Advertisment

Tamil news Highlights: சென்னை மிண்ட் பகுதியில் ஜவுளி கடையில் தீ விபத்து - 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சேதம்

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 11 -06- 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Fire Representative image

Fire Representative image

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

தொடர் மின்வெட்டு - சாலை மறியல்

சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியல் உதண்டி, பனையூர், அக்கரை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மாலை நேரத்தில் மின்வெட்டு ஏற்படுவதாக கூறி சாலை மறியல்

நீர் நிலவரம்

Advertisment
Advertisement

புழல் ஏரியில் நீர்இருப்பு 2173 மில்லியன் கனஅடியாக உள்ளது; நீர்வரத்து 200 கனஅடியாக உள்ளது; 159 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 579 மில்லியன் கனஅடியாக உள்ளது; 200கனஅடி நீர் வெளியேற்றம். கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 443 மில்லியன் கனஅடியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:37 (IST) 11 Jun 2023
    பிரெஞ்சு ஓபன் - ஜோகோவிச் சாம்பியன்

    பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் செர்பிய வீரர் ஜோகோவிச். இறுதிப்போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூடை 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ள ஜோகோவிச், 3வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளார்


  • 21:09 (IST) 11 Jun 2023
    சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

    சென்னையில் வில்லிவாக்கம், பெரம்பூர், மாதவரம், வியாசர்பாடி, ஓட்டேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது


  • 20:34 (IST) 11 Jun 2023
    இந்திய மகளிர் ஜூனியர் ஹாக்கி அணிக்கு பரிசுத்தொகை அறிவிப்பு

    மகளிர் ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. வீராங்கணைகளுக்கு தலா ரூ.2 லட்சமும், துணை பணியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது


  • 19:57 (IST) 11 Jun 2023
    2024 தேர்தலில் போட்டியிடுவேன் - பிரிஜ் பூஷன் சரண் சிங்

    மல்யுத்த வீரர்களால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான, பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடுவேன் என்றும், பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் கூறியுள்ளார்


  • 19:06 (IST) 11 Jun 2023
    போலி பாஸ்போர்ட் விற்பனை; முக்கிய தரகர் கைது

    போலி பாஸ்போர்ட் விற்பனை வழக்கில் முக்கிய தரகரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிசார் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பத்தாம் வகுப்பு கூட படிக்காத நபர்களை போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பியது அம்பலமாகியுள்ளது. 10ம் வகுப்பு படித்து முடிக்காதவர்கள் வெளிநாட்டுக்கு செல்ல, மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சக அனுமதி அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

    மும்பை, டெல்லி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் அலுவலகங்கள் அமைத்து போலி பாஸ்போர்ட், விசா தயாரித்தது அம்பலமாகியுள்ளது. யூடியூப் மூலமாக மாட்டிக்கொள்ளாமல் போலி பாஸ்போர்ட் தயாரித்ததாக விசாரணையில் தரகர் வாக்குமூலம் அளித்துள்ளார்


  • 18:52 (IST) 11 Jun 2023
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - ரோஹித் ஷர்மா கருத்து

    ஒரு போட்டிக்கு பதிலாக 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தி, உலக டெஸ்ட் சாம்பியனை தேர்வு செய்வது சரியாக இருக்கும் என ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்


  • 18:43 (IST) 11 Jun 2023
    கோவில் திருவிழா - இருதரப்பு மோதல்

    விழுப்புரம், பழமுக்கல் கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


  • 18:25 (IST) 11 Jun 2023
    அமித் ஷா புகாருக்கு விரைவில் பதில்: ஆர்.எஸ் பாரதி

    அமித் ஷா புகாருக்கு விரைவில் பதில் அளிக்கப்படும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.


  • 18:10 (IST) 11 Jun 2023
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - ராகுல் டிராவிட் கருத்து

    ஐபிஎல் போட்டிகள் முடிந்து, வீரர்கள் வந்து பயிற்சி செய்வதற்கு போதிய நேரம் கிடைக்கவில்லை. சாக்குபோக்கு சொல்வதற்காக இதை சொல்லவில்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்


  • 17:44 (IST) 11 Jun 2023
    மகளிர் ஹாக்கி: தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி

    ஜப்பானில் நடந்த 2023 மகளிர் ஹாக்கி ஜூனியர் ஆசிய கோப்பையை இந்தியா வென்றது, தென் கொரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

    2023 ஆம் ஆண்டு மகளிர் ஜூனியர் ஆசியக் கோப்பையை முதன்முறையாக வென்றதற்காக வீராங்கனைகளுக்கு தலா ரூ.2 லட்சமும், மற்ற வீரர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படும் என ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.


  • 17:21 (IST) 11 Jun 2023
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸ்திரேலியா அபார வெற்றி

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

    இதன் மூலம் ஐசிசியின் அனைத்து விதமான கோப்பைகளையும் வென்ற ஒரே அணி என்ற வரலாற்று சாதனையை ஆஸ்திரேலியா படைத்ததுள்ளது.


  • 17:06 (IST) 11 Jun 2023
    அடுத்து இந்த 3 மாநிலங்கள்தான்: அவசர சட்டம் குறித்து கெஜ்ரிவால்!

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்கும் என்று கெஜ்ரிவால் கூறினார்.

    தொடர்ந்து, “டெல்லிக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்று நினைக்க வேண்டாம். இதேபோன்ற அரசாணையை நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கேள்விப்பட்டேன்.

    டெல்லிக்கு விதிக்கப்பட்ட அரசாணை சர்வாதிகாரப் பிரகடனம் போன்றது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொண்டு வரப்படும்” என்றார்.


  • 17:03 (IST) 11 Jun 2023
    அடுத்து இந்த 3 மாநிலங்கள்தான்: அவசர சட்டம் குறித்து கெஜ்ரிவால்!

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்கும் என்று கெஜ்ரிவால் கூறினார்.

    தொடர்ந்து, “டெல்லிக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்று நினைக்க வேண்டாம். இதேபோன்ற அரசாணையை நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கேள்விப்பட்டேன்.

    டெல்லிக்கு விதிக்கப்பட்ட அரசாணை சர்வாதிகாரப் பிரகடனம் போன்றது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொண்டு வரப்படும்” என்றார்.


  • 16:43 (IST) 11 Jun 2023
    மு.க. ஸ்டாலினுக்கு அமித்ஷா பதில்

    9 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்திற்கு ரூ.2.47 லட்சம் கோடி பிரதமர் கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் மத்திய அரசு, நெடுஞ்சாலை திட்டத்திற்காக ரூ.58,000 கோடி கொடுத்து இருக்கிறது.

    ரூ.50,000 கோடி மதிப்பீட்டில் சென்னை - பெங்களுரு விரைவு சாலை அமைக்கப்பட உள்ளது என வேலூர் பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.


  • 16:41 (IST) 11 Jun 2023
    தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் வெல்வோம்- அமித் ஷா

    தமிழ் மொழியின் தொன்மைக்கு பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி. உலகின் எந்தப் பகுதிக்கு சென்றாலும் திருக்குறளின் பெருமைகளை பேசுவார்.

    தமிழின் பெருமைகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்கிறார். புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் வெல்வோம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்று அமித் ஷா கூறினார்.


  • 15:56 (IST) 11 Jun 2023
    உறியடித்த கார்த்தி சிதம்பரம்

    கரூர் மாவட்டம் செட்டிபாளையத்தில் தனது தாய்வழி பாட்டி கிராமத்தில் உறியடித்து விளையாடினார் கார்த்தி சிதம்பரம்


  • 15:56 (IST) 11 Jun 2023
    உறியடித்த கார்த்தி சிதம்பரம்

    கரூர் மாவட்டம் செட்டிபாளையத்தில் தனது தாய்வழி பாட்டி கிராமத்தில் உறியடித்து விளையாடினார் கார்த்தி சிதம்பரம்


  • 15:54 (IST) 11 Jun 2023
    கனிமவள கொள்ளை- போலீசார் விசாரணை

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்களை ஏற்றிச்சென்ற லாரிகளை தடுத்த இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


  • 15:47 (IST) 11 Jun 2023
    குப்பை கொட்டும் நபர்கள் குறித்து தகவல் அளித்தால் பரிசு

    பொது இடங்களில் குப்பையைக் கொட்டுபவர்கள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ₹2,500 பரிசு என கேரள அரசு அறிவித்துள்ளது.


  • 15:23 (IST) 11 Jun 2023
    கட்சிகளின் செல்வாக்கை பொறுத்தே தொகுதிகள் ஒதுக்கப்படும்"- அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை

    கட்சிகளின் செல்வாக்கை பொறுத்தே தொகுதிகள் ஒதுக்கப்படும் என அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை தெரிவித்துள்ளார்.

    பாஜகவுக்கு 25 இடங்களில் வெற்றிவாய்ப்பு இருப்பதாக கூறிய நிலையில் அதிமுக செம்மலை இவ்வாறு கூறியுள்ளார்.


  • 15:01 (IST) 11 Jun 2023
    தமிழ்நாடு இருளில் உள்ளதை மின்தடை காட்டுகிறது: அமித் ஷா

    தமிழ்நாடு இருளில் உள்ளதை மின்தடை காட்டுகிறது. தமிழகத்துக்கு பாஜக வெளிச்சம் கொண்டுவரும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.


  • 14:15 (IST) 11 Jun 2023
    தமிழகத்தில் 25 இடங்களில் வெற்றி இலக்கு - அமித்ஷா

    நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற வேண்டும்.

    வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 இடங்களில் வெற்றி பெற இலக்கு நிர்ணயிப்போம்.

    தமிழகத்தில் ஏழை குடும்பத்தில் இருந்து முதல்வர், பிரதமர் வர வேண்டும்.

    தென் சென்னை பாஜக நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு


  • 13:59 (IST) 11 Jun 2023
    தமிழ்நாட்டை பாழ்படுத்தும் கூட்டம் விமர்சிக்கிறது - ஸ்டாலின்

    5 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை 2 ஆண்டுகளில் செய்துள்ளோம்.

    10 ஆண்டு கால அதிமுக ஆட்சியால் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம்.

    எனது வெளிநாட்டு பயணத்தால் ரூ.3 ஆயிரம் கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு வர உள்ளன.

    தமிழ்நாட்டை பாழ்படுத்தும் கூட்டம் எனது வெளிநாட்டு பயணத்தை விமர்சித்து வருகிறது.

    மக்கள் திட்டங்களுக்கே நேரம் சரியாக இருப்பதால் யாருக்கும் பதிலளிக்க விரும்பவில்லை- அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு


  • 13:56 (IST) 11 Jun 2023
    மாணவர்களுக்கு 17-ம் தேதி நடிகர் விஜய் கல்வி விருது

    தொகுதி வாரியாக முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு வரும் 17ஆம் தேதி நடிகர் விஜய் கல்வி விருது வழங்க உள்ளார்

    விருது பெறும் மாணவ, மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடக்கம்


  • 13:55 (IST) 11 Jun 2023
    தமிழனை பிரதமராக்க உறுதி எடுப்போம் - அமித்ஷா

    தமிழகத்தில் இருந்து 2 பிரதமர்களை தவறவிட்டுள்ளோம்.

    காமராஜர், மூப்பனார் ஆகிய இரண்டு பேர் பிரதமராவதை இழந்துள்ளோம்.

    இரு முறை பிரதமர்களை தவறவிட காரணம் திமுகதான்.

    வரும் காலங்களில் ஒரு தமிழனை பிரதமராக்க உறுதி எடுப்போம்.

    தென் சென்னை பாஜக நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு


  • 13:07 (IST) 11 Jun 2023
    சேலத்தில் புதிய கொலுசு உற்பத்தி மையம் - ஸ்டாலின்

    சேலம் மாவட்டத்திற்கு இன்னும் அதிக திட்டங்கள் வர உள்ளன. சேலத்தில் புதிய கொலுசு உற்பத்தி மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    சேலத்தில் ஜவுளி பூங்காவுக்கான கட்டமைப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.

    சேலம் அம்மாபேட்டையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரயில்வே மேம்பாலம் அமைக்க ஆய்வு- அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு


  • 13:06 (IST) 11 Jun 2023
    கருப்பூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

    சேலம் மாவட்டம் கருப்பூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

    புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்

    ரூ.653 கோடி மதிப்பீட்டில் இளம்பிள்ளை கூட்டு குடிநீர் திட்டம் தொடக்கம்

    ரூ.102 கோடியில் சேலம் அரசு சட்டக் கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிக்கு கூடுதல் கட்டடம்

    50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

    ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 390 முடிவுற்ற திட்ட பணிகள் தொடக்கம்


  • 12:42 (IST) 11 Jun 2023
    தென்சென்னை பா.ஜ.க நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை

    தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை

    நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை

    மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்பு

    கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம்


  • 11:55 (IST) 11 Jun 2023
    ஆளுநருக்கு எந்த வரலாறும் தெரியவில்லை- சீமான்

    9 ஆண்டுகளில் பாஜக என்ன சாதனை செய்துள்ளது?

    மத்திய, மாநில அரசுகளுக்கு மக்களை பற்றிய கவலை இல்லை.

    நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களுக்கு அரசு என்ன செய்துள்ளது?.

    ஆளுநருக்கு எந்த வரலாறும் தெரியவில்லை - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்


  • 11:51 (IST) 11 Jun 2023
    மின்சார ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டது

    சென்னை பேசின்பிரிட்ஜ் அருகே புறநகர் மின்சார ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு விபத்து

    சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் இடையே இயக்கப்பட்ட புறநகர் மின்சார ரயிலின் கடைசி 2 பெட்டிகளின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு இறங்கியதால் பரபரப்பு


  • 11:02 (IST) 11 Jun 2023
    சேலத்தில் ரூ.96.53 கோடியில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஈரடுக்கு பேருந்து நிலையம்

    சேலத்தில் ரூ.96.53 கோடியில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஈரடுக்கு பேருந்து நிலையம் திறப்பு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு மாநகர பேருந்து நிலையம் என பெயர் சூட்டல் ஒரே நேரத்தில் 80 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு பேருந்து நிலையம் சீரமைப்பு மக்கள் பயன்பெறும் வகையில் 100 வணிக கடைகள் மற்றும் லிப்ட் வசதி.


  • 10:54 (IST) 11 Jun 2023
    பலாப்பழ திருவிழா : தொடங்கி வைத்தார் தமிழிசை சௌந்தரராஜன்

    கோவா மாநில ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ‘பலாப்பழ திருவிழாவை" தொடங்கி வைத்தார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்


  • 10:02 (IST) 11 Jun 2023
    கருணாநிதியின் சிலையை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    சேலம் அண்ணா பூங்கா அருகே அமைக்கப்ப்பட்டுள்ள, கருணாநிதியின் சிலையை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


  • 10:02 (IST) 11 Jun 2023
    கலைஞர் நூற்றாண்டு மாநகர ஈரடுக்கு பேருந்து நிலையத்தை திறந்து வைக்கிறார்

    சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு மாநகர ஈரடுக்கு பேருந்து நிலையத்தை திறந்து வைக்கிறார் .பெரியார் பேரங்காடி, போஸ் மைதானம், வ.உ.சி. மார்கெட், நேரு கலையரங்கம் ஆகியவற்றையும் முதலமைச்சர் திறந்து வைக்கிறார்


  • 09:17 (IST) 11 Jun 2023
    கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்தி நடவடிக்கை

    சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்தி நடவடிக்கை 757 பணியிடங்களை நிரப்பவும் சுகாதாரத்துறை நடவடிக்கை மருத்துவமனையை ஜூன் 15ம் தேதி குடியரசு தலைவர் திரெளபதி முர்மு திறந்து வைக்கிறார்


  • 08:58 (IST) 11 Jun 2023
    வரும் 14ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகம், புதுச்சேரியில் வரும் 14ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்


  • 07:52 (IST) 11 Jun 2023
    அதி தீவிர புயலாக வலுப்பெற உள்ளது பிபோர்ஜாய்

    மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள தீவிர புயலாக ‘பிபோர்காய்’. அடுத்த 6 நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெற உள்ளது. மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்ந்து, ஜூன் 15 தேதி பாகிஸ்தான் மற்றும் அதைனை ஒட்டிய சவுராஷ்டிரா, கட்ச் கடற்கரை பகுதிகளை அடையும் என எதிர்பார்ப்பு


  • 07:46 (IST) 11 Jun 2023
    ஆதீனம் பட்டின பிரவேசம் நிகழ்வு நிறைவு

    மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசம் நிகழ்வு நிறைவு தருமபுரம் ஆதினத்தை பக்தர்கள் பல்லக்கில் சுமந்து சென்ற பட்டின பிரவேச நிகழ்வு நிறைவு திராவிடர் விடுதலை கழகம் உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே பட்டின பிரவேசம் நிறைவு


  • 07:45 (IST) 11 Jun 2023
    பாஜக சார்பில் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் : அமித்ஷா

    வேலூரில் இன்று பாஜக சார்பில் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்


Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment