Tamil News Today : முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இடைக்கால பட்ஜெட் தாக்கல் மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்பு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது ..வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் முடிவு .
தொடரும் விவசாயிகள் போராட்டம்: ஆயிரக்கணக்கான போலீஸ் குவிப்பால் காசிப்பூரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பரப்புரையை தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக டெல்லி எல்லைகள் மூடல். காசிப்பூர், சிங்கு, ஆச்சந்தி, மங்கேஷ், சபோலி, பியாவ், மன்யாரி எல்லைகள் மூடல்.
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு 2-வது முறையாக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்க மருத்துவமனை முடிவு செய்துள்ளது.
Live Blog
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
ஓடிடி-யில் வெளியானது ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் நள்ளிரவு ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்தியாவில் 12 நாட்களில் 2.3 மில்லியன் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது; சில மாதங்களில் 300 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் – உலக பொருளாதார மன்றத்தின் டாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரை
கனிமொழியை தரக்குறைவாக விமர்சித்ததை ஏற்க முடியாது என்று பாஜக நிர்வாகிக்கு நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
வில்லேஜ் குக்கிங் சேனல் யூடியூப் சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள தலைவர் ராகுல்காந்தி காளான் பிரியாணி சமைத்து சாப்பிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
‘நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம், ஆனால் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மாட்டோம்’ என்று பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு மருத்துவமனையில் அறிகுறி இல்லாத கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் விகே சசிகலாவின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாகவும், 4-வது நாளாள ஆக்ஸிஜன் உதவியின்றி தானாக சுவாசித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஜூலை 16ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக நல்ல முடிவை எடுத்து 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்தியதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிவத்துள்ளார்.
தெற்கு டெல்லி மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவை கொடுத்தால் சாப்பாடு இலவசம்” என்று தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு, அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்ட போட்டியில், ஆள்மாராட்டம் செய்து முதலிடம்பிடித்தவருக்கு பரிசு வழங்க இடைக்கால தடை
உயிர்காக்கும் துறையினரையும் கூட மத்திய – மாநில அரசுகள் போராட வைப்பது முறையன்று என்று திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மம்தா அரசின் முன்னாள் அமைச்சர் ஒருவர் எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவர் பாஜகவில் இணைகிறாரா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
நிறுத்தப்பட்ட அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்த அப்படத்தில் இயக்குநர் சிறுத்தை சிவா நடிகர் ரஜினிகாந்த் இருவரும் சந்தித்துள்ளனர்.
டெல்லியில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகம் அருகே திடீரென நடந்த குண்டுவெடிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவததில், 4 கார்கள் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியள்ளது.
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளிடம், அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய மத்திய அரசு விவசாயிகளை தாக்குகிறது என் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் தனி இலாகா அமைத்து உங்களின் மனுக்கள் விசாரிக்கப்படும்”: என்று தெரிவித்துள்ளார்.
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்வு டெல்லியில் நடைபெற்று வருகிறது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு
என் பிறந்த நாளன்று நான் வெளியூர் செல்கிறேன், அதனால் ரசிகர்கள் வீட்டிற்கு வர வேண்டாம் என நடிகர் சிம்பு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் எனது பிறந்தநாளான பிப்.3ம் தேதி மாநாடு படத்தின் டீசர் வெளியாகிறது; மகிழுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
போக்சோ சட்டத்தால் இளைஞர்கள் பலர் தங்களின் வாழ்க்கையை இழந்துவிடுகின்றனர் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2018ம் ஆண்டு ஈரோட்டை சேர்ந்த இளைஞர் மைனர் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இது குறித்து அறிவிப்பு.
வருகின்ற பிப்ரவரி மூன்றாம் தேதி அன்று நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் டீசர் வெளியாகிறது. பிறந்த நாளான அன்று நான் வெளியூர் செல்வதால் ரசிகர்கள் யாரும் வீட்டிற்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் என்று நடிகர் சிம்பு அறிக்கை வெளியீடு
மெரினா கடற்கரையில் அமைய இருக்கும் ‘நம்ம CHENNAI’ அடையாளச் சிற்பமா? தமிழை அவமதிக்கும் சின்னமா? என்று தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மட்டும் மொத்தமாக 1.86 கோடி நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளாது என்று மாவட்ட ஆட்சியாளர்களுடனான கூட்டத்தில் முதல்வர் பேச்சு.
தமிழக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% மருத்துவ உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளது தமிழக அரசு. அதனை புதுவை மாணவர்களுக்கு வழங்க முடியாது என்று கூறி புதுச்சேரி அரசு பள்ளியில் படித்த விழுப்புரம் மாணவரின் மேல் முறையீட்டு வழக்கை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியில் சூரப்பா நீடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை மீண்டும் தள்ளுபடி செய்து அறிவித்தது சென்னை உயர் நீதிமன்றம்.
வருகின்ற பிப்ரவரி மாதம் 1ம் தேதி காலை 11 மணி வரையில் மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 1ம் தேதி அன்று மத்திய அரசு நிதி நிலை அறிக்கை சமர்பிக்க உள்ளது.
கிரானைட் குவாரிகளுக்கு உயர்நீதிமன்றத்தின் அனுமதி தேவை என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது.
உள் ஒதுக்கீடு விவகாரத்தில் கால தாமதம் ஏற்பட்டால் அதிமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து ராமதாஸ் முடிவு மேற்கொள்வார் என்று ஜி.கே. மணி அறிவிப்பு.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சிற்பங்கள் மறையாமல் கடைகளை மீண்டும் திறக்க வழிமுறைகள் உள்ளதா? மதுரை மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை பயன்படுத்த தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. மனுதாரருக்கு விருப்பம் இல்லையென்றால் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என நீதிபதிகள் கருத்து.
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு முதல் கட்ட கொரோனா பரிசோதனை நிறைவடைந்தது. யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து இன்று அல்லது நாளை ஆளுநர் முடிவெடுக்க வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு, அஞ்சலி . கடந்த ஆண்டில் உயிரிழந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சலி நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதிய 3 வேளாண் சட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மத்திய அரசு கட்டுப்படும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்ற கூட்டத்தொடர் உரையில் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா நினைவு இல்லத்தின் சாவியை நீதிமன்றத்தில் ஒப்படைக்க தேவையில்லை, அரசே வைத்துக்கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
”2021-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது .கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற, உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என நம்புகிறேன் ” என பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
டெல்லி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 16 எதிர்கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.
வேளாண் சட்டங்களை ரத்து செய்யாமல் போராட்டங்களை தூண்டிவிட்டு மத்திய அரசு, பேச்சுவார்த்தை என்ற பெயரில் கண்துடைப்பு நாடகம் நடத்துகிறது கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு.
*ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக இருக்கிறது; நேற்று ரத்த அழுத்த மாறுபாடு இருந்த நிலையில், இன்று உடல்நிலை சீராக இருப்பதாக விளக்கம் விக்டோரியா மருத்துவமனை அறிக்கை.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற புதிய முறையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று முதல் பிரசாரத்தை தொடங்குகிறார் . திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்
தமிழக அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் .மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம், ஊக்கத்தொகை வழங்கக் கோரி கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.