Advertisment

Tamil News Updates: மின் ஊழியர்கள் திட்டமிட்டபடி இன்று போராட்டம்

Tamil Nadu News Update Today- 8 July 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டப்படி 16ம் தேதி மின் ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

Tamil news Today live

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

மூளையை அரிக்கும் நோய் தொற்று: தமிழக அரசு அறிவுறுத்தல்

அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்என்னும் மூளையை அரிக்கும் நோய் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்-அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கடிதம்

  • Jul 08, 2024 23:56 IST
    ஜார்க்கன்ட முதல்வர் ஹேந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கியது சட்ட விரோதம்: அமலாகத்துறை

    ஜார்க்கன்ட முதல்வர் ஹேந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், ஹேந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கியது சட்டவிரோதமானது. அவருக்கு எதிராக முதன்மை ஆதாரம் இல்லை என்ற உயர்நீதிமன்றத்தின் கருத்து தவறானது என்று தெரிவித்துள்ளது.



  • Jul 08, 2024 21:10 IST
    தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கரூர், வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.



  • Jul 08, 2024 20:26 IST
    மணிப்பூர் மக்களுக்கு அமைதி தேவை : ராகுல் காந்தி

    வன்முறை தொடங்கிய பிறகு 3வது முறையாக நான் மணிப்பூர் வருகிறேன். இங்கே எதுவுமே மாறவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. மணிப்பூர் மக்களுக்கு அமைதி தேவை. அவர்களின் குரல்களை கேட்கவும், அவர்கள் மனதில் நம்பிக்கையை விதைக்கவும் வந்துள்ளேன். மீண்டும் அமைதியை நிலைநாட்ட உங்களுடன் இணைந்து போராட உள்ளேன் மணிப்பூரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.



  • Jul 08, 2024 20:20 IST
    துல்கர் சல்மான் படத்தில் ரிலீஸ் தேதி அறிவிப்பு

    வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி திரைக்கு வருகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளில் திரைப்படம் வெளியாகிறது.



  • Jul 08, 2024 20:04 IST
    கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது

    கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வேலு என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர். வேலு, மாதேஷிடம் விஷ சாராயம் வாங்கி சேஷசமுத்திரம் பகுதியில் விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் இதுவரை மொத்தம் 22 நபர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்



  • Jul 08, 2024 18:41 IST
    இந்தியா - ரஷ்யா 22வது உச்சி மாநாட்டில் பங்கேற்க மாஸ்கோ சென்றடைந்தார் மோடி

    பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார். இந்தியா - ரஷ்யா இடையே 22வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ரஷயா சென்றுள்ளார். உலகளாவிய முக்கிய பிரச்னைகள் குறித்து ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.



  • Jul 08, 2024 18:37 IST
    நான் கருப்பாக, குள்ளமாக இருப்பதால் என் பேச்சை மக்கள் கேட்பது இல்லை - சீமான்

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: “நான் கருப்பாக, குள்ளமாக இருப்பதால் என் பேச்சை மக்கள் கேட்பது இல்லை. நான் வெள்ளையாக இருந்து, ஆங்கிலத்தில் பேசி இருந்தால் மக்கள் கேட்டு இருப்பார்கள். 60 ஆண்டு குப்பையை, 5 ஆண்டுகளில் அகற்றுவது சிரமம். நான் தமிழன் என்பது தான், எனது அடையாளம். பலர் சாதியை இனம் என்று பேசி வருகின்றனர், அது தவறு. ஒரு மொழியை பேசும், குழுக்கள் தான் இனம். நான் போதிக்கும் போது உங்களுக்கு புரியாது, பாதிக்கும் போது உங்களுக்கு புரியும். இளையராஜா பெரும்பான்மை இந்து, அவரது மகன் இஸ்லாம் என்பதால் சிறுபான்மை. சாதி, மதம் எல்லாம் நேற்று வந்தது” என்று தெரிவித்துள்ளார்.



  • Jul 08, 2024 18:06 IST
    விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: இறுதிக் கட்ட பிரச்சாரம் நிறைவு

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான இறுதிக் கட்ட பிரச்சாரம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தி.மு.க சார்பில், அமைச்சர் உதயநிதி, பா.ம.க தலைவர் அன்புமணி, நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர்.



  • Jul 08, 2024 17:35 IST
    சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: வங்கி ஆவணங்களை கோரிய செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், வங்கி ஆவணங்களை வழங்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கரூர் சிட்டி யூனியன் வங்கி கிளையின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில் பாலாஜி தரப்பிற்கு வழங்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Jul 08, 2024 17:29 IST
    3 புதிய குற்றவியல் சட்டங்களில் திருத்தம்; நீதிபதி சத்யநாராயண குழு அமைத்து ஸ்டாலின் உத்தரவு

    3 புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதியரசர் சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.



  • Jul 08, 2024 16:18 IST
    நீட் வினாத்தாள் கசிவு முறைகேடு; அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

     

    “நீட் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையின் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதில், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Jul 08, 2024 16:00 IST
    விக்கிரவாண்டி தேர்தலில் பா.ம.க வெற்றி மக்களின் வெற்றி; மருத்துவர் ராமதாஸ்

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க-வின் வெற்றி மக்களின் வெற்றி என மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

     

     



  • Jul 08, 2024 15:58 IST
    ரவுடிகளை கட்டுப்படுத்துவதே முதல் பணி; சென்னை சிட்டி கமிஷனர் அருண் பேட்டி

    'ரவுடிகளை கட்டுப்படுத்துவதே எனது முதன்மையான பணி; ரவுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும்” என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.



  • Jul 08, 2024 15:11 IST
    நீட் தேர்வு கசிவு வினாத்தாள் தேர்வர்களுக்கு கிடைத்தது எப்படி? உச்ச நீதிமன்றம்

    நீட் இளங்கலை தேர்வு விவகாரத்தில் கசிவு வினாத்தாள் தேர்வர்களுக்கு கிடைத்தது எப்படி என உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.



  • Jul 08, 2024 15:10 IST
    ரூ.22 கோடி மதிப்பிலான 6 உலோக சிலைகள் மீட்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை தஞ்சை

    வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற, ரூ.22 கோடி மதிப்பிலான 6 உலோக சிலைகள் மீட்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரை மடக்கி சோதனை செய்த போது சிலைகள் கண்டெடுப்பு



  • Jul 08, 2024 14:36 IST
    தேனி: அரசு மருத்துவமனை கட்டடம் இடிந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு

    தேனி மாவட்டம் கம்பத்தில் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வந்த மகப்பேறு பிரிவில் ஒரு பகுதி விபத்து கட்டடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு



  • Jul 08, 2024 14:34 IST
    கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்.பி. சார்பில் பொதுமக்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டதால் சர்ச்சை

     கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க எம்.பி. சார்பில் பொதுமக்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டதால் சர்ச்சை சிக்பல்லாபூர் தொகுதியில் வென்ற பாஜக எம்.பி. சுதாகர் சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு விழா மது வழங்குவதை அறிந்து பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால் தள்ளுமுள்ளு மிகப்பெரிய மைதானத்தில் போலீஸ் பாதுகாப்போடு, மக்களை வரிசையில் நிற்க வைத்து மது விநியோகம்.



  • Jul 08, 2024 14:12 IST
    ஓ.பி.எஸ் அதிமுகவில் இல்லை, அவரை பற்றி பேச ஒன்றுமில்லை: இ.பி.எஸ்

    ஓபிஎஸ் அதிமுகவில் இல்லை, அவரை பற்றி பேச ஒன்றுமில்லை - எடப்பாடி பழனிசாமி



  • Jul 08, 2024 14:11 IST
    வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் அசுத்தம் செய்த வழக்கில், 2 ஆண்டுகளாகியும் ஒருவரை கூட கைது செய்ய முடியாதது ஏன் ? நீதிமன்றம் கேள்வி

    "வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் அசுத்தம் செய்த வழக்கில், 2 ஆண்டுகளாகியும் ஒருவரை கூட கைது செய்ய முடியாதது ஏன்?" தமிழக காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி. 



  • Jul 08, 2024 13:59 IST
    காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வதால் எதுவும் மாறிவிடாது: எடப்பாடி பழனிசாமி

    காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வதால் எதுவும் மாறிவிடாது; காவல்துறை அதிகாரிகளுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும்; திமுக ஆட்சியில் காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை; அப்படி செயல்பட அனுமதித்திருந்தால் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருந்திருக்கும்” - சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி



  • Jul 08, 2024 13:27 IST
    காவல் ஆணையர் மாற்றம் - காங்கிரஸ் வரவேற்பு

    "காவல் அதிகாரிகள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள், புதிதாக பொறுப்பிற்கு வருபவர்களுக்கு வாழ்த்துக்கள்" "இனி வரும் காலங்களில் அரசுக்கு கெட்ட பெயரும், குற்றம் நிகழாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்" - காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை



  • Jul 08, 2024 13:13 IST
    தமிழக கோயில் நன்கொடை நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது? உச்சநீதிமன்றம்

    தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு வரும் நன்கொடை நிதி எவ்வாறு செலவிடப் படுகிறது? அந்த நிதி கல்வி நிலையங்கள் போன்ற இடங்களில் சமூக நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தினால் எந்தப் பிரச்னையும் இல்லை - உச்சநீதிமன்றம்..



  • Jul 08, 2024 12:41 IST
    சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்

    சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம். சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி அருண் புதிய ஆணையராக நியமனம். 

    போலீஸ் பயிற்சி கல்லூரியின் டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்



  • Jul 08, 2024 12:40 IST
    ஆதார் தரவு தொடர்பான மனு: விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

    பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்தும் வரை ஆதார் தரவுகளை மத்திய அரசு பயன்படுத்த தடை கோரிய மனு - விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு



  • Jul 08, 2024 12:37 IST
    கள்ளக்குறிச்சியில் 7 பேருக்கு எலி காய்ச்சல் பாதிப்பு

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வடதொரசலூர் கிராமத்தில் சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலி காய்ச்சல் பாதிப்பு.

    குடிநீரில் கால்நடை தொற்று ஏற்பட்டு, வாந்தி, மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதி. வடதொரசலூர் கிராமத்தில் மருத்துவ முகாம் அமைத்து தீவிர பரிசோதனை



  • Jul 08, 2024 12:06 IST
    சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்

    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கின் விசாரணையை சென்னை எம்.பி, எம்.எல்.ஏ எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

    வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 2 தேதிக்கு ஒத்திவைப்பு



  • Jul 08, 2024 11:58 IST
    என்.எல்.சி: கன்வேயர் பெல்ட்டில் சிக்கி ஊழியர் பலி

    கடலூர் நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது நிலக்கரி சுரங்கத்தில் விபத்து. நிலக்கரி எடுத்து செல்லும் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி அன்பழகன் என்ற தொழிலாளி உயிரிழப்பு. கன்வேயர் பெல்ட்டின் அடியில் சிக்கிய தொழிலாளியின் உடலை மீட்கும் பணி தீவிரம்



  • Jul 08, 2024 11:41 IST
    ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி

    3 நாட்கள் அரசு முறை பயணமாக ரஷ்யா- ஆஸ்திரிய நாடுகளுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி. ரஷ்யாவில் 2 நாட்கள் நடைபெறும் இந்தோ- ரஷ்ய உச்சி மாநாட்டில் அதிபர் புடின் உடன் இணைந்து பங்கேற்கிறார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு ஆஸ்திரியவுக்கு செல்கிறார். 



  • Jul 08, 2024 11:39 IST
    அன்னியூர் சிவாவை ஆதரித்து உதயநிதி பிரசாரம்

    விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து தும்பூர் கிராமத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது



  • Jul 08, 2024 10:58 IST
    மும்பை ரயில்சேவை இன்று தற்காலிகமாக நிறுத்தம்

    மும்பையின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை வெள்ளப்பெருக்கு காரணமாக சிஎஸ்எம்டி ரயில் நிலையம் முதல் தானே வரையிலான புறநகர் ரயில்சேவை இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

    சுனாபட்டி ரயில் நிலைய தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் மும்பை துறைமுகம் வரையிலான புறநகர் ரயில்சேவையும் தற்காலிகமாக நிறுத்தம்

    - மத்திய ரயில்வே அறிவிப்பு 



  • Jul 08, 2024 10:09 IST
    எந்தக் காலத்திலும் எடப்பாடி பழனிசாமியிடம் யாசகம் கேட்கமாட்டேன்: ஓபிஎஸ்

    எடப்பாடி பழனிசாமி என்னை விசுவாசமற்றவன் என்று பேட்டியளித்திருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் உள்ளது. 
    எந்தக் காலத்திலும் எடப்பாடி பழனிசாமியிடம் யாசகம் கேட்கமாட்டேன். எனக்கு அதற்கான அவசியமும் இல்லை. அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று தான் நான் சொல்லி வருகிறேன். கட்சி இணைவதற்கு நான் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார். 
    கட்சி இணைய எடப்பாடி பழனிசாமி எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாரா என்பதுதான் என் கேள்வி
    எடப்பாடி பழனிசாமியிடம் நான் எந்தக் கோரிக்கையும் விடுக்காத நிலையில், என்னைச் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று அவர் சொல்வது ஆணவத்தின் உச்சகட்டம்


    ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை



  • Jul 08, 2024 10:08 IST
    தங்கம் விலை குறைவு

    சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,800-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,400-க்கும் விற்பனையாகிறது.



  • Jul 08, 2024 09:31 IST
    எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்



  • Jul 08, 2024 08:39 IST
    மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை

    மும்பையில் 6 மணி நேரத்தில் 30 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு



  • Jul 08, 2024 08:39 IST
    7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

    தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

    இந்தியா வானிலை ஆய்வு மையம்



  • Jul 08, 2024 07:44 IST
    சென்னையில் சிறுவனை கடித்த தெருநாய்

    சென்னை தண்டையார்பேட்டையில் வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்ற 8 வயது சிறுவனை தெருநாய் கடித்தது. தோள்பட்டையில் காயங்களுடன் சிறுவன் ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் அனுமதி.

    சிறுவனைக் கடித்த தெருநாய் அப்பகுதியில் மேலும் 3 பேரை தாக்கியதாக கூறப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



  • Jul 08, 2024 07:39 IST
    காவிரி ஆற்றில் நீர்வரத்து 5000 கன அடியாக அதிகரிப்பு

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5000 கன அடியாக அதிகரித்துள்ளது



  • Jul 08, 2024 07:38 IST
    தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, கோவை, நாகை, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

    சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Jul 08, 2024 07:24 IST
    இன்று மாலையுடன் ஓய்கிறது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.



  • Jul 08, 2024 07:24 IST
    ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம்

    திருவள்ளூர், பொத்தூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் புத்தமத வழக்கப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.

    கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர்.



  • Jul 08, 2024 07:24 IST
    இந்திய அணி வெற்றி

    ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி. முதலில் களமிறங்கிய இந்திய அணி  20 ஓவர்களின் முடிவில்  2 விக்கெட் இழப்பிற்கு  234 ரன்கள் எடுத்தது.

    235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்த 18.4 ஓவரில் ஆல் அவுட் ஆகி 134 ரன்களை மட்டுமே எடுத்தது.

    இதன் மூலம்  5 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்துள்ளது இந்தியா.



  • Jul 08, 2024 07:23 IST
    அண்ணாமலை முதலில் கண்ணாடியைப் பார்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

    நாங்கெல்லாம் 50 ஆண்டுகள் உழைத்து இந்தப் பதவிக்கு வந்திருக்கோம். அண்ணாமலை போல Appointment பதவி கிடையாது. என்னைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் அண்ணாமலைக்கு கிடையாது. அவர் முதலில் கண்ணாடியைப் பார்க்க வேண்டும்

    -மதுரையில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு.



  • Jul 08, 2024 07:23 IST
    டிடிவி தினகரன் பேட்டி

    ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவை வீழ்த்த மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்

    - விக்கிரவாண்டி, கெடார் பகுதியில் டிடிவி தினகரன் பேட்டி



  • Jul 08, 2024 07:22 IST
    ‘விடாமுயற்சி’ செகண்ட் லுக் போஸ்டர்

    மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சிபடத்தின் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி உள்ளன



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment