Advertisment

Tamil News Today: மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அறிவிப்பு

Tamil News Live Updates-07-08-2024: இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 143-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்.  3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2504 மில்லியன் கன அடியாக உள்ளது.  1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 100 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 308 மில்லியன் கன அடியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Aug 07, 2024 22:05 IST
    வங்கதேச குற்றவாளிகளின் சான்றிதழ்களை சரிபார்க்கும் டெல்லி காவல்துறை

    சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா, குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள வங்கதேச குடியுரிமை பெற்ற நபர்களை சான்றிதழ்களை சரிபார்க்கவும், சமீபத்திய வாகன மாற்றங்களை ஆய்வு செய்யவும், கூரியர் டெலிவரிகளை சரிபார்க்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

    அண்டை மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளுடன் மாநிலங்களுக்கு இடையேயான சந்திப்பின் போது, ​​​​சமீபத்தில் விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளை கண்காணிப்பது, துப்பாக்கி கடத்தலைத் தடுப்பது மற்றும் தகவல் பகிர்வை மேம்படுத்துவது குறித்து அவர் வலியுறுத்தினார். பயங்கரவாதம் தொடர்பான உளவுத்துறை, எல்லை சோதனைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை கண்காணிப்பது ஆகியவற்றில் ஒருங்கிணைக்கப்பட்டது. பாதுகாப்பான சுதந்திர தினத்திற்கான கூடுதல் ஆதரவையும் நிகழ்நேர தகவல் பரிமாற்றத்தையும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.



  • Aug 07, 2024 20:56 IST
    209 கைதிகள் தப்பி ஓட்டம்; 3 தீவிரவாதிகள் உட்பட 6 பேர் சுட்டுக் கொலை 

    வங்கதேசத்தில் காசிபூரில் உள்ள காசிம்பூர் உயர் பாதுகாப்பு சிறையிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது காவலர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்துக் கொண்டு குறைந்தது 209 கைதிகள் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. 

    இந்த நிலையில், தப்பிச் செல்வதைத் தடுக்க சிறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன் விளைவாக மூன்று தீவிரவாதிகள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.



  • Aug 07, 2024 20:06 IST
    புதுச்சேரி: பெண் வயிற்றில் மருத்துவ‌ உபகரணம் வைத்து தைப்பு: ரூ. 7.20 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

    புதுச்சேரியில் அறுவைச் சிகிச்சையின்‌போது மருத்துவ‌ உபகரணத்தை தவறுதலாக பெண்ணின் வயிற்றுக்குள் வைத்துத் தைத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய மகாத்மா காந்தி தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 7.20 லட்சம் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் குறைதீர்‌ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

    உத்தரவிட்ட 45 நாளுக்குள் உரிய தொகையைத்தராவிடில், 9% ஆண்டு‌ வட்டியுடன் சம்பந்தப்பட்ட மருத்துவமனை தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்து உள்ளே இருந்த கருவி அகற்றப்பட்டது. 



  • Aug 07, 2024 20:01 IST
    வங்கதேசத்தில் இடைக்கால அரசு - முகமது யூனுஸ் நாளை பதவியேற்பு

    வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நாளை வியாழக்கிழமை பதவியேற்கும் என்று ராணுவ தளபதி வகார் உஸ் ஜமான் தெரிவித்துள்ளார். 

    முன்னதாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராணுவ தளபதி, "இடைக்கால அரசின் பதவியேற்பு விழா நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆலோசனைக் குழுவில் 15 உறுப்பினர்கள் இருக்கலாம்" என்று கூறினார்.



  • Aug 07, 2024 18:28 IST
    முதுநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிந்துள்ளதாக தகவல்

    முதுநிலை நீட் தேர்வு வரும் ஆகஸ்ட் 11-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கான வினாத்தாள் இணையத்தில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரூ70 ஆயிரம் வரை இந்த வினாத்தாள் விற்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.



  • Aug 07, 2024 18:26 IST
    வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் குறித்து விளக்கம்: எதிர்கட்சியினர் வெளிநடப்பு

    மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்தை மறு பரிசீலனை செய்ய இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை என நாடாளுமன்றத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.



  • Aug 07, 2024 18:25 IST
    செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த உத்தரவு: காவல் மேலும் நீடிப்பு

    சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், குற்றச்சாட்டுப் பதிவுக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்படுத்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேரில் ஆஜரப்படுத்தப்படவில்லை என்றால் காணொளி மூலம் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் என நீதிபதி எஸ்.அல்லி அறிவித்துள்ளார். இதனிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நாளை வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.



  • Aug 07, 2024 18:20 IST
    வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி

    நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வினேஷ் போகத்தை சந்தித்த பி.டி. உஷா!



  • Aug 07, 2024 17:29 IST
    வினேஷ், நீங்கள் எல்லா வகையிலும் உண்மையான சாம்பியன்: மு.க.ஸ்டாலின் பதிவு

    "வினேஷ், நீங்கள் எல்லா வகையிலும் உண்மையான சாம்பியன். உங்கள் வலிமை மற்றும் இறுதிப் போட்டிக்கான குறிப்பிடத்தக்க பயணம் மில்லியன் கணக்கான இந்திய மகள்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. ஒரு சில கிராம் கணக்கிற்காக தகுதியிழப்பு செய்ததால் உங்கள் உத்வேகத்தையும் சாதனைகளையும் குறைக்க முடியாது. நீங்கள் ஒரு பதக்கத்தைத் தவறவிட்டாலும், உங்கள் அபாரமான உறுதியால் அனைவரின் மனதையும் வென்றுள்ளீர்கள்என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • Aug 07, 2024 16:37 IST
    தமிழகத்தின் 14 மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு

    தமிழகத்தின் 14 மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். நாமக்கல், சேலம், தர்மபுரி, கரூர், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டத்திலும் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Aug 07, 2024 16:13 IST
    வினேஷ் போகத்துக்கு தேவையான அனைத்து வசதிகளும், நிதி உதவியும் செய்து கொடுக்கப்பட்டது - அமைச்சர் மன்சுக் மாண்டவியா

    மல்யுத்த வீராங்கனை வினேஷ் போஹத் 50 கிலோ மல்யுத்த பிரிவில் கலந்து கொண்டார். ஒலிம்பிக் விதிகளின்படி அவரது உடல் எடை 50 கிலோ இருக்க வேண்டும். 100 கிராம் எடை அதிகரிப்பால், பாரிஸ் ஒலிம்பிக்கில், இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போஹத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். வினேஷ் போஹத்துக்கு, தேவையான உதவிகளை செய்யுமாறு பிரதமர் அறிவுறுத்தி உள்ளார். மல்யுத்த போட்டியில் இறுதிப் பிரிவுக்கு சென்ற ஒரே பெண் என்ற பெருமையை பெற்றார் வினேஷ் போஹத். அரையிறுதி போட்டியில் உலக சாம்பியனான ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். வினேஷ் போஹத்துக்கு தேவையான அனைத்து வசதிகளும், நிதி உதவியும் செய்து கொடுக்கப்பட்டது என அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்



  • Aug 07, 2024 16:01 IST
    12 மாநிலங்களவை இடங்களுக்கு செப்டம்பர் 3-ம் தேதி தேர்தல்

    9 மாநிலங்களில் காலியாகும் 12 மாநிலங்களவை இடங்களுக்கு செப்டம்பர் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது



  • Aug 07, 2024 15:44 IST
    மோப்ப நாயுடன் உடல்களை தேடும் ராணுவத்தினர்

    கடாவர் என்கின்ற மோப்ப நாயுடன் 12 பேர் கொண்ட குழு சாலியர் ஆற்றங்கரையில் உடல்களை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். சாலியரில் உடல்கள் அதிகளவில் கிடைக்கப் பெற்றதால் ராணுவத்தினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்



  • Aug 07, 2024 15:21 IST
    பேரிடர்களை தாங்கும் உட்கட்டமைப்புகளை வயநாட்டில் உருவாக்க வேண்டும் - ராகுல் காந்தி

    பேரிடர்களை தாங்கும் உட்கட்டமைப்புகளை வயநாட்டில் உருவாக்குவது உள்ளிட்ட அம்மக்களின் மறுவாழ்வுக்கு தேவையானவற்றை செய்து தர வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்



  • Aug 07, 2024 14:56 IST
    ஆகஸ்ட் 16-ம் தேதி அ.தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

     

    அ.தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 16-ம் தேதி காலை 9.30 மணிக்கு அ.தி.மு.க அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நாளை மறுநாள் ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெற இருந்த அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



  • Aug 07, 2024 14:21 IST
    ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி

    ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எடையை குறைக்க இரவு முழுவதும், கடும் உடற்பயிற்சி செய்ததால், நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Aug 07, 2024 13:52 IST
    ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் தகுதி நீக்கம்; கடும் ஆட்சேபம் தெரிவிக்க மோடி அறிவுறுத்தல்

    பாரீஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்திய ஒலிம்பிக்ஸ் சங்கம் மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் கடும் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.



  • Aug 07, 2024 13:29 IST
    பாரீஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்; ஆறுதல் தெரிவித்த மோடி 

    பாரீஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வீராங்கனை வினேஷ் போகத்திற்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார். வினேஷ் போகத் நீங்கள் சாம்பியன்களில் ஒரு சாம்பியன்; உங்களால் தேசம் பெருமை அடைகிறது; ஒவ்வொரு இந்தியருக்கும் நீங்கள் உத்வேகம் அளிப்பவராக இருக்கிறீர்கள் என்று பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.



  • Aug 07, 2024 13:03 IST
    ஹமாஸின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் அறிவிப்பு

    ஹமாஸின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் அறிவிப்பு இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட நிலையில் புதிய தலைவராகிறார்.



  • Aug 07, 2024 12:55 IST
    இலங்கை அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச போட்டி ஸ்

    இலங்கை அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச போட்டி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் 21ஆம் தேதி இலங்கை அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 17 பேர் அதிபர் தேர்தலில் களமிறங்குகின்றனர்



  • Aug 07, 2024 12:06 IST
    முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வரும் 13ஆம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்

    முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வரும் 13ஆம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம் தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் 13ஆம் தேதி காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு.



  • Aug 07, 2024 11:56 IST
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் கைது

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் கைது வழக்கறிஞரான அஸ்வத்தாமன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி போலீஸ் காவலில் உள்ள அருள் கொடுத்த தகவலின் பேரில் அஸ்வத்தாமன் கைது அஸ்வத்தாமனின் தந்தையான ரவுடி நாகேந்திரனுக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் முன்விரோதம் இருந்ததாக தகவல் ஆம்ஸ்ட்ராங்கின் மொபைல் போனை ஆய்வு செய்த போது, சிறையில் இருந்தபடி ரவுடி நாகேந்திரன் அவரிடம் பேசியது தெரியவந்தது நிலப்பிரச்சினை தொடர்பாக தன் மகனிடம் ஆம்ஸ்ட்ராங் மோதியதால், சிறையில் இருந்தபடி மிரட்டியிருக்கிறார் ரவுடி நாகேந்திரன்.



  • Aug 07, 2024 11:40 IST
    அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு

    நாடாளுமன்ற தேர்தல் தோல்வி மற்றும் கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக நாளை மறுதினம் நடைபெற இருந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி ஒத்திவைத்துள்ளார்.



  • Aug 07, 2024 11:31 IST
    செந்தில் பாலாஜி மனு - அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு; அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் வி.சிவஞானம் ஆகியோர் அமர்வு



  • Aug 07, 2024 11:02 IST
    அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து

    சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

    வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆணை

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து இரு அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருந்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்



  • Aug 07, 2024 10:31 IST
    தங்கம் வெல்வாரா வினேஷ் போகத்? நாடே எதிர்பார்ப்பு

    இன்று இரவு 11.23 மணிக்கு நடைபெறவுள்ள, பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை சாரா ஹில்டெப்ராண்ட்-ஐ எதிர்கொள்கிறார் வினேஷ்.

    ஒலிம்பிக்ஸில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ள வினேஷ் போகத், தங்கம் வெல்வாரா என நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. பலரும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.



  • Aug 07, 2024 10:19 IST
    சாதிவாரி கணக்கெடுப்பு - காங்.எம்.பி., ஒத்திவைப்பு தீர்மானம்

    மக்களவையில் ‘சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ’ விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்



  • Aug 07, 2024 10:19 IST
    2 நாளில் ரூ.1,120 சரிந்த தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.6,330-க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.50,640-க்கும் விற்பனை



  • Aug 07, 2024 09:58 IST
    கருணாநிதி, அண்ணா நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

    சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திலும் அண்ணா நினைவிடத்திலும் மரியாதை செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினம்

    அமைதி பேரணியாக வந்து அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை

    ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து அமைதி பேரணியாக வந்து மரியாதை



  • Aug 07, 2024 09:54 IST
    சாதி வாரி கணக்கெடுப்பு - காங்.எம்.பி., ஒத்திவைப்பு தீர்மானம்

    மக்களவையில் ‘சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ’ விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.



  • Aug 07, 2024 09:09 IST
    கட்சிப் பெயர் பயன்படுத்தக் கூடாது: விஜய் உத்தரவு

    GOAT படத்தின் புரமோஷனுக்காக 'தமிழக வெற்றி கழகம்' கட்சியின் பெயரை பயன்படுத்தக் கூடாது' என ரசிகர்களுக்கு விஜய் உத்தரவு

    'தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என குறிப்பிட்டு ஒரே மாதிரியான ஸ்டிக்கர் தயாராகி உள்ளதாகவும் தகவல்



  • Aug 07, 2024 09:02 IST
    கால்நடை மருத்துவ படிப்பு: இன்று தரவரிசை பட்டியல் வெளியீடு

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2024-25ம் ஆண்டுக்கான தரவரிசை இன்று வெளியாகிறது.

    இளநிலை கால்நடை மருத்துவம், பராமரிப்பு படிப்புகள், கோழி இன தொழில்நுட்பம் மற்றும் பால்வளம் உள்ளிட்ட படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகிறது.



  • Aug 07, 2024 08:40 IST
    திருச்சியில் கருணாநிதி சிலை திறப்பு

    திருச்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு.

    காணொலி வாயிலாக கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். திருச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு



  • Aug 07, 2024 08:37 IST
    ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி.

    சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை.

    ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை அமைதி பேரணி.

    அமைதி பேரணியில் ஏராளமான திமுகவினர் பங்கேற்பு



  • Aug 07, 2024 07:43 IST
    கேரள அமைச்சர் கிருஷ்ணன் குட்டி உத்தரவு

    வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நுகர்வோர்களிடம் 6 மாதங்களுக்கு மின் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது

    கேரள மாநில மின் துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி உத்தரவு



  • Aug 07, 2024 07:43 IST
    3 மாவட்டங்களில் மழை

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு. 



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment