Tamil News Highlights: 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Tamil News LIVE, Petrol price today, Asia cup 2022, OPS vs EPS, AIADMK, Chennai Rains – 03 September 2022 - இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil News LIVE, Petrol price today, Asia cup 2022, OPS vs EPS, AIADMK, Chennai Rains – 03 September 2022 - இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News Highlights: 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil News Latest Updates

சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய பாகிஸ்தான்

Advertisment
Advertisements

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் ஹாங்காங் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி, சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய ஹாங்காங் அணி, 10.4 ஓவர்களில் 38 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்விகண்டது. அதேநேரம் 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றது.

அதிமுக வழக்கு.. தனி நீதிபதி உத்தரவு ரத்து

கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடைகோரி ஓபிஎஸ் மற்றும் அம்மன் பி. வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பொதுக்குழு செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:46 (IST) 03 Sep 2022
    பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பான செய்திகளை வெளியிட தடை

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையோர் குறித்த விவரங்கள், அடையாளங்கள், செய்திகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது


  • 22:10 (IST) 03 Sep 2022
    மாநகராட்சி பணியாளர் ஒப்பந்த முறை விரைவில் ரத்து - அமைச்சர் கே.என்.நேரு

    மாநகராட்சி பணியாளர் ஒப்பந்த முறை விரைவில் ரத்து செய்யப்படும். டிஎன்பிஎஸ்சி வழியாக பணியாளர் நியமனம் செய்யப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்


  • 21:10 (IST) 03 Sep 2022
    ஆர்ட்டெமிஸ் விண்கலம் ஏவுதல்; மீண்டும் ஒத்திவைத்தது நாசா

    ஆர்ட்டெமிஸ் 1 ​​பணியை தொடங்குவதற்கான நாசாவின் இரண்டாவது முயற்சி தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.


  • 20:21 (IST) 03 Sep 2022
    காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அழிந்து வருகின்றன; கேரளாவிற்கு எதிர்காலம் பா.ஜ.க.,வால் தான் - அமித் ஷா

    காங்கிரஸ் கட்சி நாட்டில் இருந்து அழிந்து வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளை உலகம் ஒழித்துக் கொண்டிருக்கிறது. என கேரளாவிற்கு எதிர்காலம் உள்ளதென்றால் அது பாஜகவால்தான் என திருவனந்தபுரத்தில் அமித் ஷா கூறியுள்ளார்


  • 20:15 (IST) 03 Sep 2022
    உதயநிதி முழு நேர அரசியலுக்கு வர வேண்டும் - சேகர்பாபு அழைப்பு

    உதயநிதி ஸ்டாலின் முழு நேர அரசியலுக்கு வர வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அழைப்பு விடுத்துள்ளார்.


  • 19:58 (IST) 03 Sep 2022
    அமெரிக்கா வால்மார்ட் கட்டிடத்தை விமானம் மூலம் தகர்க்கப்போவதாக விமானி மிரட்டல்

    அமெரிக்கா, மிஸிஸிப்பி மாகாணம் டூபலே நகரில் உள்ள வால்மார்ட் வணிக வளாக கட்டிடத்தை சிறிய ரக விமானம் மூலம் தகர்க்கப்போவதாக விமானி மிரட்டல் விடுத்துள்ளார். விமானத்தை திருடிய விமானியிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்


  • 19:44 (IST) 03 Sep 2022
    ஒ.பி.எஸ் தேனிக்கு பயணம்

    ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து தேனிக்கு புறப்பட்டுள்ளார்


  • 19:27 (IST) 03 Sep 2022
    கோவையில் பொது இடங்களில் பிரான்க் வீடியோ எடுக்க தடை

    கோவையில் பொது இடங்களில் பிரான்க் வீடியோ எடுத்தால் குற்ற வழக்குப்பதிவு செய்து, யூடியூப் தளம் முடக்கப்படும் என கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது


  • 19:19 (IST) 03 Sep 2022
    சி.பி.சி.ஐ.டி மேல் முழு நம்பிக்கை உள்ளது, வேறு விசாரணை தேவையில்லை - ஸ்ரீமதி பெற்றோர்

    அனைத்து தலைவர்களையும் சந்திப்பது என் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான். சிபிசிஐடி மேல் முழு நம்பிக்கை உள்ளது, வேறு விசாரணை தேவையில்லை. இரு பிரேத பரிசோதனை அறிக்கைகளும் முரணாக உள்ளன என கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்


  • 19:13 (IST) 03 Sep 2022
    எடப்பாடி பழனிசாமியுடன் மாணவி ஸ்ரீமதி தாயார் சந்திப்பு

    சென்னை, கிரீன்வேஸ் இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி சந்தித்து பேசி, மாணவியின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க மனு அளித்தார்


  • 18:55 (IST) 03 Sep 2022
    “ஸ்ரீமதி மரணத்தில் மர்மம் தொடர்கிறது”- தந்தை பேட்டி

    பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் இன்னமும் மர்மம் தொடர்கிறது என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

    ஸ்ரீமதியின் மரணத்தில் நீதி கோரி, அவரது பெற்றோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தனர்.

    தொடர்ந்து, நேற்று சென்னை திநகரில் உள்ள கமலாயத்தில் பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலையை நேரில் சந்தித்த மனு அளித்தனர்.


  • 18:53 (IST) 03 Sep 2022
    ஆர்டெமிஸ்-1: நாசா முக்கிய அறிவிப்பு

    ஆர்டெமிஸ்-1 ராக்கெட் இன்று இரவு விண்ணில் ஏவப்படும் என நாசா அறிவித்துள்ளது.

    இந்த ராக்கெட் நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக விண்ணில் செலுத்தப்பட உள்ளது. முன்னதாக இந்த ராக்கெட் ஆக.29ஆம் தேதி செலுத்தப்பட இருந்தது.

    இந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது நினைவு கூரத்தக்கது.


  • 18:44 (IST) 03 Sep 2022
    ஆர்டெமிஸ்-1: நாசா முக்கிய அறிவிப்பு

    ஆர்டெமிஸ்-1 ராக்கெட் இன்று இரவு விண்ணில் ஏவப்படும் என நாசா அறிவித்துள்ளது.

    இந்த ராக்கெட் நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக விண்ணில் செலுத்தப்பட உள்ளது. முன்னதாக இந்த ராக்கெட் ஆக.29ஆம் தேதி செலுத்தப்பட இருந்தது.

    இந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது நினைவு கூரத்தக்கது.


  • 18:36 (IST) 03 Sep 2022
    வால்மார்ட் வணிக வளாகத்தை இடிக்கப் போவதாக மிரட்டல்

    அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் வணிக வளாகத்தை விமானம் மூலம் இடிக்கப் போவதாக விமானி மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வணிக வளாகத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


  • 18:20 (IST) 03 Sep 2022
    “தொண்டர்கள்” ஓபிஎஸ் ட்வீட்

    அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில் ஓபிஎஸ் ட்விட்டரில், தொண்டர்கள் என ஒரு வார்த்தையில் ட்வீட் செய்துள்ளார்.

    அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.


  • 18:08 (IST) 03 Sep 2022
    தமிழ்நாடு அரசுக்கு கே. பாலகிருஷ்ணன் கோரிக்கை

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

    அரசு உதவிப் பெறும் பள்ளிக்கும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.


  • 17:32 (IST) 03 Sep 2022
    அகழாய்வில் அணிகலன் கண்டுபிடிப்பு

    கங்கை கொண்ட சோழபுரம் அகழ்வாராய்ச்சி தளத்தில் அணிகலன் கண்டெடுக்கப்பட்டது.

    இந்த அணிகலன் 1.8 செ.மீ., உயரமும், 1.5 செ.மீ. அகலமும் கொண்டது ஆகும். இஇது தந்தத்தால் செய்யப்பட்டுள்அகழாய்வில் அணிகலன் கண்டுபிடிப்பு

    ளது.


  • 17:30 (IST) 03 Sep 2022
    பேடிஎம், ரோஸர் பே, கேஸ் ப்ரீ நிறுவனங்களில் வருமான சோதனை

    பேடிஎம், ரோஸர் பே மற்றும் கேஸ் ப்ரீ உள்ளிட்ட நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.


  • 17:10 (IST) 03 Sep 2022
    கோவில் திருவிழாவில் நகை திருடிய பெண் கைது

    சென்னை கேளம்பாக்கம் கோவில் திருவிழாவில் நகை திருடிய பாண்டீஸ்வரி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பட்டுப் புடவை, தங்க நகைகள் அணிந்து பணக்கார பெண்மணிகள் போல் சென்று திருடுவோம் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

    திருவிழாவில் பாண்டீஸ்வரி திருடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின என்பது நினைவு கூரத்தக்கது.


  • 16:05 (IST) 03 Sep 2022
    ‘தேசியமொழியாக’ சமஸ்கிருதம்: கி.வீரமணி அறிக்கை!

    உச்சநீதிமன்றத்தில், சமஸ்கிருதத்தை ‘தேசியமொழியாக’ அறிவிக்கக் கோரும் பொது நல மனு ஒன்றை ஓய்வு பெற்ற IAS அதிகாரி கே.ஜி.வன்சுரா தாக்கல் செய்திருந்தார்; சில சுருக்கென்று தைக்கும் கேள்விகளையும் கேட்டு, அம்மனுவை தள்ளுபடி செய்துள்ளனர் நீதிபதிகள்.

    எத்தனை நகரங்களில் சமஸ்கிருதம் பேசப்படுகிறது? நீங்கள் அந்த மொழி பேசுவீர்களா? இந்த மனுவை சமஸ்கிருதத்தில் உங்களால் மொழி பெயர்க்க முடியுமா? ஒரு மொழியை தேசிய மொழியாக அறிவிப்பது நீதிமன்றத்தின் கைகளில் இல்லை. உங்கள் விளம்பரத்துக்காக வழக்கை ஏற்க முடியாது என்று கூறி டிஸ்மிஸ் செய்தனர்.

    சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்கக் கோரும் வழக்கைத் தள்ளுபடி செய்து, வெறும் விளம்பரத்திற்காக இதுபோன்ற வழக்கைத் தாக்கல் செய்யவேண்டாம் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்ததை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


  • 16:03 (IST) 03 Sep 2022
    தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகி பிரபுக்கு ஜாமீன்!

    கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தை தொடர்ந்து பள்ளி சூறையாடப்பட்ட வழக்கில் முதல் எதிரியாக கைது செய்யப்பட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகி பிரபு என்பவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.


  • 15:56 (IST) 03 Sep 2022
    ஓணம் பண்டிகை: குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை!

    ஓணம் பண்டிகை தினத்தினை முன்னிட்டு 08.09.2022 (வியாழக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

    உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர் மாதம் 2வது சனிக்கிழமை (10.09.2022) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.


  • 15:49 (IST) 03 Sep 2022
    பாரதிராஜா இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வீடு திரும்புவார்!

    இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக பாரதிராஜாவின் உதவியாளர் தகவல் அளித்துள்ளார்.


  • 15:48 (IST) 03 Sep 2022
    தேனீ கொட்டியதில் 8 பேருக்கு மூச்சுத்திணறல்; 76 பேர் மருத்துவமனையில் அனுமதி!

    திருப்பூர் மாவட்டம் கண்ணாடிபுத்தூர் பகுதியில் கோயில் தீர்த்தம் எடுக்க சென்றவர்களை தேனீக்கள் கொட்டியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 76 பேரை மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். 8 பேர் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை மடத்துக்குளம் எம்.எல்.ஏ நேரில் வந்து ஆய்வு செய்தார்.


  • 14:51 (IST) 03 Sep 2022
    இலங்கை அரசிடம் அடைக்கலம் கேட்கிறாரா நித்தியாநந்தா? இலங்கை அரசு விளக்கம்

    தலைமறைவாக இருக்கும் நித்தியாநந்தா தனக்கு உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், இலங்கை அரசு தனக்கு மருத்துவ அடைக்கலம் தர வேண்டும் என கூறி அந்நாட்டின் பிரதமர் ரணிலுக்கு கடிதம் எழுதியதாக இணையத்தில் தகவல்கள் பரவியது. ஆனால் அப்படி ஒரு கடிதம் தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என அதிபரின் ஊடகப்பிரிவு உறுதி தெரிவித்துள்ளது.


  • 14:49 (IST) 03 Sep 2022
    ஆசிரியர் தகுதி தேர்வு ஒத்திவைப்பு

    செப். 10 முதல் 15ஆம் தேதி வரை நடைபெறவிருந்த ஆசிரியர் தகுதி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


  • 14:05 (IST) 03 Sep 2022
    மருத்துவ மாணவர்களை திரும்ப அழைக்கும் உக்ரைன் : மாணவர்கள் அச்சம்

    போர் காரணமாக உக்ரைனிலிருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு அந்நாடு திரும்ப அழைப்பு விடுத்துள்ள நிலையில், தற்போது அங்கு செல்வது பாதுகாப்பானதா என மாணவர்கள் அச்சமடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்திய அரசு உதவ வேண்டும் என்று மருத்துவ மாணவர்களும், அவரது பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  • 14:01 (IST) 03 Sep 2022
    குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் ஆர்வமே போய்விட்டது" திருமாவளவன்

    தன்னிடம் பெயர் வைக்க வருபவர்கள் சான்றிதழில் பெயரை மாற்றி விடுவதாக வேதனை தெரிவித்த திருமாவளவன், பெயர் சூட்டும் ஆர்வமே தனக்கு போய்விட்டதாக தெரிவித்துள்ளார்.


  • 13:10 (IST) 03 Sep 2022
    அனைத்து ஆதாரங்கள் இருந்தும் சிபிசிஐடி விசாரணையை தொடங்காதது ஏன்? - சி.வி.சண்முகம்

    ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் வந்து அதிமுக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினார்.

    அதிமுக அலுவலகத்தை தாக்கியவர்கள் மீது இதுவரை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை - சி.வி.சண்முகம்

    அனைத்து ஆதாரங்கள் இருந்தும் சிபிசிஐடி விசாரணையை தொடங்காதது ஏன்? - சி.வி.சண்முகம்


  • 13:08 (IST) 03 Sep 2022
    யுவனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்

    சத்யபாமா பல்கலைக்கழகத்திடம் இருந்து கவுரவ டாக்டர் பட்டத்தை பெற்றார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா


  • 12:55 (IST) 03 Sep 2022
    ஈரோடு, நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்


  • 12:53 (IST) 03 Sep 2022
    நீர்நிலையை பாதுகாப்பது அரசின் கடமை - உயர்நீதிமன்றம்

    இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் சுனாமி, பூகம்பம் போன்ற பேரிடர்கள் ஏற்படும்.

    நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

    திருவள்ளூரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கை தொடர்பான வழக்கு

    இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மை பாதுகாக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

    அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்புக்கு வாய்ப்பில்லை - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து


  • 12:50 (IST) 03 Sep 2022
    நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு தேவை - ஸ்டாலின்

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு தேவை. நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

    தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


  • 12:10 (IST) 03 Sep 2022
    சித்த மருத்துவ பல்கலைக்கழகம் - ஆளுநருக்கு ஓரிரு நாளில் விளக்கம்

    சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடர்பான சட்ட மசோதா குறித்து ஆளுநருக்கு ஓரிரு நாளில் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்படும் என தகவல்

    சித்த மருத்துவ பல்கலைக்கழகம் குறித்த சட்ட மசோதாவிற்கு விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம் அனுப்பி இருந்த நிலையில் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.


  • 12:06 (IST) 03 Sep 2022
    அதிமுக பொதுக்குழு தீர்ப்பு - திங்கட்கிழமை ஓபிஎஸ் மேல்முறையீடு

    அதிமுக பொதுக்குழு தீர்ப்பு - உச்ச நீதிமன்றத்தில் திங்கட்கிழமை மேல்முறையீடு செய்ய ஓபிஎஸ் தரப்பு முடிவு

    அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடும் ஓபிஎஸ்

    வரும் திங்கட்கிழமை மேல்முறையீடு செய்ய ஓபிஎஸ் தரப்பு முடிவு

    அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு


  • 12:06 (IST) 03 Sep 2022
    ரூ.200 கோடி மோசடி வழக்கு - பாகுபலி பட நடிகையிடம் விசாரணை

    ரூ.200 கோடி மோசடி வழக்கில் பாகுபலி பட நடிகை நோரா ஃபடேஹியிடம் விசாரணை

    நடிகை நோரா ஃபடேஹியிடம் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 2வது நாளாக விசாரணை

    தொழிலதிபரின் மனைவியை ஏமாற்றி ரூ.200 கோடி பறித்ததாக சுகேஷ் மீது பதியப்பட்ட வழக்கு

    நோரா ஃபடேஹியிடம் நேற்று 7 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்றும் விசாரணை


  • 12:02 (IST) 03 Sep 2022
    அதிமுக பொதுக்குழு தீர்ப்பு - திங்கட்கிழமை ஓபிஎஸ் மேல்முறையீடு

    அதிமுக பொதுக்குழு தீர்ப்பு - உச்ச நீதிமன்றத்தில் திங்கட்கிழமை மேல்முறையீடு செய்ய ஓபிஎஸ் தரப்பு முடிவு

    அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடும் ஓபிஎஸ்

    வரும் திங்கட்கிழமை மேல்முறையீடு செய்ய ஓபிஎஸ் தரப்பு முடிவு

    அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு


  • 11:20 (IST) 03 Sep 2022
    நாம் தமிழர் கட்சி சார்பில் "தமிழர் கோவில்களில், தமிழில் வழிபாடு" நிகழ்ச்சி

    நாம் தமிழர் கட்சி சார்பில் "தமிழர் கோவில்களில், தமிழில் வழிபாடு" நிகழ்ச்சி. திருப்போரூர் முருகன் கோவிலில் தமிழில் வழிபாடு செய்து தொடங்கி வைத்தார் சீமான்

    'அன்னைத் தமிழில் அர்ச்சனை' திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்


  • 10:43 (IST) 03 Sep 2022
    11 கிலோ தங்கம் சிக்கியது

    திருச்சிக்கு வந்த விமானங்களில் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவினர் நடத்திய சோதனையில், 11 கிலோ தங்கம் சிக்கியது. இதுதொடர்பாக 55 பேரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.


  • 09:56 (IST) 03 Sep 2022
    தங்கம் விலை உயர்வு

    சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்ந்து ரூ. 37,776, ஒரு கிராம் தங்கம் 4,722 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.


  • 09:56 (IST) 03 Sep 2022
    மகப்பேறு விடுப்பு

    மத்திய அரசின் பெண் ஊழியர்களுக்கு, பிரசவத்தின்போது குழந்தை சில நாட்களில் இறந்தாலும் 60 நாட்கள் மகப்பேறு விடுப்பு உண்டு என்று அரசு அறிவித்துள்ளது.


  • 09:00 (IST) 03 Sep 2022
    டிக்கெட் விற்பனை தொடக்கம்

    செப். 12ஆம் தேதி தொடங்க உள்ள சென்னை ஓபன் டென்னிஸ் தொடருக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. chennaiopenwta.in என்ற இணையதளத்தில் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.


  • 08:13 (IST) 03 Sep 2022
    தென்மண்டல கவுன்சில் கூட்டம்

    திருவனந்தபுரத்தில் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உள்பட 6 மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.


  • 08:13 (IST) 03 Sep 2022
    திரும்பினார் கோத்தபய ராஜபக்ச

    இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் வழியாக இலங்கை திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.


  • 08:12 (IST) 03 Sep 2022
    அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

    அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: