Advertisment

Tamil news today : என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு

Tamil Nadu News, Tamil News, Petrol price Today: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news today : என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு

பெட்ரோல்,டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

பாஜக சிறை நிரப்பு போராட்டம்

 இந்து மதத்தை குறித்து அவதூறாக பேசிய ஆர். ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 26ம் தேதி  சிறை நிரப்பும் போராட்டத்தை தமிழக பாஜக அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தமிழக பாஜக அண்ணாமலை அறிவித்தார்.

இன்று முதல் வேட்புமனு தாக்கல்

திமுகவின் உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது.  மாவட்ட செயலாளர், அவை தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு வரும் 25ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:24 (IST) 22 Sep 2022
    பாரம்பரிய கட்டிடங்களை சீரமைக்க நிதி ஒதுக்கீடு; அரசாணை வெளியீடு

    பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 17 பாரம்பரிய கட்டிடங்களை புதுப்பித்து, மறுசீரமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    பாரம்பரிய கட்டிடங்களை பழமை மாறாமல் சீரமைக்க ரூ.103 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


  • 20:30 (IST) 22 Sep 2022
    அண்ணா பிறந்தநாளை கொண்டாட தகுதியுள்ள கட்சி அதிமுக - இ.பி.எஸ் பேச்சு

    சேலம்,ஆட்டையாம்பட்டியில் அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ் பேச்சு: கட்சி பெயரில் அண்ணா,கொடியில் அண்ணா என அண்ணாவிற்கு பெருமை சேர்ந்த கட்சி அதிமுகதான். அதனால், அண்ணா பிறந்தநாளை கொண்டாட தகுதியுள்ள கட்சி அதிமுகதான் என்று தெரிவித்துள்ளார்.


  • 20:27 (IST) 22 Sep 2022
    உளுந்தூர்பேட்டை அருகே டிராக்டர் மீது அரசு பேருந்து மோதி விபத்து; 2 பேர் உயிரிழப்பு, 4 பேர் படுகாயம்

    உளுந்தூர்பேட்டை அருகே கெடிலம் மேம்பாலத்தில் டிராக்டர் மீது அரசு பேருந்து மோதி விபத்து; 2 பேர் உயிரிழப்பு, 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 3 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


  • 20:04 (IST) 22 Sep 2022
    மு.க. ஸ்டாலினால் எதையும் சமாளிக்க முடியவில்லை - இ.பி.எஸ் விமர்சனம்

    சேலம், ஆட்டையாம்பட்டியில் அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு: அதிமுக ஆட்சியில் எண்ணற்ற பிரச்னைகளை உருவாக்கினார்கள்.எதற்கெடுத்தாலும் போராட்டம்; ஆயிரக்கணக்கான போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்து அத்தனையும் சமாளித்தோம்.ஆனால் இன்றைய முதல்வரால் எதையும் சமாளிக்க முடியவில்லை என்று விமர்சனம் செய்தார்.


  • 19:55 (IST) 22 Sep 2022
    ஆபாச படம் எடுத்து, மிரட்டி பணம் பறித்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    சினிமாவில் நடிக்கவைப்பதாகக் கூறி ஆபாச படம் எடுத்து, மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைதான எடப்பாடியைச் சேர்ந்த வேல் சத்திரியன், உதவியாக இருந்த ஜெயஜோதி இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.


  • 19:13 (IST) 22 Sep 2022
    கிருஷ்ணகிரியில் மாணவர்களை கழிவறை சுத்தம் செய்து வீடியோ வெளியீடு; ஆசிரியர் பணி நீக்கம்

    கிருஷ்ணகிரி மாவட்டம், மல்லப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்து, அதை வீடியோ பதிவு செய்து வாட்ஸ் ஆப் குழுக்களில் பதிவிட்ட விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் தமிழ் ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

    தலைமை ஆசிரியர் மீது பொய்யான புகாரை அளிக்கும் நோக்கத்தோடு தமிழ் ஆசிரியர் மாணவர்களை பயன்படுத்தி வீடியோ எடுத்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.


  • 18:34 (IST) 22 Sep 2022
    அரசு கல்லூரிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு

    41 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு கல்லூரிகளாக மாற்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான சம்பளம், மண்டல இணை இயக்குனர்கள் மூலமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 18:33 (IST) 22 Sep 2022
    “வருவாய் பற்றாக்குறை குறைந்துள்ளது“ – தமிழக நிதியமைச்சர்

    முதல்வர் ஒத்துழைப்பு மூலம் நிதி துறையில் பல சீரமைப்புகள் செய்து வருகிறோம் கடனை குறைத்துள்ளோம், வளர்ச்சி பாதுகாப்பாக உள்ளது வருவாய் பற்றாக்குறை மிகவும் குறைந்துள்ளது பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியை பாதிக்காத வகையில் நாங்கள் செயல்படுகிறோம் பொது விநியோக திட்டத்திற்கு‌ அரசு அதிக நிதியை செலவு செய்து வருகிறது – என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்


  • 18:31 (IST) 22 Sep 2022
    இந்திய துறைமுகங்கள் மசோதா குறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

    இந்திய துறைமுகங்கள் மசோதா கடலோர மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதாகவும், சிறு துறைமுகங்களின் வளர்ச்சியை தடுப்பதாகவும் மசோதா அமைகிறது. மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் பிரிவுகளை வரைவு சட்டத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூறி பிரதமருக்கு வலியுறுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


  • 17:42 (IST) 22 Sep 2022
    'காவல்துறை உங்கள் நண்பன்' என்ற வாசகமே சமூக நீதி - முதல்வர் கடிதம்

    டிஜிபி அலுவலகத்தில் காவல்துறையினரின் குறைகளை கேட்டறிந்தது மகிழ்ச்சியை தருகிறது 'காவல்துறை உங்கள் நண்பன்' என்ற வாசகமே சமூக நீதி, சமத்துவம், மனித கொள்கைகளை கடைப்பிடிப்பதை பறைசாற்றுகிறது மக்கள் போற்றும் வகையில் பாதுகாப்பு பணியாற்றி வரும் அனைத்து காவலர்களுக்கும் பாராட்டுகள் காவல்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு கடிதம் எழுதியுள்ளார்.


  • 17:40 (IST) 22 Sep 2022
    3 கோடி இழப்பீடு கேட்டு சுவாதியின் பெற்றோர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

    கடந்த 2016-ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 கோடி இழப்பீடு கோரி சுவாதியின் பெற்றோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் இழப்பீடு கோரி உரிமையியல் வழக்கு தாக்கல் செய்ய அறிவுறுத்தி மனு தள்ளுபடி செய்துள்ளது.


  • 16:26 (IST) 22 Sep 2022
    குவாரிகளில் முறைகேடு செய்தால் கடும் தண்டனை - ஐகோர்ட்

    குவாரி விவகாரங்களில் அரசு அதிகாரிகள் முறைகேடு செய்திருப்பது தெரிய வந்தால் கடும் தண்டனை விதிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது


  • 16:09 (IST) 22 Sep 2022
    தமிழகத்தில் என்.ஐ.ஏ. சோதனை நிறைவு

    தமிழகத்தில் அதிகாலை முதல் நடைபெற்று வந்த என்.ஐ.ஏ சோதனை நிறைவு பெற்றுள்ள நிலையில், 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது. சென்னை, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இந்த என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்றது


  • 15:55 (IST) 22 Sep 2022
    பஞ்சாபில் பா.ஜ.க - ஆம் ஆத்மி இடையே மோதல்

    பஞ்சாபில் பா.ஜ.க - ஆம் ஆத்மி இடையே மோதல்போக்கு அதிகரித்து வருகிறது. பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானின் இல்லத்தை நோக்கி பேரணியாக சென்ற பா.ஜ.க.,வினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தண்ணீரை பீய்ச்சி அடுத்து விரட்டியதால் பரபரப்பு நிலவி வருகிறது


  • 15:42 (IST) 22 Sep 2022
    தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி - உயர் நீதிமன்றம் உத்தரவு

    தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது


  • 15:27 (IST) 22 Sep 2022
    ஞானவாபி மசூதி வழக்கு - இஸ்லாமிய அமைப்புகளுக்கு நோட்டீஸ்

    ஞானவாபி மசூதி தொடர்பாக இந்து அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் இஸ்லாமிய அமைப்புகளுக்கு வாரணாசி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது


  • 15:00 (IST) 22 Sep 2022
    தமிழக அரசு தேவையான நிலம் கொடுக்கவில்லை., ஜே.பி.நட்டா

    மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற மத்திய அரசு ரூ.550 கோடி ஒதுக்கியது. மத்திய அரசு 633.17 ஏக்கர் நிலத்தை கேட்ட நிலையில், தமிழக அரசு 543 ஏக்கர் நிலத்தை கொடுத்தது. தேவையான இடத்தை தமிழக அரசு கொடுக்கவில்லை என ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார்.


  • 14:57 (IST) 22 Sep 2022
    பயன்படுத்த முடியாத நிலையில், பள்ளி கட்டிடங்கள்

    தமிழகத்தில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் கட்ட குழு அமைக்க கோரிய வழக்கில், தமிழகத்தில் 5,583 பள்ளி கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் தகவலை அடுத்து வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.


  • 14:19 (IST) 22 Sep 2022
    ஜேபி நட்டா பேச்சு

    கடந்த 8 ஆண்டுகளாக இந்தியா அதிவேகமாக வளர்ந்து வருகிறது, தொழிற் துறையில் முதலீடு செய்வதால் நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளது, தமிழ்நாட்டிலும் அதன் வளர்ச்சியை காணமுடிகிறது என மதுரையில் நடந்து வரும் பாஜக ஆலோசனை கூட்டத்தில் தேசிய தலைவர் ஜேபி நட்டா பேசினார்.


  • 13:50 (IST) 22 Sep 2022
    ஹிஜாப் விவகாரம்.. தீர்ப்பு ஒத்தி வைப்பு

    ஹிஜாப் விவகாரம் தொடர்பான மேல்முறையீடு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.


  • 13:33 (IST) 22 Sep 2022
    மதுரை வந்த ஜே.பி.நட்டா

    2 நாள் பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று மதுரை விமான நிலையம் வந்தார். அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


  • 13:19 (IST) 22 Sep 2022
    என்.ஐ.ஏ நடத்திய சோதனையில் 106 பேர் கைது?

    பாப்புலர் ஃப்ரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளுக்கு தொடர்புடைய இடங்களில் நாடு ழுழுவதும் என்.ஐ.ஏ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் மொத்தம் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


  • 13:17 (IST) 22 Sep 2022
    போலீஸ் விசாரணையில் ஒருவர் உயிரிழப்பு.. நீதிமன்றம் உத்தரவு

    அருப்புக்கோட்டையில் போலீஸ் விசாரணையின்போது தங்கப்பாண்டி என்பவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தில், தங்கப்பாண்டியின் உடலை 2 நாட்களுக்குள் உறவினர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். தவறினால், காவல்துறையினரே அடக்கம் செய்யலாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


  • 13:00 (IST) 22 Sep 2022
    அஜித்தின் துணிவு 2 லுக் வெளியீடு

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் 'துணிவு' திரைப்படத்தின் 2nd Look வெளியீடு


  • 12:59 (IST) 22 Sep 2022
    அஜித்தின் துணிவு 2 லுக் வெளியீடு

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் 'துணிவு' திரைப்படத்தின் 2nd Look வெளியீடு


  • 12:48 (IST) 22 Sep 2022
    மதுரை ஆதீனம் பதிலளிக்க மறுப்பு

    திமுக எம்.பி. ஆ.ராசா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்து எழுந்து சென்றார் மதுரை ஆதீனம்,


  • 12:47 (IST) 22 Sep 2022
    நடிகர் போண்டா மணியை நேரில் சந்தித்து அமைச்சர் நலம் விசாரிப்பு

    நகைச்சுவை நடிகர் போண்டா மணியிடம் நேரில் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் நலம் விசாரிப்பு. முன்னதாக நடிகர் பெஞ்சமின் போண்டா மணிக்கு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.


  • 12:26 (IST) 22 Sep 2022
    அரசு வேலைக்காக 73.99 லட்சம் பேர் காத்திருப்பு

    வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 73.99 லட்சம் பேர் காத்திருப்பு - மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தகவல்


  • 12:25 (IST) 22 Sep 2022
    36 யூடியூப் சேனல்கள் மீது வழக்குப்பதிவு

    கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரத்தில் 36 யூடியூப் சேனல்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

    6-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களுக்கு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சம்மன்


  • 12:25 (IST) 22 Sep 2022
    கடத்தப்பட்ட 17 வயது சிறுவன் 16 மணி நேரத்தில் மீட்பு

    தர்மபுரி அருகே பணம் கேட்டு கடத்தப்பட்ட 17 வயது சிறுவன் 16 மணி நேரத்தில் மீட்பு

    ரூ.1 கோடி பணம் கேட்டு பைனான்ஸ் அதிபரின் மகன் நேற்று கடத்தல்

    கடத்தலில் ஈடுபட்ட பக்கத்து வீட்டு நபர் உட்பட 7 பேரிடம் போலீசார் விசாரணை


  • 12:08 (IST) 22 Sep 2022
    அமித்ஷா முக்கிய ஆலோசனை

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் முக்கிய ஆலோசனை - என்ஐஏ அதிகாரிகள், உள்துறை செயலாளர் பங்கேற்பு

    நாடு முழுவதும் 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா' அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வரும் நிலையில் ஆலோசனை


  • 11:37 (IST) 22 Sep 2022
    பீரோவை தூக்கும் போது மின்சாரம் தாக்கி 3 பேர் பலி

    தருமபுரி அருகே இரும்பு பீரோவை தூக்கும் போது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு

    கயிறு கட்டி மாடிக்கு தூக்கப்பட்ட பீரோவை இறக்கிய போது மின்கம்பி உரசி விபத்து


  • 11:36 (IST) 22 Sep 2022
    அரும்பாக்கம் தனியார் வங்கி கொள்ளை வழக்கில் 6 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை

    அரும்பாக்கம் தனியார் வங்கி கொள்ளை வழக்கில் 6 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை

    முருகன் உள்பட 6 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க சென்னை ஆணையர் உத்தரவு


  • 10:34 (IST) 22 Sep 2022
    முன்ஜாமின் பெற்ற ஓபிஎஸ்

    அதிமுக அலுவலக கலவர வழக்கில் முன்ஜாமின் பெற்ற ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர் இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர் காலை 10 முதல் 12 மணி வரை ஈபிஎஸ் தரப்பினரும், மதியம் 2 முதல் 4 மணி வரை ஓபிஎஸ் தரப்பினரும் கையெழுத்திட உள்ளனர்


  • 10:31 (IST) 22 Sep 2022
    தேசிய நெடுஞ்சாலை எண்-109ல் போக்குவரத்து துண்டிப்பு

    உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு தேசிய நெடுஞ்சாலை எண்-109ல் போக்குவரத்து துண்டிப்பு- காத்திருக்கும் வாகனங்கள் சீரமைப்பு பணி முடிந்ததும் போக்குவரத்து தொடங்கும்- ருத்ரபிரயாக் மாவட்ட நிர்வாகம்


  • 08:53 (IST) 22 Sep 2022
    பால் பாக்கெட்டில் ஈ; ஆவின் உதவி மேலாளர் சிங்காரவேலன் பணியிடை

    மதுரையில் ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்த விவகாரம். பால் தயாரிப்பின் போது பணியில் இருந்த ஆவின் உதவி மேலாளர் சிங்காரவேலன் பணியிடை. நீக்கம் மதுரை மாவட்ட ஆவின் தலைமை மேலாளர் சாந்தி நடவடிக்கை.


  • 08:52 (IST) 22 Sep 2022
    லைவ் ஸ்ட்ரீமிங் காப்புரிமையை மீறியதாக புகார்

    ஃபேஸ்புக் நிறுவனமான மீட்டாவிற்கு 174.5 மில்லியன் டாலர் அபராதம் விதித்து அமெரிக்க நடுவர் ஆணையம் உத்தரவு. போர்க்கள தகவல் தொடர்புகளில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வதற்காக ராணுவ வீரர் உருவாக்கிய லைவ் ஸ்ட்ரீமிங் காப்புரிமையை மீறியதாக புகார்.


  • 08:51 (IST) 22 Sep 2022
    பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் இடங்களில் என்ஐஏ சோதனை

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் இடங்களில் என்ஐஏ சோதனை. சென்னை, மதுரை, திண்டுக்கல், கடலூர், தேனி, ராமநாதபுரம், தென்காசி, கோவை ஆகிய மாவட்டங்களில் சோதனை.


Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment