Advertisment

Tamil News Highlights: தேர்தல் விதிமீறல்: அண்ணாமலை மீது கோவையில் வழக்குப் பதிவு

Tamil Nadu Live News Update Today 14- 04- 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
BJP Annama5.jpg

Live updates

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

 ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்

செம்பரம்பாக்கம் - 71.19%, புழல் - 85.09%, பூண்டி - 41.72% , சோழவரம் - 19.98%, கண்ணன்கோட்டை - 82%.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 • Apr 14, 2024 22:03 IST
  நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்; நேரில் ஆஜராக உத்தரவு

  தாம்பரத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
  ஏப்ரல் 21-ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நயினார் நாகேந்திரன் உட்பட 8 நபர்களுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். • Apr 14, 2024 22:00 IST
  டெல்லியில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி; கன்னையா குமாருக்கு வாய்ப்பு


  டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதியில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், 4 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியும் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடுகின்றன.
  வடகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் கன்னையா குமார் போட்டியிடுகிறார். • Apr 14, 2024 21:31 IST
  மகளிர் உரிமைத் திட்டம்; சுப்ரியா சுலே பாராட்டு

  தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே பாராட்டு தெரிவித்துள்ளார். • Apr 14, 2024 20:55 IST
  எஸ்.டி.பி.ஐ மீது ஜவாஹிருல்லா விமர்சனம்

  தேசிய கட்சி என்று கூறிக்கொள்ளும் எஸ்.டி.பி.ஐ மாநில கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக சிஏஏ சட்டத்தை ஆதரித்த அ.தி.மு.க. உடன் கூட்டணி சேர்ந்துள்ளது என மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா விமர்சனம் செய்துள்ளார். • Apr 14, 2024 20:36 IST
  திருமாவளவனுக்கு ஆதரவாக செல்வபெருந்தகை வாக்கு சேகரிப்பு!

  தமிழ்நாடே உற்று நோக்கும் தொகுதி சிதம்பரம் ஆகும். சிதம்பரத்தில் நாம் வெற்றி அடைந்தே ஆக வேண்டும்.
  விசிக தலைவர் திருமாவளவன்  போட்டியிடும் பானை சின்னம் தான் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கப் போகிறது.
  இந்தப் பானை சின்னம் தான் ஜனநாயகத்தை மீட்டெடுக்க போகிறது” என காங்கிரஸ் செல்வபெருந்தனை பரப்புரையில் ஈடுபட்டார். • Apr 14, 2024 20:35 IST
  கொடைக்கானலில் பா.ம.க வேட்பாளர் வாக்கு சேகரிப்பு


  கொடைக்கானல் பகுதியில் பா.ம.க வேட்பாளர் திலக பாமா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். • Apr 14, 2024 19:21 IST
  மதுரை எய்ம்ஸ் தாமதம்; தி.மு.கதான் காரணம்: எடப்பாடி பழனிசாமி

   

  நாடாளுமன்றத்தில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள்  அழுத்தம் கொடுத்திருந்தால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டிருக்கும்.
  தலைவாசலில் அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட கால்நடைப் பூங்காவினை 3 ஆண்டு காலமாக  திமுக அரசு திறக்காமல் இருக்கிறது” எடப்பாடி பழனிசாமி கூறினார். • Apr 14, 2024 19:19 IST
  பட்டியலினத்தவரின் வீட்டில் உணவு சாப்பிட்ட அண்ணாமலை  கோவை துடியலூர் பகுதியில் பட்டியலினத்தவர் ஒருவரின் வீட்டில் அமர்ந்து பா.ஜ.க மாநிலத் தலைவரும் வேட்பாளருமான அண்ணாமலை உணவு சாப்பிட்டார். • Apr 14, 2024 18:19 IST
  கோவையில் பூ விற்று தி.மு.க. வாக்கு வேட்டை  கோவையில் உள்ள பூ மார்க்கெட்டில் பூ விற்று திமுக வேட்பாளர் மக்களிடையே வாக்கு வேட்டை நடத்தினார். • Apr 14, 2024 18:08 IST
  ஜல்லிக்கட்டை மீட்டது போல், கச்சத்தீவையும் ஓ.பி.எஸ் மீட்பார்; மருது அழகராஜ்


  ஜல்லிக்கட்டை மீட்டது போல் கச்சத்தீவையும் ஓ.பி.எஸ் மீட்பாய் என அவரது ஆதரவாளர் மருது அழகராஜ் கூறினார். • Apr 14, 2024 17:30 IST
  "அரசியல் அமைப்பை காப்போம்"- ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்

  டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என்று பாஜக எம்.பி. ஒருவர் வெளிப்படையாகக் கூறினார்; பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் அமைப்புகளுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறோம் ஆம் ஆத்மி கட்சி இருக்கும் வரை அரசியலமைப்பை காப்பாற்ற போராடுவோம் என ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கூறினார். • Apr 14, 2024 17:30 IST
  ‘ஜூம் மீட்டிங்’கில் சில விஷமிகள் தவறான செயலில் ஈடுபட்டனர் - தமிழிசை கண்டனம்

  ‘ஜூம் மீட்டிங்’கில் பொதுமக்களிடம் பேசியபோது தவறான செயலில் சில விஷமிகள் ஈடுபட்டனர். விரும்பத்தகாத செயலில் ஈடுபட்ட விஷமிகளுக்கு வன்மையான கண்டனங்கள் என்று பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். ‘ஜூம் மீட்டிங்’கில் தவறான படங்களை பரவவிட்டு நான் மக்களோடு பேசுவதை தடுத்தனர் என்று தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டினார். • Apr 14, 2024 17:25 IST
  அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க தொண்டர்கள் வாக்குகளை சிதறடித்து வீணாக்க வேண்டாம் - முத்தரசன்

  திருப்பூர் சி.பி.ஐ தேர்தல் பணிமனையில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் பேட்டி:  “அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க தொண்டர்கள் தங்கள் வாக்குகளை சிதறடித்து வீணாக்க வேண்டாம்; தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரியுங்கள்” என்று கூறியுள்ளார். • Apr 14, 2024 17:14 IST
  தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

  தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு  உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. • Apr 14, 2024 17:11 IST
  சாலையோர டீக்கடையில் தேநீர் அருந்தி வாக்கு சேகரித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

  கோவைய்ல் புளியகுளத்தில் உள்ள சாலையோர டீக்கடையில் தேநீர் அருந்தி, தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வாக்கு சேகரித்தார். • Apr 14, 2024 16:58 IST
  பெரம்பலூர் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் - பாரிவேந்தர்

  பெரம்பலூர் தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிடும் ஐ.ஜே.கே நிறுவனர் பாரி வேந்தர் பெரம்பலூர் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். • Apr 14, 2024 16:57 IST
  சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு; குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய ஏக்நாத் ஷிண்டே உத்தரவு 

  மும்பை பாந்த்ராவில் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்திய விவகாரத்தில் சிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய காவல் ஆணையருக்கு, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.  • Apr 14, 2024 16:46 IST
  மக்களிடம் இருந்து பெரும் வரியை திமுக அரசு என்ன செய்கிறது -  அண்ணாமலை கேள்வி

  தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை:  “தமிழக அரசுக்கு வரும் நிதி எங்கே செல்கிறது;  மக்களிடம் இருந்து பெரும் வரியை திமுக அரசு என்ன செய்கிறது; தமிழகத்திற்கு மத்திய அரசு ரூபாய் 5.5 லட்சம் கோடி நிதி வழங்கியதாக முதல்வர் பொய்க்கதை கூறுகிறார். தி.மு.க வாக்குறுதி அளித்த 3.5 லட்சம் வேலை வாய்ப்புகள் என்ன ஆனது என முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு சொல்வாரா? தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான மானியத்தை எந்த கணக்கில் வைப்பீர்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார். • Apr 14, 2024 15:24 IST
  வாக்களித்து மை அடையாளத்தைக் காட்டினால் உணவகங்களி 5% தள்ளுபடி - செங்கல்பட்டு கலெக்டர்

   

  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தலில் 100 % வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், வாக்குப்பதிவு செலுத்தி மை அடையாளத்தைக் காட்டினால், ஏப்ரல் 20-ம் தேதி செங்கல்பட்டு, மாமல்லபுரத்தில் உள்ள உணவகங்களில் 5% தள்ளுபடி என்று செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். • Apr 14, 2024 14:56 IST
  ‘பா.ஜ.க-வால்தான் கொஞ்ச ஓட்டாவது வாங்குனாரு’ ஜெயக்குமாருக்கு பா.ஜ.க வேட்பாளர் பால் கனகராஜ் பதிலடி

  பா.ஜ.க கூட்டணி காரணமாக கடந்த தேர்தலில் தோல்வி அடைந்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய நிலையில், வட சென்னை பா.ஜ.க வேட்பாளர் பால் கனகராஜ் “கடந்த தேர்தலில் பா.ஜ.க-வால்தான் கொஞ்ச ஓட்டாவது ஜெயக்குமார்  வாங்குனாரு, இல்லைனா சுத்தமா அவுட் ஆகியிருப்பாரு.” என்று பதிலடி கொத்துள்ளார். • Apr 14, 2024 14:52 IST
  கொள்கை இல்லாத கூட்டணி இந்தியா கூட்டணி - சீமான் தாக்கு

  நாகையில் பிரச்சாரம் செய்த நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: “கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் இல்லாத கூட்டணி இந்தியா கூட்டணிதான். கேரளாவுக்குள் எதிர்க்கட்சி; கேரளாவுக்கு வெளியே கூட்டணி; இதுதான் இந்தியா கூட்டணி? காவிரியில் தண்ணீர் தரமுடியாது என்று சொன்ன கட்சியுடன் தண்ணீர் தர முடியாது என்று சொன்ன கட்சியுடன் கூட்டணி வைக்கிறது தி.மு.க” என்று விமர்சனம் செய்துள்ளார். • Apr 14, 2024 14:44 IST
  பா.ஜ.க தேர்தல் அறிக்கை குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சனம்

  காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி: “பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கை மற்றும் நரேந்திர மோடியின் உரையில் இரண்டு வார்த்தைகள் இல்லை; பணவீக்கம் மற்றும் வேலையின்மை என்ற வார்த்தைகள் இல்லை” என விமர்சித்துள்ளார். • Apr 14, 2024 14:41 IST
  பா.ஜ.க-வால்தான் எங்கள் ஆட்சியே போனது; 2019-லும், 2021-லும் பா.ஜ.க-வால்தான் தோற்றோம் - ஜெயக்குமார்

  அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்ததால் தான் எங்களுடைய ஆட்சியே போனது. இல்லையென்றால் நான் ஜெயித்திருப்பேன், ராயபுரத்தில் நான் எல்லாம் தோற்க்கிற ஆளா, நான் மனம் திறந்து சொல்கிறேன், இதுவரை சொல்லவில்லை. நான் 25 ஆண்டுகள் முடிசூடா மன்னனாக ராயபுரத்தில் இருந்து வந்தேன். தோல்வி என்பதையே அறியாதவனாக இருந்தேன்; நான் யாரால் தோற்றேன், பா.ஜ.க-வால்தான் தோற்றேன்; பா.ஜ.க இல்லை என்றால் நான் எல்லாம் இந்நேரம் சட்டமன்றத்திற்கு போயிருக்க வேண்டிய ஆள்; பா.ஜ.க இருந்ததனால் என் தொகுதி ராயபுரத்தில் 40,000 சிறுபான்மை இன மக்கள் ஓட்டு போனது. இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் ஓட்டு போனது; அவர்களுக்கு என் மேல் கோபம் கிடையாது; அப்போதே அவர்கள் என்னிடம் சொன்னார்கள். பா.ஜ.க-வை கழட்டி விடுங்கள் என்று சொன்னார்கள். நான் சொன்னேன் வீண் சுமைதான் என்று சொன்னேன். சமயம் வரும்போது கழட்டி விட்டுவிடுவோம், நீங்கள் கவலைப்படாதீர்கள் என்று சொன்னேன்.அதே மாதிரி நேரம் வந்தது கழட்டிவிட்டுவிட்டோம். அது வீண் சுமை; இனிமேல் தேவையில்லை; அந்த பெட்டி ஓடாத பெட்டி; ஓடாத வண்டி; பழைய மோட்டார் சைக்கிள்; அது வீண் பா.ஜ.க இல்லை என்றால் நான் எல்லாம் ஜெயித்து இருக்க வேண்டிய ஆள்; 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்திருப்பேன்; பாஜக இருந்ததால் இப்பொழுது நான் ஜீரோவில் இருந்து ஓடுகிறேன்; தி.மு.க நாற்பதில் இருந்து ஓடுகிறார்கள் அப்படி என்றால் யார் முன்னாடி செல்வார்கள், இதுதான் காரணம். தமிழ்நாடு முழுக்க பார்த்தீர்கள் என்றால் 2019-லும் சரி 2021-லும் சரி நாங்கள் நாங்கள் தோற்றது பா.ஜ.க-வால்தான் பா.ஜ.க-வால்தான்” என்று கூறினார். • Apr 14, 2024 14:01 IST
  2026 தேர்தலில் போட்டி: விஷால் அறிவிப்பு 

  "2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி" - சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விஷால் அறிவிப்பு  • Apr 14, 2024 13:45 IST
  அரசுப் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து

  வந்தவாசி அருகே, அரசுப் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்த பேருந்து. பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் 15-க்கும் மேற்பட்டோர் காயம்.  • Apr 14, 2024 13:45 IST
  அரசுப் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து

  வந்தவாசி அருகே, அரசுப் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்த பேருந்து. பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் 15-க்கும் மேற்பட்டோர் காயம்.  • Apr 14, 2024 13:36 IST
  நா.த.க- தி.மு.க இடையே தள்ளுமுள்ளு

  நாகையில் சீமான் பரப்புரையின் போது, நாம் தமிழர் கட்சி, திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு. சீமான் பரப்புரையின் போது, தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாக சென்ற திமுக கூட்டணி கட்சியினர்.

  ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியினர், திமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் வாக்குவாதம். இந்திய கம்யூ. வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட சென்ற திமுகவினருடன் நா.த.க.வினர் வாக்குவாதம். சீமான் முன்னிலையில், நாம் தமிழர் கட்சியினர் திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு  • Apr 14, 2024 13:12 IST
  ராகவா லாரன்ஸ் நடிக்கும் `BENZ'

  லோகேஷ் கனகராஜ் எழுதி ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தின் பெயர் `BENZ' என படக்குழு அறிவிப்பு • Apr 14, 2024 12:54 IST
  பா.ஜ.க எனும் பேரழிவு.. ஸ்டாலின் தாக்கு

  இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது - முதலமைச்சர் ஸ்டாலின்

  "புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல்சட்டம் எனும் ஒளியை சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை"

  பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது - முதலமைச்சர் ஸ்டாலின்

  நாட்டை 200 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்கள் தீட்டி வருகிறது பாஜக  - முதலமைச்சர் ஸ்டாலின்

  சமத்துவச் சமுதாயத்தை உறுதி செய்யப் புத்துலக புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் அறிவாயுதத்தைத் துணைக் கொள்வோம் - முதலமைச்சர் ஸ்டாலின்

  அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின், சமூக வலைதள பக்கத்தில் பதிவு • Apr 14, 2024 12:47 IST
  ஜாபர் சாதிக் மீது குற்றப் பத்திரிகை தாக்கல்

  போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

  ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேர் மீது டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது

  2000 கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைதாகி சிறையில் உள்ளார்

  ஜாபர் சாதிக்குடன் சென்னையை சேர்ந்த முஜிபுர், முகேஷ், விழுப்புரத்தை சேர்ந்த அசோக் குமார், சதானந்தம் ஆகியோரும் கைதாகினர்

  ஜாபர் சாதிக் உட்பட 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் விரைவில் விசாரணை நடைபெறும் என தகவல் • Apr 14, 2024 12:14 IST
  தங்கம் விலை கிடு கிடு உயர்வு

  இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலால் மேற்கு ஆசிய நாடுகளில் பதற்றமான சூழல்; சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்ந்தது. சென்னையில் ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹600 இன்று உயர்ந்து ₹6855க்கு விற்பனை. ஒரு சவரன் ரூ.54,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது. • Apr 14, 2024 11:42 IST
  பா.ஜ.க தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்

  பாஜகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகள்

  ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படும் என பாஜக தேர்தல் அறிக்கை வாக்குறுதி

  நாடு முழுவதும் பொது வாக்காளர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படும்

  பிரதமரின் மக்கள் மருந்தகங்களில் 80% தள்ளுபடியுடன் மருந்துகள் கிடைக்கும் 

  70 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் கொண்டுவரப்படும் என வாக்குறுதி

  முத்ரா கடன் உதவி ₨10 லட்சத்தில் இருந்து ₨20 லட்சமாக உயர்த்தப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

  ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ₨5 லட்சம் வரை இலவசமாக மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம்

  அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்

  பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

  குறைந்த விலையில் பைப் மூலமாக கேஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் 

  இலவச உணவு தானியம் வழங்கப்படும் திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும்

  திருநங்கைகளுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என வாக்குறுதி • Apr 14, 2024 10:59 IST
  அம்பேத்கர் பிறந்தநாள் - முதல்வர் மரியாதை

  அம்பேத்கரின் 134வது பிறந்த நாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை. அண்ணா அறிவாலயத்தில், அம்பேத்கர் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை. • Apr 14, 2024 10:58 IST
  அம்பேத்கர் பிறந்தநாள் - தலைவர்கள் மரியாதை

   அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை. • Apr 14, 2024 10:33 IST
  ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படும்- பா.ஜ.க தேர்தல் அறிக்கை 

  ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படும். நாடு முழுவதும் பொது வாக்காளர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படும் 2025ஆம் ஆண்டு பழங்குடியினர் கௌரவ தினமாக அறிவிக்கப்படும் பிரதமரின் மக்கள் மருந்தகங்களில் 80 சதவீத தள்ளுபடியுடன் மருந்துகள் கிடைக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுப்படுத்தப்படும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஐந்து லட்சம் வரை இலவசமாக மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம் அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகள் தொடரும் குறைந்த விலையில் பைப் மூலமாக கேஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் முத்ரா கடன் உதவி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும்- பா.ஜ.க தேர்தல் அறிக்கை  • Apr 14, 2024 10:31 IST
  பா.ஜ.க தேர்தல் அறிக்கைக்காக நாடு முழுவதும் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் - பிரதமர் மோடி

  வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்குடன் கூடிய தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளோம் இந்த தேர்தல் அறிக்கையை தயாரிக்க துணையாக இருந்த அனைவருக்கும் எனது பாராட்டுகள் லட்சக்கணக்கான மக்கள் பாஜக மீது நம்பிக்கை வைத்து தங்கள் கருத்துகளை தெரிவித்திருந்தனர், அனைவருக்கும் நன்றி பாஜக தேர்தல் அறிக்கைக்காக நாடு முழுவதும் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் - பிரதமர் மோடி • Apr 14, 2024 10:11 IST
  அடுத்த கட்டமாக அனைத்து கிராமங்களுக்கும் பைப் லைன் மூலம் கேஸ் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம் : மோடி

  பா.ஜ.க அரசு மருந்து பொருட்களுக்கு 80% தள்ளுபடி அளித்து வருகிறோம். மானிய விலையில் கேஸ் சிலிண்டர் கொடுத்து வருகிறோம், அடுத்த கட்டமாக அனைத்து கிராமங்களுக்கும் பைப் லைன் மூலம் கேஸ் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம் புதிய மின் உற்பத்தி மூலம் அனைத்து குடும்பங்களுக்கும் மின்சாரம் விநியோகிக்க உள்ளோம்- மோடி   • Apr 14, 2024 10:09 IST
  இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள்: மையமாக கொண்டு தேர்தல் அறிக்கை. 

  இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகியோரை மையமாக கொண்டு தேர்தல் அறிக்கை.  ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்குவது குறித்து நாங்கள் பேசுகிறோம் இளைஞர்களின் கனவை நனவாக்க பணியாற்றுகிறோம் தீர்வுகளை பற்றி மட்டுமே நாங்கள் பேசுகிறோம் - பிரதமர் மோடி • Apr 14, 2024 10:08 IST
  சங்கல்ப் பத்ரா' எனும் பெயரில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

  சங்கல்ப் பத்ரா' எனும் பெயரில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு. பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவருக்கு, முதல் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசின் திட்டங்களில் பயனடைந்த பயனாளிகளுக்கு தேர்தல் அறிக்கை ஒவ்வொரு திட்டத்திலும் பயனடைந்த தலா ஒரு பயனாளிக்கு தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது உஜ்வாலா, ஜல் ஜீவன், விவசாய காப்பீடு என ஒவ்வொரு திட்ட பயனாளிகளுக்கும் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது. • Apr 14, 2024 09:25 IST
  ரூ.4 கோடி பறிமுதல் - பாஜக நிர்வாகிக்கு சம்மன்

  சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனன் நேரில் ஆஜராக தாம்பரம் போலீசார் சம்மன் கோவர்தனன் நடத்திவரும் உணவகத்தில் வைத்து ரூ.1 கோடி பணம் கைமாற்றப்பட்டது விசாரணையில் அம்பலம் கோவர்தனன் உணவகத்தில் நடந்த சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல் கோவர்தனன் இன்று நேரில் விசாரணைக்கு ஆஜராக தாம்பரம் போலீசார் சம்மன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரது மகன் கிஷோர் இன்று ஆஜராவார் என தகவல். • Apr 14, 2024 09:06 IST
  இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் : மோடி

  தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பிரதமர் மோடி, புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  • Apr 14, 2024 08:25 IST
  நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே 2 மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு

  மும்பை பாந்த்ராவில் நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே 2 மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு 3 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தகவல் இன்று அதிகாலை 5 மணியளவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் சம்பவ இடத்தில் மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை. • Apr 14, 2024 08:05 IST
  நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

  ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய அறிக்கையில் தகவல் • Apr 14, 2024 08:05 IST
  இன்று வெளியாகிறது பாஜக தேர்தல் அறிக்கை

  மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று வெளியாகிறது பாஜக தேர்தல் அறிக்கை .பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா, அமித்ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் வெளியிட உள்ளதாக தகவல்.Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment