பெட்ரோல், டீசல் விலை
337-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
நில அதிர்வு
மேகாலயா மாநிலம் துரா பகுதியில் அதிகாலை 2.13 மணியளவில் 3.2 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது.
பஞ்சாப் அணி தோல்வி
ஐபிஎல் டி20 தொடர் – மும்பை அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் . 215 ரன்கள் இலக்கை நோக்கிய ஆடிய மும்பை, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அபாரம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் 5 மதிப்பெண்கள் போனசாக வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தவறாக கேட்கப்பட்ட 3 ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கும், ஒரு 2 மதிப்பெண் கேள்விக்கும் போனஸ் மதிப்பெண்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு மதிப்பெண் கேள்வி எண்கள் 4, 5, 6 மற்றும் 2 மதிப்பெண் கேள்வி எண் 28க்கும் முழு மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தந்தை மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல் தெரிவித்தார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 17ம் தேதி அவரது தந்தை தவசிலிங்கம் உயிரிழந்தார்
சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் 'அயலான்' திரைப்படம் படத்தின் புதிய அப்டேட் நாளை காலை 11.04 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது
ஐபிஎல் டி20 தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தானை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது. 190 ரன்கள் இலக்குடன் ஆடிய ராஜஸ்தான், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது
ஆளுநர் ஆர்.என். ரவியுடன், தமிழக பா.ஜ.க தலைவர்கள் குழு சந்தித்து பேசினர். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ வெளியான விவகாரத்தில், ஆடியோவின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என ஆளுநரிடம் பாஜக நிர்வாகிகள் கரு.நாகராஜன், வி.பி. துரைசாமி உள்ளிட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்
வேலூர் மற்றும் குடியாத்தம் மலைப்பகுதிகளில் போலீசார் நடத்திய கள்ளச்சாராய வேட்டையில் சுமார் 17,350 லிட்டர் கள்ளச்சாராயம் சிக்கியது. இதனையடுத்து கள்ளச்சாராய ஊரல்களை அழித்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்
திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த பின் நடிகர் பிரபு பேட்டி: “கடினமான உழைப்பால்தான் இன்னைக்கு மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார்” என்று கூறினார்.
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க தலைவர்
தரணிமுருகேசன் மீது 2 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராமேஸ்வரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக 20 பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை: டாஸ்மாக் கடைக்குள் புகுந்து, பயங்கர ஆயுதங்களுடன் ஊழியரை தாக்கி ரூ. 5.37 லட்சம் கொள்ளையடித்த முகமூடி அணிந்த கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.
அ.தி.மு.க சார்பில் ஓ.பி.எஸ் தரப்பு வேட்புமனு தாக்கல் செய்ததை எதிர்த்து இ.பி.எஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதனால், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஓ.பி.எஸ் தரப்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 2 வேட்பாளர்களும் நாளை வாபஸ் பெறுகின்றனர். இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலையில், வாபஸ் பெறுவதாக் ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி அறிவித்துள்ளார்.
திருச்சி, பாலக்கரை பகுதியில் தெருநாயை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரவில் தெரு நாய் தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்ததால் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. தெருநாயை சுட்டுக் கொன்றதாக சையது உசேன் என்பவர் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், அனுமதி இன்றி ஆயுதங்கள் வைத்திருத்தல் ஆகிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, மே 12-ம் தேதி தமிழகம் முழுவதும் மறியல் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.
சி.ஐ.டியூ., ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சென்னையில் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு வருகிற ஏப்ரல் 27-ம் தேதி முதல் நோட்டீஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
பிரபல நடிகர் சரத்பாபு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், உடல் உறுப்புகள் நோய் அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல். கடந்த 20-ம் தேதி முதல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், தேனி, தூத்துக்குடி ஆகிய 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முகூர்த்த தினத்தையொட்டி பட்டு சேலைகள் வாங்க காஞ்சிபுரத்தில் திருமண வீட்டார் கூட்டம் குவிந்ததால் காஞ்சிபுரம் நகர சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் – வாகன ஓட்டிகள் அவதி
கர்நாடக தேர்தலில் காந்திநகர் தொகுதியில் அதிமுக பெயரில் ஓபிஎஸ் தரப்பு வேட்பு மனு தாக்கல் செய்த விவகாரத்தில் ஒ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் குமாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திருப்திகரமான விளக்கம் இல்லையெனில் வேட்பாளர் குமாருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படவும் வாய்ப்புள்ளது. அதிமுக சார்பில் அளித்த புகாரை தொடர்ந்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை
அமெரிக்காவில் ஜூலையில் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வாங்கியுள்ளது. தற்போது டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் லோகோ வெளியிடப்பட்டுள்ளது
பட்டுக்கோட்டையில் சாலையில் கிடந்த பேப்பர், பாட்டில்களை சேகரித்த பெண்ணை செருப்பால் அடித்து விரட்டிய நபரால் பரபரப்பு வைரலான வீடியோ – நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், திருச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
“மேல Boss இருக்கும்போது.. கீழ இருப்பவரை பத்தி எதுக்கு பேச்சு?” பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விக்கு கடுப்பான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
“12 மணி நேரம் பணிபுரிய தொழிலாளர்கள் ஒன்றும் இயந்திரம் அல்ல; எதிர்க்கட்சியாக இருந்தபோது 12 மணி நேர வேலையை முதல்வர் எதிர்த்தார். சுவிட்ச் போட்டால் ஓடும் இயந்திரம் போன்றது அல்ல மனித வாழ்க்கை”, என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.
முதலீடுகளை ஈர்க்கவும் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் மே 23இல் வெளிநாடுகளுக்கு பயணம் செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் செல்லும் வகையில் பயணத்திட்டம் என தகவல்.
சித்திரைத்திருவிழா கொடியேற்றும் நிகழ்ச்சியில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மேயர் இந்திராணி, ஆட்சியர் அனீஷ்சேகர் காவல் ஆணையர் நரேந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
திருப்பதி அருகே செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரூ.71 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள், 6 இருசக்கர வாகனங்கள், ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
ஓபிஎஸ் தரப்புக்கு எதிராக கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் புகார் மனு. ஓபிஎஸ் தரப்பு சட்டவிரோதமாக அதிமுகவின் 'பி' பார்மை பயன்படுத்தி உள்ளதாக குற்றச்சாட்டு காந்திநகர் தொகுதியில், அதிமுக பெயரில் ஓபிஎஸ் தரப்பு அளித்த வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் நடவடிக்கை
நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும். ஒன்றிய அரசு துணை நிற்காவிட்டாலும், இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக திகழ்கிறோம். திமுக விவசாய அணி செயலாளர் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு.
தவறான சிகிச்சையால் குழந்தை கால் இழந்ததாக சென்னை காவலர் போராட்டம் . நடத்திய விவகாரம் மருத்துவர்கள் மீதும் அல்லது மருத்துவமனையின் மீதும் எந்தவித அலட்சியமும் இல்லை என தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை .வெளியீடு குழந்தையின் உடல்நிலை மற்றும் கல்வியை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு மருத்துவ குழு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை 2 மாதத்திற்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவு, முதற்கட்டமாக குழந்தைக்கு செயற்கை கால்கள் பொருத்த அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை நடவடிக்கை
ஆளுநர் ஆர்.என். ரவியுடன் தமிழக பாஜக தலைவர்கள் குழு இன்று சந்திப்பு. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ வெளியான விவகாரம் ஆடியோவின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாக தகவல் பாஜக நிர்வாகிகள் கரு. நாகராஜன், வி.பி. துரைசாமி உள்ளிட்டோர் சந்திக்க உள்ளதாக தகவல் பாஜக தலைவர்கள் குழு – ஆளுநர் சந்திப்பு குறித்து மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை
அமமுக திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.மனோகரன், கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
நாட்டிலேயே முதல்முறையாக கேரள மாநிலம் கொச்சியில் வரும் 25ம் தேதி வாட்டர் மெட்ரோ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ரூ. 747 கோடி செலவில், 38 இடங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படுகிறது. இந்த படகில் 100 பேர் பயணிக்கலாம். இதற்கு ரூ. 20 முதல் ரூ. 40 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு சென்னை – கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு. தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. இன்று முதல் 5 நாட்கள் இந்தியாவில் வெப்ப அலைக்கு வாய்ப்பு இல்லை – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தென்காசி, நெல்லை, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பான 'வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கை கைது செய்தது பஞ்சாப் போலீஸ்; மார்ச் 18ம் தேதி முதல் தேடப்பட்டு வந்த நிலையில் போலீசில் சரணடைந்தார்.