Advertisment

Tamil News Highlights: தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

Tamil News Today Updates- 02 March 2024- இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்கம்...

Tamilnadu: பெட்ரோல், டீசல் விலை

Advertisment

651-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2266 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 746 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 466 மில்லியன் கன அடியாக உள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Mar 02, 2024 21:18 IST
    காயத்ரி ரகுராம்-க்கு அ.தி.மு.க.வில் பொறுப்பு

    அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக காயத்ரி ரகுராம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.



  • Mar 02, 2024 21:17 IST
    அதிமுக உடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி?

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சந்திப்பு



  • Mar 02, 2024 20:20 IST
    மக்களவைத் தேர்தலுக்கான 195 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க

    மக்களவைத் தேர்தலுக்கான 195 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக வெளியிட்டது, பிரதமர் மோடி மீண்டும் வாரணாசியில் போட்டியிடுகிறார்



  • Mar 02, 2024 20:12 IST
    புதிதாக திருவோணம் தாலுகா உருவாக்கம்

    தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை தாலுகாகளை சீரமைத்து, புதிதாக திருவோணம் தாலுகா உருவாக்கம். காவாளப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர், வெங்கரை மற்றும் 45 வருவாய் கிராமங்களும் திருவோணத்துடன் சேர்ப்பு



  • Mar 02, 2024 20:09 IST
    தமிழகத்தில் 25 தொகுதியில் பாஜக போட்டி : நயினார் நாகேந்திரன்

    தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிடும் "நெல்லை தொகுதியில் என்னை வேட்பாளராக நிறுத்தினால் நிற்பேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.



  • Mar 02, 2024 19:04 IST
    ஜான் பாண்டியன் உடன் பா.ஜ.க பேச்சுவார்த்தை

    தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனுடன், தமிழக பா.ஜ.க தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சென்னை சூளைமேட்டில் உள்ள ஜான் பாண்டியன் இல்லத்தில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது



  • Mar 02, 2024 18:56 IST
    வாரணாசியில் மோடி மீண்டும் போட்டி

    மக்களவை தேர்தல் 2024: வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுவதாக பா.ஜ.க அறிவித்துள்ளது



  • Mar 02, 2024 18:26 IST
    கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர்கள் தேர்வு ரத்து

    கூடங்குளம் அணுமின் நிலைய வளாக மையத்தில் நாளை நடைபெறவிருந்த அணுமின் நிலைய பணியாளர்கள் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அணுமின் நிலையத்திற்கு நிலம் தந்த உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாகக் கூறி நாளை உள்ளூர் மக்கள் முற்றுகை போராட்டம் அறிவித்ததை அடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது



  • Mar 02, 2024 18:04 IST
    தாம்பரம் - கடற்கரை இடையே நாளை கூடுதல் பேருந்துகள் இயக்கம்

    பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் நாளை 44 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் நாளை கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது



  • Mar 02, 2024 17:41 IST
    பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் மாலை வெளியாக வாய்ப்பு

    பா.ஜ.க.,வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 150 வேட்பாளர்களை கொண்ட முதற்கட்ட பட்டியல் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகலாம். உத்தர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நெல்லை, குமரி தொகுதிகளுக்கு பா.ஜ.க வேட்பாளர் அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்புள்ளது



  • Mar 02, 2024 17:12 IST
    ஆதீனத்திற்கு மிரட்டல்; அ.தி.மு.க நிர்வாகிக்கு போலீஸ் வலை

    தருமபுரம் ஆதீனம் மீது அவதூறு பரப்பும் வகையில் போலி ஆடியோ, வீடியோ வைத்து மிரட்டல் விடுத்த விவகாரத்தில், அ.தி.மு.க.,வை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவரை கைது செய்ய தனிப்படை போலீசார் புதுச்சேரி விரைந்துள்ளனர்



  • Mar 02, 2024 16:36 IST
    பேச்சுவார்த்தையில் இழுபறி? - திருமாவளவன் விளக்கம்

     

    "தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு தி.மு.க தரப்பில் இன்று அழைப்பு விடுத்தனர், வி.சி.க உயர்நிலை குழு கூட்டம் முடிய தாமதமானதாலேயே தி.மு.க குழுவை சந்திக்க முடியவில்லை. மீண்டும் நேரம் ஒதுக்க கோரியுள்ளோம், தேவைப்பட்டால் தி.மு.க தலைவர் ஸ்டாலினையும் நேரில் சந்திப்போம்" வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 



  • Mar 02, 2024 16:36 IST
    தமிழக - கர்நாடக எல்லையில் தீவிர கண்காணிப்பு

    பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக, தமிழக - கர்நாடக எல்லையான கக்கநல்லா சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்தி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா பயணிகள் போர்வையில் நுழைய முயல்பவர்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • Mar 02, 2024 16:15 IST
     முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு தமிழ்நாடு ஆல் அவுட்

    ரஞ்சி கோப்பை தொடரில் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் இன்று முதல் தொடங்கிய 2வது அரையிறுதிப் போட்டியில் மும்பை - தமிழ்நாடு அணிகள் மோதி வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது 



  • Mar 02, 2024 16:10 IST
    சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

    மரக்காணம் அருகே அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சாலையின் குறுக்கே சென்ற இருசக்கர வாகன ஓட்டியால் விபத்து நிகழ்ந்துள்ளது. 

    ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 



  • Mar 02, 2024 16:09 IST
    சென்னையில் அமலாக்கத்துறை சோதனை

    சென்னையில் தி.நகர், அண்ணா நகர், கோட்டூர்புரம் உட்பட 5க்கும் மேற்பட்ட இடங்களில்  அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கட்டுமானம் மற்றும் கெமிக்கல் நிறுவன அதிபர்களின் அலுவலகம், வீடுகளில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். 



  • Mar 02, 2024 15:29 IST
    கூடங்குளம் அணுமின் நிலையம் நாளை முற்றுகை - பொதுமக்கள் முடிவு 

    நெல்லை கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர்கள் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் நிர்வாகத்தைக் கண்டித்து நாளை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளாட்சி பிரதிநிதிகள், நிலம் கொடுத்தவர்கள், பொதுமக்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். 

    1999-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் எனவும், உள்ளூர் மக்களைப் புறக்கணித்து நடத்தப்படும் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.



  • Mar 02, 2024 15:05 IST
    பா.ஜ.க-விற்கு ஆதரவு - பெஸ்ட் ராமசாமி அறிவிப்பு 

    2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-விற்கு கொங்குநாடு முன்னேற்றக் கழகம் ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் பெஸ்ட் ராமசாமி அறிவித்துள்ளார். 'மீண்டும் பிரதமராக வந்தால் நமது கோரிக்கைகளை, சொல்லாமலே செய்வேன் என மோடியே கூறியுள்ளார்' என்றும் பெஸ்ட் ராமசாமி தெரிவித்துள்ளார். 



  • Mar 02, 2024 14:30 IST
    பா.ஜ.க-வின் மாநில மையக் குழு கூட்டம் 

     

    வரும் 4ம் தேதி பா.ஜ.க-வின் மாநில மையக் குழு கூட்டம் கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

     



  • Mar 02, 2024 14:28 IST
    தி.மு.க - வி.சி.க கூட்டணி இன்று பேச்சுவார்த்தை இல்லை

    தி.மு.க - வி.சி.க இடையே இன்று பேச்சுவார்த்தை இல்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 2 தனி தொகுதி, ஒரு பொது தொகுதியை ஒதுக்க கோரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. 



  • Mar 02, 2024 13:31 IST
    ராமநாதபுரத்தில் நவாஸ் கனி மீண்டும் போட்டி

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க கூட்டணி கட்சியின் வேட்பாளராக மீண்டும் நவாஸ் கனி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 



  • Mar 02, 2024 13:11 IST
    பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

    தமிழ் மாநில காங்கிரஸ் அசைக்க முடியாத தேச பக்தியோடு செயல்பட்டு வருகிறது

    வரும் 4ஆம் தேதிக்கு பிறகு 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்

    பாஜக, த.மா.கா இடையே சுமுகமாக பேச்சுவார்த்தை தொடர்கிறது

    - பொன்.ராதாகிருஷ்ணன்



  • Mar 02, 2024 13:11 IST
    மார்ச் 8ம் தேதி வரை வறண்ட வானிலை

    இன்று (மார்ச் 2) முதல் மார்ச் 8ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்

    - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Mar 02, 2024 12:48 IST
    ஜி.கே.வாசன் பேட்டி

    தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது

    நாட்டு நலன் கருதி பிரதமர் மோடி 3வது முறையும் ஆட்சியமைக்க வேண்டும்"

    - பாஜக உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி



  • Mar 02, 2024 12:22 IST
    காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி

    டெல்லியில் உள்ள தலைவர்களுடன் தொகுதிப்பங்கீடு தொடர்பாக திமுக நிர்வாகிகள் தொலைப்பேசியில் பேசி வருகின்றனர்

    திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் எந்த சலசலப்பும் இல்லை

    தொகுதி ஒதுக்கீட்டு இலக்கங்களை காங்கிரஸ் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது

    - திமுக உடனான தொகுதிப்பங்கீடு தொடர்பாக கேள்விக்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி



  • Mar 02, 2024 11:49 IST
    பேச்சுவார்த்தை தொடக்கம்

    மக்களவைத் தேர்தல் தொடர்பாக பாஜக மற்றும் தமாகா இடையேயான பேச்சுவார்த்தை தொடக்கம்

    பாஜகவிடம் 4 மக்களவை தொகுதிகள், 1 மாநிலங்களவை பதவி கேட்கும் தமிழ் மாநில காங்கிரஸ்



  • Mar 02, 2024 11:49 IST
    குண்டுவெடிப்பு- முதல்வர் சித்தராமையா தகவல்

    மங்களூரு குக்கர் குண்டு வெடிப்புக்கும் பெங்களூரு குண்டு வெடிப்புக்கும் சம்பந்தமில்லை

    பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு விஷயத்தில் பாஜக அரசியல் செய்யக் கூடாது

    பெங்களூரு குண்டுவெடிப்பு விஷயத்தில் விசாரணை குழு அறிக்கை வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

    - முதல்வர் சித்தராமையா



  • Mar 02, 2024 11:30 IST
    தபால் ஓட்டு - வயது வரம்பு உயர்வு

    தபால் வாக்கு மூலம் முதியோர் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 85 ஆக உயர்வு

    தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்வதற்கான அறிவிப்பைவெளியிட்டது மத்திய அரசு



  • Mar 02, 2024 11:16 IST
    திமுக - தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு

    மக்களவைத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்;

    திமுக 40 தொகுதிகளில் எந்த தொகுதியை  ஒதுக்கினாலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மக்களவைத் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது

    நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு நடத்திட வேண்டும் என்ற கோரிக்கையையும் திமுகவிடம் வைத்துள்ளோம்

    - சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொதிப் பங்கீடு குறித்து திமுக உடனான முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் தவாக தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ பேட்டி



  • Mar 02, 2024 10:48 IST
    அரசியல் கடமையில் இருந்து விடுவிக்க வேண்டும்: கம்பீர்

    கிரிக்கெட் இருப்பதால் அரசியல் கடமையில் இருந்து விடுவிக்க வேண்டும்: கம்பீர்

    கிரிக்கெட் பொறுப்புகள் இருப்பதால் அரசியல் கடமையில் இருந்து விடுவிக்க வேண்டும். மக்களுக்காக பணியாற்ற வாய்ப்பளித்த பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு நன்றி. டெல்லியை சேர்ந்த பாஜ.க எம்.பி கவுதம்  கம்பீர் அக்கட்சி தலைவர் ஜெ.பி நட்டாவுக்கு  கோரிக்கை. எம்.பியான கவுதம் கம்பீர் ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.



  • Mar 02, 2024 10:19 IST
     V3 Online TV நிறுவன மேலாளரிடம் விசாரணை

    விஜய ராகவனை விசாரணைக்கு அழைத்து போது நெஞ்சு வலி எனக்கூறி, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி

    200க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் மருத்துவமனை முன் குவிந்ததால் பரபரப்பு



  • Mar 02, 2024 10:19 IST
     V3 Online TV நிறுவன மேலாளரிடம் விசாரணை

    விஜய ராகவனை விசாரணைக்கு அழைத்து போது நெஞ்சு வலி எனக்கூறி, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி

    200க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் மருத்துவமனை முன் குவிந்ததால் பரபரப்பு



  • Mar 02, 2024 10:16 IST
    ஆவின் ஐஸ்கிரீம் விலை ரூ.2-5 வரை உயர்வு

    ஆவின் ஐஸ்கிரீம்களின் விலையை ₹2 முதல் ₹5 வரை உயர்த்தியுள்ளது அந்நிறுவனம், இந்த விலை உயர்வு நாளை (மார்ச் 3) முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது



  • Mar 02, 2024 10:08 IST
    ம.ம.கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்க கோரிக்கை

    வரும் மக்களவைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். தொகுதி பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு பின், ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி



  • Mar 02, 2024 09:45 IST
    SETC பயணிகளுக்கு புதிய திட்டம் அறிமுகம்

    SETC பயணிகளுக்கு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய தமிழ்நாடு அரசு

    அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பயணிகள் கூடுதலாக ரூ.40 செலுத்தி கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து சென்னையின் பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து  கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கும் செல்லும் திட்டம் அறிமுகம். பயணத்திற்கு 4 மணி நேரத்திற்குள் இந்த டிக்கெட்டை பயன்படுத்த வேண்டும்.  



  • Mar 02, 2024 09:45 IST
    SETC பயணிகளுக்கு புதிய திட்டம் அறிமுகம்

    SETC பயணிகளுக்கு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய தமிழ்நாடு அரசு

    அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பயணிகள் கூடுதலாக ரூ.40 செலுத்தி கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து சென்னையின் பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து  கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கும் செல்லும் திட்டம் அறிமுகம். பயணத்திற்கு 4 மணி நேரத்திற்குள் இந்த டிக்கெட்டை பயன்படுத்த வேண்டும்.  



  • Mar 02, 2024 09:19 IST
    எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பறவைகள் மீட்டு சிகிச்சை

    சென்னை எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பறவைகள். பறவைகளை மீட்டு சிகிச்சை அளித்த தனியார் தொண்டு நிறுவனங்கள். இயல்பு நிலைக்கு திரும்பிய பறவைகள் மீண்டும் பறக்கவிடப்பட்டன



  • Mar 02, 2024 09:19 IST
    பா.ஜ.க - த.மா.கா இன்று பேச்சுவார்த்தை

    பாஜக - தமிழ் மாநில காங்கிரஸ் இடையே இன்று தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை

    மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட பா.ஜ.க குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்



  • Mar 02, 2024 09:17 IST
    பள்ளி நிதி கையாடல்: தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

    பள்ளி நிதியை கையாடல் செய்த புகாரில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்.

    பள்ளி நிதியை மனைவி பெயருக்கு மாற்றியது, மாணவர்களிடம் முறைகேடாக பணம் வசூல் செய்தது உள்ளிட்ட புகார்களில் சிக்கிய சக்திவேல்



  • Mar 02, 2024 09:03 IST
    பெங்களூரு குண்டுவெடிப்பு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு 

    பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேகப்படும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியானது

    இவ்வழக்கில் ஏற்கனவே ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

     



  • Mar 02, 2024 09:02 IST
    விளவங்கோடு இடைத்தேர்தல்? சத்யபிரதா சாகு விளக்கம் 

    மக்களவை தேர்தல் உடன் விளவங்கோடு இடைத்தேர்தல்? சத்யபிரதா சாகு விளக்கம் 

    மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு இடைத்தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு செய்யும். திருக்கோவிலூர் தொகுதியை காலியாக அறிவிப்பது குறித்து இதுவரை தகவல் இல்லை-தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பேட்டி



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment