Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
திருமாவளவுடன் காயத்திரி ரகுராம் சந்திப்பு
விசிக தலைவர் திருமாவளவுடன் காய்திரி ரகுராம் சந்தித்து பேசினார். இந்த அரசுயல் நகர்வு முக்கியமாக பார்க்கப்படுகிறது. மேலும் வெற்றிமாறனும் திருமாவளவனை சந்தித்தார்.
நீர் நிலவரம்
500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 500 மில்லியன் கன அடியாக உள்ளது.. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 3010 மில்லியன் கன அடியாக உள்ளது..1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 831 மில்லியன் கன அடியாக உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பள்ளி மாணவனை பாலியல் ரீதியாக கேலி, கிண்டல் செய்த தமிழ் ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
சத்யமங்கலத்தில் புலி வேட்டையாடப்பட்டதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு சிறுத்தை வேட்டையாடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், புலி வேட்டை தொடர்பாக வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர் கைதான நிலையில், சிறுத்தை வேட்டையில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும், முதுநிலை பட்டப்படிப்புக்கான TANCET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 28.02.2023 வரை நீடிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுக்குழு முடிவுகள் செல்லாது என அறிவிக்கக்கோரி ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. பொதுக்குழு செல்லாது என உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளிக்க, இரு நீதிபதி அமர்வு செல்லும் என தீர்ப்பளிக்க, இவ்வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றது
கஞ்சா விற்பனை வழக்கில், சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த பக்ரூதீன் என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹50,000 அபராதமும் விதித்து சென்னை போதைப்பொருள் தடுப்புச் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!
ஆளுநர் ஆர்,என்,ரவி ஒரு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் போல செயல்பட்டு வருகிறார். கல்வி நிலையங்களி மத ரீதியாக பேசிவருகிறார். தனக்கான வேலையை எப்போது செய்யப்போகிறார்? – அமைச்சர் பொன்முடி கேள்வி
விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு கடலூரில் உள்ள தொண்டு நிறுவனத்தில் தங்க வைக்கப்பட்ட 23 பேரில் 4 பேர் தப்பியோடிய நிலையில், அவர்கள் 4 பேரில் ஒருவர் கடலூர் பேருந்து நிலையத்தில் பிடிப்பட்டார் – மற்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்
விருதுநகரில் பிறந்து 30 நாட்களே ஆன பெண் குழந்தை ரூ.40 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது நாகர்கோவிலில் இருந்து குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர். பாதுகாப்பு மையத்தில் குழந்தை ஒப்படைப்பு பெற்றோர், செவிலியர்கள் உட்பட 5 பேர் கைது – வங்கி அதிகாரிக்கு வலைவீச்சு
ஆளுநர் ரவிக்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் பொன்முடி அறிக்கை வெளியிட்டுள்ளார். “ஆளுநருக்குரிய வேலை என்னவோ, அதில் கவனம் செலுத்துவதே, மக்களின் வரிப்பணத்தில் அவர் பெறும் ஊதியத்திற்கு உண்மையானதாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். அக்கப்போர் செய்வதை விடுத்து தனக்கான வேலையை எப்போது செய்யப் போகிறார் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பொருநை நெல்லை புத்தகத் திருவிழா என்ற பெயரில் புத்தகக் கண்காட்சி பிப்ரவரி 25 முதல் மார்ச் 7 வரை நடக்கிறது. நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவிற்கு இருவாச்சி பறவை லோகோவாக அறிமுகம் செய்து வைத்தார்.
மதுரையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை பேட்டி: “மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது என்ற கருத்தாக்கம் தவறு. எய்ம்ஸ் தாமதம் ஆவதற்கு காரணம், அதற்குரிய கட்டமைப்பை உருவாக்குவதற்கான பணிகள்தான் காரணம்” என்று கூறினார்.
விழுப்புரத்தில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆதரவற்றோர் துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தில் அருந்ததியினர் சமுகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சீமானின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பட்டியலின அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய துணை தேர்தல் ஆணையர் அஜய் பாது தலைமையில் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இடைத்தேர்தல் ஏற்பாடுகள், அரசியல் கட்சிகளின் புகார்கள், வாக்குப்பதிவு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.
சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு தங்களது பணிகள் காரணமில்லை என மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை அண்ணா சாலையில் நில அதிர்வு உணரப்பட்டதாக சிலர் கூறியிருந்த நிலையில், தங்களது பணிகள் காரணமில்லை என மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மார்ச் மாத தரிசன டிக்கெட்டுகள் நாளை பிப்ரவரி 23ம் தேதி வெளியிடப்படுகிறது. நாளை காலை 9 மணிக்கு தேவஸ்தான் இணையதளமான tirupatibalaji.ap.gov.in மூலம் டிக்கெட்டுகளை இலவசமாக முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நில அதிர்வு ஏற்படவில்லை, மிக குறுகிய இடத்திற்கு மட்டும் நில அதிர்வு உணரப்படாது, அப்படியிருந்தால் அதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம் என நில அதிர்வுகளை ஆராயும் மத்திய அரசின் தேசிய மையம் தெரிவித்துள்ளது
ஏக்நாத் ஷிண்டே அணியை அதிகாரப்பூர்வ சிவசேனா கட்சியாக அங்கீகரித்த தேர்தல் ஆணைய உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியதை ஏற்க முடியாது என உத்தவ் தாக்கரே மனு தாக்கல் செய்துள்ளார்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே குமாரப்பட்டியில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, போட்டி போட்டுக்கொண்டு மீன்பிடித்தனர்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வழக்கறிஞர் முத்துகுமார் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிகொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் விசாரணை நடத்தி வருகிறார்
ஈரோடு, வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். வரும் 24ம் தேதி இ.பி.எஸ் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது
திருவண்ணாமலையில் 4 ஏ.டி.எம் மையங்களில் ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைதான ஆரிஃப் மற்றும் ஆசாத் ஆகியோரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது
விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டில் ஆசிக் என்பவரின் வீட்டை தீயிட்டு கொளுத்தி, 15 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
குஜராத், மோர்ஃபி தொங்கு பால விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கவும் அஜந்தா குழுமத்திற்கு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
உத்தரகாண்டில், பித்தோராகர் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி உள்ளது.
அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 4-ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஓபராய் 150 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 116 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.
தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும். சென்னையில் அதிகபட்சமாக வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
சென்னை அண்ணாசாலையில் உணரப்பட்ட நில அதிர்வுக்கு மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை. நிலஅதிர்வு உணரப்பட்ட இடங்களில் எவ்வித மெட்ரோ ரயில் பணிகளும் நடைபெறவில்லை என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் EVKS இளங்கோவனுக்கு ஆதரவாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 25ம் தேதி பரப்புரை செய்கிறார்.
ஆட்குறைப்பு தொடர்பாக பல நிறுவனங்களுக்கு ஆலோசனை அளித்து வந்த மெக்கின்சி & கோ., 2,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
பள்ளிகளில், 1ம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் வயதை 6 ஆக உயர்த்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
திருவாரூரில் 2- வது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின்
மன்னார்குடியில், புதிதாக அமையவுள்ள பேருந்து நிலைய பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
பணிகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்
“ஸ்ரீமதி தரப்பு மனு விசாரணைக்கு உகந்ததல்ல”
“கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாய் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல”
சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை எதிர்ப்பு
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் கர்னல் பாண்டியன் மீது வழக்குப்பதிவு
பாஜக கண்டன ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் நடவடிக்கை
திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கர்னல் பாண்டியன் மீது வழக்குப்பதிவு
திருவாரூர் வந்துள்ளது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைத்து ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்து வருகிறேன்.
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 1 வாரத்தில் நிவாரணம். கடந்த அதிமுக அரசு கஜானாவை காலி செய்யாமல் இருந்திருந்தால் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டிருக்கும்.
திருவாரூர், திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
கர்நாடகாவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பெண் அதிகாரிகளிடையே வலுக்கும் மோதல்
கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி ரோகிணியால் தமிழக ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் உயிரிழப்பு.
சமூக வலைதளத்தில் ரூபா ஐபிஎஸ் வெளியிட்ட கருத்தால் அதிர்ச்சி
தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
அய்யா வைகுண்டர் தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு
சாலை வழியாக காரில் சென்ற முதல்வரிடம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மனு
பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி மனு
காரை நிறுத்தி மாணவர்களிடம் மனுக்களை பெற்ற முதல்வர் ஸ்டாலின்
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட 21 பேர் நேரில் ஆஜர்
2011ம் ஆண்டு, சட்டமன்ற தேர்தலின் போது, தாசில்தாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜர்
புதுக்கோட்டை சிப்காட் அருகே அரசு நகர பேருந்தும் காரும் மோதி விபத்து
காரில் பயணித்த ஒருவர் பலி- ஒரு வயது குழந்தை உள்பட 9 பேர் காயம்
அதி வேகமாக வந்து மோதியதால் காரும் பேருந்தும் உருக்குலைந்து காணப்பட்டது.
அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து திருக்கோகரணம் போலீசார் விசாரணை
அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த விமானம் ஸ்வீடனில் தரையிறக்கம்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக 300 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா விமானம் தரையிறக்கம்
ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மீது விதிமுறைகளை மீறியதாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு.
கடந்த 20-ம் தேதி உரிய அனுமதி பெறாமல் ஆலமரத் தெருவில் பரப்புரை மேற்கொண்டதாக வழக்குப்பதிவு
சென்னையில் அனுமதியின்றி பேரணி பா.ஜ.க அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்குப் பதிவு
சென்னையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்குப் பதிவு. ராணுவ வீரர் பிரபு கொலையை கண்டித்து நேற்று மாலை பேரணியாக வென்று பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை சாலையில் மீன் வியாபாரிகள் சாலை மறியல் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி கடைகளை அகற்ற அதிகாரிகள் வலியுறுத்தல். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கைக்கு சாலையோர மீன் வியாபாரிகள் எதிர்ப்பு
திருவாரூரில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டு வாசலில் காத்திருந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற முதல்வர் ஸ்டாலின் திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்க புறப்பட்ட போது மக்களிடம் மனுக்களை பெற்றார்
மும்பை, தாராவி பகுதியில் பயங்கர தீ விபத்து: 25க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்; 3 மணி நேர போராட்டத்துக்குப் பின் தீயை அணைத்த தீயணைப்புத்துறையினர்
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை ஊழல் தடுப்பு சட்டத்தில் விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி எதிர்க்கட்சிகளை ஆம் ஆத்மி அரசு உளவு பார்ப்பதாக பாஜக குற்றம் சாட்டிய நிலையில் அனுமதி .
விப்ரோ நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களின் சம்பளம், பாதியாக குறைப்பு. ஆள்குறைப்பு செய்யப்போவதில்லை எனவும் சம்பள உயர்வு அளிக்கப்போவதாகவும் டிசிஎஸ் நிறுவனம் அறிவிப்பு