Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Latest Updates
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆளுமை விருதுகள்: செப்.15க்குள் விண்ணப்பிக்கலாம்!
காங்கிரஸில் இருந்து விலகினார் குலாம் நபி ஆசாத்
காங்கிரஸின் மூத்த தலைவா்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகினார். இது தொடா்பாக கட்சித் தலைவா் சோனியா காந்திக்கு வெள்ளிக்கிழமை அவா் எழுதிய கடிதத்தில், கட்சியின் கட்டமைப்பை ராகுல் காந்தி சீா்குலைத்துவிட்டதாக கூறியுள்ளார்.
73 வயதான குலாம் நபி ஆசாத், 1980ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மாறி தேசிய அரசியலுக்குள் நுழைந்தார். மாநிலங்களவை உறுப்பினராக 21 ஆண்டுகள் பதவி வகித்துள்ள ஆசாத், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக 7 ஆண்டுகளுக்கும் மேல் பதவி வகித்துள்ளார்.
9 முறை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசாத், காங்கிரஸ் காரியக் கமிட்டியில் நீண்டகாலம் உறுப்பினராக இருந்துள்ளார். இப்படி தனது 50 ஆண்டுகால அரசியல் பயணத்தில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு சிக்கல்களை தீர்த்து வைத்த குலாம் நபி ஆசாத், தற்போது கட்சியிலிருந்து விலகி உள்ளது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கி, அடுத்த மாதம்11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் A B என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதில் A பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஹாங் ஹாங் அணிகளும் மற்றும் B பிரிவில் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்று உள்ளன.
இதன் முதல் போட்டியில் இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. ஞாயிறு நடைபெறும் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் கனியாமூர் பள்ளி கலவரத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 362 ஆக உயர்ந்துள்ளது. போலீஸ் வாகனத்தை சேதப்படுத்தியதாகவும், போலீசார் மீது கல்வீசியதாகவும் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இயக்குநர் பாரதிராஜா குணமடைய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து கூறியுள்ளார்.உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குனரும், அன்புச் சகோதரருமான பாரதிராஜா விரைந்து குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என ஓபிஎஸ் கூறியுள்ளார்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு முன்னாள் எம்.பி குமரன் மனைவி அனிதா குமரன், செந்தில் முருகன், அருள் முருகன், ராமதாஸ், கணேசன் ஆகியோரை அறங்காவலர்களை நியமித்தது தமிழக அரசு. இவர்கள் அனைவரும் இணைந்து 30 நாட்களுக்குள் அறங்காவலர்கள் தங்களுக்குள் ஒரு தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயக்குநர் பாரதிராஜாவின் மனைவியிடம் தொலைபேசியில் உடல் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பம் ஏழை, எளிய மக்களின் நலன் காக்கவே அதிமுக உருவாக்கப்பட்டது. ஒற்றை தலைமைக்கு தற்போது என்ன அவசியம் வந்தது? என ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வழக்கில் குஜராத் அரசின் முடிவை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு 134 முன்னாள் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர். ஆயுள் தண்டனை பெற்ற 11 பேரை கருணை அடிப்படையில் விடுவித்த குஜராத் அரசின் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது
காவல்துறையினர் குடியிருப்புகளை உள்வாடகைக்கு விடும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை
காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.20 லட்சம் கன அடி நீர் வரத்து வரக்கூடும் என மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால் காவிரி கரையோரத்தில் உள்ள 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்து தரப்பு போட்டிகளிலும் பாபர் அசாம் சிறந்தவராக திகழ்கிறார் என விராத் கோலி கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இயக்குனர் பாரதிராஜா கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “என் இனிய தமிழ் மக்களே.. நான் நலமுடன் உள்ளேன். நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் தொலைபேசி, இணையதளம் வாயிலாக அன்புடன் விசாரித்த மற்றும் நலம்பெற பிரார்த்தித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் பிறந்த நாளின்போதும் பிறந்த நாள் பரிசாக வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கும் என இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே தெரிவித்துள்ளார்.
இதற்காக 17 வயது முடிந்தவர்கள் வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைன் மூலமாக அட்வான்ஸ் புக்கிங் செய்ய வேண்டும். அதன்பின்னர் ஒவ்வொருவர் வீடு தேடி வாக்காளர் அடையாள அட்டை வரும்.
டெல்லியில் 16 வயதான இளம்பெண் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது. இந்தத் துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்திய இளைஞர் ஒருவரை காவலர்கள் கைதுசெய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இன்ஸ்டாகிராமில் பேசி பழகிய நிலையில் திடீரென தொடர்பை நிறுத்தியதால் துப்பாக்கியால் சுட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை அகற்றக்கோரி சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைது செய்யப்பட்டுள்ள கனல் கண்ணன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கோயில் முன்பு சிலை வைத்தவர்களை கைது செய்யாத காவல்துறை, என்னை கைது செய்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட உள்ளது.
சென்னை விமான நிலையத்தில், இலங்கை, தாய்லாந்து, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ2.83 கோடி மதிப்புள்ள 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 11 இலங்கை பெண்கள் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வழக்குப்பதிவு செய்ய லஞ்சம் கேட்டதாக புது வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் குறித்து விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வண்ணாரப்பேட்டை துணை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மைனர் பெண்ணை காதலித்து திருமணம் செய்ததாக இளைஞர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இளைஞரை மணந்து மகிழ்ச்சியுடன் இருப்பதாக பெண் அளித்த வாக்குமூலத்தால் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது
ஜார்க்கண்டின் ஆளும் கூட்டணியின் 49 எம்.எல்.ஏ.,க்கள் அண்டை மாநிலங்களுக்குச் செல்லலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் தகுதி நீக்கம் குறித்த இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் சஸ்பென்ஸ் தொடர்ந்ததால், சட்டமன்ற உறுப்பினர்களுடன் மூன்று பேருந்துகள் குந்தி மாவட்டத்திற்குச் சென்றன.
எதிர்க்கட்சிகளின் குதிரைப்பேரத்தை திசை திருப்பும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டதாக காங்கிரஸ் கட்சியின் 3 எம்.எல்.ஏ.,க்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே மாணவியை வன்கொடுமை செய்த பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் பள்ளி தாளாளர் காமராஜை தூத்துகுடியில் காவல்துறையினர் கைது செய்தனர்
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதே அரசின் முதன்மை நோக்கம் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக, உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணை நேரலையாக ஒளிபரப்பப்படுவதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது.
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக, உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணை நேரலையாக ஒளிபரப்பப்படுவதை மக்கள் நீதி மய்யம் பெரிதும் வரவேற்கிறது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஓய்வு பெறுவதையடுத்து, அவரது தலைமையிலான அமர்வில் நடைபெறும் விசாரணை நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. நீதித்துறை வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.
2018-ம் ஆண்டிலேயே இதற்கு கொள்கை அளவில் அனுமதி வழங்கப்பட்டாலும், தற்போதுதான் நடைமுறைக்கு வந்துள்ளது. இது தொடர வேண்டும். படிப்படியாக உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களிலும் நேரடி ஒளிபரப்பை அமல்படுத்த வேண்டும். நாடாளுமன்றம், சட்டப்பேரவை மட்டுமின்றி, நீதிமன்ற நடைமுறைகளையும் நேரலையாக ஒளிபரப்பு செய்ய வேண்டுமென மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நிகழ்வுகள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதை இந்த நடைமுறை உறுதிப்படுத்தும். நல்ல ஜனநாயகத்துக்கும் இது அடையாளமாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு என்றும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதைத் தடுக்கவும், சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசை ஓபிஎஸ் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
பெரியார் சிலை குறித்த சர்ச்சை பேச்சு வழக்கில் கைதான ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், ஜாமின் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மனு தக்கால் செய்தார். அந்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், தற்போது உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கனல் கண்ணனின் ஜாமின் மனு நீதிபதி இளந்திரையன் முன்பு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.
நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புகளில் தமிழ் பாடத்திட்டம் இடம்பெறும் என்றும் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
ஜெ. மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வரும் 29ம் தேதி கூடுகிறது
பொறியியல் கல்லூரிகளுக்கான பொது பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி முதல் நடைபெறும்.
பொது கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை 4 கட்டமாக நடைபெறும் – அமைச்சர் பொன்முடி
500 பக்கங்கள் ஆங்கிலத்திலும், 608 பக்கங்கள் தமிழிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரின் சாட்சியமும் அதிக பக்கங்களை கொண்டது – ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி
விசாரணையில் காலதாமதம் என்று கூறுவதை ஏற்க இயலாது என்றார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஒரு ஆண்டில் 149 சாட்சிகளிடம் விசாரணை
ஜெ. மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்த பின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி பேட்டி
சசிகலா அபிடவிட் தாக்கல் செய்ததால், அவரை ஆஜராக வற்புறுத்த முடியாது
கட்டாயப்படுத்தி வரவழைக்க முடியாது – சசிகலா குறித்த கேள்விக்கு நீதிபதி ஆறுமுகசாமி பதில்
அறிக்கையில் என்ன உள்ளது என்பதை நான் கூற இயலாது: விசாரணைக்கு சசிகலா தரப்பு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்
செப்டம்பர் 10இல் பொறியியல் பொது பிரிவு கலந்தாய்வு – அமைச்சர் பொன்முடி
பொறியியல் கல்லூரிக்கான பொது கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி முதல் நடைபெறும்
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி
குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்: முதல்வரை முழுமையாக நம்புகிறோம். முதல்வர் உடனான சந்திப்புக்கு பின் ஸ்ரீமதியின் தாய் செல்வி பேட்டி
கேரளாவில் நீட் தேர்வு சோதனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு செப்டம்பர் 4ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறுகிறது.
கேரள மாநிலம் கொல்லத்தில் நீட் தேர்வில் கலந்து கொண்ட மாணவிகளின் உள்ளாடையை கழற்றக் கூறியதாக சர்ச்சை எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் இருந்து துபாய் செல்லும் இன்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த சென்னை, மணலியைச் சேர்ந்த ரஞ்சித் குமார்(41) கைது செய்யப்பட்டார். தனது சகோதரி துபாய் செல்வதை தடுப்பதற்காக, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
சாலையோர தள்ளுவண்டி கடைகள் நடத்த மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ஸ்ரீமதியின் பெற்றோர் சந்திப்பு
ஸ்ரீமதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டி வந்த நிலையில் முதல்வருடன் சந்திப்பு
ஜெயலலிதா மரணம் தொடர்பான 600 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை, ஆணையத்தின் தலைவர் ஆறுமுகசாமி, ஸ்டாலினிடம் வழங்கினார்.
நெல்லை – மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ரயில் செப்.1ம் தேதி முதல் ஜனவரி 23ம் தேதி வரை மீண்டும் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது,
உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று முதல் வருகிற செப்டம்பர் 11-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. வினாடிக்கு 2,000 கன அடி நீர் ஆற்றில் வெளியேறி வருவதால், கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என பொதுப் பணித் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகஸ்ட் 26ஆம் தேதியுடன் ஓய்வு பெற்ற நிலையில், 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்கிறார். இருப்பினும் யு.யு.லலித், 3 மாதங்களுக்கு குறைவாக மட்டுமே தலைமை நீதிபதி பதவியை வகிப்பார். அவா் வரும் நவம்பா் 8-ஆம் தேதி ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய கால்பந்து கூட்டமைப்பு மீதான தடையை பீபா நீக்கியது. திட்டமிட்டபடி U17 மகளிர் உலக கோப்பை தொடரை இந்தியாவில் நடத்தலாம் என அறிவித்துள்ளது.
கேடட் உலக சாம்பியன்ஷிப் 2022 ஜுடோ போட்டியில் 57 கிலோ பிரிவில் மணிப்பூரைச் சேர்ந்த 16 வயது லிந்தோய் சனம்பம், பிரேசிலை வீழ்த்தி தங்கம் வென்றார். இதன்மூலம் ஜூடோவில் உலக சாம்பியனான முதல் இந்தியர் என்ற பெருமையை லிந்தோய் பெற்றுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த 2017ஆம் ஆண்டு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. போயஸ் இல்ல பணியாளர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், சசிகலா உறவினர்கள் என மொத்தம் 159 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை ஆறுமுகசாமி ஆணையம் இன்று தாக்கல் செய்கிறது.