர்.பாலு

    தமிழகத்திற்கு தேவையான பேரிடர் நிதியை ஜனவரி 31ஆம் தேதிக்குள் தர அமித்ஷா உறுதியளித்துள்ளதாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.


  • 16:55 (IST) 17 Jan 2022
    வணிகம் செய்ய சிறந்த மாநிலம்: ரூ.1. 07 லட்சம் கோடி லாபத்துடன் தமிழகம் முதலிடம்!

    2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, 304 திட்டங்கள் மூலம் ரூ. 1.43 லட்சம் கோடி முதலீடுகளுடன், ரூ.1. 07 லட்சம் கோடி லாபத்துடன், வணிகம் செய்ய சிறந்த மாநிலம் பட்டியலில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. ரூ.77, 892 கோடி லாபத்துடன் குஜராத் 2வது இடமும், ரூ. 65, 288 கோடி லாபத்துடன் தெலுங்கானா மூன்றாவது இடத்திலும் உள்ளன.


  • 16:54 (IST) 17 Jan 2022
    அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்: ஹவுதி கிளர்ச்சிப் படை சதி!

    ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி விமான நிலையத்தில் இன்று நிகழ்ந்த ட்ரோன் தாக்குதலில், 3 எரிபொருள் டேங்கர்கள் வெடித்து சேதமாகின. இந்த தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சிப் படை அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


  • 16:26 (IST) 17 Jan 2022
    அதிகரித்து வரும் நூல்லிழை உயர்வால் பின்னலாடை தொழில் பாதிப்பு: ஓபிஎஸ் கோரிக்கை!

    ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை மத்திய அரசிடம், மாநில அரசு எடுத்துக் கூற வேண்டும். அதிகரித்து வரும் நூல்லிழை உயர்வால் திருப்பூரில் பின்னலாடை தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சு மீதான் இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


  • 16:25 (IST) 17 Jan 2022
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 7வது சுற்று தொடக்கம்!

    உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 6 சுற்றுகள் நிறைவடைந்து, 7வது சுற்று தொடங்கி நடைபெறுகிறது. இதுவரை 816 காளைகள் களமிறக்கப்பட்டுள்ளன.


  • 16:25 (IST) 17 Jan 2022
    சென்னை ஐஐடி கல்லூரியின் புதிய இயக்குனர் இன்று பதவியேற்பு!

    சென்னை ஐஐடி கல்லூரியின் 11வது இயக்குனராக பேராசிரியர் காமகோடி இன்று பதவியேற்றார்.


  • 15:53 (IST) 17 Jan 2022
    கொரோனா பரவல்: குரூப் பி மற்றும் சி ஊழியர்கள் 50% பேர் மட்டுமே பணிக்கு வர உத்தரவு!

    புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக குரூப் பி மற்றும் சி ஊழியர்கள் 50% பேர் மட்டுமே பணிக்கு வர வேண்டும் என புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் தேவைப்பட்டால் பணிக்கு வரலாம். அதேநேரம் அரசு செயலர்கள், அரசுத்துறையின் தலைவர்கள் முழுமையாக பணிக்கு வர புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.


  • 15:53 (IST) 17 Jan 2022
    விசாரணைக்கு அழைத்துச் சென்ற மாற்றுத்திறனாளி உயிரிழப்பு: ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

    விசாணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாற்றுத் திறனாளி பிரபாகரன் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்த பிரபாகரன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


  • 15:42 (IST) 17 Jan 2022
    குடியரசு தின அணிவகுப்பு.. தமிழகம் கொந்தளிக்கும்.. முத்தரசன் அறிக்கை!

    தமிழக ஊர்திகளுக்கு குடியரசு தின அணிவகுப்பில் இடமில்லை எனில் தமிழகம் கொந்தளிக்கும். தமிழ்நாட்டு விடுதலைப் போராட்ட வீரர்களை அவமதிக்கும் மத்திய அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


  • 14:57 (IST) 17 Jan 2022
    பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் ஒத்திவைப்பு (2/2)

    சீக்கிய மதகுரு ரவிதாஸ் நினைவு தினம் என்பதால் பிப்ரவரி 14ம் தேதி அன்று நடைபெற இருந்த தேர்தலை ஒத்திவைக்கும் படி பஞ்சாப் முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து நடவடிக்கை


  • 14:31 (IST) 17 Jan 2022
    பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் ஒத்திவைப்பு

    பிப்ரவரி 14ம் தேதி அன்று நடைபெற இருந்த பஞ்சாப் தேர்தல் பிப்ரவரி 20ம் தேதிக்கு மாற்றி வைத்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு


  • 14:29 (IST) 17 Jan 2022
    திமுக ஆட்சியில் காவல்நிலைய இறப்புகள் அதிகரித்துள்ளன - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    திமுக தலைமையிலான ஆட்சியில் காவல் நிலையங்களில் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. உண்மை சம்பவங்களை விமர்சிக்கும் நபர்கள் மீது திமுக பொய் வழக்கு போடுகிறது. தவறு செய்யும் காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈ.பி.எஸ். கூறியுள்ளார்.


  • 14:27 (IST) 17 Jan 2022
    உயிரிழந்த பிரபாகரன் குடும்பத்திற்கு ரூ, 10 லட்சம் நிவாரணம்

    நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி பிரபாகரன் உயிரிழந்த நிலையில் அவருடைய குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


  • 13:58 (IST) 17 Jan 2022
    தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்த மத்திய அரசின் செயல் கண்டிக்கத்தக்கது - கனிமொழி

    இந்தியா வடமாநிலங்களுக்கானது மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி ட்வீட் வெளியிட்டுள்ளார்.

    இவர்களை பற்றிய ஒன்றிய அரசின் அறியாமை ஒட்டுமொத்த தமிழகத்தை அவமதிக்கும் விதத்தில் இருக்கிறது. இந்தியா என்பது அனைவருக்குமானது, வடமாநிலங்களால் மட்டும் ஆனது கிடையாது. ஒன்றிய அரசு உடனடியாக இந்த ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும். @PMOIndia @rajnathsingh (2/2)
    — Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 17, 2022

  • 13:51 (IST) 17 Jan 2022
    குப்பையில் வீசப்பட்ட பிறந்து 2 நாட்களேயான பெண் குழந்தை மீட்பு

    வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் குப்பையில் வீசப்பட்ட பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை மீட்பு


  • 13:33 (IST) 17 Jan 2022
    பண்டிட் பிர்ஜு மகாராஜ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

    பழம்பெரும் கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜின் மறைவு நாட்டுக்கும் கலைக்கும் பேரிழப்பாகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய இரங்கல் குறிப்பில் அறிவித்துள்ளார்.


  • 13:32 (IST) 17 Jan 2022
    கமல் மருத்துவமனையில் அனுமதி

    சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அனுமதிக்கப்பட்டுள்ளார்


  • 13:31 (IST) 17 Jan 2022
    மருத்துவ மாணவர் சேர்க்கை - மேலும் ஒரு வழக்கு

    மருத்துவ மாணவர் சேர்க்கையில் 50% இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டுமென்ற உத்தரவை ரத்து செய்யக்கோரிய தனியார் மருத்துவக் கல்லூரி ரிட் மனு மீதான விசாரணையை ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச் நீதிமன்றம்


  • 13:06 (IST) 17 Jan 2022
    பஞ்சாப் தேர்தல் : ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் நாளை அறிவிப்பு

    பஞ்சாப் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் முதல்வர் வேட்பாளாரை நாளை அறிவிக்க உள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்


  • 12:35 (IST) 17 Jan 2022
    திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

    திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


  • 12:34 (IST) 17 Jan 2022
    சாந்திதேவி மறைவு - மோடி இரங்கல்

    சமூக ஆர்வலர் சாந்திதேவியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஏழைகளின் துன்பங்களை நீக்கி, சமூக நலனுக்காக தன்னலமின்றி உழைத்தவர் சாந்திதேவி என குறிப்பிட்டுள்ளார்.


  • 12:27 (IST) 17 Jan 2022
    புதுச்சேரியில் திருப்புதல் தேர்வு ஒத்திவைப்பு

    புதுச்சேரியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் எதிரொலியாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.


  • 12:10 (IST) 17 Jan 2022
    எம்ஜிஆர் சிலைக்கு சசிகலா மரியாதை

    சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் அவரது உருவ சிலைக்கு வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


  • 11:57 (IST) 17 Jan 2022
    நீட் - அமித்ஷாவுடன் தமிழக அனைத்து கட்சி பிரதிநிதிகள் இன்று சந்திப்பு

    நீட் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷா உடன் தமிழக அனைத்து கட்சி பிரதிநிதிகள் இன்று மாலை 4.30 மணியளவில் சந்தித்து பேசவுள்ளனர்.


  • 11:36 (IST) 17 Jan 2022
    பிரபல நடன கலைஞர் பிர்ஜூ மஹாராஜ் காலமானார்

    பிரபல கதக் நடன கலைஞரான பண்டிட் பிர்ஜூ மஹாராஜ், நெஞ்சு வலி காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார். இவர், நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்றுள்ள கதக் பாடலான 'உன்னை காணாத' பாடலுக்கு நடன வடிவமைப்பு செய்தவர். அந்த படத்திற்காக தேசிய விருது பெற்றவர்.


  • 11:18 (IST) 17 Jan 2022
    சென்னை வானிலை மையத்திற்கு புதிய இயக்குநர்

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக செந்தாமரைக் கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக பதவிவகித்த புவியரசன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


  • 09:46 (IST) 17 Jan 2022
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டி போட்டியின் 3-வது சுற்று தொடங்கியது

    உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டி போட்டியின் 2 சுற்றுகள் நிறைவடைந்து 3-வது சுற்று தொடங்கியது. இதுவரை 224 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.


  • 09:43 (IST) 17 Jan 2022
    எம்.ஜி.ஆர் ஓர் சிறந்த தலைவர் - மோடி ட்வீட்

    சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக எம்.ஜி.ஆர் போற்றப்படுகிறார் என்று முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.


  • 09:41 (IST) 17 Jan 2022
    தடுப்பூசி செலுத்திக் கொள்ள கட்டாயப்படுத்தவில்லை

    வீடுதோறும் சென்று மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்த ரிட் மனுவில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், கொரோனா தடுப்பூசி சான்றிதழை கட்டாயப்படுத்துவது குறித்த எந்த வழிகாட்டுதல்களும் வழங்கப்படவில்லை என்றும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. இதுவரை 23,678 மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


  • 09:38 (IST) 17 Jan 2022
    டாவோஸ் நிகழ்ச்சி இன்றுமுதல் தொடக்கம்

    டெல்லி, உலகப் பொருளாதார அமைப்பின் டாவோஸ் நிகழ்வில் 'உலக நிலை' குறித்து பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சி இன்றுமுதல் வரும் 21-ம் தேதி வரை நடைபெறும். உலகம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்து தொழில்துறை தலைவர்கள், சர்வதேச அமைப்புகள் விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


  • 09:37 (IST) 17 Jan 2022
    இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

    இந்தியாவில் நேற்று 7,743-ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 8,209 ஆக அதிகரித்துள்ளது. 3,109 பேர் இந்த பாதிப்பிலிருந்து குணமடைந்தனர்.


  • 08:39 (IST) 17 Jan 2022
    நடன கலைஞர் பண்டிட் பிர்ஜு மகராஜ் மரணம்

    புகழ்பெற்ற கதக் நடன கலைஞர் பண்டிட் பிர்ஜு மகராஜ் (83) உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.


  • 08:38 (IST) 17 Jan 2022
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டி போட்டியின் முதல் சுற்று நிறைவு

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டி போட்டியில் முதல் சுற்றில் இருந்து 4 வீரர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கின்றனர். முதல் சுற்றில் 115 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


  • 08:36 (IST) 17 Jan 2022
    சென்னை புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் மழை

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Corona Stalin Alanganallur Jallikkattu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment