Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Latest Updates
சென்னை ஈ.வெ.ரா. சாலையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை, ஈ.வெ.ரா. சாலையில் சனிக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி கோயம்பேட்டிலிருந்து அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வளைவில் இடதுபுறமாக திருப்பிவிடப்படும். நெல்சன் மாணிக்கம் சாலைக்கு செல்ல விரும்புவோர் மேம்பாலத்தின் வழியாக சென்றடையலாம். இது சனிக்கிழமை முதல் 10 நாட்களுக்கு சோதனை ஓட்டமாக அமல்படுத்த உள்ளது.
அமர்நாத் மேகவெடிப்பு
அமர்நாத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலர் மாயமாகினர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 25 பேர் காயமடைந்தனர். மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால், அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
காமராஜ் தொடர்புடைய இடங்களில் சோதனை
முன்னாள் அதிமுக அமைச்சர் காமராஜ் தொடர்புடைய 52 இடங்களில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில், 963 சவரன் நகை, 23.96 கிலோ வெள்ளி, ரூ 41.06 லட்சம் கண்டறியப்பட்டன. கணக்கில் வராத ரூ 15.50 லட்சம், பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொலை
ஜப்பான் நாடாளுமன்ற மேலவைக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, ஜப்பான் நரா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பேசிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென அவரை துப்பாக்கியால் சுட்டார்.
இதில் காயமடைந்த ஷின்சோ அபே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 67. ஷின்சோ அபே மறைவுக்கு இந்தியப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இலங்கையின் பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்த ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விக்கிரமசிங்க அனைத்துக் கட்சி அரசாங்கத்தை பொறுப்பேற்க வழிவகை செய்யும் வகையில் தனது பதவி விலகலை அறிவித்தார்.
விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த வீராங்கனை எலெனா ரைபகினா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
நடிகர் விக்ரம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். உடல் நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை விக்ரம் வீடு திரும்பினார்
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்கிரமசிங்கே அறிவித்துள்ளார். அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுத்துள்ள நிலையில் ரணில் பதவி விலகல் முடிவை எடுத்துள்ளார். மக்களின் நலன் கருதி, அனைத்துக்கட்சி ஆட்சி அமைய பதவி விலக முடிவு செய்துள்ளதாக ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலக தயார் என்றும், பதவியை ராஜினாமா செய்துவிட்டு சர்வகட்சி ஆட்சி பொறுப்பேற்க வழிவகை செய்ய தயார் என்றும் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்
சபாநாயகர் தலைமையிலான கூட்டத்தில், அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலக அனைத்துக்கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்
சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரம் இல்லத்தில் மீண்டும் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. கார்த்தி சிதம்பரத்தின் பீரோவை 6 அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
இலங்கையில் நடைபெற்று வரும் அதிபருக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து முடிவு எடுக்கும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையில் அதிபருக்கு எதிரான போராட்டம் வெடித்து வரும் நிலையில். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, கொழும்பில் நடைபெற்ற போராட்டங்களின் காணொளியைப் பகிர்ந்துள்ளார்.
This is for our future. pic.twitter.com/pSMmo4o81Q
— Kumar Sangakkara (@KumarSanga2) July 9, 2022
இலங்கையில் அதிபருக்கு எதிரான போராட்டம் வெடித்து வரும் நிலையில். “நான் போராட்டத்தின் ஒரு பகுதியாக மக்களின் கோரிக்கையுடன் நிற்கிறேன்… இந்த போராட்டம் மூன்று மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது” என்று இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி நிலையில், அவர் கப்பலில் ஏறி தப்பியோடும் காட்சி வெளியாகியுள்ளது.
அதிபர் பதவியை ராஜினாமா செய்யுமாறு ஆளுங்கட்சி எம்.பி.க்கள் கோத்தபய ராஜபக்சேவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்
இலங்கை நாடாளுமன்ற செயலகத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றிய நிலையில், தலைநகரை கைப்பற்றும் திட்டத்தில் கொழும்பு நகரை நோக்கி மக்கள் படையெடுப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இலங்கையில் அதிபர் மாளிகைக்குள் நுழைந்த மக்கள் முற்றுகையிட்டதால் அங்கு உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Protestors enter Presidential Secretariat. Cheers and applause heard. Video – Social Media #srilanka #srilankaprotests pic.twitter.com/1rHuxeAVxC
— Jamila Husain (@Jamz5251) July 9, 2022
Yet another #gotagohome protest trains heading into Colombo #srilanka #srilankaprotests pic.twitter.com/bNcJeGtLIA
— Nawfan (@Nawfan1234) July 9, 2022
The moment when two trains coming to Colombo met together.#gohomegota2022 #colombo #gohomegota #srilankaprotests #srilanka pic.twitter.com/RcXZ9r6OAo
— Ima♡⁷ | Bangtan Lover 🤩🌱💗 (@ima_26823) July 9, 2022
இலங்கை தலைநகர் கொழும்புவை நோக்கி போராட்டக்காரர்கள் செல்லும் காட்சிகள்.
Lack of fuel not preventing the thousands walking into Colombo 👊🏼ොළඹට #gohomegota #gohomeranil #srilankancrisis #srilankaprotests pic.twitter.com/C1egA77EeU
— Bhavani Fonseka (@bfonseka) July 9, 2022
Video: Sri Lankan protesters have gone inside President's house. Credit- Social media #lka #srilankaprotests #srilanka pic.twitter.com/bVxYNo0umv
— Rangana Shamil Fernando (@ranganashamil) July 9, 2022
Right outside the Galle International Stadium has now become the epicentre of the protests in this part of the country after the suspension of public transport having stopped people from Galle going to Colombo to join the major protests #srilankaprotests pic.twitter.com/6YgN8ZrmOA
— Bharat Sundaresan (@beastieboy07) July 9, 2022
இலங்கையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் அங்கு உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Sri Lankan protesters taking over President's office in Colombo. #srilankaprotests #srilankacrisis pic.twitter.com/ixw4pyUu3r
— Ashoke Raj (@Ashoke_Raj) July 9, 2022
The moment Srilankan protesters entered the Presidential Office in Colombo.#srilankaprotests #srilanka #colombo pic.twitter.com/zrdyXHfFya
— Madhaw Tiwari (@MadhawTiwari) July 9, 2022
🚨BREAKING NEWS🚨A certain VIP with a huge motorcade with military vehicles, are heading towards Katunayake on the Highway. Who’s trying to leave #srilanka ! Is that you @GotabayaR ?#gohomegota #gohomegota2022 #gohomerajapakshas #gohomeranil #srilankaprotests pic.twitter.com/SaZ2YAleEF
— Kanishka De Lanerolle (@K_DeLanerolle) July 9, 2022
இலங்கையில் அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில், நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் ஒரே நாளில் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு 785 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக பாஜக நிர்வாகி சவுதா மணி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கலகத்தை உண்டு செய்தல் உட்பட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இலங்கை அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில், அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய ராஜபக்சே தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சென்னையிலும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலதிபர் செந்தில்குமாருக்கு சொந்தமான நந்தனம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாகபட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த 3 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இரவு 10 மணிக்கு மேல் கூட்டம் நடத்தியதாக பாமக நிறுவனர் ராமதாஸ், மாநில தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் மீதான வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
“அறிவுக்கு ஒவ்வாத மூட கருத்துக்களை தூக்கிச் சுமக்கும் சிலருக்கு போலியான பிம்பங்களை கட்டமைக்க வேண்டுமானால் உளறல்களும், பொய்களும்தான் தேவை. மனிதர்களை பிளவுபடுத்துவதற்கு ஆன்மீகத்தை பயன்படுத்துபவர்கள், உண்மையான ஆன்மீகவாதியாக நிச்சயமாக இருக்க முடியாது. மலிவான விளம்பரம் தேடும் வீணர்களிடம் I Don't Care என்று சொல்லி நகருங்கள். மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் ஆன்மிகவாதிகள் அல்ல; அவர்கள் ஆன்மிக வியாதிகள்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் ரூ. 340 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ. 693 கோடி மதிப்பில் 1,74,169 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தேனி மாவட்டத்திலிருந்து மேலும் 9 பொதுக்குழு உறுப்பினர்கள் இ.பி.எஸ்-ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தற்போது இபிஎஸ் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 2,452 ஆக உள்ளது.
சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பிஎஸ் உடன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி நடராஜன், குன்னம் ராமச்சந்திரன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அமர்நாத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 29 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 9 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகப் பெருநாளான பக்ரீத் நல்வாழ்த்துகள்!
உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 9) கடைசி நாள். http://www.penkalvi.gov.in என்ற இணையதளத்தில் மாணவிகள் தங்கள் விவரங்களை பதிவேற்றலாம். இது தொடர்பான தகவல்களைக் 14417 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 18,840 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 43 பேர் உயிரிழந்தனர். 16,104 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்.
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நடைமுறைப்படுத்த சாத்தியக் கூறுகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக் தலைமையில் நேற்று முதற்கட்ட ஆய்வு நடந்தது. மதுரை எய்ம்ஸ் அமைய உள்ள தோப்பூர் பகுதியில் இருந்து ஒத்தக்கடை வேளாண் கல்லுாரி வரை 35 கி.மீ. தொலைவுக்கு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள 498 ஊரக உள்ளாட்சி மற்றும் 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் தொடங்கியது.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவை ஒட்டி, டெல்லியில் உள்ள செங்கோட்டை, குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் நாடாளுமன்றத்தில் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.
அதிமுக பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் வெள்ளிக்கிழமை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலைச் சந்தித்து, கட்சித் தலைமையகத்திற்கு போலீஸ் பாதுகாப்புக் கோரினார். சில சமூக விரோதிகள் கட்சி தலைமையகத்திற்குள் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.