Latest Tamil News Live : அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் செமஸ்டர் தேர்வைப் புத்தகத்தைப் பார்த்து எழுத மாணவர்களுக்கு அனுமதி அளிக்கத் திட்டம் தீட்டியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவரி கேள்வி பதில் போல் இல்லாமல், விரிவாக பதில் அளிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்
தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தும் நிலையில், அனைத்து ரயில்களும் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
டாஸ்மாக் கடைகளுக்கும் கட்டுப்பாடுகள் உண்டு
கொரோனா தடுப்பு ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் என்றாலும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதில், டாஸ்மாக் கடைகள் வழக்கம்போல பகல் 12 மணிக்குத் திறக்கப்படும் என்றும் இரவில் ஒரு மணி நேரம் முன்னதாக 9 மணிக்கே அரசு மதுக்கடைகள் மூடப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்றும் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.92.43-க்கும், டீசல் லிட்டர் ரூ.85.75-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 22:21 (IST) 19 Apr 2021தடுப்பு மருந்து நிறுவனங்களுக்கு முன்கூட்டியே பணம்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்துகளை தயாரித்து வழங்கி வரும் நிறுவனங்களான சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு முன்கூட்டியே பணம் வழங்க, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்துள்ளார். அதன் படி, சீரம் நிறுவனத்துக்கு 3000 கோடி ரூபாயும், பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு 1567 கோடி ரூபாயும் அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
covid19 | Finance Minister Nirmala Sitharaman today approved an advance payment of Rs 4,567.50 crores to Serum Institute of India & Bharat Biotech. Finance Ministry has approved Rs 3,000 crores for Serum Institute of India & Rs 1567.50 crores for Bharat Biotech: Sources
— ANI (@ANI) April 19, 2021 - 22:15 (IST) 19 Apr 2021மன்மோகன் சிங் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்; மோடி ட்வீட்!
முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மன்மோகன் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் வேளையில், அவர் விரைவில் குணமடைய வேண்டுவதாக, பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Wishing our former Prime Minister, Dr. Manmohan Singh Ji good health and a speedy recovery.
— Narendra Modi (@narendramodi) April 19, 2021 - 21:56 (IST) 19 Apr 2021தெலுங்கானா முதல்வருக்கு கொரோனா
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்விற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட அவரை மருத்துவ குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
- 20:11 (IST) 19 Apr 2021டாஸ்மாக் கடைகளில் மீண்டும் டோக்கன் முறையில் விற்பனை
தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளால் டாஸ்மாக் கடைகளில் மீண்டும் டோக்கன் முறை மூலம் விற்பனை நடைபெறும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதுவும் மாலை 4 மணி வரை மட்டுமே டோக்கன் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
- 19:40 (IST) 19 Apr 2021மெட்ரோ ரயில் சேவை நேர மாற்றம்
தமிழக அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கால் சென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- 19:17 (IST) 19 Apr 2021புதுச்சேரியில் இரவு ஊரடங்கு அமல்
புதுச்சேரியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார்.
- 18:55 (IST) 19 Apr 2021முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்கு கொரோனா தொற்று உறுதி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- 18:41 (IST) 19 Apr 2021தமிழகத்தில் இன்று 10,941 பேருக்கு கொரோனா உறுதி
தமிழகத்தில் இரண்டாவது நாளாக 10000ஐ தாண்டி கொரோனா தொற்று பாதித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 10,941 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 3347 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- 18:04 (IST) 19 Apr 2021ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நிகழவில்லை - சுகாதாரத்துறை விளக்கம்
வேலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த உயிரிழப்பு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நிகழவில்லை என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
- 17:47 (IST) 19 Apr 2021கொரோனா தொற்று பரவல் : மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா ஆலோசனை
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் தீரமடைந்து வரும் நிலையில், கொரோனா பரவல் தொடர்பாக, மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன், காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசைனை கூட்டத்தில், தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனையில் பங்கேற்றுள்ளார்.
- 17:43 (IST) 19 Apr 2021தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- 17:42 (IST) 19 Apr 2021கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் திடீர் மரணம்
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் திடீர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
- 17:21 (IST) 19 Apr 2021சரவணா ஸ்டோர் மூடல்
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னையில் மிக்பெரிய கடைகளில் ஒன்றான புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்லில் 39 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் தற்போது அந்த கடை மூடப்பட்டுள்ளது.
- 16:47 (IST) 19 Apr 2021இரவு ஊரடங்கால் பாதிப்புக்கு உள்ளாகும் ஆம்னி பேருந்து தொழிலாளர்கள்!
கொரோனா எதிரொலியால், தமிழகத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், இரவில் பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், 2 லட்சம் ஆம்னிப் பேருந்து தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- 16:17 (IST) 19 Apr 2021அனுமதி இல்லாத வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற நடவடிக்கை; உயர்நீதிமன்ற மதுரை கிளை
தமிழகத்தில் பொது இடங்களில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
- 16:07 (IST) 19 Apr 2021ஒப்பந்த அடிப்படையில் 600 செவிலியர்கள் நியமனம்!
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம், மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 600 செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- 16:05 (IST) 19 Apr 2021இரவு ஊரடங்கு கொரோனாவுக்கான தீர்வு இல்லை; மமதா பானர்ஜி!
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தி வரும் இரவு நேர ஊரடங்கு எந்த வித பயனையும் ஏற்படுத்தாது என மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
- 15:59 (IST) 19 Apr 2021மதுபானம் வாங்க, மாஸ்க் கட்டாயம்; டாஸ்மாக் உத்தரவு!
டாஸ்மாக் நிர்வாகம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, 15 கட்டளைகளை வெளியிட்டுள்ளது. மதுப்பிரியர்கள், மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வந்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
- 15:49 (IST) 19 Apr 2021கொரோனா பரவல் தீவிரம்; டாஸ்மாக் விதித்த 15 கட்டளைகள்!
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், டாஸ்மாக் செயல்படும் நேரம் குறைப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்க்ளை டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் 15 முக்கிய கட்டளைகளை பிறப்பித்துள்ளது. மது வாங்க வருவோர் 6 அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும். கடைக்குள் அதிகபட்சம் 5 பேருக்கு மட்டுமே அனுமதி என பல கட்டளைகளை அறிவித்துள்ளது.
- 15:44 (IST) 19 Apr 2021தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை; இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை வரும் மே 2-ம் தேதி காலை 8.30 மணி தொடங்கி நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை குறித்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. காணொலிக் காட்சி மூலம் நடைபெற்று வரும் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
- 15:20 (IST) 19 Apr 2021மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தும் பிரதமர்!
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில் நாட்டின் முன்னனி மருத்துவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
- 15:16 (IST) 19 Apr 2021டெல்லியில் மதுக்கடைகளில் அலை மோதும் மதுப்பிரியர்கள்!
தலைநகர் டெல்லியில் இன்று இரவு முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மதுக்கடைகளில் சமூக இடைவெளியை மறந்து மது வாங்குகதற்காக மதுப்பிரியர்கள் குவிந்த காட்சி, டெல்லியில் கொரோனா அச்சத்தை அதிகரித்துள்ளது.
- 14:57 (IST) 19 Apr 2021பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகை ரத்து!
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
- 14:01 (IST) 19 Apr 2021அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் பகலில் இயக்கப்படும்
இரவு நேர கொரோனா ஊரடங்கு அமலிற்கு வந்துள்ளதால் பகல் நேரங்களில் அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதிகாலை நான்கு மணிக்கு துவங்கி இரவு 8 மணிக்குள்ளாக சென்றடையும் வகையில் பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
- 13:59 (IST) 19 Apr 2021மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கேட்டு மனு
கொரோனா தடுப்பூசி குறித்து கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கொரோனா தடுப்பூசி போட வேண்டாம் என கூறவில்லை என்று விளக்கமும் அளித்துள்ளார் அவர்.
- 13:54 (IST) 19 Apr 2021சட்டமன்றத்துக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரம்
சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்றதாக திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரத்து செய்ததை எதிர்த்து மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- 13:37 (IST) 19 Apr 2021மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தவறு நடக்க வாய்ப்பே இல்லை - தலைமை தேர்தல் அதிகாரி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என்பது ஒரு கால்குலேட்டர் போன்றது. எந்த சிக்னல் கொண்டும் அதை இயக்க முடியாது, வாக்குப்பதிவு இயந்திரங்களில் தவறு நடக்க வாய்ப்பே இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
- 13:13 (IST) 19 Apr 2021கள்ளழகர் விழாவிற்கு அனுமதி இல்லை
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடத்த உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவல் தீவிரமாக பரவி வரும் சூழலில் கட்டுப்பாடுகள் மேலும் அதிகப்படலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
- 12:43 (IST) 19 Apr 2021மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்டர்கள்
அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்டர்கள் அமைத்து முன்னிரிமை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- 12:41 (IST) 19 Apr 2021மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் 23ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- 12:38 (IST) 19 Apr 2021ஜூன் மாதத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு
ஜூன் மாதத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று தேர்வுத்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் புதிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
- 11:43 (IST) 19 Apr 2021டெல்லியில் ஊரடங்கு அமல்
டெல்லியில் இன்று இரவு முதல் வரும் 26-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
- 11:42 (IST) 19 Apr 2021முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இன்று டிஸ்சார்ஜ்
இருதய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முரளிதரனுக்கு ஆஞ்சியோ சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை அறிவித்திருக்கிறது.
- 11:37 (IST) 19 Apr 2021சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கக்கூடாது - 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் போராட்டம்
நாளை முதல் சுற்றுலா தலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 10:33 (IST) 19 Apr 2021முதல்வர் பழனிசாமி குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்கம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
- 10:11 (IST) 19 Apr 2021கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.50 கோடியை தாண்டியது
இந்தியாவில் 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 2.73 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.50 கோடியை தாண்டியது. மேலும், 1,619 பேர் உயிரிழந்துள்ளனர்.
- 10:04 (IST) 19 Apr 2021கேரளாவில் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பால் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளையும் ஒத்தி வைக்க வேண்டும் என்று துணைவேந்தர்களுக்கு அம்மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கான் உத்தரவிட்டுள்ளார்.
- 10:00 (IST) 19 Apr 2021நாளை முதல் பகலில் கூடுதல் அரசு பேருந்துகள் இயங்கும்
இரவுநேர ஊரடங்கு காரணமாக நாளை முதல் தென் மாவட்டங்களுக்கு பகல் நேரங்களில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களுக்கு கூடுதல் அரசு பேருந்துகள் இயங்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.