/indian-express-tamil/media/media_files/BQicMTGOF63vxHDkU7LT.jpg)
IE Tamil Updates
இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்
புழல் ஏரியில் நீர்இருப்பு 2292 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 748 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 469 மில்லியன் கனஅடியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Feb 29, 2024 23:12 IST
மின்சார ரயிலில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாகபறக்கும் ரயில் சேவை பாதிப்பு
சென்னை சிந்தாதிரிப்பேட்டை- வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் சேவை மின்சார ரயிலில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பழுது சரி செய்யப்பட்டதை அடுத்து மீண்டும் போக்குவரத்து சீரானது. வேளச்சேரியில் இருந்து புறப்பட்ட ரயில் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே வரும்போது பிரேக்கில் பழுது ஏற்பட்டது இதனால் அந்த வழித்தடத்தில் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன
-
Feb 29, 2024 21:55 IST
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்
“மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு $7.37 பில்லியனாக உயர்ந்து, இந்தியாவில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதி $22.65 பில்லியன் எனும்போது, தமிழ்நாட்டின் ஏற்றுமதி நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 32.52% எட்டியுள்ளது! நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு அளித்து வரும் பெரும் பங்கினை இந்த சாதனை எடுத்துக் காட்டுகிறது"
-
Feb 29, 2024 21:53 IST
+2 மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
“தேர்வு என்பது மற்றுமொரு கல்வியியல் நடைமுறைதானே தவிர, அதுவே உங்களது திறமையை எடைபோடுவதற்கான அளவுகோல் கிடையாது” +2 மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
Feb 29, 2024 21:51 IST
குர்மீத் ராம் பரோல் விவகாரம் - ஹரியானா உயர்நீதிமன்றம் காட்டம்
பாலியல் வழக்கில் 40 ஆண்டுகள் ஆயுள் தண்டனை பெற்ற தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்-க்கு இனி நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் பரோல் வழங்கக் கூடாது என ஹரியானா சிறைத்துறைக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு!
குர்மீத் ராம்-ஐ, கடந்த 3 ஆண்டுகளில் 240 நாட்கள் பரோலில் விடுதலை செய்த ஹரியானா அரசைக் கடுமையாகக் கண்டித்துள்ளது உயர்நீதிமன்றம்!
-
Feb 29, 2024 21:48 IST
திமுக நிர்வாகி கொலை - பரபரப்பு
சென்னை அடுத்த வண்டலூரில் திமுக நிர்வாகி ஆராமுதன் நாட்டுவெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை படுகொலை செய்துவிட்டு தப்பியோடிய அடையாளம் தெரியாத கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
-
Feb 29, 2024 20:57 IST
தமிழ்நாடு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி உயர்வு
"மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு $7.37 பில்லியனாக உயர்ந்து, இந்தியாவில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது" என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
-
Feb 29, 2024 20:56 IST
யூபிஐ மூலம் டிக்கெட் பெறும் வசதி விரைவில் அறிமுகம்
எம்டிசி பேருந்துகளில் நேரடியாக பணம் கொடுத்து டிக்கெட் பெறுவது போல், ஏடிஎம் கார்டு மற்றும் யூபிஐ மூலம் டிக்கெட் பெறும் வசதி அடுத்த ஒரு மாதத்தில் நடைமுறைக்கு வரவுள்ளது
-
Feb 29, 2024 20:25 IST
12ஆம் வகுப்பு தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள்; மு.க. ஸ்டாலின் ட்வீட்
“ கல்வி வாழ்க்கையின் அடுத்தகட்டமான +2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள். தெளிவாக எழுதுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி அமைய வாழ்த்துகிறேன்” என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நாளை எழுத உள்ள மாணவர்களுக்கும் மாணவியர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) February 29, 2024
உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்தகட்டமான +2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள். தெளிவாக எழுதுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி அமைய வாழ்த்துகிறேன்.
தேர்வு… -
Feb 29, 2024 20:05 IST
மாணவிகளுடன் பிரியாணி சாப்பிட்ட பிரியா
பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாளை பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவிகளுடன் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டார்.
-
Feb 29, 2024 19:40 IST
சிவில் நீதிபதிகள் தேர்வுப் பட்டியல் ரத்து; சென்னை உயர் நீதிமன்றம்
சிவில் நீதிபதிகள் தற்காலிக தேர்வு பட்டியலை ரத்து செய்யும்படி டி.என்.பி.எஸ்.சி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பின்னடைவு காலி பணியிடங்களை நிரப்பாமல் இடஒதுக்கீடு முறை தவறாக பின்பற்றப்பட்டுள்ளது என தொடரப்பட்ட வழக்கில் புதிய பட்டியலை 2 வாரங்களில் வெளியிட வேண்டும் என தேர்வாணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. -
Feb 29, 2024 19:37 IST
மகாசிவராத்திரி: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
சிவராத்திரியை ஒட்டி வரும் மார்ச் 8ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Feb 29, 2024 19:06 IST
ஈரோட்டில் 101.48 டிகிரி வெயில் பதிவு
தமிழ்நாட்டில் இன்று அதிகப்பட்சமாக ஈரோட்டில் 101.48 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. அடுத்த இடங்களில், கரூர் பரமத்தி, தர்மபுரி, நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளன. குறைந்தப்பட்ச வெயில் பதிவான மாவட்டமாக திண்டுக்கல் கொடைக்கானல் உள்ளது.
-
Feb 29, 2024 18:51 IST
ஸ்டெர்லைட் ஆலை வழக்கு; உச்ச நீதிமன்ற உத்தவுக்கு ஸ்டாலின் வரவேற்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய மக்களுக்கும், நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது. எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம்!” என்று தெரிவித்துள்ளார்.
-
Feb 29, 2024 18:51 IST
ஸ்டெர்லைட் ஆலை வழக்கு; உச்ச நீதிமன்ற உத்தவுக்கு ஸ்டாலின் வரவேற்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய மக்களுக்கும், நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது. எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம்!” என்று தெரிவித்துள்ளார்.
-
Feb 29, 2024 18:41 IST
சிவில் நீதிபதிகளுக்கான தேர்வாளர்கள் பட்டியல் ரத்து - ஐகோர்ட் உத்தரவு
தமிழ்நாடு சிவில் நீதிபதிகள் பணிக்கு தேர்வானவர்களின் தற்காலிகத் தேர்வுப் பட்டியலை ரத்து செய்து; திருத்தப்பட்ட பட்டியலை வெளியிடுமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இடஒதுக்கீடு முறையில் குளறுபடி, அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை பொதுப் பிரிவில் சேர்க்கவில்லை என தொடரப்பட்ட வழக்கில் திருத்தப்பட்ட மாற்றுப்பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Feb 29, 2024 18:22 IST
மடத்தின் பெருமையைக் காத்த ஸ்டாலினுக்கு நன்றி - தருமபுரம் ஆதீனம் உருக்கம்
ஆபாச வீடியோவை வெளியிடப் போவதாக தருமபுரம் ஆதினத்தை மிரட்டி பணம் பறிக்க முயன்ற பா.ஜ.க மாவட்ட தலைவர் உட்பட 4 பேர் பிப்ரவரி 28-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கை குறித்து, தருமபுரம் ஆதீனம் “எங்களையும், எங்கள் மடத்தின் பெருமையையும் காத்த காவல்துறைக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
-
Feb 29, 2024 18:02 IST
சாந்தனுக்கு ஏற்பட்ட நிலை எங்களுக்கும் ஏற்படக் கூடாது - ராபர்ட் பயஸ் கடிதம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ராபர்ட் பயஸ் உலகத் தமிழர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “அன்பார்ந்த உலகத் தமிழ்ச் சமூகமே இன்னும் நாங்கள் 3 பேர் மிச்சம் இருக்கிறோம். எங்களையாவது கடைசி காலத்தில் குடும்பத்துடன் இருக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? குடும்பங்களை பிரிந்து வாழ்க்கையை இழந்து வாடும் எங்கள் பெரும் துன்பங்கள் முடிவுக்கு வருமா? நீண்ட கால சிறைவாசமும் குடும்பங்களை பிரிந்து துயரமும் எங்களை முழுமையான நோயாளிகளாக்கியுள்ளது. சாந்தனுக்கு ஏற்பட்ட நிலை எங்களுக்கும் ஏற்படக்கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Feb 29, 2024 17:54 IST
பொதுத்தேர்வு மையங்களில் உரிய வசதி செய்து தர அறிவுறுத்தல்: அன்பில் மகேஷ்
பொதுத் தேர்வு மையங்களில் தேர்வு சார்ந்த உரிய அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வை மாணவர்கள் தைரியமாக எழுத வேண்டும். மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
Feb 29, 2024 16:55 IST
ஸ்டெர்லைட் ஆலை; வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விதிமீறல்கள் பல இருப்பதால்தான் அரசு, உயர் நீதிமன்றம் உரிய முடிவு எடுத்துள்ளது என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்
-
Feb 29, 2024 16:27 IST
உலக முதலீட்டாளர்கள் மாநாடு; சிறப்புக்குழு அமைப்பு
கடந்த மாதம் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்களின் அடுத்த கட்ட செயல்பாடுகளை கண்காணிக்க தொழில்துறை அமைச்சர் தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது
-
Feb 29, 2024 16:09 IST
அகழாய்வில் கிடைத்த 5,765 பொருட்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு
அகழாய்வில் கிடைத்த 5,765 பொருட்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது
-
Feb 29, 2024 15:49 IST
சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை; கர்நாடக அரசிடம் சமர்பிப்பு
கர்நாடக அரசு சார்பில் நடத்தி முடிக்கப்பட்டுள்ள சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையை, 9 ஆண்டுகளுக்கு பின் இன்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையாவிடம் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் ஜெயபிரகாஷ் ஹெக்டே ஒப்படைத்தார். சுமார் 4,000-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட அறிக்கையில் முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
-
Feb 29, 2024 15:33 IST
ஸ்டெர்லைட் ஆலை 20 ஆண்டுகளாக உரிமங்களை புதுப்பிக்காமல் செயல்பட்டது – தமிழக அரசு வாதம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 20 ஆண்டுகளாக உரிய அனுமதி மற்றும் உரிமங்களை புதுப்பிக்காமல் செயல்பட்டது. விதிகளை மீறி செயல்படுவதை வாடிக்கையாக வைத்திருந்தது என தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. 20 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதால் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்
-
Feb 29, 2024 15:17 IST
சென்னைக்கு தண்ணீர் பற்றாக்குறை வருவதற்கான வாய்ப்புகள் இல்லை - அமைச்சர் கே.என்.நேரு
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் நடப்பாண்டில் தண்ணீர் பற்றாக்குறை வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. சென்னையைப் பொறுத்த வரை 1040 எம்.எல்.டி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாகக் கோடை காலம் என்பதால் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் மூலம் 150 எம்.எல்.டி வழங்கப்பட உள்ளது. குடிநீர் வசதி எல்லா இடங்களிலும் சரியாக உள்ளதா, பழுது பார்க்க வேண்டிய இடங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. மோட்டார்கள் சரியில்லாத இடங்களில் சரி செய்யும் வகையிலும், பைப்கள் பழுதடைந்து இருக்கும் இடங்களில் சரி செய்ய அறிவுறுத்தப்பட்டது என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்
-
Feb 29, 2024 14:38 IST
நாளை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
நாளை முதல் 3,302 மையங்களில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வுகள் நடைபெறுகிறது
தமிழகம் முழுவதும் 7.25 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்
-
Feb 29, 2024 14:38 IST
சாந்தனின் உடலை விமானம் மூலம் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
இலங்கைக்கு சாந்தனின் உடலை விமானம் மூலம் அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Feb 29, 2024 14:15 IST
கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது பாஜக
#BREAKING | மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது பாஜக#SunNews | #ADMK | #BJP pic.twitter.com/J81lmu29Q2
— Sun News (@sunnewstamil) February 29, 2024Credit: Sun News
-
Feb 29, 2024 14:13 IST
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
சென்னை தலைமைச் செயலகத்தில் மக்களவை தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை
முதற்கட்டமாக 15 கம்பெனி துணை ராணுவப் படையினர் நாளை தமிழ்நாடு வர உள்ளதாகவும், மேலும், 10 கம்பெனி துணை ராணுவப் படையினர் மார்ச் 7ம் தேதி வருவார்கள் எனவும் தெரிவிப்பு.
ஒரு கம்பெனியில் 50 வீரர்கள் இருப்பார்கள் மொத்தமாக 200 கம்பெனி துணை ராணுவப் படையினர் கேட்கப்பட்டுள்ளது
-
Feb 29, 2024 13:49 IST
‘பம்பரம்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்யக் கோரி வைகோ மனு தாக்கல்
மதிமுகவிற்கு ‘பம்பரம்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மனு தாக்கல்;
அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையிட்ட நிலையில், நாளை விசாரிக்கப்படும் என நீதிமன்றம் அறிவிப்பு
-
Feb 29, 2024 13:34 IST
மோடியின் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது- மு.க.ஸ்டாலின்
பிரதமர் மோடியின் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது
அதனால்தான் தி.மு.க.வைப் பற்றியும், கழக அரசைப் பற்றியும் அவதூறுகளை அள்ளி வீசி இருக்கிறார் - மு.க.ஸ்டாலின்
-
Feb 29, 2024 13:15 IST
ரவிந்திரநாத் எம்.பி பேட்டி
இன்னும் இரண்டு நாட்களில் பாஜக கூட்டணி தொடர்பாக முடிவு செய்யப்படும். தென் மாவட்டங்களில் எந்த தொகுதியிலும் போட்டியிட நான் தயாராக உள்ளேன்
பாஜக கூட்டணியில் எத்தனை சீட் என்பதை தலைமை நிர்வாகிகள் முடிவு செய்வார்கள்
- ரவிந்திரநாத், தேனி எம்.பி.
-
Feb 29, 2024 13:15 IST
மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் ரத்து
நடிகை திரிஷாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரிய மனுவில், மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
Feb 29, 2024 12:55 IST
காங்கிரஸில் இணைந்த அசோகன்
தமாகாவில் இருந்து விலகிய அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அசோகன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
-
Feb 29, 2024 12:53 IST
தி.மு.க கூட்டணி தொகுதிப் பங்கீடு நிலவரம்
மக்களவை தேர்தல் - திமுக கூட்டணியில் தற்போது வரை தொகுதிப் பங்கீடு நிலவரம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 2
இந்திய கம்யூனிஸ்ட் - 2
கொ.ம.தே.க - 1 (நாமக்கல், உதயசூரியன் சின்னத்தில் போட்டி)
ஐ.யூ.எம்.எல் - 1 (ராமநாதபுரம்) -
Feb 29, 2024 12:52 IST
சி.பி.ஐ-க்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு
-
Feb 29, 2024 12:50 IST
நாளை மறுநாள் திமுக - காங். பேச்சுவார்த்தை
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் நாளை சென்னை வருகிறார். தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் இடையே நாளை மறுநாள் பேச்சுவார்த்தை
-
Feb 29, 2024 12:36 IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு 2 தொகுதிகள்
தி.மு.க கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்து. மார்க்சிஸ்ட் போட்டியிடும் இரு தொகுதிகளிள் விவரம் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் முடிவு. 3 தொகுதிகள் கேட்டோம். 2 தொகுதிகள் எங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
-
Feb 29, 2024 12:02 IST
தொகுதி பங்கீடு குழுவுடன் ஸ்டாலின் ஆலோசனை
தொகுதி பங்கீடு குறித்து முதல்வர் ஆலோசனை
கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவுடன் முதல்வர் ஆலோசனை
டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ.ராசா, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோருடன் ஆலோசனை
திமுக கூட்டணியில் மார்கிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக தகவல்
சற்று நேரத்தில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
-
Feb 29, 2024 11:56 IST
சாந்தனை ஏன் இலங்கைக்கு அனுப்பவில்லை?: ஐகோர்ட்
சாந்தனை ஏன் இலங்கைக்கு அனுப்பவில்லை? - சென்னை உயர்நீதிமன்றம்
சாந்தனை இலங்கைக்கு அனுப்ப பிப்ரவரி 22-ம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தும் ஏன் அனுப்பவில்லை. இன்று பிற்பகலுக்குள் சாந்தனின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
-
Feb 29, 2024 11:49 IST
பம்பரம் சின்னத்தில் தான் போட்டி- ம.தி.மு.க
எங்கள் சின்னத்தில் தான் போட்டி. ஒரு மாநிலங்களவை ஒரு மக்களவை பதவியை கேட்டுள்ளோம் - மதிமுக
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம், எங்கள் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என கூறி உள்ளோம் - மதிமுக
-
Feb 29, 2024 11:08 IST
தமிழக அரசு உயர்மட்டக் குழு அமைப்பு
பல்கலை. நிதிப் பிரச்னை - தமிழக அரசு உயர்மட்டக் குழு அமைப்பு
பல்கலைக் கழகங்களில் நிதிப் பிரச்னைகளை கையாள உயர்மட்டக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில் நிதிப் பிரச்னைகளை சரி செய்ய உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைப்பு
-
Feb 29, 2024 10:42 IST
தொழில் துவங்குவதை கண்காணிக்க சிறப்பு குழு
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் துவங்குவதை கண்காணிக்க குழு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தலைமையில் சிறப்பு குழு அமைத்தது தமிழக அரசு தலைமை செயலர், தொழில்துறை செயலர், மின் வாரிய தலைவர், தகவல் தொழில்நுட்ப துறை செயலர் உட்பட 17 பேர் இடம்பெற்றுள்ளனர் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 632 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக ₨6.64 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்களுடன் தொடர்ந்து கூட்டங்களை நடத்தி, தேவைகளை கேட்டறிந்து, தொழில் துவங்க இக்குழு நடவடிக்கை எடுக்கும்
-
Feb 29, 2024 10:36 IST
எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் திமுகவுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது
கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருப்பூர், நாகை ஆகிய 2 தொகுதிகளை மீண்டும் கேட்டுள்ளோம். எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் திமுகவுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது" - கே.சுப்பராயன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
-
Feb 29, 2024 09:47 IST
ஜாபர் சாதிக் வீட்டுக்கு சீல் வைப்பு
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் சென்னை மயிலாப்பூரில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி சீல் வைத்து சென்ற மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள்
-
Feb 29, 2024 09:18 IST
மத்திய ஆயுதப் படைத் தேர்வு: ஆள்மாறாட்டம் செய்த இளைஞர்
சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் நடைபெற்ற மத்திய ஆயுதப் படைத் (CAPF) தேர்வை ஆள்மாறாட்டம் செய்து எழுத வந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தர்மேந்திர சிங் (20) என்பவர் சிக்கினார். தேர்வு மைய அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் சோமங்கலம் போலீசார் விசாரணை.
-
Feb 29, 2024 09:16 IST
கோவை - பெங்களூரு இடையே இரவு நேர ரயில் இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராட்டம்
வடமாநிலங்களில் இருந்து வரும் 6 ரயில்கள் கோவை மத்திய ரயில் நிலையம் வராமல் கேரளாவிற்கு செல்லும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவை - பெங்களூரு இடையே இரவு நேர ரயில் இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ரயில்வே துறையை கண்டித்து கோவை ரயில் நிலையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டறிக்கைகளை வழங்கினர். தொடர்ந்து கோவை - நாகர்கோவில் ரயிலில் பயணித்தவாறு பயணிகளுக்கு துண்டறிக்கைகளை வழங்கினர்.
-
Feb 29, 2024 09:13 IST
அகிலேஷ் யாதவ், சி.பி.ஐ. முன்பு இன்று ஆஜராகிறார்
சமாஜ்வாதி கட்சித் தலைவரும். உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், சி.பி.ஐ. முன்பு இன்று ஆஜராகிறார். சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் ஆஜராகுமாறு அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
-
Feb 29, 2024 08:26 IST
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்தை முன்னிட்டு 51,000 பேருக்கு விருந்து
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்தை முன்னிட்டு குஜராத்தின் ஜாம்நகர் சுற்றுவட்டார மக்கள் 51,000 பேருக்கு நேற்றிரவு விருந்தளிக்கப்பட்டது.
-
Feb 29, 2024 08:14 IST
13 வயது ஆண் யானை உயிரிழப்பு.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கொண்டப்ப நாயக்கன்பாளையம் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் 13 வயது ஆண் யானை உயிரிழப்பு. நுரையீரல் பாதிப்பு காரணமாக யானை உயிரிழந்ததாக வனத்துறையினர் தகவல்.
-
Feb 29, 2024 08:05 IST
இயக்குநர் பாலா அடித்ததாக நடிகை மமிதா பைஜூ பரபரப்பு
படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் பாலா அடித்ததாக நடிகை மமிதா பைஜூ பரபரப்பு புகார்.. வணங்கான் படப்பிடிப்பின் போது இயக்குனர் பாலா தன்னை அடித்ததாக, பிரபல மலையாள நடிகை மமிதா பைஜூ குற்றச்சாட்டு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.