பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 586-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 10.498 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 87.08%, புழல் - 90.48%,பூண்டி - 94.74%, சோழவரம் - 71.88%, கண்ணன்கோட்டை - 100%
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Dec 28, 2023 09:31 ISTவிஜயகாந்த காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்: இ.பி.எஸ்
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான திரு.விஜயகாந்த அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் அன்னாரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான மரியாதைக்குரிய…
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 28, 2023 -
Dec 28, 2023 09:24 ISTவிஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக உயிரிழந்தார் : மருத்துவமனை அறிக்கை
விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக இன்று காலையில் உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை விஜயகாந்தின் உடல், சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது கண்ணீருடன் விஜயகாந்த் இல்லத்தில் குவியும் தொண்டர்கள் விஜயகாந்தின் உடலை பார்த்து கதறி அழுத பிரேமலதா விஜயகாந்த்
-
Dec 28, 2023 09:18 ISTஅரை கம்பத்தில் பறக்க விடப்பட்ட தே.மு.தி.க கொடி
விஜயகாந்த் வீட்டின் முன்பு உள்ள தே.மு.தி.க கட்சி கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது. ரசிகர்கள், தொண்டர்கள் அழு குரல் எங்கும் கேட்கிறது.
-
Dec 28, 2023 09:11 ISTதொடர் சிகிச்சை: விஜயகாந்த் மரணம்
வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதியானது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் மரணமடைந்தார்.
-
Dec 28, 2023 09:06 ISTவிஜயகாந்த் உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது
மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த நிலையில் விஜயகாந்த் உடல் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
-
Dec 28, 2023 09:01 ISTதேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
-
Dec 28, 2023 08:56 ISTவிஜயகாந்த்க்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை
விஜயகாந்த் தொடர்ந்து தீவிர சிகிச்சை சென்னை, மியாட் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று உறுதியான நிலையில், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை விஜயகாந்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் சமீபத்தில் நடந்த தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்றார்.
-
Dec 28, 2023 08:54 ISTவிஜயகாந்த் உடல்நிலை: 9 மணிக்கு அறிக்கை
விஜயகாந்த் உடல்நிலை குறித்து 9 மணிக்கு அறிக்கை விஜயகாந்த் உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை காலை 9 மணிக்கு வெளியாகிறது
-
Dec 28, 2023 08:21 ISTகிருஷ்ணசாமி காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி
நெல்லை : புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
-
Dec 28, 2023 08:20 ISTதுணைவேந்தர் ஜெகநாதன் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதி
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதி மோசடி மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஜெகநாதன் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டார் துணைவேந்தர் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் காவல்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர்
-
Dec 28, 2023 08:17 ISTவிஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனை: போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனையில், போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு காவல் உதவி ஆணையர் தலைமையில், 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
-
Dec 28, 2023 08:16 ISTசென்னைக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் டிஜிபி அலுவலகத்திற்கு மர்ம நபர் மின்னஞ்சல் மூலம் மிரட்டல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.