Tamil News Highlights: தமிழ்நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது பிளஸ் 1 பொதுத்தேர்வு

Tamil News Today Updates-03 March 2024- இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil News Today Updates-03 March 2024- இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasasa

IE Tamil Updates

பெட்ரோல், டீசல் விலை 

Advertisment

652-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

தமிழக- கர்நாடக எல்லையில் தீவிர கண்காணிப்பு 

பெங்களுரூ குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழக- கர்நாடக எல்லையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

  • Mar 03, 2024 22:18 IST

    பா.ஜ.க – ஐ.ஜே.கே இடையே கூட்டணி பேச்சுவார்த்தை

    இந்திய ஜனநாயக கட்சியுடன் பா.ஜ.க கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது



  • Mar 03, 2024 20:57 IST

    56.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்கப்பட்டுள்ளது; சுகாதாரத்துறை அறிவிப்பு

    தமிழ்நாட்டில் இன்று 56.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது



  • Mar 03, 2024 20:37 IST

    காஞ்சிபுரத்தில் 150 சவரன் நகை கொள்ளை; போலீஸ் விசாரணை

    காஞ்சிபுரம் விளக்கடி கோவில் தெரு பகுதியில் நகைக்கடை அதிபரின் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. 150 சவரன் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் கொள்ளை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது



  • Mar 03, 2024 20:37 IST

    காஞ்சிபுரத்தில் 150 சவரன் நகை கொள்ளை; போலீஸ் விசாரணை

    காஞ்சிபுரம் விளக்கடி கோவில் தெரு பகுதியில் நகைக்கடை அதிபரின் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. 150 சவரன் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் கொள்ளை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது



  • Mar 03, 2024 20:04 IST

    தருமபுரம் ஆதீன மடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு

    தருமபுரம் ஆதீன மடத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. போலி வீடியோ மிரட்டல் விவகாரத்தை தொடர்ந்து 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்



  • Mar 03, 2024 19:38 IST

    கரூரில் 100 டிகிரி வெயில்

    தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக கரூரில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது. அடுத்தப்படியாக ஈரோடு, சேலத்தில் 99 டிகிரி வெயில் கொளுத்தியது.



  • Mar 03, 2024 19:18 IST

    மாமல்லபுரத்தில் 3 பேரின் உடல்கள் மீட்பு

    மாமல்லபுரம் கடல் அலையில் சிக்கி மாயமான ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 4 மாணவர்களின் உடலை 2வது நாளாகத் தேடி வந்த நிலையில், 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சேஷா ரெட்டி, மோனிஷ் மற்றும் பெத்துராஜ் பிரபு ஆகியோரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.



  • Mar 03, 2024 18:58 IST

    பெண் போலீசை 'டார்லிங்' என அழைத்த மது பிரியர்; ஒரு மாதம் சிறை!

    பெண் போலீசை மது போதையில் மது பிரியர் ஒருவர், “டார்லிங்” என அழைத்துள்ளார். இந்த வழக்கில், மது பிரியருக்கு 1 மாத சிறைத் தண்டனை விதித்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    இந்தத் தீர்ப்பில், முன்பின் தெரியாத பெண்ணை டார்லிங் என அழைப்பது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 354 ஏ-இன் கீழ் பாலியல் வன்கொடுமைக்கு ஈடானது எனத் தெரிவித்துள்ளது.



  • Mar 03, 2024 18:54 IST

    அரசியலில் இருந்து விலகுகிறார் ஹர்ஷ் வர்தன்

    பாரதிய ஜனதா வேட்பாளர் பட்டியலில் இடம் பெறாத நிலையில், முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.



  • Mar 03, 2024 18:33 IST

    கோவை தொகுதி கமல்ஹாசனுக்கா? கே. பாலகிருஷ்ணன் பேட்டி

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வசம் உள்ள கோவை மக்களவை தொகுதி கமல்ஹாசனுக்கு ஒதுக்கப்படலாம் எனத் தகவல் வெளியான நிலையில் அது தொடர்பாக பேசிய மார்க்சிஸ்ட் கே. பாலகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் கமல்ஹாசன் எங்கு வேண்டும் என்றாலும் போட்டியிடலாம்” என்றார்.



  • Mar 03, 2024 18:16 IST

    தமிழ்நாட்டில் போதைப் பொருள் அதிகரிப்பு; எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    “தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது; மாநிலம் போதைப் பொருள் கிடங்காக மாறிவிட்டது. நாளைய போராட்டத்தோடு நிச்சயமாக இது நின்றுவிடப்போவதில்லை.
    போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய தமிழ்நாடு அரசைக் கண்டித்து நாளை, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்” என முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.



  • Mar 03, 2024 18:00 IST

    டெல்லி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு

    மார்ச் 10ஆம் தேதி மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நாடு முழுவதும் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.



  • Mar 03, 2024 17:44 IST

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பேச முழு அதிகாரம் உண்டு; அண்ணாமலை

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பற்றி பேச பிரதமர் மோடிக்கு முழு தகுதி உண்டு என தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



  • Mar 03, 2024 17:29 IST

    திருச்செந்தூர் ரயிலில் மு.க. ஸ்டாலின் பயணம்; மயிலாடுதுறை செல்கிறார்

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை எழும்பூர்- திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு புறப்பட்டார்.
    நாளை காலை இவர் மயிலாடுதுறை செல்கிறார். அங்கு ரூ.114 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 7 மாடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை காலை 10 மணிக்கு திறந்துவைக்கிறார்.



  • Mar 03, 2024 17:05 IST

    ராமேஸ்வரத்தில் பிண்டப் பூஜைக்கு பண வசூலா? தி.மு.க.வுக்கு எடப்பாடி கடும் கண்டனம்


    “இராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிண்டப் பூஜை செய்ய கூட கோயில் நிர்வாகத்திற்கு பணம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ள இந்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்” என முன்னாள் முதல் அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.



  • Mar 03, 2024 16:59 IST

    எழும்பூரில் இருந்து மயிலாடுதுறைக்கு விரைவு ரயிலில் புறப்பட்டார் மு.க. ஸ்டாலின் 

    மயிலாடுதுறையில் நாளை நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் விரைவு ரயிலில் புறப்பட்டார். எழும்பூர் ரயில் நிலையத்தில் தி.மு.க தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு, முதலமைச்சரை வழியனுப்பி வைத்தனர்.



  • Mar 03, 2024 16:52 IST

    போதைப்பொருள் சம்பவத்தில் காவல்துறை கண்காணிக்க வேண்டும் - அண்ணாமலை

    தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை: “போதைப்பொருள் சம்பவத்தில் காவல்துறை கண்காணிக்க வேண்டும். போதைப்பொருள் வழக்கில் கைதானோரை காவல்துறை கண்காணிகாததே பிரச்னை. 11 ஆண்டுகளுக்கு முன் கைதான ஜாபர் சாதிக்கை காவல்துறை ஏன் கண்காணிக்கவில்லை? போதைப் பொருள் வழக்கில், கைதான ஜாபர் சாதிக் உயர் அதிகாரிகளுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.



  • Mar 03, 2024 16:52 IST

    போதைப்பொருள் சம்பவத்தில் காவல்துறை கண்காணிக்க வேண்டும் - அண்ணாமலை

    தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை: “போதைப்பொருள் சம்பவத்தில் காவல்துறை கண்காணிக்க வேண்டும். போதைப்பொருள் வழக்கில் கைதானோரை காவல்துறை கண்காணிகாததே பிரச்னை. 11 ஆண்டுகளுக்கு முன் கைதான ஜாபர் சாதிக்கை காவல்துறை ஏன் கண்காணிக்கவில்லை? போதைப் பொருள் வழக்கில், கைதான ஜாபர் சாதிக் உயர் அதிகாரிகளுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.



  • Mar 03, 2024 15:58 IST

    3 தொகுதிகள் பெறுவதில் உறுதியாக உள்ளோம் - திருமாவளவன்

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: “தி.மு.க கூட்டணியில் 3 தொகுதிகள் பெறுவதில் உறுதியாக உள்ளோம். அ.தி.மு.க அழைப்பு உள்நோக்கம் ​கொண்டது. தி.மு.க கூட்டணியில் 3 தொகுதிகள் பெறுவதில் உறுதியாக உள்ளோம்” என்று கூறினார்.



  • Mar 03, 2024 15:56 IST

    அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த பா.ஜ.க முன்னாள் அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

    பா.ஜ.க எம்.பி.யும் மத்திய முன்னாள் அமைச்சருமான ஹர்ஷ்வர்தன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். டெல்லியில் உள்ள தனது ENT மருத்துவமனையில் மீண்டும் மருத்துவர் பணியில் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளார். ஹர்ஷ்வர்தன் தற்போது எம்.பி.யாக உள்ள டெல்லி சாந்தினி சவுக் தொகுதிக்கு பிரவீன் என்ற ஒருவரை வேட்பாளராக பா.ஜ.க அறிவித்துள்ளது.



  • Mar 03, 2024 15:34 IST

    அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு; புதிய அமைபைத் தொடங்கிய ஓ.பி.எஸ்

    அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார். மாநிலத் தலைவர்,  மாநிலப் பொறுப்பாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் பதவிகளுக்கு நியமனங்கள் மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.



  • Mar 03, 2024 15:32 IST

    போதைப்பொருள் புழக்கம்: தி.மு.க அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - இ.பி.எஸ். அறிவிப்பு

    தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறி வருகிறது. போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் நாளை மாவட்டம் தோறும் தலைநகரங்களில் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.



  • Mar 03, 2024 15:27 IST

    ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்பு

    பாகிஸ்தானின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.



  • Mar 03, 2024 15:01 IST

    பிரதமர் நரேந்திர மோடியின் வருகையால் தமிழ்நாட்டில் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை

    “பிரதமர் நரேந்திர மோடியின் வருகையால் தமிழ்நாட்டில் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை; தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக பூஜ்ஜியம் தான்; தமிழ்நாட்டில் பாஜக சமூக வலைதளங்களை நம்பிதான் அரசியல் செய்கிறது; அதிமுகவை யாராலும் உருட்டவோ மிரட்டவோ முடியாது; அதிமுகவுக்கு என தனித்தன்மை உள்ளது , யாரையும் நம்பி இல்லை; மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக இடையே தான் போட்டி, களத்தில் இல்லாத பாஜக என்ற கட்சியை பற்றிய பேச்சுக்கே இடமில்லை”- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி



  • Mar 03, 2024 14:08 IST

    மேற்கு வங்கம், அசன்சோல் தொகுதி வேட்பாளர் நடிகர் பவன் சிங் திடீர் விலகல்

    மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்ட நிலையில் அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த மேற்கு வங்கம், அசன்சோல் தொகுதி வேட்பாளர் நடிகர் பவன் சிங் திடீர் விலகல்.



  • Mar 03, 2024 13:36 IST

    பாஜக குறித்து ஜெயக்குமார் விமர்சனம்

    பாஜக குறித்து ஜெயக்குமார் விமர்சனம். காலி சேர்கள் மத்தியில் அண்ணாமலை பேசுகிறார்" எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை பயன்படுத்த பாஜக வெட்கப்பட வேண்டும் - ஜெயக்குமார் 



  • Mar 03, 2024 13:35 IST

    தேமுதிக, அதிமுக போல அனைத்து தொகுதிகளிலும் தற்போது தனித்து போட்டியிடுவது நாதக மட்டும் தான்

    நாதகவிற்கு கரும்பு விவசாயி சின்னம் வருகிறதோ இல்லையோ நான் போராடுவேன்; விவசாயி சின்னம் வேண்டும் என நீதி கேட்டு தான் உச்சநீதிமன்றம் சென்றோம் நீதிபதி ராசி இல்லை என்று சொல்கிறார்; நாளை டெல்லி உயர் நீதிமன்றத்தில் சின்னம் தொடர்பான வழக்கு வரவிருக்கிறது, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு தான் சின்னம் குறித்து முடிவு செய்யப்படும்; நாம் தமிழர் கட்சி பெயரை கூறுவதில் அப்படி என்ன கஷ்டம்; தேமுதிக, அதிமுக போல அனைத்து தொகுதிகளிலும் தற்போது தனித்து போட்டியிடுவது நாதக மட்டும் தான்- சீமான்



  • Mar 03, 2024 13:29 IST

    பிரதமர் வருகை - 5 அடுக்கு பாதுகாப்பு

    நாளை சென்னை நந்தனத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.



  • Mar 03, 2024 13:03 IST

    தி.மு.க-ம.தி.மு.க இடையே 4-ம் கட்ட பேச்சுவார்த்தை : நாளை நடக்க வாய்ப்பு

    சென்னை: மக்களவைத் தேர்தலுக்ககான தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க-ம.தி.மு.க இடையே 4-ம் கட்ட பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நாளை நடைபெற உள்ளதாக தகவல்



  • Mar 03, 2024 13:00 IST

    பாஜக நிர்வாகிகளின் இந்த செயல்களை அதிமுக வன்மையாக கண்டிக்கின்றது

    புதுச்சேரியில் 2 முறை ரங்கசாமி முதலமைச்சராக ஆதரவு அளித்தது அதிமுக தான்; புதுச்சேரி மாநில உரிமைகளுக்காக போராடிய அதிமுகவுக்குத்தான் முதலமைச்சர் ரங்கசாமி ஆதரவு அளித்திருக்க வேண்டும். “பிரதமர் நரேந்திர மோடி அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை புகழ்ந்து உண்மையை பேசினார், அது அவரது நிலைப்பாடு; இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு புதுச்சேரி பாஜகவினர் தேர்தல் துண்டு பிரசுரங்களில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படத்தை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் மலிவு விளம்பரத்தை தேடுகின்றனர்; பாஜக நிர்வாகிகளின் இந்த செயல்களை அதிமுக வன்மையாக கண்டிக்கின்றது- புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் பேட்டி



  • Mar 03, 2024 12:16 IST

    பிரபல ஃபுட் ஸ்ட்ரீட்டில் தீவிபத்து

    சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல ஃபுட் ஸ்ட்ரீட்டில் தீ விபத்து. 3 பணியாளர்கள் காயம் காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதி - போலீசார் விசாரணை



  • Mar 03, 2024 12:10 IST

    ரயில்வே விளையாட்டு மைதானம் தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டதை பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன்

    “தமிழ்நாடு வருவாய் துறைக்கு சொந்தமான மதுரை அரசரடி விளையாட்டு மைதானம் முன்பொரு காலத்தில் கண்மாய் ஆக இருந்தது; இந்த நிலத்தை ரயில்வே நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது; விரைவில் இந்த வழக்கில் 100% வெற்றி பெற்று விளையாட்டு மைதானத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மட்டுமே அனுமதிக்க ஏற்பாடு செய்யப்படும்” - மதுரையில் எம்.பி சு.வெங்கடேசன் பேட்டி. மதுரை அரசரடி ரயில்வே விளையாட்டு மைதானம் தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டதை பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன்



  • Mar 03, 2024 11:40 IST

    குண்டு வெடிப்பு - 8 தனிப்படைகள் அமைப்பு

    கர்நாடகா, பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு தொடர்பாக 8 தனிப்படைகள் அமைப்பு விரைவில் குற்றவாளியை பிடிப்போம் - கர்நாடக உள்துறை அமைச்சர். 



  • Mar 03, 2024 10:49 IST

    புதுச்சேரி மக்களவை பாஜகவிற்கு ஒதுக்கீடு: ரங்கசாமி

    புதுச்சேரி மக்களவை தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு



  • Mar 03, 2024 10:05 IST

    சிறிய வகை அணு உலைகள் அமைக்க என்.எல்.சி திட்டம்

    நிலக்கரி சுரங்கங்களில் 300 மெகாவாட்டுக்கு குறைவாக மின்சார உற்பத்தி செய்யும் வகையில் சிறிய வகை அணு உலைகள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக  என்.எல்.சி நிர்வாக இயக்குநர் தகவல். இந்திய அணுசக்தி கழகத்துடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறியுள்ளார். 2070-ம் ஆண்டுக்குள் 0 கரியமில வாயு வெளியேற்றம் என்ற இலக்கை எட்ட இந்த சிறிய அணு உலைகள் திட்டம் உதவும் எனவும் அவர் கூறியுள்ளார்.



  • Mar 03, 2024 09:42 IST

    மஞ்சும்மல் பாய்ஸ்: கேரளாவை விட தமிழ்நாட்டில் அதிக வசூல்

    மலையாள படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்' ஒரே நாளில் கேரளாவை விட தமிழ்நாட்டில் அதிக வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கொடைக்கானலில் குணா குகையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படம் கேரளாவை போன்று தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் டப்பிங் இல்லாமல் படம் திரையிடப்பட்டாலும், பல்வேறு திரையரங்குகளில் ஏராளமான காட்சிகள் ஹவுஸ்புல் ஆகியுள்ளன.

    குறிப்பாக படம் வெளியாகி 10வது நாளில் தமிழ்நாட்டில் மட்டும் மூன்றரை கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது. 



  • Mar 03, 2024 09:14 IST

    சென்னையில் 11 ஸ்பா சென்டர்களுக்கு சீல்

    சென்னையில் உரிமம் இல்லாமல் இயங்கி வந்த 11 ஸ்பா சென்டர்களுக்கு சீல். ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடந்த‌து கண்டுபிடிப்பு



  • Mar 03, 2024 09:14 IST

    சின்மயியை அனுமதிக்க மாட்டோம்- ராதாரவி

    லோகேஷ் கனகராஜ்க்கு டப்பிங் யூனியன் விதி தெரியவில்லை. விதிகளை அறியாமல் லியோ படத்தில் சின்மயி ஒப்பந்தம். சின்மயி மீண்டும் வந்தாலும் அனுமதிக்க மாட்டோம் - நடிகர் ராதாரவி திட்டவட்டம் 



  • Mar 03, 2024 08:59 IST

    ராமேஸ்வரம் கஃபே மார்ச் 8-ம் தேதி மீண்டும் திறப்பு

    "பாதிப்புகள் சரிசெய்யப்பட்டு ராமேஸ்வரம் கஃபே, மார்ச் 8-ம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது"-ராகவேந்திர ராவ், பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே CEO



  • Mar 03, 2024 08:57 IST

    கடற்கரை- தாம்பரம் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள்

    புறநகர் மின்சார ரயில்கள் ரத்து காரணமாக கூடுதல் பயணிகளை கையாள கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 150 கூடுதல் பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன. 



  • Mar 03, 2024 08:54 IST

    போலியோ சொட்டு மருந்து: ஸ்டாலின் பதிவு

    அன்பார்ந்த பெற்றோர்களே ஓர் வேண்டுகோள்! போலியோ இல்லாச் சமுதாயம் தொடர, இன்றைய போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து வழங்குங்கள்... நலமான குழந்தைகளே வளமான எதிர்காலத்திற்கான ஒளி- முதல்வர் ஸ்டாலின் X பதிவு



  • Mar 03, 2024 08:54 IST

    போலியோ சொட்டு மருந்து: ஸ்டாலின் பதிவு

    அன்பார்ந்த பெற்றோர்களே ஓர் வேண்டுகோள்! போலியோ இல்லாச் சமுதாயம் தொடர, இன்றைய போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து வழங்குங்கள்... நலமான குழந்தைகளே வளமான எதிர்காலத்திற்கான ஒளி- முதல்வர் ஸ்டாலின் X பதிவு



  • Mar 03, 2024 08:48 IST

    மின்சார ரயில்கள் ரத்து

    சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து,



  • Mar 03, 2024 08:47 IST

    திருப்பதி கோயிலில் போலியோ சொட்டு மருந்து முகாம்

    திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த பக்தர்களின் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தொடங்கியது. திருப்பதி தேவஸ்தான தலைமை மருத்துவ அதிகாரி நர்மதா தலைமையில் ஏழுமலையான் கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த செயல் அதிகாரி தர்மா ரெட்டி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து செலுத்தி முகாமை தொடங்கி வைத்தார். 



Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: