பெட்ரோல்,டீசல் விலை: சென்னையில் 88-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 காசுகளாகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.92.34 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியா- அமெரிக்கா மோதல்
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது இந்தியா. நியூயார்க்கின் நசாவு மைதானத்தில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Jun 13, 2024 06:50 ISTசெங்கோட்டை தாக்குதல்: கருணை மனு நிராகரிப்பு
செங்கோட்டை தாக்குதலில் சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி முகமது ஆரிப்-ன் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி
கடந்த 2000ம் ஆண்டு செங்கோட்டை தாக்குதல் வழக்கில் உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது நினைவு கூரத்தக்கது. -
Jun 12, 2024 20:03 ISTகுவைத் தீ விபத்தில் தமிழர்கள் சிக்கியுள்ளார்களா? உதவி எண்கள் அறிவிப்பு
குவைத் தீ விபத்தில் தமிழர்கள் சிக்கியுள்ளார்களா என்ற விவரம் சேகரிக்கப்பட்டுவருகிறது. மேலும் தமிழர்கள் யாரும் பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என அயலக துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உதவி எண்கள்
இந்தியாவுக்குள் 9118003093793
வெளிநாடு 918069009900, 918069009901 -
Jun 12, 2024 19:59 ISTமதுரையில் அதிகப்பட்ச வெயில் பதிவு
இன்று மதுரையில் அதிகப்பட்சமாக 101.3 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது.
-
Jun 12, 2024 18:26 ISTகுவைத் கட்டடத்தில் தீ; 40 இந்தியர்கள் உயிரிழப்பு
குவைத்தில் உள்ள கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
-
Jun 12, 2024 17:57 ISTடெல்லியில் விஜய பிரபாகரன் பேட்டி
விருதுநகர் தொகுதியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் நடந்த குளறுபடிகள் தொடர்பாக இந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளோம்.
இது தொடர்பாக உரிய ஆதாரங்களை சமர்பித்துள்ளோம். ஒரு வாரத்திற்குள் நடிவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் உறுதி
- டெல்லியில் விஜய பிரபாகரன் பேட்டி
-
Jun 12, 2024 17:54 ISTவிஷால் வழக்கு- ஜூன் 28 விசாரணை
பைனான்சியரிடம் விஷால் வாங்கிய ரூ. 21.29 கோடி கடனை லைகா செலுத்திய நிலையில், அந்த கடனை விஷால் திருப்பி செலுத்தவில்லை என லைகா நிறுவனம் வழக்கு ஜூன் 28 முதல் இறுதி விசாரணை
- சென்னை உயர்நீதிமன்றம்
-
Jun 12, 2024 17:33 ISTதமிழகத்தில் NDA கூட்டணி தோல்விக்கு காரணம் என்ன? விளக்கம் கேட்கும் கோயல்?
தமிழகத்தில் NDA கூட்டணி தோல்விக்கு காரணம் என்ன?
பொன்.ராதாகிருஷ்ணன், வானதி MLA உள்ளிட்ட நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நடவடிக்கை
-
Jun 12, 2024 17:30 ISTபொதுக்குழு கூட்டத்தில் பேசிய கருத்துகளை திரித்து வெளியிட்ட ஊடகங்கள்: செல்வப்பெருந்தகை அறிக்கை
திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பங்களிப்பில்லாமல் நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெறுவது சாத்தியமே இல்லை என்பதை எவரும் மறுக்க முடியாது. வெளிப்படைத்தன்மையோடு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கருத்துகளை சில ஊடகங்கள் திரித்து வெளியிட்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியதாகும்.
எஃகு கோட்டை போல் இருக்கும் இக்கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த எவர் முயற்சி செய்தாலும் அது நிச்சயம் நிறைவேறாது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்”
- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை
-
Jun 12, 2024 16:46 ISTவிருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை- விஜயபிரபாகரன் மனு
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் மனு அளித்தார்.
-
Jun 12, 2024 16:29 ISTகுவைத் தீ விபத்து- துணைப் பிரதமர் நேரில் ஆய்வு
தீ விபத்து ஏற்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பின் உரிமையாளரான கேரளாவைச் சேர்ந்த கே.ஜி.ஆபிரகாமை கைது செய்ய குவைத் அரசு உத்தரவு;
குவைத் நாட்டு துணைப் பிரதமரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் யூசுப் அல் சபா தீ விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார்
-
Jun 12, 2024 16:15 ISTசேலம் தனியார் பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு- நிவாரணம் வழங்கு முதல்வர் உத்தரவு
சேலம் மாவட்டம் சுக்கம்பட்டி கிராமத்தில் இரண்டு இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்த முருகன் (30), நந்தினி (25), வேதவள்ளி (28), ஒரு வயது குழந்தை கவின் ஆகியோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்க மு.க.ஸ்டாலின் உத்தரவு;
விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
-
Jun 12, 2024 16:14 ISTஈஷா மின்தகன மேடை- அறிக்கை அளிக்க உத்தரவு
இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள மின் தகன மேடையை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
-
Jun 12, 2024 16:01 ISTஇந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்தில் விஜய பிரபாகரன்
டெல்லியில் உள்ள இந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் வருகை;
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரை சந்திக்க உள்ளார்.
-
Jun 12, 2024 15:52 ISTநாளை இத்தாலி செல்கிறார் மோடி
இத்தாலி பிரதமரின் அழைப்பை ஏற்று, ஜி-7 மாநாட்டில் பங்கேற்க நாளை இத்தாலி செல்கிறார் மோடி, 3வது முறையாக பிரதமர் பதவியேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம்.
-
Jun 12, 2024 15:46 ISTகுவைத் தீ விபத்து- ஜெய்சங்கர் பதிவு
தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்; காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்;
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்திய தூதரகம் துணை நின்று தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும்
- வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் X தளத்தில் பதிவு
-
Jun 12, 2024 15:17 ISTகுவைத் தீ விபத்தில் சிக்கி 10 இந்தியர்கள் உயிரிழப்பு
குவைத்தில் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 10 இந்தியர்கள் உட்பட 43 பேர் உயிரிழந்துள்ளதாக குவைத் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
Jun 12, 2024 14:53 ISTகோவை: 15ம் தேதி முப்பெரும் விழாவுக்கு தொண்டர்கள் திரண்டு வர ஸ்டாலின் அழைப்பு
கோவையில் வரும் 15ம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவுக்கு தொண்டர்கள் திரண்டு வர திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு. நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வென்றது போல் 2026 சட்டமன்ற தேர்தலில், 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றியினை உறுதி செய்திட கோவை முப்பெரும் விழா ஊக்கமளிக்கும் இடமாக அமையட்டும் கோவை முப்பெரும் விழாவையொட்டி, திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்மேற்கு மண்டலம் தங்களின் பட்டா நிலம் என நினைத்துக்கொண்டு அங்குள்ள மக்களை வஞ்சித்து சில கட்சிகள் அரசியல் லாபம் தேடினஅந்த கட்சிகளின் உண்மையான நிலையை, திமுக கூட்டணிக்கு அளித்த வெற்றி வாயிலாக மேற்கு மண்டல மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள்அதனால்தான் கோவையில் முப்பெரும் விழா நடைபெறுகிறது - முதல்வர் ஸ்டாலின்
-
Jun 12, 2024 13:57 ISTஇந்திய அரசியல் சாசனம் என்பது மக்களின் குரல், அந்த குரலை யாராலும் ஒடுக்க முடியாது: ராகுல் காந்தி
இந்திய மக்கள் எங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம் என தேர்தல் முடிவுகள் மூலமாக பா.ஜ.கவுக்கு பதில் அளித்துள்ளனர்; இந்திய அரசியல் சாசனம் என்பது மக்களின் குரல், அந்த குரலை யாராலும் ஒடுக்க முடியாது என்பதை இந்திய வாக்காளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்” - கேரளாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேச்சு
-
Jun 12, 2024 13:56 ISTவயநாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் என் மனதில் இருந்து நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்: ராகுல் காந்தி
“வயநாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் என் மனதில் இருந்து நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்; அரசியல் அதிகாரம், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவற்றின் உதவியுடன் மக்களின் எண்ணத்தை மாற்ற பாஜக திட்டமிட்டது- ராகுல் காந்தி பேச்சு
-
Jun 12, 2024 13:55 IST7 நாட்களுக்கு மழை
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் ஜூன் 18-ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.
-
Jun 12, 2024 13:44 ISTசந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா: மோடியுடன் ரஜினிகாந்த்
சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் மோடியுடன் ரஜினி பேசும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
-
Jun 12, 2024 13:44 ISTஆந்திர முதல்வராக பொறுப்பேற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
ஆந்திர முதல்வராக பொறுப்பேற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து. உங்கள் தலைமை ஆந்திர மாநிலத்திற்கு செழிப்பையும், நலனையும் கொண்டு வரட்டும். ஆந்திரா மற்றும் தமிழ்நாடு இடையேயான பிணைப்பு மேலும் வலுப்பெறும் என நம்புகிறேன் - முதல்வர் ஸ்டாலின்
-
Jun 12, 2024 13:24 ISTமுதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற விக்கிரவாண்டி திமுக வேட்பாளர்
முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கௌதம சிகாமணியும் முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்.
-
Jun 12, 2024 13:00 ISTதமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நேரம் மாற்றம்
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 20ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு கூட்டத்தொடர் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு நிறைவடையும் என சட்டமன்ற விதிகள் குழு கூட்டத்தில் முடிவு
-
Jun 12, 2024 12:59 ISTதோழமைக் கட்சிக்கும், எங்களுக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை
தோழமைக் கட்சிக்கும், எங்களுக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் வலிமையாகவும், உண்மையாகவும் இருக்கிறது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி.
-
Jun 12, 2024 12:33 ISTசந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா : மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா பங்கேற்பு
சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, நிதின் கட்கரி பங்கேற்பு.
-
Jun 12, 2024 12:28 IST394 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்: அமைச்சர் சி.வி.கணேசன்
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு முதல் இந்தாண்டு ஏப்ரல் மாதம் வரை 394 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.; அந்த குழந்தைகளுக்கு தேவையான கல்வியும், தங்கும் விடுதிகளும் அமைக்கப்பட்டுள்ளது” - அமைச்சர் சி.வி.கணேசன்
-
Jun 12, 2024 12:27 ISTயூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு; இடைக்கால நிவாரணம் வழங்கக் கோரி தமிழ்நாடு அரசுக்கு மனு அளிக்க சவுக்கு சங்கர் தாய்க்கு உயர் நீதிமன்றம் அனுமதி; மேலும் மனுவை 8 வாரங்களில் பரிசீலிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
-
Jun 12, 2024 12:26 ISTஆந்திர அமைச்சராக பதவியேற்றார் நாரா லோகேஷ்
ஆந்திர மாநில அமைச்சராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ்
-
Jun 12, 2024 11:54 ISTபவன் கல்யாண் அமைச்சராக பதவியேற்பு
சந்திரபாபு நாயுடுவின் தலைமையிலான அமைச்சரவையில் ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் அமைச்சராக பதவியேற்றார்
-
Jun 12, 2024 11:52 ISTசந்திரபாபு நாயுடுவை கட்டியணைத்து மோடி வாழ்த்து
முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடி மலர் கொத்து கொடுத்து வாழ்த்து
சந்திரபாபு நாயுடுவை கட்டியணைத்து வாழ்த்து கூறிய பிரதமர் மோடி. ஆந்திர மாநில ஆளுநர் அப்துல் நசீர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆந்திர மாநில முதலமைச்சராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு
-
Jun 12, 2024 11:45 ISTசந்திரபாபு நாயுடு பதவியேற்பு
ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக 4வது முறையாக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு
-
Jun 12, 2024 11:38 ISTசந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா: ரஜினி பங்கேற்பு
சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், மனைவி லதாவுடன் பங்கேற்பு
-
Jun 12, 2024 11:01 ISTதாரகை கத்பட் எம்.எல்.ஏவாக பதவியேற்பு
விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தாரகை கத்பட் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார்.
-
Jun 12, 2024 11:00 ISTடெல்லியில் தேர்தல் ஆணையரை சந்திக்கும் விஜய பிரபாகரன்
விருதுநகரில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், இன்று டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்திக்கிறார்.
விருதுநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என மனு அளிக்க உள்ளதாக தகவல். டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் மதியம் 3.30 மணியளவில் மனு அளிக்க உள்ளார்.
விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடிகள் நடைபெற்றதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியிருந்தார்.
மறு வாக்கு எண்ணிக்கை கோரி, ஏற்கனவே தேமுதிக சார்பில் தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர்கள் மனு அளித்துள்ளனர்.
-
Jun 12, 2024 10:59 ISTமஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்களிடம் இ.டி விசாரணை
மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை.
மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ரூ.7 கோடி மோசடி செய்ததாக துறவூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் வழக்கு.
சிராஜிடம் ஏமாற்றி ரூ.7 கோடி வாங்கிவிட்டு, பணத்தையோ, லாபத்தையோ வழங்கவில்லை என குற்றச்சாட்டு
நீதிமன்ற உத்தரவுப்படி தயாரிப்பாளர்கள் ஷோன் ஆண்டனி, சவுபின் ஷாகிர், பாபு ஷாகிர் ஆகியோரின் வங்கி கணக்குகள் முடக்கம்
-
Jun 12, 2024 10:58 IST'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம் தொடக்கம்
'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்.
விவசாயிகள் பயன்பாட்டிற்காக டிராக்டர்கள், கொத்துக் கலப்பைகள் வழங்குகிய முதல்வர்.கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான டிராக்டர் சேவையும் தொடக்கம்
-
Jun 12, 2024 10:56 ISTவருகிற 24ஆம் தேதி மக்களவை கூடுகிறது
18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் வருகிற 24ஆம் தேதி கூடுகிறது. வருகிற 24ஆம் தேதி முதல் ஜூலை 3ஆம் தேதி வரை கூடுகிறது.
மக்களவை சபாநாயகர் தேர்வு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்கள் பதவி ஏற்பு உள்ளிட்டவை நடைபெற உள்ளது.
-
Jun 12, 2024 10:19 IST4 மாவட்டங்களில் கள்ளக்கடல் எச்சரிக்கை
கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கள்ளக்கடல் எச்சரிக்கை. 4 மாவட்டங்களின் கடலோர பகுதிகளில், கடல் அலை அதிக உயரத்திற்கு எழும்பும் என இந்திய கடல்சார் தகவல் மையம் அறிவிப்புகன்னியாகுமரி 2.5மீ., ராமநாதபுரம் 2.8மீ., நெல்லை, தூத்துக்குடியில் 2.6மீ. உயரம் வரை கடல் அலை எழும்பக்கூடும். சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் லேசான அலை எழுச்சி இருக்கும் என எச்சரிக்கை
சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் நாளை மதியம் 1 மணி வரையும், திருவள்ளூரில் நாளை இரவு 7 மணி வரையும் இந்த கடல் எழுச்சி இருக்கும்- இந்திய கடல்சார் தகவல் மையம்
-
Jun 12, 2024 10:19 IST4 மாவட்டங்களில் கள்ளக்கடல் எச்சரிக்கை
கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கள்ளக்கடல் எச்சரிக்கை. 4 மாவட்டங்களின் கடலோர பகுதிகளில், கடல் அலை அதிக உயரத்திற்கு எழும்பும் என இந்திய கடல்சார் தகவல் மையம் அறிவிப்புகன்னியாகுமரி 2.5மீ., ராமநாதபுரம் 2.8மீ., நெல்லை, தூத்துக்குடியில் 2.6மீ. உயரம் வரை கடல் அலை எழும்பக்கூடும். சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் லேசான அலை எழுச்சி இருக்கும் என எச்சரிக்கை
சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் நாளை மதியம் 1 மணி வரையும், திருவள்ளூரில் நாளை இரவு 7 மணி வரையும் இந்த கடல் எழுச்சி இருக்கும்- இந்திய கடல்சார் தகவல் மையம்
-
Jun 12, 2024 10:03 ISTதங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,440க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,680க்கு விற்பனை
-
Jun 12, 2024 09:17 ISTஈ.சி.ஆர் சுங்கக் சாவடி கட்டணம் உயர்வு
கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை - மாமல்லபுரம் இடையே உள்ள சாலைக்கான சுங்கக் கட்டணம் உயர்வு
புதிய கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது
கார், மூன்று சக்கர வாகனங்களுக்கு ஒரு ரூபாய் முதல் 68 ரூபாய் வரையிலும், இலகுரக வணிக மற்றும் சரக்கு வாகனங்களுக்கு ரூ 2 முதல் ரூ 110 வரையிலும் உயர்வு
-
Jun 12, 2024 08:46 ISTராணுவ தலைமைத் தளபதியாக உபேந்திர திவேதி நியமனம்
இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக உபேந்திர திவேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜுன் 30ம் தேதி இவர் பொறுப்பேற்கிறார். தலைமைத் தளபதி மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் ஜுன் 30ம் தேதி முடிவதால் உபேந்திர திவேதி பொறுப்பேற்பு
-
Jun 12, 2024 08:26 ISTபவன் கல்யாணுக்கு அமைச்சர் பதவி
சந்திரபாபு நாயுடு தலைமையில் பதவியேற்க உள்ள அமைச்சரவை பட்டியல் வெளியீடு. ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் உள்ளிட்ட 24 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர்.
-
Jun 12, 2024 08:19 ISTபுதுவையில் இன்று பள்ளிகள் திறப்பு
புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இன்றைய தினமே மாணவர்களுக்கான புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்க கல்வித்துறை ஏற்பாடு
-
Jun 12, 2024 08:19 ISTசந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்பு
ஆந்திர முதல்வராக பதவியேற்கும் சந்திரபாபு நாயுடு உடன் 24 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர். இதில் கூட்டணி கட்சிகளான ஜனசேனா கட்சியில் 3 பேருக்கும், பாஜகவில் ஒருவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பவன் கல்யாண், அமித்ஷா உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
-
Jun 12, 2024 08:17 ISTஇலங்கை vs நேபாளம் போட்டி ரத்து
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை, நேபாளம் அணிகள் மோதும் போட்டி மழை காரணமாக ரத்து
-
Jun 12, 2024 08:17 IST4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை
தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.