Advertisment

Tamil news today : பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க அமைச்சர் சேகர் பாபு வருகை

Tamil Nadu News, Tamil News: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news today : பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க அமைச்சர் சேகர் பாபு வருகை

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

திரவுபதி முர்மு தேசிய கொடி ஏற்றுகிறார்

இன்று குடியரசு தின விழா கொண்டாட்டம் என்பதால் நாடு முழுவதும் 74வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறத. டெல்லி கடமைப்பாதையில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடி ஏற்றுகிறார் .

&feature=youtu.be

ஏரியின் நீர் நிலவரம்

புழல் ஏரிக்கு நீர்வரத்து 305 கனஅடியாக உள்ளது; ஏரியில் இருந்து 159 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 20 கனஅடியாக உள்ளது; நீர்இருப்பு 831 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை ஏரியில் நீர்இருப்பு 467 மில்லியன் கனஅடியாக உள்ளது • 00:30 (IST) 27 Jan 2023
  சென்னையில் ரயில்முன் பாய்ந்த காதல் ஜோடி.. காதலி மரணம்.. காதலனுக்கு சிகிச்சை!

  சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே தாம்பரம் நோக்கி சென்ற ரயிலில் விழுந்து காதல் ஜோடி ஒன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது.

  இதில் பலத்த காயம் அடைந்த இளம்பெண் நிகழ்விடத்திலே உயிரிழந்தார். ரயில் மோதி பலத்த காயமுற்ற இளைஞர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. • 22:05 (IST) 26 Jan 2023
  மனைவி லதா அன்பால் என்னை ஒழுக்கமாக மாற்றினார் - ரஜினிகாந்த் பேச்சு

  நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் சாருகேசி நாடகத்தை திரைப்படமாக தொடங்கும் நிகழ்சியில் பேசிய நடிகர் ரஜினிகாத்: “நடத்துனராக இருந்தபோது, எவ்வளவு பாக்கெட் சிகரெட் அடித்தேன் என்று கணக்கே இல்லை. சிகரெட், மது, அசைவ உணவு என பழக்கம் கொண்ட என்னை அன்பால் ஒழுக்கமாக மாற்றியவர் லதா” என்று கூறினார். • 22:01 (IST) 26 Jan 2023
  ரஜினி மட்டுமே சூப்பர் ஸ்டார் - ஒய்.ஜி.மகேந்திரன்

  நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் தனது சாருகேசி நாடகத்தின் 50வது நாள் விழாவில் பேச்சு: “ஒரே ஒரு மக்கள் திலகம், ஒரே ஒரு நடிகர் திலகம், ஒரே ஒரு மெல்லிசை மன்னர், ஒரே ஒரு கவிஞர் கண்ணதாசன், ஒரே ஒரு ரஜினிகாந்த்தான் சூப்பர் ஸ்டாராக இருக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார். • 21:20 (IST) 26 Jan 2023
  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க தேர்தல் பணிக்குழு பட்டியலில் மேலும் 5 பேர் சேர்ப்பு

  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகளுக்காக 160 பேர் கொண்ட பட்டியலை அ.தி.மு.க அறிவித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி மேலும் 5 பேர்களை அந்த பட்டியலில் சேர்த்து அறிவித்துள்ளார்.

  1. மாஃபா பாண்டியராஜன், 2. சுதா கே. பரமசிவன், 3. பி.ஜி. ராஜேந்திரன், 4. ஏ.கே. சீனிவாசன், 5. எஸ். சரவணபெருமாள் ஆகியோர் அ.தி.மு.க தேர்தல் பணிக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். • 20:59 (IST) 26 Jan 2023
  டெல்லி மேயர் தேர்தல்: சுப்ரீம் கோர்ட்டை நாடும் ஆம் ஆத்மி

  டெல்லி பா.ஜ.க செயல் தலைவர் வீரேந்திர சச்தேவா, உறுப்பினர்கள் பெரும்பான்மை இருக்கும்போது மேயரை தேர்ந்தெடுப்பதில் அக்கட்சியின் பிரச்சனை என்ன என்பதை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவிக்க வேண்டும் என்று கோரினார்.

  மேயர், துணை மேயர் மற்றும் 6 நிலைக்குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறாத டெல்லி மாநகராட்சியின் இரண்டு கூட்டங்களுக்கு பிறகு, ஆம் ஆத்மி கட்சி வியாழக்கிழமை அதன் மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் மற்றும் அவைத் தலைவர் முகேஷ் கோயல், தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். • 20:32 (IST) 26 Jan 2023
  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: கூடுதல் பறக்கும்படை அமைக்க உத்தரவு

  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ளதால் அந்த தொகுதியில் வாக்குக்கு பணப்பட்டுவாடாவை தடுக்க மேலும் ஒரு பறக்கும் படையை அமைத்து மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார் • 19:08 (IST) 26 Jan 2023
  ஈரோடு கிழக்கு வேட்பாளர் யார்? 7 மணி நேரம் ஆலோசித்த இ.பி.எஸ்

  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஈரோட்டில் தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகளுடன் வேட்பாளர் யார் என்பது குறித்து 7 மணி நேரம் நடத்திய ஆலோசனை நடைபெற்றது. • 19:05 (IST) 26 Jan 2023
  பழனியில் நாளை இறைச்சி கடைகளை மூட நகராட்சி ஆணையர் உத்தரவு

  திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில், பழனி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை ஒருநாள் மட்டும் இறைச்சி கடைகளை மூட நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். • 18:34 (IST) 26 Jan 2023
  மேம்பாலம் கட்டுமான பணி: சென்னை உஸ்மான் சாலையில் 9 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம்

  சென்னை உஸ்மான் சாலையில் மேம்பாலம் கட்டுமான பணிகள் காரணமாக 9 மாதங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது என சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. • 18:30 (IST) 26 Jan 2023
  மாமண்டூர் பாலாற்று பாலத்தில் 2 கார்கள் மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

  மாமண்டூர் பாலாற்று பாலத்தில் 2 கார்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுக்கின்றன. • 18:11 (IST) 26 Jan 2023
  சென்னையில் போக்குவரத்து மாற்றம்

  சென்னை உஸ்மான் சாலையில் மேம்பாலம் கட்டுமான பணிகள் காரணமாக 9 மாதங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது • 17:57 (IST) 26 Jan 2023
  வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி

  பஞ்சாப், இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகாவில் கொடி இறக்கும் நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வீறுநடை போட்டனர். ஏராளமானோர் கொடியிறக்கும் நிகழ்ச்சியை கண்டு ரசித்து வருகின்றனர் • 17:28 (IST) 26 Jan 2023
  திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் காலமானார்

  பிரபல திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் வயது மூப்பின் காரணமாக மரணமடைந்தார் • 17:02 (IST) 26 Jan 2023
  ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்றார் முதல்வர் ஸ்டாலின்

  குடியரசு தினவிழாவையொட்டி, ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துக் கொண்டுள்ளார் • 16:34 (IST) 26 Jan 2023
  ஆளுநர் தேநீர் விருந்து; அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் ராஜ்பவன் வருகை

  குடியரசு தின விழாவையொட்டி, ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்க அமைச்சர்கள் எ.வ.வேலு, ஐ.பெரியசாமி உள்பட அரசு உயரதிகாரிகள் ஆளுநர் மாளிகை வருகை தந்துள்ளனர் • 16:13 (IST) 26 Jan 2023
  மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்

  பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது • 15:51 (IST) 26 Jan 2023
  காட்டு பன்றியை வேட்டையாடி இறைச்சி விற்பனை; 4 பேர் கைது

  திருவண்ணாமலை, கண்ணமடை காப்புக்காடு வனப்பகுதியில் காட்டு பன்றியை வேட்டையாடி, பல்வேறு கிராமங்களில் இறைச்சி விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து 50 கிலோ காட்டுப்பன்றி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது • 15:31 (IST) 26 Jan 2023
  பாலியல் புகார்: கோயில் செயல் அலுவலர் பணியிட மாற்றம்

  காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் வேதமூர்த்தி, திருச்செந்தூர் கோயிலுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி பரவிய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது • 15:17 (IST) 26 Jan 2023
  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; நாளை அ.தி.மு.க தேர்தல் பொறுப்பாளர்கள்

  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி நாளை ஆலோசிக்கிறார். இடைத்தேர்தலுக்காக செங்கோட்டையன் தலைமையில் 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது • 14:49 (IST) 26 Jan 2023
  ஓபிஎஸ் அறிவிப்பு

  ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் தனது சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். • 14:39 (IST) 26 Jan 2023
  தைப்பூச விழா

  பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் தைப்பூச விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். • 14:04 (IST) 26 Jan 2023
  தங்கம் விலை

  சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.43,040 ஆகவும், கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.5,380க்கு விற்கப்படுகிறது. • 14:02 (IST) 26 Jan 2023
  போராட்டம்

  பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் 4வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். • 14:02 (IST) 26 Jan 2023
  ஆளுநர் மாளிகை செல்லும் ஸ்டாலின்

  தொலைபேசி வாயிலாக ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்த நிலையில், தேநீர் விருந்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4.20 மணிக்கு ஆளுநர் மாளிகை செல்கிறார் • 13:22 (IST) 26 Jan 2023
  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

  தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. 28, 29ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது; இந்திய பெருங்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. • 13:00 (IST) 26 Jan 2023
  டெல்லியில் குடியரசு தின கொண்டாட்டம் நிறைவு

  குடியரசு தின கொண்டாட்டம் நிறைவு

  டெல்லி கடமைப்பாதையில், 74-வது குடியரசு தின விழா கொண்டாட்டம் நிறைவு பெற்றது • 12:45 (IST) 26 Jan 2023
  பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

  பரந்தூர் விமான நிலையம் - எதிராக தீர்மானம்

  குடியரசு தினத்தையொட்டி நடந்த ஏகனாபுரம் கிராம சபை கூட்டத்தில் 4-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம் • 12:44 (IST) 26 Jan 2023
  சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண நடவடிக்கை - ஆளுநர் ஆர்.என்.ரவி

  சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண உத்தரவு

  தமிழ்நாடு வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண நடவடிக்கை

  சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆவணப்படுத்த வேண்டும்

  பல்கலைக்கழகங்களுக்கு வேந்தர் என்ற முறையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு • 12:22 (IST) 26 Jan 2023
  தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு

  டெல்லி கடமைப்பாதையில், 74வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

  மாநிலங்களின் பெருமையை பறைசாற்றும் அலங்கார ஊர்தி அணிவகுப்பு

  தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு

  மெய் சிலிர்க்க வைக்கும் ராணுவ வீரர்களின் இருசக்கர வாகன சாகச நிகழ்ச்சி • 11:26 (IST) 26 Jan 2023
  ஈரோடு இடைத்தேர்தல் - இ.பி.எஸ் பணிக்குழு அமைப்பு

  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக தேர்தல் பணிக்குழு பட்டியலை வெளியிட்டார் இ.பி.எஸ்

  முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைப்பு • 11:25 (IST) 26 Jan 2023
  ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசியக் கொடி ஏற்றினார்

  தேசிய கொடி ஏற்றினார் குடியரசு தலைவர்

  டெல்லி கடமை பாதையில் தேசிய கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு • 10:32 (IST) 26 Jan 2023
  பிரதமர் மோடி மரியாதை

  வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி மரியாதை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் மரியாதை செலுத்தினார் • 10:25 (IST) 26 Jan 2023
  போர் நினைவுச் சின்னம்

  பிரதமர் மோடி தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தினார். • 10:16 (IST) 26 Jan 2023
  முதலமைச்சர் விருது

  சிறந்த காவல்நிலையத்துக்கான முதலமைச்சர் விருது - திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு முதல் பரிசு . திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு 2வது பரிசு, திண்டுக்கல் வட்ட காவல் நிலையத்திற்கு 3வது பரிசு • 10:15 (IST) 26 Jan 2023
  தமிழ்நாடு வாழ்க

  சென்னையில் குடியரசு தின கொண்டாட்டம் அலங்கார ஊர்தியில் 'தமிழ்நாடு வாழ்க' 'தமிழ்நாடு வாழ்க' என்ற வாசகத்துடன் கூடிய அலங்கார ஊர்தி அணிவகுப்பு • 09:53 (IST) 26 Jan 2023
  அலங்கார ஊர்திகள்

  சென்னை, மெரினாவில் 74வது குடியரசு தின கொண்டாட்டத்தில், தமிழ்நாடு அரசின் திட்டங்களை விளக்கும் வகையில் இடம்பெற்ற அலங்கார ஊர்திகள். • 09:53 (IST) 26 Jan 2023
  ஆளுநருக்கு ‘நன்றி’ சொல்லி வழியனுப்பி வைத்தார் முதல்வர்

  74வது குடியரசு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றதை அடுத்து, ஆளுநருக்கு ‘நன்றி’ சொல்லி வழியனுப்பி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். • 09:05 (IST) 26 Jan 2023
  விருதுகளை வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர்

  குடியரசு தினம் - விருதுகளை வழங்கினார் முதல்வர் நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாட்டம். பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் • 09:05 (IST) 26 Jan 2023
  பிரதமர் மோடி வாழ்த்து

  பிரதமர் மோடி குடியரசு தின வாழ்த்து சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம் நாட்டின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து • 08:19 (IST) 26 Jan 2023
  முப்படை அணிவகுப்பு

  சென்னை, மெரினாவில் 74வது குடியரசு தினத்தையொட்டி , முப்படை அணிவகுப்பு நடைபெற்று வருகிறது; ஆணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொள்கிறார். • 08:17 (IST) 26 Jan 2023
  ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்

  74வது குடியரசு தினத்தையொட்டி, மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment