/tamil-ie/media/media_files/uploads/2020/08/government-buses.jpg)
பேருந்து போக்குவரத்து
Tamil News Today Updates: தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் செப்டம்பர் இறுதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.பொது போக்குவரத்து வசதியான பஸ்கள் இன்று, 1ம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் மட்டும் இயக்கப்படுகின்றன. நீண்ட விடுமுறையில் இருந்த கண்டக்டர், டிரைவர்கள் அனைவரும், இன்று, 1ம் தேதி பணியில் இணைய உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்கான பணி, சூழலை பொருத்து முடிவு செய்யப்படும்.
அதன்படி இ-பாஸ் இன்றி மாவட்டங்களுக்குள் பயணிக்க அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. அதோடு மாவட்டங்களுக்குள்ளான பேருந்து போக்குவரத்து வசதிக்கும் அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத வழிப்பாட்டு தலங்களுக்கு இருந்த தடை முழுவதும் நீக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடைகள் இரவு 8 மணி வரை இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் ஆகியவற்றை திறப்பதற்கான தடை நீட்டிக்கப்படுகிறது. வணிக வளாகங்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக் கிழமைகளில் கடைபிடிக்கப்பட்ட முழு ஊரடங்கு இனி ரத்து செய்யப்படுவதாகவும், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டும் ரயில் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புற நகர் வழித்தடங்களுக்கான ரயில் போக்குவரத்துக்கான தடை தொடரும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil Nadu News Today Updates
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பாரத் ரத்னா பிரணாப் முகர்ஜி காலமானதில் ஆழ்ந்த வேதனை அடைந்துள்ளேன். அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த தலைவராக இருந்தார். அவர் மிகவும் பக்தியுடன் தேசத்திற்கு சேவை செய்தார். பிரணாப் முகர்ஜியின் புகழ்பெற்ற வாழ்க்கை முழு நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் விஷயம்.
பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை எப்போதும் அவரது கறைபடியாத சேவைக்காகவும், நம் தாய்நாட்டிற்கு அழியாத பங்களிப்பிற்காகவும் போற்றப்படும். அவரது மறைவு இந்திய அரசியலில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பு. அவரது குடும்பத்தினருக்கும் அவரை பின்பற்றுபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.” என்று தெரிவித்துள்ளார்.
Pranab Da's life will always be cherished for his impeccable service and indelible contribution to our motherland. His demise has left a huge void in Indian polity. My sincerest condolences are with his family and followers on this irreparable loss. Om Shanti Shanti Shanti
— Amit Shah (@AmitShah) August 31, 2020
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, “மத்திய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2012 இல் குடியரசு தலைவராக தேர்வு பெற்றவர் பிரணாப் முகர்ஜி. 50 ஆண்டுகளுக்கும் மேலான பொது வாழ்க்கையில் அவரது பங்களிப்பை அங்கீகரிக்கின்ற வகையில் நமது நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா அவருக்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் வளர்ச்சியில் அளப்பரிய பங்காற்றிய பிரணாப் முகர்ஜியின் மறைவு தேசத்திற்கே மிகப் பெரிய இழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,சோனியா காந்தியை 1998 இல் காங்கிரஸ் தலைமையை ஏற்க வலியுறுத்தியவர்களில் முதன்மையானவர் பிரணாப் முகர்ஜி. 2004-ல் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த ஆட்சியில் அவருக்கு அடுத்த நிலையிலிருந்து பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பெரும் துணையாக இருந்தவர். ஆட்சித்துறையில் பல்வேறு பிரச்சினைகள் எழுகிற போது அதைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட அமைச்சரவை குழுவில் முதன்மை பங்கு வகித்தவர்.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, “நீண்ட நெடிய காங்கிரஸ் பாரம்பரிய பின்னணி கொண்ட பிரணாப் முகர்ஜி குடியரசு தலைவராக மிக உயர்ந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு ஓய்வு பெற்ற பிறகு உடல் நலக் குறைவு காரணமாக காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். 1969 இல் காங்கிரஸ் பிளவுபட்ட போது, இந்திராவிற்கு உற்ற துணையாக அரசியல் பிரவேசம் செய்தவர்.
மத்திய அரசில் அவர் வகிக்காத பதவிகளே இல்லையென்று கூறுகிற வகையில் பாதுகாப்பு அமைச்சராக, வெளியுறவுத்துறை அமைச்சராக, வர்த்தக அமைச்சராக, நிதி அமைச்சராக மற்றும் திட்டக்குழு தலைவராக பொறுப்பு வகித்து இந்தியாவின் வளர்ச்சிக்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவு தேசத்திற்கு நினைத்து பார்க்க முடியாத இழப்பு என்று மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “நமது முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத் ரத்னா திரு பிரணாப் முகர்ஜியின் மறைவு நம் தேசத்திற்கு நினைத்துப்பார்க்க முடியாத இழப்பு. ஒரு புத்திசாலித்தனமான அரசியல்வாதியும், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தின் பாதுகாவலருமான அவரது மரபையும் கொள்கைகளையும் நமது போராட்டத்தின் மூலம் உயிர்ப்புடன் வைத்திருக்கச் செய்வோம்.” என்று தெரிவித்துள்ளார்.
The demise of our former President Bharat Ratna Thiru #PranabMukherjee is an unimaginable loss to our nation.
An astute statesman and an unflinching guardian of secularism and democracy, his legacy will live on through our fight to keep these principles alive. pic.twitter.com/8Tve75XVcW
— M.K.Stalin (@mkstalin) August 31, 2020
பிரணாப் முகர்ஜியின் மறைவையடுத்து நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. பிரணாப் முகர்ஜியின் மறைவையடுத்து நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம், “நாடு முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.” என்று அறிவித்துள்ளது.
பிரணாப் முகர்ஜியின் மறைவையடுத்து நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம், பிரணாப் முகர்ஜி மறைவையடுத்து இன்று முதல் செப்டம்பர் 6ம் தேதி வரை 7 நாட்கள் நாடு முழுவதும் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். “பிரணாப் முகர்ஜி இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டவர். அவர் சிறந்த பேச்சாளராகவும் விளங்கினார். அவர் அமைச்சராகவும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக சிறப்பாக பணியாற்றி உள்ளார். அவருடைய மறைவு இந்தியாவுக்கே பேரிழப்பு ஆகும்” என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “பல தசாப்தங்களாக நீடித்த பிரணாப் முகர்ஜியின் அரசியல் வாழ்க்கையில், பொருளாதாரம் மற்றும் முக்கிய அமைச்சகங்களில் நீண்டகால பங்களிப்பை வழங்கினார். சிறந்த நாடாளுமன்றவாதியாகவும், எப்போதும் தயார் நிலையில் இருப்பவராகவும், சிறந்த பேச்சாளராகவும், நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும் இருந்தார்.
பாரத ரத்னா திரு. பிரணாப் முகர்ஜியின் மறைவால் இந்தியா வருந்துகிறது. நம் தேசத்தின் வளர்ச்சிப் பாதையில், அவர் ஒரு அழியாத முத்திரை பதித்துள்ளார். அரசியல் வட்டாரத்திலும், அனைத்து தரப்பு மக்களாலும், அவர் ஒரு அறிஞராக, உயர்ந்த அரசியல்வாதியாக போற்றப்பட்டார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “குடியரசு தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி ராஷ்டிரபதி பவனுக்கு பொதுமக்கள் எளிதாக வரும்படி செய்தார். குடியரசு தலைவரின் இல்லத்தை கற்றல், புதுமை, கலாச்சாரம், அறிவியல், இலக்கிய மையமாக மாற்றினார். முக்கிய கொள்கை விஷயங்களில் அவரது புத்திசாலிதனமான ஆலோசனையை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது." என்று தெரிவித்துள்ளார்.
India grieves the passing away of Bharat Ratna Shri Pranab Mukherjee. He has left an indelible mark on the development trajectory of our nation. A scholar par excellence, a towering statesman, he was admired across the political spectrum and by all sections of society. pic.twitter.com/gz6rwQbxi6
— Narendra Modi (@narendramodi) August 31, 2020
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 84. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். “முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இல்லை என்று கேட்க வருத்தமாக இருக்கிறது. அவரது மறைவு ஒரு சகாப்தத்தை கடந்து செல்கிறது. பொது வாழ்க்கையில் ஒரு மகத்தான துறவியின் மனநிலையுடன் அன்னை இந்தியாவுக்கு சேவை செய்தார். தேசம் தனது தகுதியான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் இரங்கல்.” என்று தெரிவித்துள்ளார்.
Sad to hear that former President Shri Pranab Mukherjee is no more. His demise is passing of an era. A colossus in public life, he served Mother India with the spirit of a sage. The nation mourns losing one of its worthiest sons. Condolences to his family, friends & all citizens.
— President of India (@rashtrapatibhvn) August 31, 2020
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “அதிமுக - பாஜக கூட்டணி உறவு சிறப்பாக உள்ளது. மும்மொழி கொள்கையில் யாரும் அரசியல் செய்ய கூடாது. சட்ட மன்ற தேர்தலில் பா.ஜ.க தனித்து நின்றாலும், 60 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கான நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது சமூக இடைவெளியுடன், முகக்கவசம் ஆகியவற்றை ஊழியர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். உடல் வெப்பநிலையை பரிசோதித்த பிறகே வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
#நீட்_வேண்டாம்: இன்று தமிழகம் தழுவிய அளவில்
நீட் என்னும் மருத்துவக்கல்விக்கான நுழைவுத்தேர்வை முற்றிலும் கைவிடவேண்டுமென வலியுறுத்தி, விசிக- #முற்போக்கு_மாணவர்_கழகத்தின் சார்பில் வாசலிருப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உள்ளூர் உழைக்கும் மக்களுடன் பங்கேற்றேன்.
#Vck_Rsf_protest
(1/2 ) pic.twitter.com/fe1mUrDEQz— Thol. Thirumavalavan (@thirumaofficial) August 31, 2020
கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில், மாநிலங்கள் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கலாம்" என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், கிராமப்புற மருத்துவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக அமையும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
நாளை முதல் வணிக வளாகங்கள் திறப்பதற்கான நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.
முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும், நோய்த் தொற்று இருப்பவர்களை அனுமதிக்கக் கூடாது, வாடிக்கையாளர்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் தனித்தனி வாசல்கள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
சூரரைப் போற்று படத்தின் விற்பனையில் இருந்து ஐந்து கோடி பகிர்ந்து அளிக்கப்படும் என்று நடிகர் சூர்யா முன்னதாக தெரிவித்திருந்தார். இப்போது, அதில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், மற்ற மருத்துவதுறை பணியாளர்கள் மேலும் பொதுநல சிந்தனையுடன் கொரோனா பணியில் களத்தில் நின்று பணியாற்றிய காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், தூய்மை பணியாளர்கள், மயான பணியாளர்கள் ஆகியோரின் குடும்பத்தில் கல்வி பயில்பவர்களுக்கு 2.5 கோடி கல்வி ஊக்கத்தொகையாக வழங்க முடிவு செய்திருப்பதாக சூர்யா தெரிவித்தார்.
தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயங்காது என்று, பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 1ம் தேதி மவாட்டதிற்குள்ளான அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்று முன்னதாக 4ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்த வழிமுறைகளில் தமிழக அரசு தெரிவித்தது.
இந்நிலையில், மாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்தை இயக்கினால் லாபம் கிடைக்காது என்ற காரணத்தால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
பாஜகவை சார்ந்த எச் ராஜா காங்கிரஸ் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களை தரக்குறைவாகவும் நாகரீகமற்ற முறையிலும் விமர்சித்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். ராகுல் காந்தி இந்தியர் என்பதற்கும் பிஜேபி யிடம் சான்றிதழ் பெற தேவையில்லை என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ட்வீட் செய்துள்ளார்.
”நீட், ஜெ.இ.இ தேர்வுகளை நடத்தியே தீருவது என மத்திய அரசு பிடிவாதமாக இருக்கிறது. இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்” என நீட் தேர்வு ரத்து கோரி அரியலூர் அங்கனூரில் போராட்டம் நடத்திய பின் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
மறைந்த காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யும் நிகழ்வு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதை செய்தியில் பார்த்த குஷ்பு, ”சிறந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் மற்ற உறுப்பினர்கள்
எனக்கு ஒரு தகவல் கூட தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் உள்ள ஒரே தேசிய செய்தித் தொடர்பாளர் நான் தான். இதை நான் செய்தி மற்றும் பத்திரிகைகள் மூலம் அறிந்து கொள்கிறேன். ஆஹா! நாம் கட்சியில் பலத்தை உண்டாக்க வேண்டும், பலவீனத்தை அல்ல. நாம் எப்போது செய்வோம்?” என காட்டமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Great gesture. But the other members of @INCTamilNadu of the party are not even informed. The only #NationalSpokesperson of the party in TN is me, and I get to know of this through news n papers. Wow! We need to build the strength n not weaken by ego n insecurities,when will we?? https://t.co/SW27WU3lgi
— KhushbuSundar ❤️ (@khushsundar) August 31, 2020
வழிபாட்டு தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு. தமிழகம் முழுவதும் நாளை வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ள நிலையில், தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வருபவர்களை அனுமதிக்க கூடாது. முக கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு அனுமதி இல்லை என்பதை அறிவிப்பு செய்ய வேண்டும், 65 வயதுக்கு மேற்பட்டோர், 10 வயதுக்கு உட்பட்டோர் வழிபாட்டுத் தலங்களுக்கு வருவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும், நுழைவாயிலில் கிருமி நாசினி வழங்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்" என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மறைந்த எம்.பி வசந்தக்குமார் படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
பெருந்தொற்று காலம்...
வேலைவாய்ப்பு இழப்பு, பொருளாதார சிக்கல் என்று பல இன்னல்கள். இச்சூழலில் கூட சுங்கக் கட்டணத்தை வசூலிக்காமல் இருக்க மனமில்லாதவர்கள் விலை ஏற்றத்தையாவது மனிதாபிமானத்தோடு தவிர்க்கலாம். என்றுதான் மக்களுடைய சூழ்நிலையை புரிந்து கொள்வார்களோ ஆட்சியாளர்கள்?#Corona pic.twitter.com/p32lAapRAY
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 31, 2020
பணியில் உள்ள மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை; பணியில் உள்ள மருத்துவர்களுக்கு மாநிலங்கள் இட ஒதுக்கீடு வழங்கலாம்; மருத்துவர்கள் 5 ஆண்டுகள் கிராமப்புறத்தில் பணிபுரிய வேண்டும்! என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஊருக்கு வழங்கப்பட்ட
ஊரடங்கின் தளர்வில்
உயிர்க் கொல்லி
நுழைந்துவிடக் கூடாது.மீண்டும் இயங்கப்போகும்
வாழ்வியல் வெளியில்
கடும் கட்டுப்பாட்டைப்
பெரிதும் கைக்கொள்வீர்
பெருமக்களே!இது தீப்பிடித்த காடு
பறவைகளே! பத்திரம்.#lockdown #Unlock4 #Corona #TNLockdown— வைரமுத்து (@Vairamuthu) August 31, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தமிழகத்தில் 7ம் கட்ட ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை செப்டம்பர் 30 வரை நீட்டித்து அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights