/indian-express-tamil/media/media_files/2NEip9eNdCdZDhVyqXUO.jpg)
Tamil News
Tamil Nadu | Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் கேள்வி
நீங்கள் கேட்கும்போதெல்லாம் நிதி கொடுக்க முடியாது என்று ஆணவமாகப் பேசும் அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்களே...
— M.K.Stalin (@mkstalin) April 3, 2024
தமிழ்நாட்டைப் பார்த்தால் எப்படி தெரிகிறது?
5000 கோடி ரூபாய்க்கு கணக்கு கேட்கிறீர்களே...
நாங்கள் கடனாக வாங்கிய தொகை என்ன ஒன்றிய அரசில் இருந்து நீங்கள் கொடுத்ததா?… pic.twitter.com/QixdIx4Bqn
-
Apr 04, 2024 22:42 IST
மக்களவைத் தேர்தல் நாள் ஏப்ரல் 19-ம் தேதி பொதுவிடுமுறை - அரசாணை வெளியீடு
மக்களவைத் தேர்தல் நாள் ஏப்ரல் 19-ம் தேதி பொதுவிடுமுறை என்று அரசாணை வெளியிட்டுள்ளது.
-
Apr 04, 2024 22:39 IST
கச்சத்தீவு விவகாரத்தில் 10 ஆண்டுகளாக பா.ஜ.க என்ன செய்தது - இ.பி.எஸ் கேள்வி
கோவையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: “கச்சத்தீவு விவகாரத்தில் 10 ஆண்டுகளாக பா.ஜ.க என்ன செய்தது; மீனவ மக்களின் ஓட்டுக்காக கச்சத்தீவு பிரச்னைகளை பா.ஜ.க தற்போது பேசி வருகிறது” என்று விமர்சித்துள்ளார்.
-
Apr 04, 2024 21:43 IST
பானை சின்னத்தில் போட்டியிடுவது வி.சி.க-வுக்கு சாதகமாக இருக்கும் - விழுப்புரம் வேட்பாளர் ரவிக்குமார்
தி.மு.க கூட்டணியில் வி.சி.க சார்பில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் ரவிக்குமார்: “பானை சின்னத்தில் போட்டியிடுவது வி.சி.க-வுக்கு சாதகமாக இருக்கும். எனது பணிகளால் மக்களிடம் நன்கு அறிமுகமாகி இருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
-
Apr 04, 2024 20:59 IST
மோடி மீது ஆ.ராசா குற்றச்சாட்டு
“அப்பா தொழிலையே செய் என பிரதமர் மோடி சொல்றாரு.. இவங்க மட்டும் நமக்கு மேல இருக்கணுமாம், நம்மை ஆளணுமாம்.. இவர்கள் மட்டுமே படிக்கணுமாம்” என நீலகிரி திமுக வேட்பாளர் ஆ. ராசா கூறினார்.
-
Apr 04, 2024 20:58 IST
சென்னை-நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கம்
“கோடை காலத்தில் கூடுதல் கூட்ட நெரிசலைக் குறைக்க சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். பயணிகள் இதை கவனத்தில் எடுத்து உங்கள் #பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Apr 04, 2024 20:19 IST
நெல்லையில் திமுக மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு
முன்னாள் சபாநாயகரும், நெல்லை கிழக்கு தி.மு.க. மாவட்ட செயலாளருமான ஆவுடையப்பன் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
-
Apr 04, 2024 19:51 IST
ரேக்ளா ரேஸ் தேசிய பந்தயமாக்க நடவடிக்கை; அ.தி.மு.க வேட்பாளர் சரவணன்
மதுரை அ.தி.மு.க வேட்பாளர் சரவணன், “மதுரை ரயில் திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்; ரேக்ளா ரேஸ் மாட்டு வண்டி பந்தயம் தேசிய விளையாட்டு பந்தயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
-
Apr 04, 2024 19:48 IST
மா.பொ.சி ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘மா.பொ.சி’ படத்தின் First Look போஸ்டர் வெளியானது. இயக்குநர் வெற்றிமாறன் வழங்கும் இப்படத்தை, சிராஜ் - நிலோஃபர் சிராஜ் தயாரிக்கின்றனர்.
-
Apr 04, 2024 19:06 IST
பா.ஜனதா ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன? ப. சிதம்பரம் கேள்வி
காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், மக்கள் மனதில் நிலையாக நிலைத்திருக்கும்; ஆனால் பாஜக ஆட்சியில் அப்படி ஏதாவது சொல்ல முடியுமா? என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வியெழுப்பினார்.
-
Apr 04, 2024 18:48 IST
இந்தியா அழிவைத் தேடிப் போய்க்கொண்டிருக்கிறது : ப.சிதம்பரம்
தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக மயிலாப்பூரில் நடக்கும் பரப்புரைக் கூட்டத்தில், பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் “இந்தியா எங்கே போய்க்கொண்டிருக்கிறது தெரியுமா? பல நாடுகள் பார்வையில் இந்தியா அழிவைத் தேடிப் போய்க்கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
-
Apr 04, 2024 18:44 IST
மோடியின் வாகன பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற வழக்கு : காவல்துறை விளக்கம்
கோவையில் பிரதமர் மோடியின் வாகன பேரணியில் சீருடையுடன் பள்ளி மாணவர்கள் பங்கேற்றதில் பள்ளி மீதான வழக்குப்பதிவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டிருக்கும் போது பள்ளிக்குழந்தைகள் பங்கேற்பதில் தவறு இல்லை. ஆனால், அரசியல் நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகளை ஈடுபத்தியது தவறு என காவல்துறை விளக்கம் அளித்துள்ள நிலையில் பள்ளிக் குழந்தைகளுடன் 3 ஆசிரியர்களும் பங்கேற்றனர் என்றும் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
Apr 04, 2024 18:16 IST
பா.ஜ.க அரசை விரட்டுவதே நமது கொள்கை : உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்
துரை வைகோவை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். மத்தியில் இருந்து பாஜக அரசை விரட்டுவதே நமது கொள்கை. திராவிட மாடல் அரசு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பிங்க் பேருந்தில், 460 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Apr 04, 2024 18:14 IST
பாஜக வேட்பாளரான ஒன்றிய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலாவுக்கு எதிர்ப்பு
குஜராத் மாநிலம் ராஜோட் தொகுதி பாஜக வேட்பாளரான ஒன்றிய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலாவை மாற்ற வேண்டும் என்ற ராஜ்புத் சமூக மக்களின் கோரிக்கை வலுப்பதால் பாஜகவுக்கு நெருக்கடி முற்றுகிறது. ராஜ்புத் சமூக ராஜாக்கள், பிரிட்டிஷாருக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு ஆங்கிலேயர்களிடம் நெருக்கமாக இருந்ததாக ரூபாலா பேசியிருந்தார்.
இந்த சர்ச்சை பேச்சால் குஜராத், ராஜஸ்தான், அரியானா மாநில ராஜ்புத் சமூக மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். தனது பேச்சுக்கு ரூபாலா மன்னிப்பு கேட்டும், அதனை மறுத்துள்ள ராஜ்புத் சமூக மக்கள், ராஜ்கோட் தொகுதிக்கு வேறு ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
-
Apr 04, 2024 17:25 IST
திட்டங்கள் என அறிவித்து, பெண்கள் ஓசியில் என சொல்கிறார்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு
"வேலை செய்யாத எம்பியை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டுமாம். கரூர் தொகுதி எம்பியை காணவில்லை என மக்கள் தேடி வருகின்றனர். திட்டங்கள் என அறிவித்து, பெண்கள் பேருந்தில் ஓசியில் பயணிப்பதாக கூறுகின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி பாஜக" என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
-
Apr 04, 2024 17:23 IST
'புஷ்பா 2' படத்தின் டீசர் அறிவிப்பு
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள 'புஷ்பா 2' படத்தின் டீசர் வரும் 8ம் தேதி வெளியாகிறது. புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவிப்பு!
-
Apr 04, 2024 16:45 IST
கடவுளுக்கு நன்றி - ஆரவ் பதிவு
விடாமுயற்சி படப்பிடிப்பின்போது எதிர்பாராத விபத்தில் சிக்கி அதில் உயிர் தப்பியதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் நடிகர் ஆரவ் பதிவு செய்துள்ளார்.
-
Apr 04, 2024 16:44 IST
சாதனையை படைத்த டாடா
இந்தியாவில் தொடர்ச்சியாக 3வது ஆண்டாக அதிகம் விற்பனையான எஸ்.யூ.வி என்ற சாதனையை டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் படைத்தது. 2023-24 நிதியாண்டில் 1,71,697 யூனிட்டுகள் விற்பனையாகி அசத்தல்.
-
Apr 04, 2024 16:44 IST
அமித்ஷாவின் தமிழக வருகை மீண்டும் ரத்து
மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக இன்றிரவு மதுரை வருவதாக இருந்த அமித்ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
-
Apr 04, 2024 16:43 IST
'தமிழ்நாடு அரசு கோரிய 3.6 டிஎம்சி நீரை தர முடியாது - கர்நாடகா திட்டவட்டம்
டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரள அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழக அதிகாரிகள் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான தண்ணீரை தடையின்றி திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதற்கு "நீர் இருப்பு, சூழ்நிலையை கருத்தில் கொண்டு மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியும். பெங்களூரு நகரில் குடிநீர் பிரச்சினை இருப்பதால், கூடுதல் தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தர முடியாது." என்று கர்நாடகா அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
-
Apr 04, 2024 16:16 IST
துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கோரிய மனு தள்ளுபடி
துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கோரி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் தலைவர் முருகேசன் மனு அளித்த நிலையில், "தேசிய கட்சிக்கு தலைவராக இருக்கும் உங்களுக்கு பாதுகாப்பு எதுக்கு? மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் ஈடுபடுவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
Apr 04, 2024 16:13 IST
ஸ்டெர்லைட் - மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கேள்வி
"ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள மாசுவை சீர் செய்யும் திட்டத்தை வகுக்கும் பணியை தனியாருக்கு வழங்குவது ஏன்?" என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மாசுவை அகற்றி சீர் செய்வதற்கான திட்டத்தை விரைந்து வகுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது. அபாயகரமான கழிவுகள் தேங்கி உள்ளதால், ஆலையை இடிக்க உத்தரவிடக் கோரிய வழக்கு ஏப்ரல் 24க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
-
Apr 04, 2024 15:47 IST
இலங்கை - ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேர் விடுதலை
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேர் விடுதலை செய்யப்பட்டதாக இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளது.
-
Apr 04, 2024 14:34 IST
181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை
தமிழகத்தில் உள்ள 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் "தமிழகத்தில் மொத்தம் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன" இதில் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை - சத்யபிரதா சாகு அனைத்து மாவட்டங்களிலும் ஏப்.18க்குள் தபால் வாக்குகளை பெற அறிவுறுத்தல்.
-
Apr 04, 2024 14:15 IST
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு
கர்நாடகாவில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை பத்திரமாக மீட்பு. சுமார் 16 மணி நேரத்திற்கு பின் குழந்தையை பத்திரமாக மீட்டனர் 20 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தை மீட்கப்பட்டு தற்போது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
-
Apr 04, 2024 14:09 IST
சைக்கிள் மெதுவாக சென்றாலும் இலக்கை நோக்கி சரியாக செல்லும் : அண்ணாமலை
இந்தியாவில் எந்த மாநிலத்திற்கும் கொடுக்காத மரியாதையை தமிழ்நாட்டிற்கு கொடுத்துள்ளோம். சைக்கிள் மெதுவாக சென்றாலும் இலக்கை நோக்கி சரியாக செல்லும்; இன்று சைக்கிள் சின்னம் ஒரு ஆமை தான்; முயல், ஆமை கதையின் இறுதியில் ஆமை தான் வெல்லும்.-பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை
-
Apr 04, 2024 14:03 IST
அடுத்த 5 நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும்
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களில் வெப்ப நிலை அதிகரிக்கும் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் - வானிலை மையம்.
-
Apr 04, 2024 13:34 IST
கை சின்னத்திற்கு நீங்கள் போடும் ஓட்டு, மோடிக்கு வைக்கும் வேட்டு: உதயநிதி ஸ்டாலின்
"கை சின்னத்திற்கு நீங்கள் போடும் ஓட்டு, மோடிக்கு வைக்கும் வேட்டு" "ஜோதிமணியை வெற்றிபெற வைத்தால் மாதம் 2 முறை கரூருக்கு வருவேன்" கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
-
Apr 04, 2024 13:18 IST
நீலகிரி அ.தி.மு.க-வின் கோட்டை என்பதை நிரூப்பிக்கும் வகையில் மக்கள் வாக்களிக்க வேண்டும்
நீலகிரி மாவட்டத்தை அதிகமாக நேசித்தவர், ஜெயலலிதா "மத்தியில் போராடி நமது வேட்பாளர் பல திட்டங்களை கொண்டு வருவார்" "நீலகிரி அதிமுகவின் கோட்டை என்பதை நிரூப்பிக்கும் வகையில் மக்கள் வாக்களிக்க வேண்டும்" நீலகிரி அ.தி.மு.க. வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக இ.பி.எஸ். தேர்தல் பிரசாரம்
-
Apr 04, 2024 12:48 IST
நான் எதற்கு சீமானுடன் விவாதம் நடத்த வேண்டும்?: அண்ணாமலை
"எங்களுடைய போட்டி நாம் தமிழர் கட்சியுடன் இல்லை. பின்னர் எதற்கு நான் சீமானுடன் பொது விவாதம் நடத்த வேண்டும்?. சீமானை யாரும் கண்டுகொள்வதில்லை. கவன ஈர்ப்புக்காக யாரையாவது பிடித்து இழுத்து பேசி வருகிறார்" - கோபிசெட்டிபாளையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
-
Apr 04, 2024 12:35 IST
கர்நாடகாகாரர் தமிழக தேர்தலில் போட்டி: கனிமொழி
கர்நாடகாகாரர் தமிழக தேர்தலில் போட்டியிடுகிறார் - கனிமொழி
தன்னை கர்நாடகாகாரன் எனக் கூறிய அண்ணாமலை தமிழ்நாட்டில் தேர்தலில் நிற்கிறார். தமிழ்நாடு மழை, வெள்ளத்தால் பாதித்தாலும் எந்த நிவாரணமும் வராது- விருதுநகரில் கனிமொழி எம்.பி பரப்புரை
-
Apr 04, 2024 12:07 IST
மாநிலங்களவை எம்.பியாக சோனியா காந்தி பதவி ஏற்பு
மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி பதவி ஏற்று கொண்டார். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவும் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்று கொண்டார்.
-
Apr 04, 2024 11:56 IST
திருச்சியில் உதயநிதி பரப்புரை
பெண்களுக்கு சம உரிமை கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்- திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை
-
Apr 04, 2024 11:54 IST
மோடி மீது ஸ்டாலின் கடும் விமர்சனம்
கார்ப்பரேட்களுக்குப் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, கார்ப்பரேட் வரியை 30% ல் இருந்து 22% ஆக குறைத்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச் சலுகையாக அள்ளித் தந்துவிட்டு, அதை ஈடுகட்ட மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா?- ஸ்டாலின் கடும் விமர்சனம்
-
Apr 04, 2024 10:49 IST
தபால் வாக்குப்பதிவு
சென்னை மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு வரும் திங்கள் கிழமை (ஏப்ரல் 8) தொடங்குகிறது.
-
Apr 04, 2024 10:49 IST
அமைச்சர் ரகுபதி பேட்டி
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக விரைவில் தமிழ்நாடு அரசு சார்பில் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு நடவடிக்கை எடுப்போம்
- புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
-
Apr 04, 2024 10:25 IST
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - 3 பள்ளிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
வனத்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகளும் பள்ளிகளை சுற்றி கண்காணிப்பு
-
Apr 04, 2024 10:24 IST
தங்கம் விலை அதிகரிப்பு
சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.360 உயர்ந்து ரூ52,360-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.45 உயர்ந்து, ரூ.6,545-க்கு விற்பனை
-
Apr 04, 2024 10:22 IST
அமைச்சர் PTR விமர்சனம்
543 தொகுதிக்கே 3 மாசம் தேர்தல் நடத்துனா.. அப்ப மொத்த நாட்டுக்கும் ஒன்னா தேர்தல் நடத்த உங்களுக்கு 2 வருஷம் ஆகிடும்
- ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை விமர்சனம் செய்த அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன்
-
Apr 04, 2024 10:01 IST
தபால் வாக்குகளை பெறும் பணி தொடக்கம்
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலை ஒட்டி தபால் வாக்குகளை பெறும் பணி தொடங்கியது.
85 வயதை கடந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள், கொரோனா தொற்று உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு.
தபால் வாக்கு செலுத்த விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், தபால் வாக்குகளை பெறும் பணி தொடக்கம்
-
Apr 04, 2024 10:00 IST
எடப்பாடி பழனிசாமி பிரதமராக வர வாய்ப்புண்டு- ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பரப்புரை
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பது தெரிந்தே தேர்தலில் போட்டியிடுகிறார்கள்
சட்டமன்றம் அல்லது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது மற்றொரு பதவிக்கு போட்டியிடுவது வீண் செலவினத்தை உண்டாக்கும்.
அந்த மரபை அதிமுக கடைபிடிக்கவில்லை.
40 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று, இந்தியா முழுவதும் உள்ள சிறு கட்சிகள் உடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கும் பட்சத்தில அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரதமராக வர வாய்ப்புண்டு
- மதுரையில் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பரப்புரை
-
Apr 04, 2024 09:47 IST
CSK- KKR போட்டிக்கான டிக்கெட் விற்பனை
சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 8ம் தேதி சென்னை - கொல்கத்தா அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை 5ம் தேதி காலை 9.30 மணிக்கு ஆன்லைனில் தொடங்கவுள்ளது.
-
Apr 04, 2024 09:28 IST
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
கச்சத்தீவை இலங்கைக்கு தர எந்த இடத்திலும் கலைஞர் ஒப்புக்கொள்ளவில்லை
- புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
-
Apr 04, 2024 09:09 IST
மேகதாது அணை கட்டும் விவகாரம்
காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரம் தொடர்பாக, இன்று டெல்லியில் 29வது காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது.
-
Apr 04, 2024 09:08 IST
பள்ளி வாகனங்களுக்கு கட்டுப்பாடு
பள்ளி வாகனங்களை இயக்குவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை
பள்ளி வாகனங்களில் இனி ஒரு பெண் உதவியாளர் கட்டாயம்
-
Apr 04, 2024 09:08 IST
கச்சத்தீவு விவகாரம்: தேர்தலுக்குப் பிறகு இந்திய அரசாங்கம் பின்வாங்குவது கடினம்- முன்னாள் இலங்கை தூதுவர்
பல தசாப்தங்களாக நீடித்து வரும் கச்சத்தீவு பிரச்சனையை பொதுத் தேர்தலுக்கு முன்பாக மீண்டும் எழுப்ப பாஜக முயற்சித்து வரும் நிலையில், இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுர் ஆஸ்டின் பெர்னாண்டோ, கட்சி வாக்குகளைப் பறிப்பவர்களைத் தூண்டிவிட இப்படி செய்தது, ஆனால் தேர்தலுக்குப் பிறகு இந்திய அரசாங்கம் பின்வாங்குவது கடினம், இது ஒரு "சிக்கல்" என்று கூறினார்.
-
Apr 04, 2024 08:33 IST
தேமுதிகவின் வங்கி கணக்கை முடக்குவதாக பாஜக மிரட்டியது- பிரேமலதா விஜயகாந்த்
பாஜகவுடன் கூட்டணி அமைத்திட வேண்டும் என்பதற்காக தேமுதிகவின் வங்கி கணக்குகளை முடக்குவோம் என்று பாஜகவினர் அச்சுறுத்தினார்கள். அதனை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு ஜெயலலிதா போல தைரியமாக முடிவெடுத்தேன்.
- பிரேமலதா விஜயகாந்த்
-
Apr 04, 2024 08:05 IST
சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு
-
Apr 04, 2024 07:58 IST
SSC; மத்திய அரசு வேலை வாய்ப்பு
மத்திய அரசில் ஜூனியர் என்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 968 பணியிடங்கள்; டிப்ளமோ, பி.இ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
SSC; மத்திய அரசு வேலை வாய்ப்பு 968 பணியிடங்கள்; டிப்ளமோ, பி.இ படித்தவர்கள் விண்ணப்பிங்க!
-
Apr 04, 2024 07:39 IST
தைவான் நிலநடுக்கம்
தைவான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருகின்றனர். மேலும், சுரங்கங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
-
Apr 04, 2024 07:36 IST
திருமாவளவனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம்
மக்களின் பேராதரவுடன் நேற்று (03 ஏப்ரல்) நடைபெற்ற பிரச்சார பயணத்தின் சிறப்பு காணொளி!#Vote4INDIA pic.twitter.com/NCsE7jUMbM
— Thol. Thirumavalavan (@thirumaofficial) April 4, 2024
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.