Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
பள்ளி விடுமுறை
காரைக்கால் மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை . பொங்கல் பண்டிகை கார்னிவல் விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் அறிவிப்பு .
பொங்கல் பண்டிகை : குவிந்த மக்கள்
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஒரு லட்சம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். 91 ஆயிரம் பெரியவர்களும் 9 ஆயிரம் குழந்தைகளும் வருகை தந்ததாக பூங்கா அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 349/8 ரன்கள் குவித்த நிலையில், கடின வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து கடைசி ஓவர் வரை போராடி 337/10 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது
உதகை அருகே எமரால்டு அணைக்குள் 1500 கிலோ ரேசன் அரிசியை சிறுசிறு மூட்டைகளாக கட்டி வீசிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்தியாவில் விளையாட்டு வெறும் பொழுதுபோக்கு அல்ல. காலம் மாறி வருகிறது. வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக உருவெடுத்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
தமிழர்கள் சாதாரணமாகத்தான் இருப்பார்கள். சுரண்டி பார்த்தால் தீக்கங்கு வெளியாகும் என்பதை புரிந்துக் கொண்டிருக்கிறார்கள். நான் அப்படி சொல்லவே இல்லை. தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் இங்கு எழுத்த புரட்சி தான் சொல்ல வைத்திருக்கிறது என்று ஆளுநரின் விளக்கம் குறித்து கனிமொழி எம்.பி. கருத்து தெரிவித்துள்ளார்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்ள தேர்தல் பணி குழுவை பா.ஜ.க அமைத்துள்ளது. இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கவனிக்கவும் 14 பேர் கொண்ட பட்டியலை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்
சன் பிக்சர்ஸின் அடுத்த படத்தில் 'நடிகர் தனுஷ்' நடிக்கிறார். இதற்கான போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது
புத்தக பதிப்பில் தமிழ்நாடு உலக அளவில் சிறகை விரித்துள்ளது. தமிழக அரசின் சார்பில் ரூ.6 கோடி செலவில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தது என சர்வதேச புத்தக கண்காட்சியின் நிறைவு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
சென்னையில் இருந்து போடிக்கு ரயில் சேவை பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்குகிறது.
மேலும் சென்னை-மதுரை சிறப்பு ரயில்கள் போன்று இனி போடிக்கும் ரயில்கள் இயக்கப்படும்.
மத்திய அரசின் போட்டித் தேர்வுக்கு தயாராக வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி இளைஞர்களிடம் கேட்டுக்கொண்டார்.
உலக மொழிகளில் தந்தை பெரியார் நூல்களை மொழிபெயர்த்து வெளியிட உள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியின் நிறைவு விழாவில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
அருகருகே வீடுகளில் வசிக்கும் ஐயப்பன் (52) செல்லத்துரை (54) இருவரும் மதுபோதையில் மாறிமாறி வெட்டிக்கொண்ட நிலையில், இருவரும் உயிரிழந்தனர்.
இது குறித்து வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் உள்துறை அமைச்சர் பலியானார்.
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே நிகழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். அதில், உள்துறை அமைச்சர் டெனிஸ் மோனாஸ்டிர்ஸ்கியும் ஒருவர் ஆவார்.
முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு 350 ரன்களை
இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 349 ரன்கள் குவித்தது. 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் காண்கிறது.
பழனி, தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் கும்பாபிஷேகத்தில் பங்கு பெறுவதற்கான இணையதள பதிவு புதன்கிழமை (ஜன.18) தொடங்கியது.
இதில் பங்கேற்க பக்தர்கள் palanimurugan.hrce.tn.gov.in மற்றும் hrce.tn.gov.in ஆகிய வலைதளங்களில் தங்களது விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
ஓசூர் மாவட்டம் உத்தனப்பள்ளியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி எம்.பி செல்லக்குமார் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் செல்வப்பெருந்தகை: கிடப்பில் உள்ள ஆன்லைன் ரம்மி, நீட் போன்ற சட்டமசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். மாநில அரசின் கொள்கைகள், செயல்பாடுகளில் ஆளுநர் தலையிடாமல் இருப்பது நல்லது; இதனால் ஆட்சியாளர்களுக்கும், ஆளுநர்களுக்கும் இடையே பரஸ்பரம், நல்ல புரிந்துணர்வு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி வேட்புமனு தாக்கல் தொடக்கம் – ஜனவரி 31
வேட்புமனு தாக்கல் நிறைவு பிப்ரவரி 07
வேட்புமனு பரிசீலனை – பிப்ரவரி 08
வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் – பிப்ரவரி 10
வாக்குப்பதிவு – பிப்ரவரி 27
வாக்கு என்ணிக்கை – மார்ச் 2
நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27-ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ஆம் தேதி வாக்குப்பதிவு, மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவு பிப்ரவரி 27
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை – மார்ச் 02
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் நகராட்சி ஆணையர் சிவக்குமார் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஈரோடு மாவட்டத்தில் அமலுக்கு வந்தது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார்.
திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய 3 மாநிலத் தேர்தல்கள் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளிட்ட இடைத் தேர்தல்கள் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திரிபுரா -பிப்ரவரி 16; மேகாலயா, நாகலாந்து – பிப்ரவரி 27;
ஈரோடு கிழக்கு உள்ளிட்ட இடைத் தேர்தல்கள் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உக்ரைன் ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டு அமைச்சர் உள்பட 16 பேர் பலி
உக்ரைன் தலைநகர் கீவ்வில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை அமைச்சர் டென்னிஸ் உயிரிழப்பு.
தொடக்கப் பள்ளி அருகே ஹெலிகாப்டர் கீழே விழுந்ததில் அமைச்சர், 2 உட்பட 16 பேர் உயிரிழப்பு
ஆளுநர் முற்றுப்புள்ளி வைத்தது வரவேற்கத்தக்கது – காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை
தமிழகம் சர்ச்சைக்கு ஆளுநர் ரவி முற்றுப்புள்ளி வைத்தது வரவேற்கத்தக்கது. சட்டப்பேரவை ஒப்புதலுடன் அனுப்பபட்ட மசோதக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர் பிறந்தநாள் நிகழ்ச்சியில், முதியவரை தாக்கிய விவகாரம்
சென்னை கொத்தவால்சாவடி எஸ்.ஐ. ராதாகிருஷ்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் – சென்னை காவல் ஆணையர் உத்தரவு
கூட்டத்தை கட்டுப்படுத்த முதியவர்களை காவல் உதவி ஆய்வாளர் சரமாரியாக தாக்கியதாக புகார்
உக்ரைன் தலைநகர் கீவ்வில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் சிறுவர்கள் உட்பட 16 பேர் உயிரிழப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவேரா அண்மையில் மரணமடைந்தார். இதையடுத்து அந்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிக்கப்பட்டது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு என தகவல்
பழனி மலைக்கோவில் கோபுர கலசங்கள் புதுப்பிக்கப்பட்டு கோபுரத்தில் பொருத்தம்
பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று மாலை வேள்விச்சாலை நிகழ்ச்சி
கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலில் சீரமைப்பு பணிகள் தீவிரம்
வரும் 27ஆம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள முன்பதிவு இன்று தொடங்கியது
முன்பதிவு செய்யும் பக்தர்களில் 2,000 பேர் குலுக்கல் முறையில் அனுமதிக்கப்படுவார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவில் வருவாய் ரூ.315.46 கோடியாக அதிகரித்துள்ளது.. கடந்த ஜனவரி 13 முதல் 15 தேதி வரை மட்டும் 5 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் உலகின் நம்பர் 2 வீரரான டிங் லிரனை இந்தியாவின் பிரக்ஞானந்தா வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
12- ஆண்டுகளுக்குப் பிறகு போடியில் இருந்து மதுரை மற்றும் சென்னை ஆகிய ஊர்களுக்குச் செல்ல வரும் பிப்ரவரி மாதம் 19-ம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
'தமிழ்நாட்டின் பெயரை மாற்ற நான் பரிந்துரை செய்யவில்லை. எனது பேச்சின் அடிப்படை புரியாமல் ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்கள் விவாதப்பொருளாகி இருக்கிறது, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் என்று ஆளுநர் ஆர்.என். ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல் மற்றும் அதற்கான பட்டா மாறுதல் செய்யும் வகையில் புதிதாக மென்பொருள் செயலியை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னையில் தோல் பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் 15 இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாம் நாளாக சோதனை நடைபெறுகிறது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில கல்லூரியில் திறன் மேம்பாட்டுத்துறையின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் போட்டித் தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் வெளியான 7 நாட்களில் உலகளவில் ரூ. 210 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
பழனி, தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் கும்பாபிஷேகத்தில் பங்கு பெறுவதற்கான இணையதள பதிவு இன்று தொடங்கியது. விருப்பமுள்ள பக்தர்கள் http://palanimurugan.hrce.tn.gov.in மற்றும் http://hrce.tn.gov.in ஆகிய வலைதளங்களில் தங்களது விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யும் பக்தர்களில் 2000 பேரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவர் முகமது கைசர் உள்ளிட்ட 3 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் மூன்றாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ்குமார், சத்யராஜ் ஆகியோரிடம் சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் கூடத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது
3 மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதிகள், இன்று மதியம் 2.30 மணிக்கு அறிவிப்பு. மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து மாநில சட்டப்பேரவைக்கான தேதிகள் அறிவிக்கப்படவுள்ளது.
புதுக்கோட்டை, வடமலாப்பூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி. போட்டியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டில் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் காயமடைந்த இளைஞர் சிவக்குமார் மரணம். திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழப்பு
இந்தோனேசியா, சுலாவேசி பகுதிகளில் பயங்கர நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் தாம்பரம். செங்கல்பட்டு சாலையில் போக்குவரத்து நெரிசல் . வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கு உதவ சிறப்பு மாநகர பேருந்துகள் இயக்கம்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் . மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க டெல்லி பயணம். கடந்த 9ம் தேதி சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி அமித்ஷாவுடன் விவாதிக்க வாய்ப்பு