Advertisment

Tamil News Highlights: I.N.D.I.A. கூட்டணி கட்சிகள் 3 ஆலோசனை கூட்டம் இன்று தொடங்க உள்ள நிலையில் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு

Tamil Nadu News, Tamil News, Asia Cup 2023 Gas cylinder price, Chandrayaan 3 updates ISRO– 30 August 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Highlights: I.N.D.I.A. கூட்டணி கட்சிகள் 3 ஆலோசனை கூட்டம் இன்று தொடங்க உள்ள நிலையில்  ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil news updates

தோல்வி பயத்தால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு

வீட்டு உபயோக சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார். ரக்சாபந்தனையொட்டி, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அளித்த பரிசு இது என்றும் அவர் கூறியுள்ளார்.

தோல்வி பயத்தால் பிரதமர் நரேந்திர மோடி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 21:54 (IST) 30 Aug 2023
    238 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி

    பாபர் அசம், அகமது அதிரடி சதத்தால் 342 ரன்கள் குவித்த பாகிஸ்தான்; 104 ரன்களுக்குள் சுருண்ட நேபாளம்; 238 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி


  • 20:58 (IST) 30 Aug 2023
    நான் இவருக்கு ரசிகை: பிரியா மணி ஓபன் டாக்

    தாம் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகை என பிரியா மணி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜவான் பட வெளியீட்டு விழாவில் பிரியா மணி, “ப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு முதல் காரணம் அட்லிதான். ஜவான் படத்தின் கதையை Zoom காலில் எனக்கு சொன்னார். கதை மிகவும் பிடித்திருந்தது . உடனே ஓகே சொல்லிவிட்டேன். விஜய் சேதுபதி பெரிய ரசிகை நான்” என்றார்.


  • 20:51 (IST) 30 Aug 2023
    திமுகவின் அடையாளம் பொய்களும் மோசடிகளும்: அண்ணாமலை கடும் தாக்கு

    திமுகவின் அடையாளம் பொய்களும் மோசடிகளும் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கடுமையாக தாக்கி டவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், கடந்த 9 ஆண்டுகளில், தமிழகம் ₹10.76 லட்சம் கோடிக்கு மேல் பெற்றுள்ளது.

    திமுகவின் அடையாளம் பொய்களும் மோசடிகளும் எனத் தெரிவித்துள்ளார்.


  • 20:45 (IST) 30 Aug 2023
    இசை உலகில் தவிர்க்க முடியாத நபர் அனிருத்: அட்லீ

    “இசை உலகில் அனிரூத் தவிர்க்க முடியாத நபர்: ஒரே நாள் இரவில் பாடல் ஒன்றை போட்டுக்கொடுத்தார். படத்தில் 13 பாடல்கள் உள்ளன” என்றார்.


  • 20:41 (IST) 30 Aug 2023
    வார இறுதியில் சிறப்பு பேருந்துகள்

    வார இறுதி விடுமுறையை முன்னிட்டு விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 150 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்துள்ளதாக விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.


  • 20:41 (IST) 30 Aug 2023
    பா.ஜ.க.வால் ஜெயிக்க முடியாது: சீமான்

    அதிமுகவிடம் எத்தனை தொகுதிகளை பாஜக பெற்றாலும், அக்கட்சியால் ஜெயிக்க முடியாது என கோபிசெட்டிபாளையத்தில் சீமான் தெரிவித்தார்.


  • 20:03 (IST) 30 Aug 2023
    குமாரசாமி மருத்துவமனையில் அனுமதி

    கர்நாடக முன்னாள் முதல் அமைச்சர் குமாரசாமி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    பெங்களூரு ஜெய்நகரில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

    மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


  • 19:57 (IST) 30 Aug 2023
    ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர்?

    எதிர்க்கட்சிகளின் "இந்தியா கூட்டணி" தலைவர்கள் கூட்டம் நாளை மும்பையில் தொடங்குகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்து இறுதிசெய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்பது குறித்தும் பேச வாய்ப்பு உள்ளது.


  • 19:39 (IST) 30 Aug 2023
    சமையல் எரிவாயு விலை குறைப்பு தேர்தல் அறிகுறி: மு.க. ஸ்டாலின்

    சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு தேர்தலுக்கான அறிகுறி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.


  • 18:50 (IST) 30 Aug 2023
    தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    சென்னை, வேலூர், தி.மலை, சேலம், திருப்பத்தூர், கோவை, நீலகிரி, நாமக்கல், புதுக்கோட்டை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


  • 18:49 (IST) 30 Aug 2023
    சென்னை திரு.வி.க நகரில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த ஸ்டாலின்

    சென்னையில் திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் அருகே மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்தாகவே பணிகளை முடிக்க அறிவுறுத்தினார். ஆய்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.


  • 18:47 (IST) 30 Aug 2023
    அமலாக்கத்துறை விசாரணையில் சிக்கிய நடிகை நவ்யா நாயர்

    சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகியுள்ள வருவாய்த்துறை அதிகாரி சச்சின் சாவந்த், பிரபல மலையாள நடிகை நவ்யா நாருடன் பழகி வந்ததும், அவருக்கு விலை உயர்ந்த பொருட்களை பரிசாக வழங்கி இருப்பதும் அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சச்சின் சாவந்த் எனக்கு நண்பர் மட்டும்தான். வேறு எந்த உறவும் எங்களுக்குள் இல்லை என்று நவ்யா நாயர் தெரிவித்துள்ளார்.


  • 18:29 (IST) 30 Aug 2023
    I.N.D.I.A. கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகள் பங்கேற்கும் - உத்தவ் தாக்கரே

    மும்பைய்ல் நாளை நடைபெற உள்ள I.N.D.I.A. கூட்டணீயின் 3வது கூட்டத்தில் 28 கட்சிகள் சார்பில் 63 பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். கட்சிகளின் சித்தாந்தங்கள் வேறாக இருக்கலாம்; ஆனால், ஜனநாயகத்தைக் காப்பதே எங்கள் ஒற்றை நோக்கம் என்று சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே அணியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறினார்.


  • 18:25 (IST) 30 Aug 2023
    முன்னாள் நீதிபதி கே. சாமிதுரை மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

    முன்னாள் நீதிபதி கே. சாமிதுரை (91) மறைவுச் செய்தி கேட்டு வருத்தமுற்றேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


  • 18:21 (IST) 30 Aug 2023
    மகேந்திரகிரியில் ககன்யான் திட்டத்திற்கான ‘சிஇ 20 கிரையோஜெனிக்’ எஞ்ஜின் சோதனை வெற்றி

    நெல்லை மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், ககன்யான் விண்வெளி திட்டத்திற்கான ‘சிஇ 20 கிரையோஜெனிக்’ எஞ்ஜின் சோதனை வெற்றி பெற்றது.


  • 17:41 (IST) 30 Aug 2023
    அறங்காவலர் பதவியேற்பு நிகழ்ச்சியை மாவட்டக் குழு உறுப்பினர்கள் நடத்தக் கூடாது; ஐகோர்ட் உத்தரவு

    கோவில் அறங்காவலர் தேர்வுக்காக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட குழுக்களில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்கள், பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடத்தினால், அவர்கள் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


  • 17:37 (IST) 30 Aug 2023
    பாரதிதாசன் பல்கலை.யில் பட்டமளிப்பு விழா நடத்தாததை கண்டித்து.. மாணவர்கள் பட்டம் விடும் போராட்டம்

    பாரதிதாசன் பல்கலைக் கழகட்தில் பட்டமளிப்பு விழா நடத்தாததை கண்டித்து இந்திய மாணவர் சங்க மாணவர்கள் பட்டம் விடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


  • 17:34 (IST) 30 Aug 2023
    இடத்தகராறில் பெண்ணை தாக்கிய பா.ஜ.க கவுன்சிலர் சாவர்க்கர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு

    கன்னியாகுமரி மாவடம், அதங்கோடு பகுதியில் இடத்தகராறில் பெண்ணை காலால் எட்டி உதைத்த பாஜக யூனியன் கவுன்சிலர் சாவர்க்கர் - 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


  • 17:32 (IST) 30 Aug 2023
    இங்கிலாந்து அமஸ்பரி நகர மேயர் சாருலதா, சென்னை மேயர் பிரியாவுடன் சந்திப்பு

    தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவரும், இங்கிலாந்து நாட்டின் அமஸ்பரி நகரத்தின் மேயருமான டாக்டர் சாருலதா, சென்னை மேயர் பிரியாவுடன் சந்திப்பு நடந்தது.


  • 16:59 (IST) 30 Aug 2023
    "I.N.D.I.A. கூட்டணியில் மேலும் 2 கட்சிகள் இணைகின்றன

    மும்பையில் நாளை முதல் 2 நாட்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது" கூட்டத்துக்கான ஏற்பாடுகள் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூட்டாக பேட்டி!

    INDIA கூட்டணியின் வளர்ச்சியை பார்த்து பயத்தில் பாஜக இலவசமாக கூட கியாஸ் சிலிண்டர்களை கொடுக்கும் - மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே


  • 16:59 (IST) 30 Aug 2023
    "I.N.D.I.A. கூட்டணியில் மேலும் 2 கட்சிகள் இணைகின்றன

    மும்பையில் நாளை முதல் 2 நாட்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது" கூட்டத்துக்கான ஏற்பாடுகள் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூட்டாக பேட்டி!

    INDIA கூட்டணியின் வளர்ச்சியை பார்த்து பயத்தில் பாஜக இலவசமாக கூட கியாஸ் சிலிண்டர்களை கொடுக்கும் - மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே


  • 16:58 (IST) 30 Aug 2023
    மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், கார் - பைக் மோதி விபத்து

    ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், கார் - பைக் மோதிய விபத்தில் பைக்கில் பயணித்த குரு மூர்த்தி (23), முத்துமணி (29) இருவரும் உயிரிழப்பு கேரளாவைச் சேந்த கார் ஓட்டுநர் மெரின் வினிதா மீது போலீசார் வழக்குப்பதிவு


  • 16:07 (IST) 30 Aug 2023
    ஆதித்யா விண்கலத்தின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ

    ஆதித்யா ரெடி செப்.2 அன்று விண்ணில் பாய தயாராக இருக்கும் ஆதித்யா விண்கலத்தின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ


  • 16:03 (IST) 30 Aug 2023
    ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டி தொடங்கியது!

    ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டி தொடங்கியது! நேபாளுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது!


  • 16:03 (IST) 30 Aug 2023
    மல்லிகார்ஜுன கார்கேவுக்கு குடிநீர் ஊற்றி கொடுத்த ராகுல் காந்தி

    கர்நாடகாவில் பெண்களுக்கு மாதம் ₹2,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் தொடக்க விழாவில், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு குடிநீர் ஊற்றி கொடுத்த ராகுல் காந்தி


  • 16:03 (IST) 30 Aug 2023
    மல்லிகார்ஜுன கார்கேவுக்கு குடிநீர் ஊற்றி கொடுத்த ராகுல் காந்தி

    கர்நாடகாவில் பெண்களுக்கு மாதம் ₹2,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் தொடக்க விழாவில், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு குடிநீர் ஊற்றி கொடுத்த ராகுல் காந்தி


  • 15:21 (IST) 30 Aug 2023
    பிரக்ஞானந்தாவுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

    "இந்திய ஒன்றியத்தில் செஸ் விளையாட்டின் முகமாகத் திகழும் தமிழ்நாடு, உலக அரங்கிலும் தனி இடத்தை பிடிக்க காரணமான தம்பி பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள்" - உதயநிதி ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர்


  • 14:30 (IST) 30 Aug 2023
    ஆதித்யா - எல் 1 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் ஆயத்த பணிகள் தீவிரம் -

    ஆதித்யா - எல் 1 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் ஆயத்த பணிகள் தீவிரம் - இஸ்ரோ அறிவிப்பு விண்ணில் செலுத்துவதற்கான ஒத்திகை, சோதனை பணிகள் அனைத்தும் நிறைவு - இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா - எல்1 செயற்கைக்கோளை செப்.,2ம் தேதி விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. - சி57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ள ஆதித்யா - எல் 1 செயற்கைக்கோள்


  • 13:21 (IST) 30 Aug 2023
    பட்டமளிப்பு விழா நடத்தாததை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் பட்டம் விடும் போராட்டம்

    பட்டமளிப்பு விழா நடத்தாததை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் பட்டம் விடும் போராட்டம் 2 ஆண்டுகளாக திருச்சி பாரதிதாசன் பல்கலை., பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை என குற்றச்சாட்டு பாரதிதாசன் பல்கலை., நுழைவுவாயில் முன்பு பட்டங்களை பறக்கவிட்டு மாணவர் சங்கத்தினர் முழக்கம் உடனடியாக பட்டமளிப்பு விழாவை நடத்துமாறு ஆளுநர், பல்கலை., நிர்வாகத்திற்கு வலியுறுத்தல்


  • 13:20 (IST) 30 Aug 2023
    செப்., 1ம் தேதி காலை 10.30 மணிக்கு I.N.D.I.A கூட்டணியின் லோகோ வெளியிடப்படும்

    ஆக., 31, செப்., 1 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெறும் I.N.D.I.A கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் ஆலோசனை கூட்டத்திற்கான கால அட்டவணை வெளியீடு ஆக., 31ம் தேதி மாலை 6.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது செப்., 1ம் தேதி காலை 10.30 மணிக்கு I.N.D.I.A கூட்டணியின் லோகோ வெளியிடப்படும் என அறிவிப்பு செப்., 1ம் தேதி மதியம் 3.30 மணிக்கு I.N.D.I.A கூட்டணியின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது


  • 12:55 (IST) 30 Aug 2023
    ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற பிரக்ஞானந்தா

    முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா

    செஸ் உலகக்கோப்பை தொடரில் வெள்ளி வென்று, சென்னை திரும்பிய நிலையில் முதல்வருடன் சந்திப்பு

    தமிழக அரசின் சார்பில் ரூ.30 லட்சம் காசோலையை பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் வழங்கினார்.


  • 12:44 (IST) 30 Aug 2023
    ரக்‌ஷா பந்தனை தவிர வேறு பண்டிகையே இல்லையா? - சீமான்

    தேர்தலை மனதில் வைத்தே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு

    இப்போது விலையை குறைக்கும் மத்திய அரசு, முன்பே இதை ஏன் செய்யவில்லை?

    ரக்‌ஷா பந்தனை தவிர வேறு பண்டிகையே இல்லையா? - சீமான் கேள்வி


  • 12:28 (IST) 30 Aug 2023
    செஸ் சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி- பிரக்ஞானந்தா

    உலக செஸ் தொடரில் வெள்ளி பதக்கம் வென்றது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    தங்கம் வெல்ல முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், செஸ் சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்றதே மகிழ்ச்சி தான்- சென்னை திரும்பிய இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பேட்டி


  • 12:05 (IST) 30 Aug 2023
    வடமாநில இளைஞரை தாக்கியதால் பரபரப்பு

    மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில், பொதுமக்களிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை விரட்டிப்பிடித்த பள்ளி மாணவர்கள் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு


  • 12:03 (IST) 30 Aug 2023
    வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்- இ.பி.எஸ்

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்ந்து அவதூறு பரப்புகின்றனர்.

    கொடநாடு வழக்கில் தொடர்புடையவர்கள் அதிமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டனர்.

    கொடநாடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்.

    கொடநாடு வழக்கில் தொடர்புடையவர்கள் கொடும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள்- எடப்பாடி பழனிசாமி


  • 11:57 (IST) 30 Aug 2023
    பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா?

    பா.ஜ.க என்ன தீண்டத்தகாத கட்சியா? தி.மு.க கூட பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்ததே? தமிழகத்தின் பிரச்னைகளை மத்திய அரசிடம் அ.தி.மு.க எப்போதும் எடுத்துரைக்கும் - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி


  • 11:52 (IST) 30 Aug 2023
    சென்னை உயர் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தல்

    செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை நாட சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தல்.

    உயர் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் எங்களால் விசாரிக்க முடியாது- சென்னை சிறப்பு நீதிமன்றம்


  • 11:37 (IST) 30 Aug 2023
    மீனாட்சி அம்மன் கோவிலில் இ.பி.எஸ் சாமி தரிசனம்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், சாமி தரிசனம் செய்ய எடப்பாடி பழனிசாமி வருகை

    அதே நேரத்தில் திமுக எம்பி கனிமொழியும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை

    எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து வரவேற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ


  • 11:00 (IST) 30 Aug 2023
    அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு- நீதிபதி அல்லி உத்தரவு

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை, எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்- முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு


  • 10:41 (IST) 30 Aug 2023
    பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு

    உலகக் கோப்பை செஸ் தொடரில் வெள்ளி வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு


  • 10:40 (IST) 30 Aug 2023
    தங்கம் விலை

    சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து, ரூ. 44,240 க்கும், ஒரு கிராம் ரூ. 5,530க்கும் விற்பனையாகிறது.


  • 09:58 (IST) 30 Aug 2023
    400 -வது நாளாக போராட்டம்

    பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 400 -வது நாளாக ஏகனாபுரம் கிராம மக்கள் ஒன்றுகூடி கண்ணில் கருப்புத்துணி கட்டிக்கொண்டும், கைகளில் கறுப்பு கொடி, மெழுகுவர்த்தி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


  • 09:57 (IST) 30 Aug 2023
    தமிழ்நாட்டுக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

    கர்நாடகாவின் கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து, நேற்று 4,200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி நீர் வெளியேற்றத்தின் அளவு 6,300 கன அடியாக அதிகரித்துள்ளது.

    15 நாட்களுக்கு 5,000 கன அடி வீதம் தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம், நேற்று உத்தரவு பிறப்பித்த நிலையில் நீர் வெளியேற்றத்தின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.


  • 09:03 (IST) 30 Aug 2023
    சிலிண்டர் விலை குறைப்பு அமலுக்கு வந்தது

    நாடு முழுவதும் சிலிண்டர் விலை குறைப்பு அமலுக்கு வந்தது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 200 குறைந்தது.


  • 09:02 (IST) 30 Aug 2023
    மாணவி உயிரிழப்பு - நிவாரணம் அறிவிப்பு

    தஞ்சாவூர்: பசுபதிகோவில்-1 கிராமத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று மாலை பெய்த மழையால் பள்ளியின் அருகிலுள்ள மரம் சாய்ந்து விழுந்த விபத்தில் மாணவி சுஷ்மிதாசென் (15) உயிரிழப்பு;

    மாணவியின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவி ராஜேஷ்வரிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் - மு.க.ஸ்டாலின்


  • 09:02 (IST) 30 Aug 2023
    தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர் எடுக்க அனுமதி வழங்கக் கோரி இன்று முதல் 15 ஆயிரம் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்தது.

    இந்நிலையில் நிலத்தடி நீர் எடுக்க அனுமதி அளிப்பதாக வாய்மொழி ஒப்புதல் அளித்ததால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.


  • 08:05 (IST) 30 Aug 2023
    உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு

    காவிரியில் நீர் தர கர்நாடக மறுப்பதால் வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக துரைமுருகன் அறிவித்துள்ளார்.


  • 07:51 (IST) 30 Aug 2023
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்

    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று பாகிஸ்தானில் தொடங்குகிறது.

    தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான், நேபாளம் அணிகள் இன்று மாலை 3.00 மணிக்கு, முல்தான் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதுகின்றன.


  • 07:51 (IST) 30 Aug 2023
    நிலவின் தென்துருவத்தில் தனிமங்கள்

    நிலவின் தென்துருவ மேற்பரப்பில் கந்தகம், அலுமினியம், கால்சியம், சல்ஃபர், இரும்பு, குரோமியம், சிலிக்கான், டைட்டானியம், மாங்கனீஸ் மற்றும் ஆக்ஸிஜன் இருப்பதை ரோவர் உறுதி செய்துள்ளது.

    லேசர் ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி (LIBS) மூலம் பிரக்யான் ரோவர் நிலவில் உள்ள தனிமங்களை கண்டறிந்ததாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.


  • 07:51 (IST) 30 Aug 2023
    பிரக்ஞானந்தா பங்கேற்ற WR அணி சாம்பியன் பட்டத்தை வென்றது

    ஜெர்மனியில் கடந்த 27-ம் தேதி தொடங்கிய உலக ரேபிட் செஸ் டீம் சாம்பியன்ஷிப் தொடரில், 43 அணிகளை சேர்ந்த 300 வீரர்கள் கலந்துகொண்டனர். 12 சுற்றுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா பங்கேற்ற WR அணி 10 வெற்றி மற்றும் 2 டிரா என 702 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.


  • 07:50 (IST) 30 Aug 2023
    தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை வழங்க இயலாது

    காவிரி மேலாண்மை ஆணையம், தமிழகத்திற்கு விநாடிக்கு 5000 கன அடி நீரை அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்க மறுத்த கர்நாடக அரசு, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டது.

    கர்நாடகத்தில் உள்ள அணைகளில் தற்போது 47 சதவீத அளவிற்கு மட்டுமே தண்ணீர் இருப்பதாகவும், விநாடிக்கு 3000 கன அடிக்கு மேல் நீர் திறக்க முடியாது எனவும் கர்நாடக அரசு தெரிவி்த்துள்ளது.


Tamilnadu India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment