பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 227-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
6.09 கோடி பயணங்கள்
சென்னை மெட்ரோ ரயிலில் புதிய சாதனை படைத்துள்ளது. 2022-ஆம் ஆண்டில் 6.09 கோடிபயணங்கள் மேற்கொள்ளபட்டுள்ளத. தொடங்கப்பட்ட ஏழு ஆண்டுகளில் புதிய சாதனை படைத்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதிய விதிமுறைகள்
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்த வரைவு விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு. இது முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
தி.மு.க-வைச் சேர்ந்த தருமபுரி தொகுதி எம்.பி செந்தில்குமார்: பா.ஜ.க-விற்கு நான் ஒரு சேலஞ்சாக சொல்கிறேன்;பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமிழகத்தில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் சரி அவரை தி.மு.க தோற்கடிக்கும் என்று கூறினார்.
டெல்லியில் விபத்தில் பலியான பெண்ணின் பிரேதப் பரிசோதனையை நடத்திய மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் மருத்துவக் குழுவைச் சேர்ந்த மருத்துவர் கூறுகையில், “விபத்து காயம் மாதிரி உள்ளது, அவருடைய முதுகு மற்றும் தலை மற்றும் பிட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்ட காயங்கள் உள்ளன” என்று தெரிவித்தார்.
டெல்லிக்கு வெளியே 10 கி.மீட்டருக்கு மேல் உடல் இழுத்துச் செல்லப்பட்ட விபத்தில் உயிரிழந்த அஞ்சலி சிங்கின் பிரேதப் பரிசோதனையின்படி, “அவரது உடலில் பாலியல் வன்கொடுமைக்குக் காரணமான காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று டெல்லி போலீஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில், படுகர் இன மக்களின் ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி நாளை ஜனவரி 4-ம் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வருமான வரி செலுத்தாமல் ஏமாற்றினால் அவர்களின் சொத்துக்கள் ஏலம் விடப்படும்; கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மதுரையில் வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், கோவூரில் பாஜக கொடி கம்பத்தை அகற்றிய ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜகவினர்
சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திரையரங்கம் என்பது உரிமையாளரின் தனிப்பட்ட சொத்து என்றும், பொது நலன் அல்லது பாதுகாப்புக்கு முரணாக இல்லை எனில், அவர் பொருத்தமானதாகக் கருதும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை விதிக்க அவருக்கு உரிமை உண்டு என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
திரையரங்குக்கு செல்லும் ஒரு பார்வையாளர், திரையரங்குக்குள் நுழைந்தால், அதன் உரிமையாளர் வகுத்துள்ள விதிகளை அவர் பின்பற்ற வேண்டும். இது திரையரங்கு உரிமையாளரின் வணிக முடிவு என்று வெளிப்படையாக உச்ச நீதிமன்றம் கூறியது.
திரையரங்குகளுக்கு வெளியில் இருந்து உணவு மற்றும் பானங்களை எடுத்துச் செல்வதைக் கட்டுப்படுத்த திரையரங்கு உரிமையாளருக்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று கூறியதாக பார் அண்ட் பெஞ்ச் தெரிவித்துள்ளது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்: “வெறும் புராணக் கதைகள் மட்டுமே கலை வடிவில் வந்த நிலையை மாற்றி, மக்களுக்கு தேவையான சமூக கருத்துக்களை ‘பராசக்தி’ எனும் திரைப்படத்தின் வாயிலாக, தனது 24 வயதிலேயே கொண்டு சேர்த்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்; திரைத்துறையில் உள்ள பிற்போக்கு எண்ணங்களை உடைத்தெறிந்தவர்” என்று தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலை மற்றும் அதன் கீழ் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் முதுநிலை பொறியியல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், பி.எச்.டி மாணவர்களுக்கான மே 2022 செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.
கால்பந்து ஜாம்பவான் பீலே உடல் இறுதி ஊர்வலத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது. சாண்டோஸ் கால்பந்து மைதானத்தில் இருந்து ஊர்வலம் கிளம்பியது.
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் பேரணியில் இளைஞர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது மன்னிக்க முடியாதது; காவல்துறைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்குக் காரணமான காவலர்கள் மீது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெண் காவலர்களுக்கு யார் பாதுகாப்பு என வானதி சீனிவாசன் எம்.எல்ஏ கேள்வியெழுப்பி உள்ளார்.
திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலர் மானபங்கம் செய்யப்பட்டதை சுட்டிக் காட்டி பேசிய அவர், “கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் என இரு பெண் எம்.பி.க்கள் இருந்த பொதுக்கூட்டத்தில் பெண் காவலர்களுக்கு திமுக நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது. தமிழ்நாட்டில் பெண் காவலருக்கு யார் பாதுகாப்பு?” எனக் கேள்வியெழுப்பினார்.
நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள வாரிசு படத்தின் ட்ரைலர் காட்சி நாளை (ஜன.4) மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.
அஜித் குமாரின் துணிவு படமும் விஜய்யின் வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாகின்றன. ஏற்கனவே துணிவு ட்ரைலர் வெளியான நிலையில், வாரிசு படத்தின் ட்ரைலர் நாளை மாலை வெளியாகிறது.
பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 27ஆம் தேதி மாணவர்கள், பெற்றோருடன் கலந்துரையாடுகிறார் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலம் வைஷாலியில் பாஜக தேசியத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நட்டா பேசினார்.
அப்போது பீகாரிகள் மாநிலத்தில் ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்” என்றார்.
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்சி சம்பத் முன்பிணை கோரி கடலூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
திமுக அல்லது விசிக உள்ளிட்ட கட்சிகளில் இணைய தாம் தயாராக இருப்பதாக காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
இவர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினார்.
முன்னதாக அவர் மாநில பாஜகவால் 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.
ஜன.9ஆம் தேதி திங்கள்கிழமை அஜித் குமாரின் துணிவு, விஜய்யின் வாரிசு படத்தின் முன்பதிவு டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.
நீண்ட நாள்களுக்கு அஜித், விஜய் படங்கள் பொங்கலுக்கு மோதவுள்ளன. இது இருவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள பொது விநியோக துறை கிடங்கில் பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட உள்ள சக்கரை மற்றும் பச்சரிசியை ஆய்வு செய்த பின்னர் அவர் இதனை தெரிவித்தார்.
சியாச்சினில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் முதல் பெண் அதிகாரி ஆகிறார் சிவா சௌகான்.
நீண்ட பயிற்சிக்கு பின்னரே இவர் இங்கு நியமிக்கப்பட்டுள்ளார். சியாச்சின் உலகின் மிக உயரமான யுத்த களம் ஆகும்.
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 044 2474 9002, 044 2628 0445 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்
வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுகளை தியேட்டர்கள் தடை செய்யலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது
விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் 2022-ன் வெற்றியாளர் ஆர்.பி. கிருஷாங் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்
பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 16,932 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது
புதுக்கோட்டையில் தீண்டாமை தொடர்பாக கைதானவர்களுக்கு ஜாமின் தர நீதிமன்றம் மறுத்துள்ளது. ஒழுங்கு நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய 2 வழக்கறிஞர்கள் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது
சவுரிக்கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சியளிக்கிறார். ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி இராப்பத்து 2ம் நாள் உற்சவத்தில் திருஆபரணங்கள் சூடிக்கொண்டு சொர்க்கவாசலை கடந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்
தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் விற்பனை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
வேலுநாச்சியாரின் 293வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளில் அவரை புகழ்ந்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
வேலுநாச்சியாரின் 293வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளில் அவரை புகழ்ந்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி. தம் மக்களுக்கு நீதி கிடைக்க அவர் முன் நின்று போராடினார். காலனியாதிக்கத்தை தீவிரமாக எதிர்த்ததுடன், சமூக நன்மைக்காகவும் பணியாற்றினார். அவரது தீரம் தலைமுறை தாண்டியும் உத்வேகம் அளிக்கும்.
— Narendra Modi (@narendramodi) January 3, 2023
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும், தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பின் 2 மாதமாக விசாரணைக்கு காத்திருந்தேன். எந்த விசாரணையும் இல்லாமல் பொறுப்பில் இருந்து எப்படி நீக்க முடியும்- பாஜகவில் இருந்து விலகிய நிலையில் காயத்ரி ரகுராம் பேட்டி
12 ஆம் வகுப்பு பொதுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை ஹால் டிக்கெட் வழங்கப்பட உள்ளது. நாளை பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் ஜெய்தேவ் உனத்கட்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு
வழக்குகளை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட வேண்டிய முகாந்திரம் இல்லை – உச்சநீதிமன்றம் கருத்து
சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு முனையத்தில் உள்ள பொம்மை கடைகளில் பி.ஐ.எஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை
பி.ஐ.எஸ் தரம் இல்லாத 327 பொம்மைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்
198 மின்சாரம் அல்லாத பொம்மைகள் மற்றும் 129 எலக்ட்ரிக் பொம்மைகள் பறிமுதல்
வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி.
காலனியாதிக்கத்தை தீவிரமாக எதிர்த்ததுடன், சமூக நன்மைக்காகவும் பணியாற்றினார்.
ராணி வேலு நாச்சியாரின் தீரம் தலைமுறை தாண்டியும் உத்வேகம் அளிக்கும் – பிரதமர் மோடி ட்வீட்
அதிமுக பலவீனப்பட்ட போதெல்லாம், அதற்கு பலம் கொடுத்தது பா.ம.க
ஜெயக்குமாரின் கருத்து குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் – பாமக வழக்கறிஞர் பாலு
ஜெயக்குமார் அமைச்சராக நீடித்ததற்கும் பாமக தான் காரணம்.
ஜெயக்குமார் கூறியதை அவரது தனிப்பட்ட கருத்தாக பார்க்கிறோம் – பாமக வழக்கறிஞர் பாலு
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும்.
அனைத்து பள்ளிகளும், நாளை பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு
அடுத்த மாதம் செய்முறை தேர்வு நடைபெற இருப்பதால் ஹால் டிக்கெட் வெளியீடு
நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிரான தமிழக அரசின் மனு விசாரணையை ஒரு மாதத்துக்கு தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம்
ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக அனுப்பிய கடிதத்தை அதிமுக வாங்க மறுத்த விவகாரம்
தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தினார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் ரூ. 5.60 கோடியில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு ஜிம்னாசியம் திறப்பு
சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அமைச்சர்கள், பொதுப் பதவியில் இருப்பவர்கள் கூறும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது – உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில், அமைச்சர் சக்கரபாணி ஆய்வு பொங்கல் தொகுப்பில் வழங்கப்படவுள்ள பொருட்களின் தரம் குறித்து ஆய்வு பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரேஷன் கடைகளில் வழங்கும் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு
பொங்கல் தொகுப்பில் வழங்கப்படவுள்ள பொருட்கள் 60% அந்தந்த மாவட்டங்களுக்கு சென்றுவிட்டது.
கரும்பு கொள்முதல் செய்ய அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது – அமைச்சர் சக்கரபாணி
போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்தில், அரசு அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை
முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கேட் (GATE) நுழைவுத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு; https://gate.iitk.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் பிப்ரவரி 4 முதல் 12-ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி தேர்வு.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 328 உயர்ந்து ரூ. 41,528க்கு விற்பனை.
தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடக்கம். தினமும் 200 முதல் 250 டோக்கன் வீடு வீடாகச் சென்று ஊழியர்கள் விநியோகம் செய்ய உள்ளனர். இன்று தொடங்கிய டோக்கன் விநியோகம் செய்யும் பணி வரும் 8ம் தேதி நிறைவுபெறுகிறது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி. மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு நாளை முதல் 7ம் தேதி வரை அனுமதி.
கால்பந்து ஜாம்பவான் பீலே உடல் இன்று அடக்கம் சாண்டோஸ் கால்பந்து மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி.