Advertisment

Tamil news today :ஆ.ராசாவை கண்டித்து தமிழகமெங்கும் 26ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம்- அண்ணாமலை அறிவிப்பு

Tamil Nadu News, Tamil News , Petrol price Today: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Annamalai explained the issue of criticizing journalists as monkeys

தமிழ்நாடு பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை

பெட்ரோல்,டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆஸ்திரேலியா அணி வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 209 ரன்கள் இலக்கை  துரத்தி வெற்றி பெற்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 211 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பாலியல் வன்கொடுமை – ஆசிரியர் கைது

புதுக்கோட்டை அருகே அங்கன்வாடி மையத்தில் 4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஆசிரியர் உட்பட 3 பேர் கைது செய்து போலீசார் விசாரணை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:20 (IST) 21 Sep 2022
    தாராவி மறுமேம்பாட்டிற்கு டெண்டர் விடுக்க மகாராஷ்டிரா அமைச்சரவை முடிவு; தாக்கரேவை சந்தித்த அதானி

    தாக்கரே தலைமையிலான முந்தைய எம்.வி.ஏ அரசு, மிகவும் தாமதமான இந்த திட்டத்தை செயல்படுத்த மூன்று கூட்டங்களை நடத்தியது. அன்றிலிருந்து அதானி குழுமத்தின் பெயர் இந்த திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களின் வரிசையில் இருந்தது.

    அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை, மும்பையில் உள்ள மாடோஸ்ரீ இல்லத்தில் புதன்கிழமை சந்தித்தார்.

    தற்செயலாக, தாராவி மறுசீரமைப்பு திட்டத்திற்கு கூடுதல் பலன்களுடன் மீண்டும் டெண்டர் கோருவதற்கான முன்மொழிவுக்கு மகாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், இருவருக்கும் இடையிலான சந்திப்பு நடந்துள்ளது.


  • 20:52 (IST) 21 Sep 2022
    அஜித் நடிக்கும் 61வது படம் ‘துணிவு’; ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு

    எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிக்கும் 61வது படத்திற்கு ‘துணிவு’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.


  • 19:47 (IST) 21 Sep 2022
    ரூ 22,842 கோடி வங்கி மோசடி வழக்கு: ஏ.பி.ஜி நிறுவனர் தலைவர் ரிஷி அகர்வால் கைது செய்தது சி.பி.ஐ

    ரூ.22,842 கோடிக்கு மேல் வங்கி மோசடி செய்தது தொடர்பாக ஏபிஜி ஷிப்யார்ட் நிறுவனத்தின் நிறுவனர்-தலைவர் ரிஷி கமலேஷ் அகர்வாலை சிபிஐ புதன்கிழமை கைது செய்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஐசிஐசிஐ வங்கியின் தலைமையிலான 28 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து இந்த நிறுவனத்திற்கு கடன் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) ரூ. 2,468.51 கோடி கடன் வழங்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


  • 19:45 (IST) 21 Sep 2022
    ரூ 22,842 கோடி வங்கி மோசடி வழக்கு: ஏ.பி.ஜி நிறுவனர் தலைவர் ரிஷி அகர்வால் கைது செய்தது சி.பி.ஐ

    ரூ.22,842 கோடிக்கு மேல் வங்கி மோசடி செய்தது தொடர்பாக ஏபிஜி ஷிப்யார்ட் நிறுவனத்தின் நிறுவனர்-தலைவர் ரிஷி கமலேஷ் அகர்வாலை சிபிஐ புதன்கிழமை கைது செய்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஐசிஐசிஐ வங்கியின் தலைமையிலான 28 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து இந்த நிறுவனத்திற்கு கடன் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) ரூ. 2,468.51 கோடி கடன் வழங்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


  • 18:54 (IST) 21 Sep 2022
    மும்பையில் ரூ.1725 கோடி ஹெராயின் பறிமுதல்

    மும்பை நவசேவா துறைமுகத்தில் ரூ.1725 கோடி ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இது மொத்தம் 22 கிலோ ஹெராயின் ஆகும்.

    துறைமுகத்தில் உள்ள கண்டெய்னர்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியபோது இந்த ஹெராயின்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


  • 18:46 (IST) 21 Sep 2022
    அஜித் குமாரின் துணிவு

    அஜித் குமார் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கும் புதிய படத்துக்கு துணிவு எனப் பெயரிடப்பட்டுள்ளது.


  • 18:29 (IST) 21 Sep 2022
    இந்தியாவில் உயரும் லட்சாதிபதிகள்!

    இந்தியாவில் லட்சாதிபதிகள் எண்ணிக்கை உயரும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    அதன்படி நாட்டில் 2021இல் 7 லட்சத்து 96 ஆயிரம் லட்சாதிபதிகள் இருந்தனர். இது 2026இல் இது 16 சதவீதம் ஆக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலக பணக்காரர்கள் பட்டியலில் அமெரிக்க, சீனர்கள் மட்டும் அதிகளவில் உள்ளனர்.


  • 18:25 (IST) 21 Sep 2022
    தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல்- மா.சு. விளக்கம்

    சென்னை பூந்தமல்லியில் மருத்துவ முகாமை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.

    தொடர்ந்து அவர், “தமிழகத்தில் இந்த சீசனில் ஒவ்வொரு ஆண்டும் வைரஸ் காய்ச்சல் பரவுவது வழக்கம்.

    மொத்த மக்கள் தொகையில் தினமும் ஒரு சதவீதம் பேர் காய்ச்சலால் பாதிக்கப்படுவது உண்டு. தற்போது பருவ நிலை மாற்றம் காரணமாக 1.5 சதவீதம் பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்” என்றார்.


  • 18:00 (IST) 21 Sep 2022
    தீண்டாமை வன்கொடுமை - பாஞ்சாங்குளத்தில் 5 பேரும் ஊருக்குள் நுழைய தடை !

    தென்காசி பாஞ்சாங்குளம் கிராமத்தில் தீண்டாமை புகாருக்கு ஆளான 5 பேரும் ஊருக்குள் நுழைய நெல்லை சிறப்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


  • 17:54 (IST) 21 Sep 2022
    மியான்மரில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை

    மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.

    இது குறித்து அவர், “மியான்மரில் சிக்கி தவிக்கும் இளைஞர்கள் உடனடியாக தகவல்களை இந்திய தூதரகத்துக்கு அனுப்பவேண்டும்.

    மியான்மர் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களை இந்திய தூதரகம் மூலம் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    மியான்மரில் தவிக்கும் தமிழர்களுக்கு அரசு சார்ந்த உதவிகளை செய்ய தயாராக உள்ளோம்.

    அவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கும்பணி தீவிரமாக நடந்து வருகிறது” என்றார்.


  • 17:49 (IST) 21 Sep 2022
    தமிழ்நாட்டில் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு

    தமிழ்நாட்டில் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவருவது குற்ற ஆவண காப்பக தரவுகளின்படி தெரியவந்துள்ளது.

    இது தொடர்பான ஆவண தகவலின்படி, “தமிழ்நாட்டில் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2019ஆம் ஆண்டில் 4,139 வழக்குகள் பதிவாகியுள்ளன.

    அதேநேரத்தில் 2020ஆம் ஆண்டில் 4,338 வழக்குகள் பதிவாகி உள்ளன. 2021ஆம் ஆண்டு இந்த வழக்குகளின் எண்ணிக்கை 6,064 ஆக அதிகரித்துள்ளன.

    போக்சோ சட்டத்தின் கீழ் 56 கொலைகள், 69 குழந்தைகள் இறப்பு ஆகிய வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 3 சிறுமிகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளனர்.


  • 17:32 (IST) 21 Sep 2022
    ஈரானில் ஹிஜாப்புக்கு எதிர்ப்பு போராட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

    ஈரானில் ஹிஜாப் சரிவர அணியவில்லையென பெண் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். இந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பெண்கள் தங்களது தலைமுடியை வெட்டி எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

    இந்த நிலையில் அந்நாட்டில் நடந்த போராட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.


  • 17:18 (IST) 21 Sep 2022
    ட்ரம்ப் மீது பாலியல் வன்புணர்வு புகார்

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் கரோல் என்பவர் பாலியல் வன்புணர்வு புகார் தெரிவித்துள்ளார்.

    இதற்கு எதிர்வினையாற்றியுள்ள ட்ரம்ப், தனது புத்தகங்கள் விற்பனையாக இவ்வாறு அந்த எழுத்தாளர் கூறியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.


  • 17:13 (IST) 21 Sep 2022
    ட்ரம்ப் மீது பாலியல் வன்புணர்வு புகார்

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் கரோல் என்பவர் பாலியல் வன்புணர்வு புகார் தெரிவித்துள்ளார்.

    இதற்கு எதிர்வினையாற்றியுள்ள ட்ரம்ப், தனது புத்தகங்கள் விற்பனையாக இவ்வாறு அந்த எழுத்தாளர் கூறியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.


  • 17:10 (IST) 21 Sep 2022
    ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்த விவகாரம்- ஒப்பந்த நிறுவனத்திற்கு அபராதம்

    ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்த புகாரில் பாக்கெட் செய்யும் ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.10000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


  • 16:51 (IST) 21 Sep 2022
    தமிழகத்தில் உணவு பொருட்களின் விலை கட்டுக்குள் உள்ளது – ஜெயரஞ்சன்

    தமிழகத்தில் இருக்கும் வலுவான பொது விநியோகத் திட்டத்தால் உணவுப் பொருட்களின் விலை கட்டுக்குள் உள்ளது என மாநில திட்டக்குழுத் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்


  • 16:44 (IST) 21 Sep 2022
    மாணவி ஸ்ரீமதியின் தோழிகளிடம், ஸ்ரீமதியின் தாய் செல்வி பேசும் வீடியோ வெளியீடு

    மாணவி ஸ்ரீமதியின் தோழிகள் இருவரிடம், ஸ்ரீமதியின் தாய் செல்வி பேசும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீமதி உயிரிழந்ததாக சொல்லப்படும் ஜூலை 13ஆம் தேதி பகல் நேரத்தில் பேசியதாக வீடியோ வெளியாகியுள்ளது.


  • 16:26 (IST) 21 Sep 2022
    அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து

    கொரோனா கட்டுப்பாடுகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2020ம் ஆண்டு கரூரில் நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் கொரோனா விதிகள் பின்பற்றவில்லை என வழக்கு தொடரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது


  • 15:54 (IST) 21 Sep 2022
    தேர்தல் ஆணையத்தில் இ.பி.எஸ் தரப்பு ஆதரவு கடிதம் சமர்பிப்பு

    இந்திய தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவு கடிதத்தை வழங்கியது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ததற்கு 2500க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு என சமர்ப்பித்துள்ளது.

    சுய விருப்பத்தின்படியும், முழு மனதுடன்தான் இடைக்கால பொதுச்செயலாளரை தேர்வு செய்தேன் என பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் அளித்துள்ளனர்


  • 15:42 (IST) 21 Sep 2022
    ரஷ்யாவில் பகுதி இராணுவ அணிதிரட்டலை அறிவித்தார் அதிபர் புதின்

    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைனில் போர் ஏறக்குறைய ஏழு மாதங்களை எட்டியுள்ள நிலையில், மாஸ்கோ போர்க்களத்தில் தரையிறங்கிய நிலையில், ரஷ்யாவில் ஒரு பகுதி அணிதிரட்டலை அறிவித்தார். புதின் மேற்கு நாடுகளை எச்சரித்தார், "இது ஒரு முட்டாள்தனம் அல்ல" ரஷ்யா தனது பிரதேசத்தை பாதுகாக்க அனைத்து வழிகளையும் பயன்படுத்துகிறது.


  • 15:28 (IST) 21 Sep 2022
    ரூ.30 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்

    வடகிழக்கு நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 30 கோடி மதிப்பிலான 394 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

    சப்ளை செயின் மற்றும் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் உள்நாட்டு கொரியர் சரக்குகள் மூலம் கடத்தலில் ஈடுபடுவதாக தகவல் கடத்தலை தடுக்க 'ஆப் கோல்ட் ரஷ்' என்ற திட்டம் தொடங்கப்பட்டது

    மகாராஷ்டிராவில் ரூ.10.18 கோடி மதிப்பில் 120 தங்க கட்டிகள், பீகாரில் ரூ.14.50 கோடி மதிப்பில் 172 தங்க கட்டிகள், டெல்லியில் ரூ.8.69 கோடி மதிப்பில் 102 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது


  • 14:29 (IST) 21 Sep 2022
    தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த இடைக்கால தடை

    தமிழகத்தில் தட்டச்சு தேர்வு பழைய முறைப்படியேநடைபெறும் என்ற தனி நீதிபதி உத்தரவிற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.


  • 14:27 (IST) 21 Sep 2022
    நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் வணிக வரித்துறையினர் சோதனை

    நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் சோதனை நடத்தப்பட்டள்ளது ஜிஎஸ்டி இல்லாமல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து உரிய விளக்கமளிக்க வணிக வரித்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.


  • 13:38 (IST) 21 Sep 2022
    பள்ளி மாணவி மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு

    தூத்துக்குடி, சில்லாங்குளம் பள்ளி மாணவி மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ள நிலையில், சிபிசிஐடி முதற்கட்ட விசாரணையை பள்ளியில் தொடங்கியுள்ளது


  • 13:19 (IST) 21 Sep 2022
    12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - மாணவன் உட்பட 4 பேர் கைது

    பழனி ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மாணவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விடுதி காப்பாளர் அமுதா, விடுதி காவலாளி விஜயா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


  • 13:18 (IST) 21 Sep 2022
    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு 20 கோடி நிதி

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ₨20 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு. நீர்நிலைகள், கால்வாய்கள் வழியாக மழைநீர் தங்கு தடை இன்றி செல்ல ஏதுவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்


  • 13:17 (IST) 21 Sep 2022
    3 பேருக்கு மேல் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் சிறப்பு மருத்துவ முகாம்

    ஒரு பகுதியில் 3 பேருக்கு மேல் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.


  • 13:06 (IST) 21 Sep 2022
    மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

    மியான்மரில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்களை தாயகம் அழைத்து வர விரைவான நடவடிக்கை தேவை

    பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்


  • 12:50 (IST) 21 Sep 2022
    அச்சுறுத்தல் ஏற்பட்டால் எந்த எல்லைக்கும் செல்ல தயார் - புதின்

    அச்சுறுத்தல் ஏற்பட்டால் எந்த எல்லைக்கும் செல்ல தயார் - புதின். ரஷ்ய ராணுவத்தை அணி திரட்டவும் அதிபர் புதின் உத்தரவு

    எல்லை மீறி நடப்பதாக மேற்கத்திய நாடுகள் மீது ரஷ்ய அதிபர் புதின் ஆவேசம். ரஷ்யாவை பலவீனப்படுத்த மேற்கத்திய நாடுகள் முயற்சி. பதிலடி கொடுக்க எங்களிடம் ஏராளமான ஆயுதங்கள் உள்ளது - ரஷ்ய அதிபர் புதின்


  • 12:33 (IST) 21 Sep 2022
    நான் ஈபிஎஸ் ஆதரவாளர் என்பதால் எனது பேச்சை சித்தரித்துள்ளனர்

    நான் ஈபிஎஸ் ஆதரவாளர் என்பதால் எனது பேச்சை சித்தரித்துள்ளனர். கோவை செல்வராஜூக்கு பதில் கூறினால் என் தரம் குறைந்து விடும் - அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்


  • 12:32 (IST) 21 Sep 2022
    நடிகை பாவனாவுக்கு யு.ஏ.இ. கோல்டன் விசா

    பிரபலங்களுக்கு வழங்கப்படும் கோல்டன் விசா தற்போது நடிகை பாவனாவிற்கும் கொடுக்கப்பட்டுள்ளது.


  • 11:57 (IST) 21 Sep 2022
    பீளமேடு காவல் நிலையம் முன்பு பாஜகவினர் போராட்டம் - பரபரப்பு

    கோவை பீளமேடு காவல் நிலையம் முன்பு பாஜகவினர் திரண்டு வருவதால் பரபரப்பு

    பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்

    திமுக எம்.பி. ஆ.ராசா குறித்து அவதூறாக பேசியதாக கோவை பாஜக மாவட்ட தலைவர் கைது


  • 11:55 (IST) 21 Sep 2022
    பள்ளி மாணவி மரணத்தில் உரிய விசாரணை நடத்தப்படும் - அமைச்சர் கீதா ஜீவன்

    பள்ளி கழிவறையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம். சில்லாங்குளம் தனியார் பள்ளியில் அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உள்ளிட்டோரும் ஆய்வு

    மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டிய நிலையில் ஆய்வு.

    பள்ளி மாணவி மரணத்தில் உரிய விசாரணை நடத்தப்படும்- அமைச்சர் கீதா ஜீவன்

    மாணவியின் கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது - அமைச்சர்


  • 11:55 (IST) 21 Sep 2022
    பள்ளி மாணவி மரணத்தில் உரிய விசாரணை நடத்தப்படும் - அமைச்சர் கீதா ஜீவன்

    பள்ளி கழிவறையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம். சில்லாங்குளம் தனியார் பள்ளியில் அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உள்ளிட்டோரும் ஆய்வு

    மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டிய நிலையில் ஆய்வு.

    பள்ளி மாணவி மரணத்தில் உரிய விசாரணை நடத்தப்படும்- அமைச்சர் கீதா ஜீவன்

    மாணவியின் கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது - அமைச்சர்


  • 11:22 (IST) 21 Sep 2022
    ஆவின் பால் பாக்கெட்டில் ஈ

    மதுரை ஆவினில் விற்பனை செய்யப்பட்ட பாலில் ஈ கிடந்ததாக புகார். ஆவின் அதிகாரிகள் பால் பாக்கெட்டை திரும்ப பெற்று விசாரணை. பேக்கிங் செய்யும் போது தவறு நடந்திருக்கலாம் என அதிகாரிகள் தகவல்


  • 11:21 (IST) 21 Sep 2022
    வழக்கை ரத்து செய்ய கோரி வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் நாளை விசாரணை

    மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்ய கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் மீது நாளை விசாரணை

    எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மனுக்களை மாற்றிய நிலையில் அரசுத்தரப்பில் முறையீடு


  • 11:15 (IST) 21 Sep 2022
    அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன்

    போருக்கான நேரம் இது இல்லை என ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி கூறியதை அமெரிக்கா வரவேற்கிறது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன்


  • 11:14 (IST) 21 Sep 2022
    மதுரை ஆவினில் விற்பனை செய்யப்பட்ட பாலில் ஈ கிடந்ததாக புகார்

    மதுரை ஆவினில் விற்பனை செய்யப்பட்ட பாலில் ஈ கிடந்ததாக புகார். ஆவின் அதிகாரிகள் பால் பாக்கெட்டை திரும்ப பெற்று விசாரணை . பேக்கிங் செய்யும் போது தவறு நடந்திருக்கலாம் என அதிகாரிகள் தகவல்


  • 09:47 (IST) 21 Sep 2022
    1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் தொடக்கம்

    தமிழகத்தின் பல்வேறு பகுதியில் அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பு. தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் தொடக்கம் . கோலப்பன்சேரியில் சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் . சென்னை மாநகராட்சியில் மட்டும் 100 இடங்களில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம்.


  • 09:45 (IST) 21 Sep 2022
    பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமிக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

    கோவை பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமிக்கு 15 நாள் நீதிமன்ற காவல். திமுக எம்.பி. ஆ.ராசா குறித்து அவதூறாக பேசியதாக பாலாஜி உத்தம ராமசாமி கைது. இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.


  • 09:30 (IST) 21 Sep 2022
    தீபாவளி பண்டிகை - அரசுப் பேருந்துகளிலும் முன்பதிவு தொடக்கம்

    தீபாவளி பண்டிகை - அரசுப் பேருந்துகளிலும் முன்பதிவு தொடக்கம். அக்டோபர் 21 ஆம் தேதிக்கான முன்பதிவு அரசுப் பேருந்துகளில் தொடக்கம். http://tnstc.in என்ற இணையதளம் மூலம் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யலாம்.


  • 09:29 (IST) 21 Sep 2022
    பாஜகவினர் சாலை மறியல்

    கோவையில் பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல் .


  • 09:29 (IST) 21 Sep 2022
    மதிப்பீட்டின் முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது

    தமிழகத்தில் நடைபெற்ற 11 மற்றும் 12ம் வகுப்பு துணைத் தேர்வுகளில் மறுகூட்டல், மறு மதிப்பீட்டின் முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது . http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மறுகூட்டல், மறு மதிப்பீட்டின் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம்


  • 09:28 (IST) 21 Sep 2022
    பிரதமர் மோடி தலைமையில்; அமைச்சரவை கூட்டம்

    டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.


  • 09:27 (IST) 21 Sep 2022
    லாரி ஏறிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

    டெல்லி, சீமாபுரியில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு


Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment