/indian-express-tamil/media/media_files/yFqTwgr31WPZCPszpNlt.jpg)
Tamil news live
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்தது யார்? அமைச்சர் குற்றச்சாட்டு, வழக்கறிஞர் விளக்கம்
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆளுனர் மாளிகை மீது பெட்ரோல் குண்டுவீசிய நபரான கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்தது முத்தமிழ் செல்வக்குமார் என்ற வழக்கறிஞர் என்றும் அவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கு சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் முத்தமிழ் செல்வக்குமார் விளக்கம் ஒன்று அளித்துள்ளார். அதில், “வழக்கறிஞர் என்ற முறையில் பலரை ஜாமினில் எடுத்துள்ளோம். அனைத்துக் கட்சியினரின் வழக்குகளையும் எடுத்து நடத்தியுள்ளேன்.
2023ல் கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்தோம்; எனக்கும் அவருக்கும் நேரடித் தொடர்பு இல்லை. நான் பாரதிய ஜனதா கட்சி உள்பட எந்தக் கட்சியிலும் பொறுப்பில் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் முக்கிய தளபதி உயிரிழப்பு
இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் தளபதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்திவருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் வடக்கு பகுதியின் தளபதி ஹசன் அல் அப்துல்லா உயிரிழந்துள்ளார்.
ஹசன் அல் அப்துல்லா குறித்த முக்கியமாக உளவு தகவல் கிடைத்ததாகவும் அதன்படி இஸ்ரேலின் பாதுகாப்பு படைக்கு சொந்தமான வான்படை சார்பாக வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு அவர் கொல்லப்பட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
குடியரசுத் தலைவர் சென்னை வருகை: ஆளுனர், முதல்வர் நேரில் வரவேற்பு
இரண்டு நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று மாலை சென்னை வந்தார். அவரை ஆளுனர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா உள்ளிட்டோர் நேரில் வரவேற்றனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்திய கடற்சார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாளை பட்டம் வழங்குகிறார்.
திருவண்ணாமலை கிரிவலத்துக்காக அக். 27 முதல் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துத் துறை
வார இறுதி நாட்கள் மற்றும் திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு நாளை 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை
கத்தார் நாட்டில் பணிபுரிந்த இந்திய கடற்பனை முன்னாள் அதிகரிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உளவு பார்த்ட புகாரில், கைதான 8 இந்தியர்களுக்கும் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
மு.க. ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 31ல் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 31-ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
கொள்கை தனி, கூட்டணி தனி அ.தி.மு.க தெளிவாக இருந்தது - எஸ்.பி. வேலுமணி
கோவையில் அ.தி.மு.க பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் இடையே அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது: “கொள்கை தனி, கூட்டணி தனி அ.தி.மு.க தெளிவாக இருந்தது; பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என இ.பி.எஸ் அறிவித்ததை தி.மு.க-வால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கூட்டணி தேவை எனில் நம்மை தேடித்தான் வர வேண்டும்” என்று கூறினார்.
பெட்ரோல் குண்டு வீச்சு: முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை - எல்.முருகன் குற்றச்சாட்டு
ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் மாநில அரசு முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை, முறையான விசாரணையை என்.ஐ.ஏ அமைப்புதான் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் குண்டு வீச்சு; தவறுசெய்தவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் - கனிமொழி
அளுநர் மாளிகை நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக தி.மு.க எம்.பி. கனிமொழி: “நிச்சயம் அது கண்டனத்திற்குரியது; யாராலும் அச்செயலை ஏற்க முடியாது. தமிழக முதல்வர் நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார். பெட்ரோல் குண்டு வீசியவர் கைது செய்யப்பட்டுவிட்டர், மேற்கொண்டு விசாரணையும் தொடர்கிறது. தவறு செய்தவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
சென்னை போலீஸ் மீது ஆளுனர் மாளிகை பகிரங்க புகார்: 'நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொலை செய்யப்படுகிறது'
ராஜ்பவனின் தாக்குதல் குறித்து புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை; தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாகுதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப் போகச் செய்து விட்டது. அவசரகதியில் கைது மேர்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது என்று காவல்துறை மீது ஆளுநர் மாளிகை பகிரங்க புகார் கூறியுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையர் கோயில் கிரிவலம் : சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்
திருவண்ணாமலை அண்ணாமலையர் கோயில் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வரும் 28, 29ம் தேதிகளில் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி வரும் 28ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்படுகிறது. அடுத்த நாள் காலை 9 மணிக்கு மறுமார்க்கமாக இந்த ரயில் சென்னைக்கு புறப்படும்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்கு நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி
சென்னையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்கு நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி அளித்துள்ளது. இதில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக டிக்கெட் விற்கக் கூடாது, டிக்கெட் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கை வசதி செய்து தர வேண்டும். வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளை உறுதி செய்து இசை நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி வழங்கியது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது
அரசு அலுவலகங்களில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
தமிழகத்தில் உள்ள 2800-க்கு மேற்பட்ட அரசு அலுவவலகங்களில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சுய மார்பக பரிசோதனை செய்யும் விளக்கப்படும் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக சமூகவ நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்
கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளின் சுற்றுச்சுவர் அகற்றம்
ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் பகுதியில் பாசனத்திற்காக அமைக்கப்பட்ட கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 16 வீடுகளின் சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டன இதனை தடுக்க முயன்ற வீடுகளின் உரிமையாளர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்
தமிழகத்தில் வரும் அக்.29, 30 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு. அக்.29- விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. அக்.30- தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், விருதுநகர், தூத்துக்குடி, தேனி, மதுரை, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இணைய 11 லட்சம் பேர் மேல்முறையீடு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "மேல்முறையீட்டு மனுக்களை அளிப்பதற்கான காலம் நேற்று முன் தினத்துடன் முடிவுற்றது" "மேல்முறையீட்டு மனுக்களை சார் ஆட்சியர், துணை ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர்கள் பரிசீலித்து வருகின்றனர்" "விதிகளை பூர்த்தி செய்கிற ஒரு மகளிர் கூட விடுபட்டு விடக்கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்"
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கை வெளியீடு
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கை வெளியீடு. கருக்கா வினோத் 2 பெட்ரோல் பாட்டிலை ஆளுநர் மாளிகை முன்பு தூக்கி வீசினார். முதல் தகவல் அறிக்கையில் தகவல். தடுக்க வந்த காவலர் மீதும் பெட்ரோல் குண்டினை வீசிவிடுவதாக கருக்கா வினோத் மிரட்டினார்.
மு.க.ஸ்டாலின் படிப்படியாக முன்னேறியவர், யாருடைய கால்களில் விழுந்தும் அவர் முதலமைச்சர் ஆகவில்லை: உதயநிதி ஸ்டாலின்
தலைமை கூறுவதை செயல்படுத்தி காட்டுபவர்களே உண்மையான செயல்வீரர்கள்; மருது சகோதரர்கள் போல விருதுநகர் மாவட்டத்தை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வழிநடத்தி வருகின்றனர்; இந்தியாவில் முதன்முதலாக இளைஞர் அணி என்ற ஒரு அணியை உருவாக்கியது திமுக தான்; நம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படிப்படியாக முன்னேறியவர், யாருடைய கால்களில் விழுந்தும் அவர் முதலமைச்சர் ஆகவில்லை" - விருதுநகரில் நடைபெறும் திமுக இளைஞர்கள் அணி செயலாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
ஆளுநர் மாளிகைக்கு முழு பாதுகாப்பு உள்ளது
ஆளுநர் மாளிகையின் வெளியே பெட்ரோல் குண்டு வீசப்பட்டவர் உடனே கைது செய்யப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகைக்கு முழு பாதுகாப்பு உள்ளது - புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி பேட்டி
மகளிர் உரிமை திட்ட பயனாளர்களின் கருத்துகளை கேட்டறிந்த அமைச்சர் உதயநிதி
சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் ஆய்வு .கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளர்களின் கருத்துகளை கேட்டறிந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
காவல் ஆணையர் சந்தீப் ராய்- ஆளுநர் சந்திப்பு
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் சந்தித்தார். ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கம்.
பாலஸ்தீன கொடியை பறக்க விட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு
கோவை: உக்கடம் பகுதியில் கடந்த 24ம் தேதி பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்தில், மேம்பாலத்தின் மீது பாலஸ்தீன நாட்டின் கொடியை பறக்க விட்ட நபர்கள் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஹமாஸ் மீதான தாக்குதலுக்கு இதுவரை ரூ.37,350 கோடி செலவு
கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலுக்கு இதுவரை ரூ.37,350 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இஸ்ரேலுக்கு ஒரு நாளைக்கு சுமார் 1 பில்லியன் ஷேக்கல்கள் ($246 மில்லியன் அல்லது ரூ.24.6 கோடி) போருக்கான நேரடிச் செலவு என்று இஸ்ரேலின் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 29, 30ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, கேரளாவில் அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதிகளில் கனமழைக்கும், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்- இ.பி.எஸ் கண்டனம்
ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கிற்கு அடையாளமாக விளங்கும் ஆளுநர் மாளிகையிலேயே இத்தகைய சம்பவம் நடந்திருப்பது தமிழ்நாட்டின் பாதுகாப்பையும், மாண்பையும் கேள்விக்குறியாக்கி உள்ளது. குடியரசு தலைவர் ஆளுநர் மாளிகைக்கு வரவுள்ள நிலையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கான எடுத்துகாட்டாக உள்ளதாக இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு
கிண்டி ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்தை நவம்பர் 9ஆம் தேதி வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ரவுடி கருக்கா வினோத் இன்று காலை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
குடியரசுத் தலைவர் இன்று சென்னை வருகை
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 6 மணிக்கு சென்னை வருகிறார். அங்கிருந்து கிண்டி ஆளுநர் மாளிகைக்கு காரில் செல்லும் முர்மு, இன்று இரவு அங்கு தங்குகிறார்.
இதற்கிடையே, ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் நடந்ததால், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உலகக் கோப்பை 2023
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து, இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.
இன்று முதல் மீண்டும் விசா சேவை
கனடாவில் விசா சேவையை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது. அதன்படி நுழைவு விசா, வணிக விசா, மருத்துவ விசா மற்றும் மாநாட்டு விசா பிரிவுகளுக்கு மட்டும் இன்று முதல் விசா சேவை துவங்கப்படும்.
மற்றபடி, கனடாவில் உள்ள இந்திய துாதரகம் மற்றும் துணை துாதரகங்கள் அவசரகால சூழ்நிலைகளை தற்போதைய நிலை போலவே தொடர்ந்து கவனித்து வரப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.