Advertisment

Tamil News Highlights: காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம்: வேட்பாளர்கள் குறித்து இன்று ஆலோசனை

Tamil News Today Updates-05 March 2024- இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mallikarjun kharge

IE Tamil Updates

Tamil News Live updates : பெட்ரோல், டீசல் விலை

Advertisment

653-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

 முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2226 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 743 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 462 மில்லியன் கன அடியாக உள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 • Mar 05, 2024 22:11 IST
  ஈரோட்டில் சுமார் 80 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

  ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள கொல்லம்பாளையம், இந்திரா நகர் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் தடை செய்யப்பட்ட சுமார் 80 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அசோக் குமார் (34) மற்றும் கோவிந்த் (28) ஆகிய இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் • Mar 05, 2024 21:39 IST
  பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்கள் முடக்கம்

  அரை மணி நேரத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள் முடங்கியுள்ளன. கணக்குகள் Logout ஆகியதால் பயனர்கள் தொடர்பு கொள்ளமுடியாமல் தவித்து வருகின்றனர் • Mar 05, 2024 21:11 IST
  4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

  சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது • Mar 05, 2024 20:51 IST
  ஜாபர் சாதிக் தலைமறைவு; இயககுனர் அமீருக்கு சம்மன்?

  போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் தலைமறைவாகி விட்டார். அவரின் இருப்பிடம் குறித்து இயக்குனர் அமீருக்கு தெரியும் என சந்தேகம் எழுந்துள்ளது.
  இந்த நிலையில் அவருக்கு சம்மன் அனுப்ப போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளிளியாகி உள்ளது. • Mar 05, 2024 20:46 IST
  பேரிடர் காலத்தில் வராதது ஏன்? உதயகுமார் கேள்வி

   

  “பேரிடர் காலத்தில் வராமல் பிரசாரத்திற்கு மட்டுமே வரும் தலைவர்களுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்” அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். • Mar 05, 2024 19:46 IST
  சீமான் வழக்கு; நடிகை விஜயலட்சுமி ஆஜராக உத்தரவு

  நடிகை விஜயலட்சுமி மார்ச் 19ஆம் தேதி ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். • Mar 05, 2024 19:28 IST
  ராமேஸ்வரத்தில் போதைப் பொருள்; விடியா தி.மு.க அரசுக்கு எடப்பாடி கண்டனம்

  ராமேஸ்வரத்தில் போதைப் பொருள் செய்யப்பட்ட விவகாரத்தில், “விடியா தி.மு.க அரசுக்கு எடப்பாடி கண்டனம்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
  இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்துள்ள அறிக்கையில், “இந்த விடியா திமுக ஆட்சியில் தொடர்ந்து போதைப் பொருள் பறிமுதல்களும் போதைப் பொருள் மாபியா செயல்பாடுகளும் மக்களைப் பெரும் அச்சத்திற்கு ஆளாக்கியுள்ள நிலையில், இன்று  இராமேஸ்வரம் கடல் பகுதியில் மேலும் 108 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் என்ற செய்தி, தமிழ்நாட்டை இந்த விடியா திமுக அரசு சுடுகாடாக மாற்றி வருகிறதோ என்ற பயத்தை ஏற்படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார். • Mar 05, 2024 19:02 IST
  ஐ.பி.எல் 2024; சென்னை வந்தார் தோனி

  ஐ.பி.எல் (IPL) கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சியில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் கேப்டன் தோனி சென்னை வந்தடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. • Mar 05, 2024 18:41 IST
  திருக்கோவிலூர் தொகுதி காலி; சட்டப்பேரவை அலுவலகம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்

  சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் பொன்முடி பதவியை இழந்தார். இதனால், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதி காலி என சட்டப்பேரவை அலுவலகம் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.  • Mar 05, 2024 18:38 IST
  பிளஸ் 2 பொதுத் தேர்வு: ஆங்கில பாடத் தேர்வில் 12,696 மாணவர்கள் ஆப்செண்ட்

  பிளஸ் 2 பொதுத் தேர்வில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆங்கில பாடத் தேர்வில் 12,696 மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. • Mar 05, 2024 18:35 IST
  பா.ஜ.க நிர்வாகி  ஹெச். ராஜா மீதான வழக்கு விசாரணை மார்ச் 20-க்கு ஒத்திவைப்பு

  பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில், பா.ஜ.க நிர்வாகி  ஹெச். ராஜா மீதான வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் மார்ச் 20-க்கு ஒத்திவைத்து. • Mar 05, 2024 17:59 IST
  ஓ.பி.எஸ் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

  ஓ.பி.எஸ் மீது தாமாக முன்வந்து எடுத்த வழக்கின் விசாரணையை வரும் மார்ச் 25-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 2001 - 2005-ல் ஓ.பி.எஸ் அமைச்சராக இருந்தபோது வருவாயைவிட அதிகமாக ரூ. 1.77 கோடி சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. • Mar 05, 2024 17:54 IST
  அனைத்து மருந்துக் கடைகளிலும் சி.சி.டிவி கேமிரா பொருத்த சென்னை கலெக்டர் உத்தரவு

  சென்னையில் அனைத்து மருந்துக் கடைகளிலும் கட்டாயம் சி.சி.டிவி கேமிரா பொருத்த வேண்டும் சென்னை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். • Mar 05, 2024 17:10 IST
  குஜராத்தில்தான் போதைப்பொருள் புழக்கம் - அமைச்சர் ரகுபதி விளக்கம்

  தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்தார்.  “குஜராத்தில்தான் போதைப்பொருள் புழக்கம் அதிகம். தமிழகத்தில் யாரும் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது. போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய 16 பேர்களை தமிழக பா.ஜ.க கட்சியில் சேர்த்தது. தமிழக அரசு மீது மத்திய அரசு வீண்பழி சுமத்துகிறது” என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார். • Mar 05, 2024 17:06 IST
  போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: இயக்குனர் அமீருக்கு விரைவில் என்.சி.பி சம்மன்

  போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள சாதிக்குடன் இணைந்து இயக்குனர் அமீர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால், இயக்குனர் அமீருக்கு விரைவில் என்.சி.பி சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. • Mar 05, 2024 16:46 IST
  பா.ஜ.க.வுக்கு தாமரை சின்னம் கொடுத்தது தொடர்பான வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

  பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்யக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ள டி.ரமேஷ் என்பவர் தாமரையை ஒர் அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி, நாட்டின் ஒருமைபாட்டை இழிவுபடுத்துவது என்று கூறி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது. • Mar 05, 2024 16:05 IST
  மதுரை எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தில் திடீர் பூஜை ஏன்? அதிகாரி விளக்கம்

  தமிழகத்தின் மிகப் பெரிய திட்டமான எய்ம்ஸ் கட்டுமான வாஸ்து பூஜை மிக எளிமையாக செய்யப்பட்டது ஏன் என்று எழுந்துள்ள கேள்விக்கு எய்ம்ஸ் அமையும் இடத்தில் உள்ள மரம் செடி கொடிகளை அகற்றவே பூமிபூஜை, கட்டுமானத்துக்காக அல்ல என வாஸ்துவுக்கு வந்த அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் சார்பாக வந்துள்ள செய்திக்குறிப்பிலும், முன்கட்டுமானப் பணிகள் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை சீர்படுத்தும் பணிகள் மட்டுமே துவங்கவுள்ள நிலையில் கட்டுமானப் பணிகள் எப்போது துவங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது • Mar 05, 2024 16:03 IST
  தடைசெய்யப்பட்ட அமைப்பு தொடர்பான வீடியோவை சமர்பித்த சாட்டை துரைமுருகன்

  வீடியோக்களை சமர்ப்பித்த சாட்டை துரைமுருகன் தடைசெய்யப்பட்ட அமைப்பு தொடர்பாக பதிவேற்றம் செய்த 5 வீடியோக்களின் பதிவை என்ஐஏ அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார் சாட்டை துரைமுருகன் • Mar 05, 2024 15:27 IST
  கொடைக்கானலில் அனுமதியின்றி பங்களா கட்டிய பாபி சிம்ஹா, பிரகாஷ்ராஜ் மீது வழக்கு

  "கொடைக்கானலில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் கட்டிய கட்டுமானம் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டு, தற்போது கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. அனுமதியற்ற கட்டுமானம் மீது உள்ளூர் திட்டக்குழுமம் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் சொந்தமாக பங்களா கட்டியுள்ளனர் அனுமதி பெறாமல் பங்களா கட்ட பாறைகளை அகற்றியதால் மண் சரிவு ஏற்படும் அபாயம் என வழக்கு பதிவு செய்யப்படடுள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு • Mar 05, 2024 15:24 IST
  கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி ராஜினாமா

  கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பதவியில் இருந்து ராஜினாமாசெய்துள்ள நிலையில், வரும் 7-ந் தேதி பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, • Mar 05, 2024 14:58 IST
  காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

  குழந்தைகளை கடத்துவதாக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

  பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவசர உதவி எண் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை 044-27236111 என்ற எண்களில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தல்

  காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை • Mar 05, 2024 14:38 IST
  கூட்டணிக்கு யாரிடமும் கெஞ்ச மாட்டோம்

  31 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துள்ளது அதிமுக. கூட்டணிக்காக யாரிடமும் கெஞ்ச மாட்டோம்

  அதிமுகவோடு வந்தால் எம்.பி.யாக வெற்றி பெற்று டெல்லி செல்லலாம் - ஜெயக்குமார் • Mar 05, 2024 14:21 IST
  ஜெயக்குமார் பேச்சு

  தமிழ்நாட்டிற்கு தேவையான நிதி ஒதுக்கி மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தாமல் வெறும் கையில் முழம் போடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி;

  கால்டுவெல், ஜி.யு.போப் போன்றவர்கள் தமிழ் மொழிக்காக எவ்வளவு தொண்டாற்றி உள்ளார்கள் என்பது ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு  தெரியுமா?

  -  ஜெயக்குமார் • Mar 05, 2024 14:20 IST
  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

  பேரறிஞர் அண்ணா  கூறியிருக்கிறார் கழகம் ஒரு குடும்பம்’;

  கழகமே குடும்பம் என்று சொல்லும் இயக்கம் அதிமுக தான்;

  வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைப்பவர்கள் எம்.பி. ஆக முடியும்;

  திமுகவோடு கூட்டணி வைத்தால் டெல்லிக்கு போக முடியாது

  - சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு • Mar 05, 2024 13:47 IST
  வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

  கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மீது 2018ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பணமோசடி வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம் • Mar 05, 2024 13:30 IST
  வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

  தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்

  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் • Mar 05, 2024 13:30 IST
  ஜெயலலிதா நகைகளை ஒப்படைக்க தடை

  ஜெயலலிதா நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க இடைக்கால தடை

  தீபக் மற்றும் தீபா ஆகியோரின் மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு • Mar 05, 2024 13:22 IST
  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

  திமுக எந்த பணத்தையும் கொள்ளை அடிக்க வில்லை, எந்த பணமும் திமுகவிடமும் இல்லை;

  மத்திய அரசு வேண்டுமானால் சோதனை செய்து உறுதி படுத்திக் கொள்ளட்டும்;

  மக்களவைத் தேர்தலுக்காக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணியை மத்திய அரசு தற்போது தொடங்கியுள்ளது;

  தேர்தல் முடிந்த பிறகு எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை நிறுத்தி விடுவார்கள்

  - புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி • Mar 05, 2024 13:21 IST
  நின்றுகொண்டிருந்த ரயிலில் பயங்கர தீ விபத்து

  தெலங்கானா மாநிலம் காசிபேட் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயிலில் பயங்கர தீ விபத்து

  நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயம் ஏதும் இல்லை என தகவல் • Mar 05, 2024 13:21 IST
  இன்று முதல் 7 நாட்களுக்கு வறண்ட வானிலை

  இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே காணப்படும்

  அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் • Mar 05, 2024 13:08 IST
  பாஜகவில் இணைந்த காங்கிரஸ் தலைவர்

  குஜராத் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அர்ஜுன் மோத்வாடியா பாஜகவில் இணைந்தார் • Mar 05, 2024 12:59 IST
  பீகாரில் விவசாய நிலத்தில் பயிற்சி விமானம் விழுந்து விபத்து

  பீகார் மாநிலம் கயாவில் ராணுவ பயிற்சி விமானம் விபத்து. இயந்திர கோளாறு காரணமாக கஞ்சன்பூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் தரையிறங்கிய விமானம். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை • Mar 05, 2024 12:56 IST
  தெலங்கானா: நின்றுகொண்டிருந்த ரயிலில் தீ விபத்து

  தெலங்கானா மாநிலம் காசிபேட் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயிலில் பயங்கர தீ விபத்து. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் இல்லை எனத் தகவல்.  • Mar 05, 2024 12:30 IST
  புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி பேட்டி


  "அ.தி.மு.கவுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது" -கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சி தலைவர் • Mar 05, 2024 11:56 IST
  தி.மு.க கூட்டணி: ஸ்டாலின் ஆலோசனை

  திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.

  சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு.

  ஏற்கனவே 4 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் முடிந்துள்ளது. காங்கிரஸ், விசிக, மதிமுக உடன் தொகுதிப் பங்கீடு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  • Mar 05, 2024 11:48 IST
  கனிமொழி விருப்ப மனு தாக்கல்

  தூத்துக்குடி மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கனிமொழி எம்.பி விருப்ப மனு.

  அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுவை தாக்கல் செய்தார் திமுக எம்.பி. கனிமொழி. ஏற்கனவே கனிமொழி பெயரில் 70க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் • Mar 05, 2024 11:26 IST
  எஸ்.பி.ஐ மீது பி.டி.ஆர் கடும் விமர்சனம்

  தேர்தல் பத்திரங்கள் விவரங்களை வெளியிட கூடுதல் கால அவகாசம் கோரிய SBI.. கடுமையாக விமர்சித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

  “தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் SBI முன்வைத்துள்ள வாதம் மிகவும் கேவலமானது!” -பழனிவேல் தியாகராஜன்

  தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்கள் விவரங்களை வெளியிட, உச்சநீதிமன்றத்திடம் SBI 4 மாதகால அவகாசம் கோரியுள்ளது. • Mar 05, 2024 11:22 IST
  பிரதமரை சந்தித்தது ஏன்? - பிடிஆர் விளக்கம்

  பிரதமரை சந்தித்தது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் அல்ல. பணி நிமித்தமாகவே அவரை சந்தித்தேன். கடந்த 27-ம் தேதி மதுரையில் பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் • Mar 05, 2024 11:19 IST
  ஆளுநர் ரவி பேச்சுக்கு அய்யா வழி தலைமைபதி கண்டனம்

  ‘சனாதனத்தை காக்க வந்தவர் அய்யா வைகுண்டர்’ என ஆளுநர் ரவி பேசியதற்கு அய்யா வழி தலைமை பதி நிர்வாகி பால பிரஜாபதி கண்டனம்

  அய்யா வைகுண்டர் மனுதர்மத்துக்கு எதிராக போர்க்குரல் கொடுத்தவர். வரலாறு தெரியாதவர்கள் வாய் திறக்க கூடாது. எல்லாவற்றையும் தனதாக்கி பட்டா போடும் செயலை ஆளுநர் செய்யக் கூடாது-   பால பிரஜாபதி கண்டனம் • Mar 05, 2024 11:03 IST
  மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி தொடக்கம்

  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் துவக்கம் 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் 5 ஆண்டுகளுக்கு பிறகு கட்டுமான பணிகள் துவக்கம். • Mar 05, 2024 10:22 IST
  தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்வு

  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்வு தங்கம் ஒரு கிராம் ரூ.6,015க்கும், ஒரு சவரன் ரூ.48,120க்கும் விற்பனை. • Mar 05, 2024 09:58 IST
  ஆட்டோ தொழிற்சங்கம் - முத்தரப்பு பேச்சுவார்த்தை

  சென்னை, கிண்டியில் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளோடு போக்குவரத்து துறை ஆணையர் பேச்சுவார்த்தை தமிழகத்தில் இயங்கும் ஆட்டோகளுக்கு அரசே செயலியை உருவாக்கி கட்டண விவரத்தை வெளியிட வேண்டும் - ஆட்டோ சங்கங்கள் கோரிக்கை. • Mar 05, 2024 09:52 IST
  ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கம்

  ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கம். கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி நடவடிக்கை ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில், ஜாபர் சாதிக் மற்றும் முகமது சலீம் தலைமறைவு. • Mar 05, 2024 09:35 IST
  பிரதமருக்கும், எனக்கும் தனிப்பட்ட உறவு போல் சிலர் போலி செய்திகளை பரப்புகின்றனர்

  மதுரை வந்த பிரதமர் மோடியை, அரசு சார்பில் வரவேற்க சென்றேன். பிரதமருக்கும், எனக்கும் தனிப்பட்ட உறவு போல் சிலர் போலி செய்திகளை பரப்புகின்றனர். முதல்வர் கொடுத்த அரசாங்க உத்தரவை தான், நான் செய்தேன் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் • Mar 05, 2024 09:15 IST
  பணியாளர் நல வாரிய தலைவராக விஜிலா சத்தியானந்த் நியமனம்

  கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர் நல வாரிய தலைவராக விஜிலா சத்தியானந்த் நியமனம் • Mar 05, 2024 09:14 IST
  கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

  கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம். ஈபிள் டவர் அருகே ஒன்றுகூடி பொதுமக்கள் கொண்டாட்டம்.  • Mar 05, 2024 07:57 IST
  கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யக் கோரிய வழக்கு :ள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

  கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.  • Mar 05, 2024 07:55 IST
  பெங்களூரு குண்டுவெடிப்பு - என்ஐஏ சோதனை

  பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை சென்னை மண்ணடியிலும், ராமநாதபுரத்தில் 4 இடங்களிலும் அதிகாரிகள் சோதனை என தகவல்Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment