Tamil News Updates: சம்பா பயிர்களைக் காக்க... மேட்டூர் அணையிலிருந்து 2 டி.எம்.சி தண்ணீர் திறக்க ஸ்டாலின் உத்தரவு

Tamil News Updates: உலகம் முழுவதும் நடைபெறும் எல்லா செய்திகளையும் இந்த லிங்கில் தெரிந்துகொள்ளலாம்.

Tamil News Updates: உலகம் முழுவதும் நடைபெறும் எல்லா செய்திகளையும் இந்த லிங்கில் தெரிந்துகொள்ளலாம்.

author-image
WebDesk
New Update
CM MK Stalin New

IE Tamil Updates

Tamil News Updates: பெட்ரோல், டீசல் விலை

Advertisment

 பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும்,  டீசல் லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

 ஏரி நீர் நிலவரம்

புழல் ஏரியில் நீர்இருப்பு 2659 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 775 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 493 மில்லியன் கனஅடியாக உள்ளது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

  • Feb 03, 2024 00:13 IST

    சம்பா பயிர்களைக் காக்க... மேட்டூர் அணையிலிருந்து 2 டி.எம்.சி தண்ணீர் திறக்க ஸ்டாலின் உத்தரவு 

    டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்களைக் காத்திட மேட்டூர் அணையிலிருந்து பிப்ரவரி 3 முதல் 2 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர், நாகை மாவட்டங்களில் 22,774 ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளது என்று விவசாயிகள் கவலை தெரிவித்த நிலையில், மேட்டூர் அணையிலிருந்து பிப்ரவரி 3 முதல் 2 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 



  • Feb 02, 2024 21:59 IST

    சென்னை ஐ.ஐ.டி மாணவர் சேர்க்கை - விளையாட்டுத் துறையினருக்கு ஒதுக்கீடு

    சென்னை ஐ.ஐ.டி-யில் வரும் கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையில் விளையாட்டு பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் என சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒரு துறைக்கு 2 இடங்கள் வீதம் விளையாட்டு பிரிவினருக்கு ஒதுக்கப்படும், ஜே.இ.இ தேர்வெழுதி பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கையில் அனுமதி அளிக்கப்படும் என்று சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் அறிவித்துள்ளது. 



  • Feb 02, 2024 21:05 IST

    ‘பொதுமக்களை சிரமப்படுத்தாதீர்’ ரேஷன் கடை ஊழியர்களுக்கு அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல்

    “நியாய விலைக்கடைகளுக்கு வருகைதரும் பொதுமக்களை எவ்விதத்திலும் சிரமப்படுத்தக் கூடாது; கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” என நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு, அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார்.



  • Feb 02, 2024 21:01 IST

    தமிழகம் பெயரில் ஏற்கனவே 21 கட்சிகள் பதிவு

    நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. 

    தமிழகத்தை முன்னிலைப்படுத்தி இந்திய தேர்தல்  ஆணையத்தில் ஏற்கனவே 21 கட்சிகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 

    அவற்றின் பெயர்கள், தமிழ் மாநில காங்கிரஸ், தமிழ் மாநில கட்சி, தமிழ் மாநில முற்போக்கு திராவிட கழகம், தமிழ்நாடு இளைஞர் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி, தமிழ் தெலுங்கு தேசிய கட்சி, தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி,  தமிழக மக்கள் திராவிட முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் நல கட்சி, தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி, தமிழக ஸ்தாபன காங்கிரஸ், தமிழர் தேசிய முன்னணி, தமிழர் மக்கள் கட்சி, தமிழ்நாடு மகாத்மாகாந்தி மக்கள் கட்சி, தமிழ்நாடு மக்கள் நலவாழ்வு பேரியக்கம், தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி, தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி, தமிழக முற்போக்கு மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, தமிழர் தேசம் கட்சி. இந்த 21 கட்சிகளும் தேர்தல்  ஆணையத்தில் பதிவு பெற்ற, அங்கீகாரம் பெறாத மாநில கட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது



  • Feb 02, 2024 20:00 IST

    மோடி அரசு சாமானிய மக்களுக்கான அரசு: நிர்மலா சீதாராமன்

     

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சாமானியர்களின் நலனுக்காக பாடுபடுகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.



  • Feb 02, 2024 20:00 IST

    மோடி அரசு சாமானிய மக்களுக்கான அரசு: நிர்மலா சீதாராமன்

     

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சாமானியர்களின் நலனுக்காக பாடுபடுகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.



  • Feb 02, 2024 19:39 IST

    பிப்.7 தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்


    தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பிப்.7ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.



  • Feb 02, 2024 19:08 IST

    தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்


    தமிழ்நாட்டில் இன்று 6 இடங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனையில் 1 லேப்டாப், 8 சிம் கார்டுகள், 4 பென் டிரைவ்கள், 7 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தேசிய புலனாய்வு முகமை அறிக்கை வெளியிட்டுள்ளது.



  • Feb 02, 2024 19:04 IST

    சிறுமிகள் வன்கொடுமை; சென்னை இளைஞர் கைது


    சென்னையில் 3 சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், போலீசாரால் தேடப்பட்டு வந்த யோவான் (30) என்ற இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.



  • Feb 02, 2024 18:03 IST

    சென்னை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

     

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்ட தேர்வு (NMMS)  நடைபெற உள்ள நிலையில், சென்னையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மட்டும் நாளை (பிப்.03) விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
    இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, பிப்.10ம் தேதி பள்ளிகள் செயல்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.



  • Feb 02, 2024 18:01 IST

    முரசொலி நிலம்; அறக்கட்டளை மேல்முறையீடு

    முரசொலி நிலம் தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை மேல்முறையீடு செய்துள்ளது. இந்த நிலையில் புதிய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.



  • Feb 02, 2024 17:28 IST

    விஜய் மக்கள் பணி சிறக்கட்டும்: உதயநிதி

     

    இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமென்றாலும் அரசியல் இயக்கம் ஆரம்பிக்க உரிமை இருக்கிறது; நடிகர் விஜய் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளார்கள். அவருக்கு நம் அனைவரின் பாராட்டுகள். அவரின் மக்கள் பணி சிறக்கட்டும்.

     



  • Feb 02, 2024 16:43 IST

    நடிகர் விஜயின் இந்த முடிவுக்கு பாராட்டுக்கள் : உதயநிதி ஸ்டாலின்

    இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்க உரிமை உள்ளது. நடிகர் விஜயின் இந்த முடிவுக்கு பாராட்டுக்கள். அவரது பணி சிறக்கட்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • Feb 02, 2024 16:35 IST

    மன்னிப்பு கேட்ட தன்யா பாலகிருஷ்ணன்

    “சர்சைக்குரிய அந்த கருத்து என்னுடையது இல்லை என்றாலும், தமிழ் மக்களிடம் முழு மனதாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்!” - தன்யா பாலகிருஷ்ணா, நடிகை



  • Feb 02, 2024 16:28 IST

    சகோதரர் விஜய் அவர்களை அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி : அண்ணாமலை

    தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் விஜய் அவர்களை அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



  • Feb 02, 2024 15:40 IST

    ஆதிக்க ஒன்றிய அரசை அகற்றியே தீருவோம் : தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

    முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைதிப் பேரணியில் அன்பு உடன்பிறப்புகள் அலைஅலையாய் வங்கக்கடல் நோக்கிச் செல்கின்ற நேரத்தில், இங்கே அண்ணா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி உங்களில் ஒருவனான நானும் சூளுரை ஏற்கிறேன். அண்ணா வழியில் அயராது உழைப்போம். ஆதிக்க ஒன்றிய அரசை அகற்றியே தீருவோம்"  என கூறியுள்ளார்.



  • Feb 02, 2024 15:37 IST

    தமிழக வெற்றி கழக செய்தித் தொடர்பாளர் ராம்குமார் பேச்சு

     "ஏற்கனவே நலத்திட்ட பணிகளை மக்கள் இயக்கம் மூலமாக செய்து வருகிறோம்.. இன்னும் கடுமையா உழைக்கணும் என விஜய் சொல்லியிருக்காரு” என  தமிழக வெற்றி கழக செய்தித் தொடர்பாளர் ராம்குமார், தெரிவித்துள்ளார்



  • Feb 02, 2024 15:08 IST

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

    நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் "விஜய்யை எம்.ஜி.ஆர். போல சித்தரித்தால் அது அவங்களுக்கு வீழ்ச்சியாக முடியும்"  என கூறியுள்ளார்



  • Feb 02, 2024 14:58 IST

    'சீர்திருத்தங்களை தன்னார்வ அமைப்பினால் கொண்டுவர இயலாத காரியம்' - விஜய்

     

    "நீண்ட காலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்தி கொண்டு வருகிறேன். முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம்" என்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். 



  • Feb 02, 2024 14:24 IST

    அ.தி.மு.க ஜெயக்குமார் விமர்சனம்

    "யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அரசியல் என்பது பெரும் கடல். அதில் மூழ்கிப் போனவர்களும் உண்டு... நீந்தி கரை சேர்ந்தவர்களும் உண்டு. விஜய் என்னவாகப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 



  • Feb 02, 2024 14:23 IST

    பனையூரில் கட்சியின் தலைமை அலுவலகம் 

    "2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் இலக்கு. சென்னை அடுத்த பனையூரில் உள்ள விஜய்யின் பண்ணை வீடு இனி கட்சியின் தலைமை அலுவலகமாக செயல்படும்" என்று தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். 



  • Feb 02, 2024 14:23 IST

    விஜய் கட்சி அறிவிப்பு  -  சீமான் பேச்சு 

    "விஜய் இந்த மண்ணை வெல்வதற்கு முன் மக்களின் மனதை வெல்ல வேண்டும்" என்று  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 



  • Feb 02, 2024 13:51 IST

    இனி நடிக்க மாட்டாரா விஜய்?

    "ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை கட்சிப் பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்!" என்று நடிகர் விஜய் அறிவித்துள்ளார். 



  • Feb 02, 2024 13:50 IST

    விஜய் அறிவிப்பு

    எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, எந்தக் கட்சிக்கும் ஆதரவும் இல்லை எனவும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 



  • Feb 02, 2024 13:38 IST

    ச.ம.க. கூட்டணி - சரத்குமாருக்கு அதிகாரம் 

    நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

    தேர்தல் நிலைப்பாடு குறித்து சென்னை தியாகராய நகரில் நடந்த நடைபெற்ற ச.ம.க. ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ச.ம.க. மாநில, மண்டல, மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 



  • Feb 02, 2024 13:23 IST

    'தமிழக வெற்றி கழகம்' - அரசியல் கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய்

    தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை  நடிகர் விஜய் தொடங்கினார். 



  • Feb 02, 2024 13:17 IST

    காங்கிரஸ் எம்.பி. கருத்து - பியூஸ் கோயல் கண்டனம்

    தென்னிந்திய மாநிலங்கள் தனி நாடு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ் மாநிலங்களவையில் பேசினார். தென்னிந்திய மாநிலங்களின் வரிப்பணம், வட மாநிலங்களுக்கு செலவிடப்படுவதாக குற்றச்சாட்டு வைத்தார். 

    காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷின் கருத்து மாநிலங்களவை முன்னவர் பியூஷ் கோயல் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டை துண்டாடும் இது போன்ற பேச்சுகளுக்கு காங்., தலைவர்கள், உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

     



  • Feb 02, 2024 12:51 IST

    பூனம் பாண்டே மரணம் 

    பாலிவுட் நடிகையும், பிரபல மாடலுமான பூனம் பாண்டே காலமானார். 32 வயதான பூனம் பாண்டே புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். 



  • Feb 02, 2024 12:50 IST

    ஜார்க்கண்ட் முதல்வர் ஆனார் சாம்பை சோரன்

    ஜார்க்கண்ட் முதலமைச்சராக  ஜே.எம்.எம். மூத்த தலைவர் சம்பாய் சோரன்  பதவியேற்றார். 



  • Feb 02, 2024 11:38 IST

    என்.ஐ.ஏ சோதனை: நாம் தமிழர் கட்சி நீதிமன்றத்தில் அவசர முறையீடு

    நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்ற விவகாரம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு - பிற்பகலில் விசாரணைக்கு அனுமதி என்.ஐ.ஏ. சோதனை - நாம் தமிழர் கட்சி முறையீடு



  • Feb 02, 2024 11:31 IST

    வருமான வரித்துறை சோதனை

    சென்னை: குரோம்பேட்டை சற்குணம் சாலையில் உள்ள ஐடிசன் பிரைவேட் லிமிடெட் லெதர் கம்பெனியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்



  • Feb 02, 2024 11:30 IST

    இடும்பாவனம் கார்த்திக் ஆஜராகுமாறு வாட்ஸ்அப் மூலம் என்ஐஏ அதிகாரிகள் அழைப்பு

    நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் ஆஜராகுமாறு வாட்ஸ்அப் மூலம் என்ஐஏ அதிகாரிகள் அழைப்பு; இடும்பாவனம் கார்த்திக் வெளியூரில் இருப்பதால் வரும் 5ம் தேதி ஆஜராக உள்ளதாக தகவல்



  • Feb 02, 2024 11:30 IST

    இடும்பாவனம் கார்த்திக் ஆஜராகுமாறு வாட்ஸ்அப் மூலம் என்ஐஏ அதிகாரிகள் அழைப்பு

    நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் ஆஜராகுமாறு வாட்ஸ்அப் மூலம் என்ஐஏ அதிகாரிகள் அழைப்பு; இடும்பாவனம் கார்த்திக் வெளியூரில் இருப்பதால் வரும் 5ம் தேதி ஆஜராக உள்ளதாக தகவல்



  • Feb 02, 2024 11:30 IST

    மக்களவையில் இருந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு

    நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது; குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்: மேலும் மக்களவையில் இருந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு



  • Feb 02, 2024 11:06 IST

    அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக ஹேமந்த் சோரனின் ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

    அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக ஹேமந்த் சோரனின் ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு. ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தை ஏன் நாடக்கூடாது? - உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி நீதிமன்றம் அனைவருக்கும் திறந்திருக்கிறது என நீதிபதிகள் கருத்து நிலக்கரி சுரங்க முறைகேடு புகாரில் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது ஹேமந்த் சோரன் மனுவை விசாரிக்க மறுப்பு.



  • Feb 02, 2024 10:30 IST

    தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை : 13ம் தேதி சென்னை வரும் மல்லிகார்ஜுன கார்கே

    பிப்.13ஆம் தேதி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்காக, சென்னை வருகிறார் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார், கார்கே இரு தலைவர்கள் சந்திப்பின் போது தொகுதி பங்கீடு கையெழுத்தாகும் என்று தகவல் பிப்.13ல் சென்னை வருகிறார், மல்லிகார்ஜுன கார்கே



  • Feb 02, 2024 10:02 IST

    பொதுப்பணித்துறை அலுவலகத்தை உதயநிதி திறந்து வைத்தார்

    சென்னை எழிலகத்தில் உள்ள பொதுப்பணித்துறை வளாகத்தில், சென்னை மண்டல தலைமை பொறியாளர் அலுவலகத்திற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு ஆகியோர் திறந்து வைத்தனர்.



  • Feb 02, 2024 09:19 IST

    நாம் தமிழர் நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை

    கோவை மாவட்டத்தில் இரு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை. ஆலாந்துறை ஆர் ஜி நகரில் ரஞ்சித் என்பவரது வீட்டில் காலை 6 மணி முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது கோவை காளப்பட்டி பகுதியில் முருகன் என்பவரின் வீட்டிலும் என்.ஐ.ஏ சோதனை திருச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவது தொடர்பாக சோதனை நடைபெறுவதாக தகவல் நாம் தமிழர் நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை.



  • Feb 02, 2024 09:06 IST

    தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

    தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை வெளிநாடுகளில் இருந்து நிதிபெற்றது தொடர்பாக சோதனை நடத்தி வருவதாக தகவல் திருச்சி சண்முகா நகரில் உள்ள நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை



  • Feb 02, 2024 09:06 IST

    திருச்சி அருகே விபத்து : பெண் உயிரிழப்பு

    திருச்சி மாவட்டம் முசிறி அருகே சீலை பிள்ளையார் புத்தூரில் தாறுமாறாக ஓடிய போலீஸ் வேன் போலீஸ் வேன் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிய பரபரப்பு காட்சிகள் வேனை சாய்த்து அடியில் சிக்கி இருந்தவர்களை மீட்ட பொதுமக்கள் விபத்தில் ஒரு பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சோகம் - 2 பேருக்கு சிகிச்சை சீலை பிள்ளையார்புத்தூரில் பாதுகாப்பு பணிக்காக சென்ற போது விபத்து என தகவல்



  • Feb 02, 2024 08:04 IST

    ஹேமந்த் சோரன் வழக்கு - இன்று விசாரணை

     அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை



  • Feb 02, 2024 08:01 IST

    இன்று முதல்வராக பதவியேற்கிறார் சம்பாய் சோரன்

    ஜார்க்கண்டின் முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் சம்பாய் சோரன் 10 நாட்களில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உத்தரவு 



  • Feb 02, 2024 07:59 IST

    கடலூர், விழுப்புரம் உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம்



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: