/indian-express-tamil/media/media_files/8bWmc1atuM6OOQ5LCUFw.jpg)
Tamil news today live
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
வங்கதேச பயணத்தை தவிர்க்க இந்தியர்களுக்கு எச்சரிக்கை
வங்கதேச பயணத்தைத் தவிர்க்கும்படி இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் வங்கதேசத்தில் இப்போது இருக்கும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வெளியில் செல்வதைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். டாக்காவில் உள்ள இந்திய துணை தூதரகத்துடன் தொடர்பில் இருக்கும்படி வலியுறுத்தப்படுகிறார்கள். தேவைப்படும் நபர்கள் +8801958383679, +8801958383680 +8801937400591 எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
-
Aug 06, 2024 22:37 IST
வங்கதேசத்தை உன்னிப்பாக கவனிக்கிறோம்: சீன வெளியுறவு அமைச்சகம் அறிக்கை
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததையடுத்து அங்கு நிலவும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "நட்பு அண்டை நாடு மற்றும் விரிவான மூலோபாய கூட்டுறவு பங்காளியாக சீனாவின் பங்கை எடுத்துக்காட்டுகிறது மற்றும் நாட்டில் சமூக ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.
-
Aug 06, 2024 21:37 IST
அவை காவலர்களை கடித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ: பா.ஜ.க. புகார்
ராஜஸ்தான் சட்டசபையில் 2 அவை காவர்களை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கடித்து வைத்ததாக பாஜக புகார் கூறியுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாகரை அவையில் இருந்து வெளியேற சபாநாயகர் உத்தரவிட்ட நிலையில், அவைக்காவர்கள் அவரை வெளியேற்ற முயன்றபோது இந்த சம்பவம் நடந்தாக கூறப்படுகிறது.
-
Aug 06, 2024 20:49 IST
2 அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு - நாளை தீர்ப்பு
சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுதலைக்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் நாளை காலை தீர்ப்பளிக்க உள்ளது.
-
Aug 06, 2024 20:48 IST
2 முன்னாள் அமைச்சர்கள் விமான நிலையத்தில் கைது
வங்கதேச தொலைத்தொடர்பு மற்றும் ஐ.சி.டி முன்னாள் அமைச்சர் ஜுனைத் அகமது பாலக் மற்றும் அவாமி லீக் அரசாங்கத்தின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹசன் மஹ்மூத் ஆகியோர் ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டனர்.
முன்னாள் அமைச்சர் ஜுனைத் அகமது பாலக் தனது இரண்டு உதவியாளர்களுடன், பிற்பகல் 3:00 மணியளவில் ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரை விமானத்தில் ஏற விடாமல் தடுத்து, குடியேற்ற அதிகாரிகள் கைது செய்தனர்.
-
Aug 06, 2024 20:48 IST
விஸ்தாரா டாக்கா விமான சேவைகளை மீண்டும் தொடக்கம்
டாடா குழுமத்திற்குச் சொந்தமான விஸ்டாரா விமான நிறுவனம், தலைநகர் டெல்லியில் இருந்து டாக்காவிற்கு தினசரி இரண்டு விமானங்களை இயக்குகிறது.
இந்த நிலையில், "நாளை புதன்கிழமை முதல் திட்டமிட்டபடி விஸ்தாரா சேவைகளை இயக்கும்." என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார். விஸ்தாரா மும்பையிலிருந்து தினசரி விமானங்களையும் டெல்லியிலிருந்து டாக்காவிற்கு வாராந்திர மூன்று விமானங்களையும் இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Aug 06, 2024 20:38 IST
ஜனாதிபதி மாணவர் இயக்கம் பேச்சு வார்த்தை
வங்கதேச ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் இன்று செவ்வாயன்று பங்கபாபனில் மாணவர் இயக்கத்தின் முக்கிய ஒருங்கிணைப்பாளர்களை சந்தித்து தற்போதைய நிலைமை மற்றும் இடைக்கால அரசாங்கத்தின் வடிவமைப்பது குறித்து விவாதித்ததாக தெரிவிக்கிக்கப்பட்டுள்ளது.
"இன்று மாலை மாணவர் இயக்கத்தின் 13 பேர் கொண்ட குழு, தற்போதைய நிலைமை மற்றும் இடைக்கால அரசாங்கத்தின் வடிவம் குறித்து பங்கபாபனில் ஜனாதிபதி மற்றும் முப்படைத் தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்துகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
இடைக்கால நிர்வாகத்தை அமைப்பதற்கு வழி வகுக்கும் வகையில், ஜனாதிபதி சஹாபுதீன் முன்னதாக பாராளுமன்றத்தை கலைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Aug 06, 2024 20:03 IST
வங்கதேச போராட்டம்: பலி எண்ணிக்கை 440 ஆக உயர்வு; நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் முயற்சி
வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேச நாட்டை விட்டு பிரதமர் ஷேக் ஹசீனா வெளியேறிய பின்னர் 100 இறப்புகளுடன் வங்கதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இறந்தவர்களின் எண்ணிக்கை 440 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இன்று மாலை இயல்பு நிலை திரும்புவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. போலீஸ் மற்றும் இராணுவம் தெருக்களில் ரோந்து சென்றுள்ளன. மேலும் சர்ச்சைக்குரிய 30% இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக ஹசீனாவுக்கு எதிரான போராட்டங்கள் காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்ட பள்ளிகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
நேற்று திங்கள்கிழமை மட்டும் டாக்கா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த மோதல்களில் குறைந்தது 109 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
-
Aug 06, 2024 19:35 IST
'ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படும் தமிழக மீனவர்கள்': எம்.பி.கனிமொழி
"இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் ஒவ்வொரு நாளும் பாதித்து வருகின்றனர். அந்த பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்தியுள்ளோம்" என்று தி.மு.க எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்.
-
Aug 06, 2024 18:59 IST
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Aug 06, 2024 18:57 IST
வங்கதேசத்தில் நட்சத்திர ஓட்டலுக்கு தீ வைப்பு; 24 பேர் உயிரிழப்பு
வங்கதேசத்தில் நட்சத்திர ஓட்டலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததில் 24 பேர் உயிரிழந்தனர். மாணவர்களின் போராட்டம் கலவரமாக வெடித்த நிலையில், வங்கதேசத்தில் பதற்றம் நிலவுகிறது. முஜிபுர் ரஹ்மான் சிலையை சேதப்படுத்தியதோடு நட்சத்திர ஓட்டலுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
-
Aug 06, 2024 18:09 IST
சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்தது தவறு - ஐகோர்ட்
சவுக்கு சங்கரின் பேச்சுக்கு தண்டனை பெற்றுத் தரலாம், குண்டர் சட்டத்தில் அடைத்தது தவறு; ஆங்கிலேயர் கால தடுப்புக்காவல் சட்டத்தை தற்போது பயன்படுத்தினால் ஆங்கிலேயர் ஆட்சிக்கு கொண்டு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
-
Aug 06, 2024 17:44 IST
ஆபாச விளம்பரங்களுக்கு தடை கோரி வழக்கு; கூகுள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
கூகுளில் ஆபாச விளம்பரங்களுக்கு தடை கோரிய வழக்கில் மத்திய அரசு, கூகுள் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆபாச புகைப்படங்கள் உள்ள விளம்பரங்களால் இணையத்தை பயன்படுத்துவோருக்கு தர்ம சங்கடம் ஏற்படுகிறது. குழந்தைகள் தவறான பாதைக்கு செல்லும் அபாயம் உள்ளது” என வழக்கறிஞர் ஞானேஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மத்திய அரசு, கூகுள் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
-
Aug 06, 2024 17:21 IST
வங்கதேசத்தில் முன்னாள் அமைச்சர் கைது
வங்கதேசத்தின் முன்னாள் அமைச்சரும் அவாமி லீக் தலைவருமான ஜுனைத் அகமது கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடு செல்வதற்காக டாக்கா விமான நிலையத்தில் காத்திருந்தபோது ஜுனைத் அகமது வங்கதேச ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.
-
Aug 06, 2024 16:47 IST
செந்தில் பாலாஜிக்கு லஞ்சமாக ரூ.67.2 கோடி கிடைத்துள்ளது - அமலாக்கத்துறை
மத்திய குற்றப்பிரிவு கைப்பற்றிய பென் டிரைவில் தெளிவாக உள்ளது. தமிழ்நாடு தடயவியல் ஆய்வகத்தின் அறிக்கையிலோ, நீதிமன்றத்தில் உள்ள ஆதாரத்திலோ அல்லது அமலாக்கத்துறை அறிக்கையிலோ, ஆதாரத்திலோ எந்த முரண்பாடும் இல்லை. செந்தில் பாலாஜிக்கு லஞ்சமாக ரூ.67.2 கோடி கிடைத்துள்ளது என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது
-
Aug 06, 2024 16:39 IST
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் - அரையிறுதியில் வினேஷ் போஹத்
பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்த அரையிறுதிப் போட்டிக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போஹத் தகுதி பெற்றுள்ளார். 50 கிலோ எடைப்பிரிவு காலிறுதியில் உக்ரைன் வீராங்கனையை வீழ்த்தி வினேஷ் போஹத் வெற்றி பெற்றுள்ளார்
-
Aug 06, 2024 16:27 IST
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து; இன்று மாலை 4 மணி நிலவரப்படி விநாடிக்கு 22,200 கன அடி
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று மாலை 4 மணி நிலவரப்படி விநாடிக்கு 22,200 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் விநாடிக்கு 22,000 கன அடியாக உள்ளது
-
Aug 06, 2024 15:58 IST
ஈட்டியெறிதல் - இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா
ஈட்டியெறிதல் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதிப் பெற்றுள்ளார். முதல் முயற்சியிலேயே நீரஜ் சோப்ரா 89.34 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து அசத்தியுள்ளார்
-
Aug 06, 2024 15:56 IST
வங்கதேச நாடாளுமன்றம் கலைப்பு; அந்நாட்டு குடியரசுத் தலைவர் உத்தரவு
வங்கதேச நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்நாட்டு குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் போராட்டத்தை அடுத்து பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார்
-
Aug 06, 2024 15:35 IST
ஒலிம்பிக் மல்யுத்தம் - வினேஷ் போகத் காலிறுதிக்கு தகுதி
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 4 முறை உலக சாம்பியனாக இருந்த ஜப்பானின் யுய் சுகாகியை வீழ்த்தி இந்திய வீராங்கனை வினேஷ் போகத் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்
-
Aug 06, 2024 15:09 IST
தென்காசி அரசுப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள அரசுப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். மேலும் தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தையும், மாவட்டக் கல்வி அலுவலகத்தையும், அங்கு கட்டப்பட்டு வரும் மாவட்ட மைய நூலகத்தையும் பார்வையிட்டார்.
-
Aug 06, 2024 14:49 IST
ஸ்ரீவில்லிபுத்தூர் உற்சவம் சாதிய அடையாளமின்றி நடக்க வேண்டும் : நீதிமன்றம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் கோயிலின் ஆடி உற்சவ திருவிழா மற்றும் தேர் திருவிழாவில் ஜாதிய அடையாளங்களுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரைகிளை உத்தரவு அளித்துள்ளது.
-
Aug 06, 2024 14:37 IST
சூச்சிப்பாரா அருவியில் யாரேனும் சிக்கியுள்ளார்களா என ஆய்வு
வயநாடு நிலச்சரிவு: சூச்சிப்பாரா அருவியில் யாரேனும் சிக்கியுள்ளார்களா என ஆய்வு செய்ய ஹெலிகாப்டர் மூலம் விரைந்தது இந்திய ராணுவம்
-
Aug 06, 2024 14:30 IST
புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கைலாசநாதனை ஆளுநர் மாளிகையான ராஜ் நிவாஸில் வரவேற்ற முதலமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைலாசநாதனை ஆளுநர் மாளிகையான ராஜ் நிவாஸில் வரவேற்ற முதலமைச்சர் ரங்கசாமி துணைநிலை ஆளுநராக நாளை பதவியேற்கிறார் கைலாசநாதன்
-
Aug 06, 2024 14:22 IST
மதுரை மாவட்ட மைய நூலகம் புனரமைப்பு பணிகள்: நூலக இயக்குனரகத்தின் இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
மதுரை மாவட்ட மைய நூலகம் புனரமைப்பு பணிகள் தொடர்பாக பொது நூலக இயக்குனரகத்தின் இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
-
Aug 06, 2024 14:08 IST
ஆட்சி சக்கரத்தை திமுக நடத்தினாலும், எங்களின் முக்கிய வழிகாட்டி மாநிலத் திட்டக்குழு தான்: ஸ்டாலின்
“ஆட்சி சக்கரத்தை திமுக நடத்தினாலும், எங்களின் முக்கிய வழிகாட்டி மாநிலத் திட்டக்குழு தான்; திமுக ஆட்சியின் நிறை, குறைகளை எடுத்துச்சொல்வது மாநிலத் திட்டக்குழு; திட்டக்குழுவின் அறிக்கை தான் திமுக அரசு பெற்ற மதிப்பெண் பட்டியலாக நினைக்கிறேன்” - 5வது மாநில திட்டக் குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
-
Aug 06, 2024 14:07 IST
காலை உணவு’ திட்டம், ‘மக்களை தேடி மருத்துவம்’ உள்ளிட்ட திட்டங்களால் தமிழ்நாடு மக்கள் பெற்றுள்ள வளர்ச்சியை திட்டக்குழுவின் அறிக்கை மூலம் தெரிந்து கொண்டோம்: ஸ்டாலின்
‘காலை உணவு’ திட்டம், ‘மக்களை தேடி மருத்துவம்’ உள்ளிட்ட திட்டங்களால் தமிழ்நாடு மக்கள் பெற்றுள்ள வளர்ச்சியை திட்டக்குழுவின் அறிக்கை மூலம் தெரிந்து கொண்டோம்; திமுக அரசின் திட்டங்கள் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்த அமைந்துள்ளது; ‘காலை உணவு’ திட்டத்தால் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது என்பதை விட மகிழ்ச்சியான செய்தி வேறு இருக்க முடியாது” - 5வது மாநில திட்டக் குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
-
Aug 06, 2024 13:41 IST
மகளிர் உரிமைத்தொகை மூலம் பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகமாகியுள்ளது: ஸ்டாலின்
“மகளிர் உரிமைத்தொகை மூலம் பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகமாகியுள்ளது; இலவச பேருந்து பயணத்தின் மூலம் பெண்களின் சமூக பங்களிப்பு அதிகமாகியுள்ளது; ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் மூலம் கல்லூரிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; கவனம் பெறாத துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தி புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும்” - 5வது மாநில திட்டக் குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
-
Aug 06, 2024 13:40 IST
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை/
-
Aug 06, 2024 13:39 IST
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
-
Aug 06, 2024 13:30 IST
தாயின் தூக்க மாத்திரையை உட்கொண்ட 4 வயது பெண் குழந்தை உயிரிழப்பு
சென்னை தாம்பரம் அருகே தாயின் தூக்க மாத்திரையை உட்கொண்ட 4 வயது பெண் குழந்தை பலி மகள் இறந்து சோகத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தாய் தற்கொலை முயற்சியால் பரபரப்பு.
-
Aug 06, 2024 12:33 IST
வங்கதேச விவகாரம் - மதியம் 2.30 மணிக்கு விளக்கம்
வங்கதேச விவகாரம் தொடர்பாக இன்று காலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. வங்கதேசத்தில் தற்போதைய நிலைமை, அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து விளக்கமளிக்கிறார் ஜெய்சங்கர்.
வங்கதேச விவகாரம் தொடர்பாக இன்று மதியம் 2.30 மணிக்கு மாநிலங்களவையில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
3.30 மணிக்கு மக்களவையிலும் விளக்கம் அளிக்கிறார் ஜெய்சங்கர்
-
Aug 06, 2024 12:30 IST
தமிழ்நாட்டு மீனவர்கள் இந்திய குடிமக்களா?, இல்லையா?: வைகோ
“தமிழ்நாட்டு மீனவர்கள் இந்திய குடிமக்களா?, இல்லையா?”
“கடந்த 40 ஆண்டுகளில் 875 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்;
மீனவர்கள் கொல்லப்படுவதை மத்திய அரசு தடுக்க தவறிவிட்டது.
இலங்கை கடற்படையினரால் இவ்வளவு துயரங்களுக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் ஆளாகிறார்கள் என்றால் அவர்கள் இந்திய குடிமக்களா?, இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்;
அவர்கள் இந்திய குடிமக்களாக இந்த நாடு கருதுமேயானால் இந்த கொடுமைகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் ?” - மாநிலங்களவையில் மதிமுக எம்.பி., வைகோ பேச்சு
-
Aug 06, 2024 11:59 IST
மாநில திட்டக் குழுக் கூட்டம் தொடக்கம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 5-வது மாநில திட்டக் குழுக் கூட்டம் தொடங்கியது. விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம் மற்றும் ஆக.9 முதல் நடைமுறைப்படுத்தப்படும் தமிழ்ப் புதல்வன் திட்டம் குறித்து ஆலோசனை
-
Aug 06, 2024 11:57 IST
காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய பெட்ரோல் குண்டு
தடயவியல் நிபுணர்கள், மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் ஆய்வு
சத்தம் கேட்டு வெளியே வந்து காவலர்கள் பார்த்த போது, மர்ம நபர்கள் தப்பியோட்டம்பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை
காவல் நிலையத்திலேயே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு
-
Aug 06, 2024 11:31 IST
போட்டியின்றி கோவை மேயர் தேர்வு
கோவை மாநகராட்சி மேயராக ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு. தி.மு.க கவுன்சிலர் ரங்கநாயகி தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் இவர் போட்டியின்றி தேர்வு.
-
Aug 06, 2024 11:24 IST
தாம்பரம்- ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்
55 மின்சார ரயில் சேவை ரத்து எதிரொலி - தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்
குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்
-
Aug 06, 2024 10:59 IST
அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது
வங்கதேச விவகாரம் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது
#WATCH | Delhi: All-party meeting underway in the Parliament on the issue of Bangladesh. EAM Dr S Jaishankar briefs the members of different political parties. pic.twitter.com/4Cl1rFRkyG
— ANI (@ANI) August 6, 2024 -
Aug 06, 2024 09:54 IST
வங்கதேச விவகாரம் தொடர்பாக இன்று அனைத்து கட்சி கூட்டம்
வங்கதேச விவகாரம் தொடர்பாக இன்று காலை 10 மணி அளவில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், கிரண் ரிஜுஜூ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்
வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் வங்கதேச விவகாரம் குறித்து விரிவாக எடுத்துரைக்க உள்ளார்.
-
Aug 06, 2024 09:53 IST
தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
7 - 11 செ.மீ. மழைக்கு வாய்ப்பு என்பதால் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7நாட்கள் மிதமான மழை பெய்யும்
- இந்திய வானிலை ஆய்வு மையம்
-
Aug 06, 2024 09:50 IST
கட்டட அனுமதிக்கான கட்டணம் உயர்வு: செய்திகளில் உண்மை இல்லை
சென்னை மாநகராட்சியில் கட்டட அனுமதிக்கான கட்டணம் உயர்த்தப்பட்டதாக பரவும் செய்திகளில் உண்மை இல்லை;
எளிமையாக கட்டட அனுமதி பெறும் நடுத்தர மக்களின் பலன்களை தடுக்கும் நோக்கில் தவறான கருத்துகள் பரப்படுகிறது
- சென்னை மாநகராட்சி விளக்கம் -
Aug 06, 2024 09:48 IST
தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.6,400-க்கும்; சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.51,200-க்கும் விற்பனையாகிறது
-
Aug 06, 2024 09:17 IST
மண்வெட்டும் இயந்திரத்தில் சிக்கி என்.எல்.சி. தொழிலாளி பலி
கடலூர் நெய்வேலி என்.எல்.சி.யில் சுரங்க விரிவாக்க பணியின் போது மூலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைவேல் (45) என்பவர் மண்வெட்டும் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
-
Aug 06, 2024 09:01 IST
வயநாட்டில் 8வது நாளாக தொடரும் மீட்பு பணி
கேரளா: வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் 8வது நாளாக நீடிக்கிறது.
#WATCH | Kerala: Rescue and relief operation in landslide-hit areas of Wayanad enters 8th day.
— ANI (@ANI) August 6, 2024
Death toll stands at 308 pic.twitter.com/Hlgcqpkb5S -
Aug 06, 2024 08:28 IST
டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் இமெயில் மூலம் 9 வது முறையாக செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் இமெயில் மிரட்டல் சம்பவம் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Aug 06, 2024 07:50 IST
22 தமிழக மீனவர்கள் கைது
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற 22 தமிழக மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்தது.
மேலும் அவர்களின் இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்து, இலங்கை காங்கேசம் துறைமுகம் கொண்டு சென்றனர்.
-
Aug 06, 2024 07:42 IST
ஷேக் ஹசீனாவின் அடைக்கலம் தற்காலிகமானதே: இந்திய அரசு
வங்கதேச உள்நாட்டு கலவரம் காரணமாக தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவுக்கு தற்காலிகமாக இங்கு தங்கும் அனுமதியை இந்திய அரசு வழங்கியுள்ளது.
ஹசீனா பிரிட்டனுக்கு இடம் பெயர்வதற்கான அனுமதி நிலுவையில் உள்ளதால் அவர் தற்காலிகமாக இந்தியாவில் தங்க வைக்கப்படுவார்.
-
Aug 06, 2024 07:41 IST
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக கடலோர பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது.
இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று முதல் 11-ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம்
-
Aug 06, 2024 07:41 IST
வங்கதேச நெருக்கடி: பிரதமர் மோடி ஆலோசனை
வங்கதேச நாட்டில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா டெல்லி அருகே உள்ள ஹிண்டண் விமானப்படை தளத்திற்கு ராணுவ ஹெலிகாப்டரில் வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று ( ஆக. 5) நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீத்தாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
-
Aug 06, 2024 07:41 IST
இந்தியா- வங்கதேசம் இடையே ரயில், விமான சேவை ரத்து
வங்கதேச உள்நாட்டு கலவரம் தீவிரமடைந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால், இந்தியா- வங்கதேசம் இடையேயான ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவிப்பு
அதேபோல வங்கதேசத்தில் நிலவும் பதற்றத்தை கருத்தில் கொண்டு இந்தியாவில் இருந்து டாக்காவுக்கும், டாக்காவில் இருந்து இந்தியாவுக்கும் இயக்க திட்டமிடப்பட்டிருந்த அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
வங்கதேச நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், முன்பதிவு பயணிகளின் கட்டணம் திரும்பி அளிக்கப்படும் அல்லது பயணத் தேதி மாற்ற அனுமதிக்கப்படும்- ஏர் இந்தியா
-
Aug 06, 2024 07:40 IST
ஷேக் ஹசீனா இனி அரசியலுக்கு திரும்ப மாட்டார்- மகன் சஜீப் வஜீத் உறுதி
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இனி அரசியலுக்கு திரும்ப மாட்டார் என்று அவரது மகனும் தலைமை ஆலோசகருமான சஜீப் வஜீத் தெரிவித்துள்ளார்.
இவ்வளவு கடின உழைப்புக்குப் பிறகு சிறுபான்மையினர் தனக்கு எதிராக திரும்பியதால் ஷேக் ஹசீனா மிகவும் அதிருப்தியடைந்து விட்டார். ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகுவது குறித்து ஞாயிற்றுக்கிழமை முதல் ஆலோசித்து வந்தார். இனி அவர் அரசியலுக்கு திரும்பி வரமாட்டார்.
-சஜீப் வஜீத்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.