News Highlights: திமுக மாவட்டச் செயலாளர்கள் இன்று ஆலோசனை

Tamil News Today : புரெவி புயல் காரணமாக சீர்காழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது

By: Dec 3, 2020, 7:16:40 AM

Latest Tamil News : வங்கக்கடலில் உருவான ‘புரெவி’ புயல், திரிகோணமலைக்கு 300 கி.மீ, கன்னியாகுமரிக்கு 700 கி.மீ. தொலைவிலும், பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் இந்த புயல் கரையைக் கடக்கும்போது 95 கி.மீ. வேகத்தில் காற்றுவீச வாய்ப்பு இருக்கிறது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 6 மணி நேரத்தில் புரெவி புயல் மேலும் வலுவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கரையைக் கடந்த பின் புரெவி புயல் நகர்ந்து மன்னார் வளைகுடா அருகே நாளை காலை வரும் என்றும் நாளை மறுநாள் அதிகாலை குமரி-பாம்பன் இடையே தென் தமிழக கடற்கரையில் புயல் கரையைக் கடக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் கேரளாவுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பிறப்பித்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் திரண்டு போராட்டம் செய்து வருகின்றனர். மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு பிறகும் ஏழு நாட்களாக நீடித்து வரும் இந்த போராட்டத்திற்கு எந்தவித சரியான தீர்வும் கிடைக்காததால், நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்திருக்கிறது விவசாயச் சங்கம்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு விவகாரம் குறித்து முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த கடிதத்தில், சூரப்பா நேர்மையானவர் என குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல் உள்ளது.

சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த அரசியல் கட்சிகள் வலியுறுத்திய நிலையில், தமிழகத்தில் சாதிவாரியாக புள்ளி விவரங்களை சேகரித்து அறிக்கை அளிக்க பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Live Blog
Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
20:29 (IST)02 Dec 2020
வருமானவரித்துறை ஓய்வூதியர்களின் குறைதீர்ப்பு கூட்டம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த வருமானவரித்துறை ஓய்வூதியர்களின் குறைதீர்ப்பு கூட்டம், சென்னையில் வரும் 16ம் தேதி நடக்கிறது.

20:27 (IST)02 Dec 2020
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, 10 கூடுதல் நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, 10 கூடுதல் நீதிபதிகளை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

நீதிபதிகள் கோவிந்தராஜூலு சந்திரசேகரன், ஏ.ஏ.நக்கீரன், வீராசாமி சிவஞானம், கணேசன் இளங்கோவன், ஆனந்தி சுப்ரமணியன், கண்ணம்மாள் சண்முகசுந்தரம், சத்தி குமார் சுகுமாரா குருப், முரளி சங்கர் குப்புராஜூ, மஞ்சுளா ராமராஜூ நல்லையா,  தமிழ்செல்வி டி.வலயபாளையம் ஆகியோரை மூப்பு வரிசை அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

20:21 (IST)02 Dec 2020
பாரீஸ் ஒப்பந்தம் - உயர் அதிகாரிகள் குழு அமைப்பு உருவாக்கம்

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் செயலர் தலைமையில் 14 அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

20:20 (IST)02 Dec 2020
லட்சம் கோடி ரூபாய்க்கும் கூடுதலாக ஜிஎஸ்டி வசூல்

சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில் ஒரு லட்சத்து நாலாயிரத்து தொள்ளாயிரத்து 63 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாகவும், இது கடந்த ஆண்டு நவம்பர் மாத வருவாயை ஒப்பிடுகையில் ஒன்று புள்ளி நான்கு சதவீதம் அதிகம் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

20:18 (IST)02 Dec 2020
விவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள்  அமித் ஷா,  நரேந்திரசிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோர் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

20:18 (IST)02 Dec 2020
விவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள்  அமித் ஷா,  நரேந்திரசிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோர் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

18:23 (IST)02 Dec 2020
விவசாயிகளின் பாதுகாவலன் அதிமுக அரசு மட்டுமே - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “விவசாயிகள் மீது அக்கறை உள்ளதுபோல் இப்போது கபடநாடகம் ஆடும் திமுக தான் 04.01.2011 அன்று மீத்தேன் திட்டத்திற்கு அனுமதியளித்து தமிழக விவசாயிகளுக்கு கடுமையான துரோகம் இழைத்தது. ஆனால் அத்திட்டத்திற்கு 17.7.2013 அன்று தடைவிதித்து விவசாயிகளின் நலன் காத்தவர் மாண்புமிகு அம்மா அவர்கள் தான். விவசாயிகளின் நலன் காக்க காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, 20.02.2020 அன்று பேரவையில் சட்டம் இயற்றியது மாண்புமிகு அம்மாவின் அரசு. இதனை தமிழக மக்கள் நன்கு அறிவர். விவசாயிகளின் பாதுகாவலன் அம்மா அவர்களின் அரசு மட்டுமே. எனவே திமுகவின் பொய்யுரைகளை ஒருபோதும் தமிழக மக்கள் நம்பமாட்டார்கள்.” என்று ட்வீட் செய்துள்ளார்.

17:20 (IST)02 Dec 2020
3-வது ஒருநாள் போட்டி; 13 ரன்களில் இந்தியா வெற்றி

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங்க் செய்த இந்திய அணை 5 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்தது. 302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிகள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற அளவில் வென்றது.

16:28 (IST)02 Dec 2020
ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் - விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி டிசம்பர் 11ம் தேதி முதல் ஆளுநர் மாளிகையை தொடர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.

16:18 (IST)02 Dec 2020
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.680 உயர்வு

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.4611க்கு விற்பனை, ஒரு சவரன் விலை ரூ.36,888க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.2900 உயர்ந்துள்ளது.

16:15 (IST)02 Dec 2020
உதயநிதி சினிமாவில் நடித்துவிட்டு நேரடியாக திமுகவிற்கு வந்தவர் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முதல்வர் படிப்படியாக உயர்ந்தவர்தான்; உதயநிதி ஸ்டாலின்தான் சினிமாவில் நடித்துவிட்டு நேரடியாக திமுகவிற்கு வந்து ஸ்டாலினின் தோளில் அமர்ந்தவர் என்று கூறியுள்ளார்.

15:14 (IST)02 Dec 2020
உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன் கைது

உயர் நிதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் நீதிமன்ற ஊழியர்களையும் வீடியோ வெளியிட்டு விமர்சித்த வழக்கில் முன்னாள் நீதிபதி கர்ணனை போலீசார் கைது செய்தனர்.

15:10 (IST)02 Dec 2020
பெரிய தியேட்டர்களை 2,3 சிறு தியேட்டர்களாக மாற்றும் அறிவிப்பு விரைவில் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

அமைச்சர் கடம்பூர் ராஜூ: பெரிய தியேட்டர்களை 2,3 சிறு தியேட்டர்களாக மாற்ற அனுமதிக்கும் அறிவிப்பு விரைவில் வரும். தயாரிப்பாளர்கள் சங்க செயல்பாடுகளில் அரசு எப்போதும் தலையிட்டது இல்லை என்று கூறினார்.

14:18 (IST)02 Dec 2020
சென்னை துறைமுகத்தின் ரேடாரை சீரமைக்க கோரி தயாநிதிமாறன் பிரதமருக்கு கடிதம்

சென்னை துறைமுகத்தில் பழுதடைந்துள்ள வானிலை ஆய்வு ரேடாரை சீரமைக்க பிரதமர் மோடிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கடிதம் எழுதியுள்ளார்.

14:10 (IST)02 Dec 2020
ரஜினியின் மனநிலை எனக்கு தெரியாது - தமிழருவி மணியன் 2/2

கேள்வி ரஜினியின் மனநிலை அரசியலுக்கு வருவது மாதிரி இருக்கிறதா?

தமிழருவி மணியன்: எனக்குத் தெரியாது.

கேள்வி: உங்களுடைய தனிப்பட்ட விருப்பம் என்ன?

தமிழருவி மணியன்: நான் அவரிடம் என்ன சொன்னேன் என்பதை இபோது சொல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரை அவருடைய உடல்நலனை பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன். எதையும் அவர் தான் கூறவேண்டும். அவருடைய உடல் நலன் தான் எனக்கு முக்கியம். அதனால், உங்களுடைய உடல் நலனுக்கு ஊறு விளைவிக்காத வகையில் சிந்தியுங்கள் என்று கூறிவிட்டு வந்தேன்.

14:03 (IST)02 Dec 2020
ரஜினியிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை - தமிழருவி மணியன் 1/2

கேள்வி: ரஜினி தனது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார் அது குறித்து..

தமிழருவி மணியன்: ரஜினி அவருடைய உடல்நிலை பற்றி வெளிப்படையாக சொல்லிவிட்டார். அவரிடம் மறைப்பதற்கு எதுவுமே கிடையாது. தமிழ்நாட்டு மக்களிடம் எதையும் மறைத்து வாழ வேண்டிய அவசியம் ரஜினிக்கு எள்ளளவும் இல்லை. அவருடைய வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். எனவே, மக்கள் நலனுக்காக அவர் எதை நினைக்கிறாரோ அதை இதுவரை சொல்லியிருக்கிறார். அதே மாதிரி தன்னுடைய உடல்நலனில் உள்ள பிரச்னைகளையும் மக்களிடம் வெளிப்படுத்தினார் அவ்வளவுதான்.

13:53 (IST)02 Dec 2020
சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன்

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெறும் போட்டியில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றினார். நடராஜன் ஆஸ்திரேலியே அணியின் தொடக்க ஆட்டக்கார‌ர் மார்னஸ் லபுஸ்சேன் விக்கெட்டை கைப்பற்றினார்.

13:32 (IST)02 Dec 2020
பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல்

பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, சைபர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி அடுத்த வாரம் முதல் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

13:09 (IST)02 Dec 2020
ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்படு என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:40 (IST)02 Dec 2020
ஸ்டெர்லைட் - வேதாந்தா நிறுவனத்தின் மனு தள்ளுபடி - உச்ச நீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலையை தாற்காலிமாக இயக்க அனுமதிக்க கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தாற்காலிமாக செயல்பட அனுமதி கோருவது, ஆலையை மறைமுகமாக திறக்கும் முயற்சி என்று தமிழக அரசு - உச்சநீதிமன்றத்தில வாதிட்டது.

12:13 (IST)02 Dec 2020
அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் அவசியம் - உச்சநீதிமன்றம்

அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் காவல் நிலையங்களிலும் சிசிடிவி அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

11:52 (IST)02 Dec 2020
தமிழக வீரர் நடராஜனுக்கு ஓபிஎஸ் வாழ்த்து
11:48 (IST)02 Dec 2020
தமிழருவி மணியன் - ரஜினிகாந்த் சந்திப்பு

அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்பேன் என ரஜினிகாந்த் தெரிவித்திருந்த நிலையில், காந்திய மக்கள் இயக்கத்தின் தமிழருவி மணியன் சென்னை போயஸ் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை இன்று சந்திக்கவுள்ளார்.

10:45 (IST)02 Dec 2020
நிவர் புயலில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம்

விழுப்புரம் மாவட்டம் கெங்காவரம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன், கம்பம் சரிந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவருடைய குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.

10:26 (IST)02 Dec 2020
தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் - ஸ்டாலின் சந்திப்பு

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் திமுக தலைவர் ஸ்டாலினை இன்று மாலை  அண்ணா அறிவாலயத்தில் சந்திக்கவுள்ளார். இதில், திமுக - காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்வது, போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த சந்திப்பில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி, தமிழகச் சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் ராமசாமி ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

10:03 (IST)02 Dec 2020
அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 856 பாமகவினர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் நேற்று இட ஒதுக்கீடு போராட்டம் நடத்திய அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட 856 பாமகவினர் மீது 3 பிரிவுகளில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்.

09:49 (IST)02 Dec 2020
முதல் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கும் நடராஜன்
09:45 (IST)02 Dec 2020
புரெவி புயல் - 100 கி.மீ வேகத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு

புரெவி புயல் தற்போது பாம்பனுக்கு 470 கி.மீ தொலைவிலும், குமரிக்கு 650 கி.மீ தொலைவிலும் மற்றும் இலங்கை திரிகோணமலைக்கு தென்கிழக்கில் 240 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இந்தப் புயல் குமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்போது 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

09:39 (IST)02 Dec 2020
ரயில் சேவை ரத்து

பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டம் காரணமாக, அஜ்மீர்-அமிர்தசரஸ், திப்ரூகர்-அமிர்தசரஸ் மற்றும் பதின்டா-வாரணாசிக்கு செல்லும் ரயில்களை வடகிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

09:16 (IST)02 Dec 2020
இந்திய அணி டாஸ் வென்றது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்திருக்கிறது.

09:15 (IST)02 Dec 2020
குமரி மீனவர்கள் கரை திரும்புகின்றனர்

161 விசைப்படகுகளில் 1500 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் ‘புரெவி’ புயலால் கரை திரும்புகின்றனர். இன்னும் 76 விசைப்படகுகளில் சென்ற 750 மீனவர்கள் கரை திரும்பவில்லை என்று குமரி மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவிக்கின்றது.

09:11 (IST)02 Dec 2020
பாம்பனில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

பாம்பனுக்குத் தென்கிழக்கே 530 கி.மீ தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளதால், அங்கு 7-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Today's Tamil News : இந்து மதத்துக்கு திமுக செய்த பல்வேறு பணிகள் குறித்து எதுவுமே தெரியாமல் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் போன்ற சிலர் தங்களையும் – தங்கள் கட்சியையும் காப்பாற்ற இந்துமதத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

Web Title:Tamil news today live burevi cyclone tamilnadu politics crime weather eps ops stalin corona

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X