Advertisment

Tamil News Highlights: கனமழை: கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Tamil Nadu News, Tamil News LIVE, Cauvery Karnataka Issue, Asian Games 2023, Bigg Boss Tamil Season 7 – 02 October 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
leave

Tamil news live

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil News Updates

அண்ணாமலையின் நடைபயணம் தள்ளிவைப்பு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் மூன்றாம் கட்ட "என் மண் என் மக்கள்" நடைபயணம் வரும் 4ம் தேதி தொடங்க இருந்த நிலையில் அக்.6-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை

“பீகார் மாநில அரசைப் போல தமிழ்நாடு அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும். தனியார் துறையில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கும் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டும்" என திருமாவளவன் கூறியுள்ளார்.

இனி தேசிய கட்சிக்கு உடன்பட வேண்டிய நிலை இல்லை - எடப்பாடி பழனிச்சாமி

தேசிய கட்சியுடன் கூட்டணியில் இருக்கும்போது, நாம் உடன்படாத விஷயங்களுக்கும் ஆதரவு அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம்.. இனி அந்த நிலை இல்லைஎன்று பாஜகவுடனான கூட்டணி முறிவு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பேசியுள்ளார். மேலும் கூட்டணி முறிவு என்பது எனது தனிப்பட்ட முடிவு அல்ல அதிமுகவின் 2 கோடி தொண்டர்களின் முடிவு என்றும் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் பொற்கோவிலில் சேவை செய்த ராகுல் காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று பஞ்சாப் பொற்கோவிலில் சேவை செய்தார். இது தொடர்பாக புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகிவருகின்றன.

INDIA கூட்டணி: ஜோதிராதித்ய சிந்தியா குற்றச்சாட்டு

INDI கூட்டணி தலைவர்கள் தங்களுக்கு சேவை செய்ய இணைந்துள்ளனர்; மக்களுக்கு சேவை செய்ய அவர்கள் இணையவில்லை என ஜோதிராதித்ய சிந்தியா குற்றஞ்சாட்டினார்.

பா.ஜ.க கூட்டணியில் இருந்து அ.தி.மு.க விலகியது தொண்டர்களின் முடிவு: இ.பி.எஸ் பேச்சு

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: “தேர்தல் வந்தால் அழகாக பேசி ஏமாற்றும் அனைத்து தந்திரங்களையும் தி.மு.க-வினர் முன்னெடுப்பர். மகளிருக்கு இலவச பயணம் எனக் கூறிவிட்டு சில பஸ்களுக்கு மட்டும் பிங்க் நிற பெயிண்ட் அடித்துள்ளனர். கொரோனாவில் சிக்கி வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் மீது தாங்க முடியாத சுமையை தி.மு.க சுமத்தியுள்ளது.

பா.ஜ.க கூட்டணியில் இருந்து அ.தி.மு.க விலகுவதாக அறிவித்தது ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவு. ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பிரதமர் வேட்பாளரை அறிவித்த பிறகா தேர்தலை சந்திக்கின்றனர். மாநிலத்தின் உரிமையைக் காக்க நாடாளுமன்றத் தேர்தலை அ.தி.மு.க சந்திக்கும்” என்று கூறினார்.

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு தி.மு.க வலியுறுத்தும் - கனிமொழி

தி.மு.க எம்.பி கனிமொழி; “அக்டோபர் 14-ம் தேதி தி.மு.க மகளிர் அணி சார்பில் நடக்கும் மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மெகபூபா முப்தி, சுப்ரியோ சுலே ஆகியோர் பங்கேற்க உள்ளனர். நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென தி.மு.க வலியுறுத்தும்” என்று கூறினார்.

பேச்சுவார்த்தை நடத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அழைப்பு

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக ஆளுநரின் செயலாளராக கிர்லோஷ்குமார் ஐ.ஏ.எஸ் நியமனம் 

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயலாளராக கிர்லோஷ்குமார் ஐ.ஏ.எஸ் நியமனம்  செய்யப்பட்டுள்ளார். 

ரஜினியின் ‘தலைவர் 170’ படத்தில் இணைந்த ரித்திகா சிங், மஞ்சு வாரியர்

நடிகைகள் ரித்திகா சிங், மஞ்சு வாரியர் ஆகியோர் ரஜினிகாந்தின் ‘தலைவர் 170’ படத்தில் இணைந்துள்ளனர். 

ஆசிய விளையாட்டுகள்: இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்

ஆசிய விளையாட்டுகள் 2023 தடகளப் போட்டியில் இந்தியா 2 பதக்கங்களை வென்றுள்ளது. மகளிருக்கான 3,000 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் இந்திய வீராங்கனைகள் பாருல் சௌத்ரி, வெள்ளிப் பதக்கமும் பிரீத்தி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

கர்நாடக அரசைக் கண்டித்து அக். 6-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் 

தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசைக் கண்டித்து அக்டோபர் 6-ம் தேதி தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.

டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை சந்திப்பு 

டெல்லி சென்ற தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து வருகிறார்.

நல்ல அறிவிப்பு வந்தால் உடனடியாக போராட்டம் வாபஸ் - ஆசிரியர் சங்கம்

நல்ல அறிவிப்பு வந்தால் உடனடியாக போராட்டத்தை வாபஸ் பெறுவோம். இல்லை எனில் போராட்டத்தை தொடருவோம் என இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராபர்ட் தெரிவித்துள்ளார்

நாளை நடைபெற இருந்த பா.ஜ.க மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரத்து

சென்னையில் நாளை நடைபெற இருந்த பா.ஜ.க மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது

அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

ஆசிரியர் தகுதி தேர்வு முடித்த நிர்வாகிகள், அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இதனையடுத்து போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கடாலின் கரிகோ, ட்ரூ வெய்ஸ்மேனுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு; கோவிட்-19 தடுப்பூசி உருவாக்க உதவியவர்கள்

கோவிட்-19 தடுப்பூசிகளை உருவாக்க உதவும் கண்டுபிடிப்புகளுக்காக 2023 ஆம் ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசை விஞ்ஞானிகள் கடாலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் வென்றுள்ளனர் என்று விருது வழங்கும் அமைப்பு திங்களன்று தெரிவித்துள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுடன் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை

சென்னையில் 5வது நாளாக போராட்டத்தை தொடர்ந்துள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்

உலகின் சிறந்த விஸ்கியாக இந்திய தயாரிப்பு தேர்வு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Indri விஸ்கி, உலகின் சிறந்த விஸ்கி என்ற விருதை பெற்றது. உலகம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட விஸ்கி வகைகள் சோதிக்கப்பட்டு இது தேர்வு செய்யப்பட்டுள்ளது

இளம்பெண் வெட்டி படுகொலை

நெல்லை டவுன் கீழ ரத வீதியில் இளம்பெண் வெட்டி படுகொலை. பேன்சி ஸ்டோரில் வேலை செய்யும் சந்தியா(18) என்ற பெண் படுகொலை . காதல் விவகாரத்தில் படுகொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக முதற்கட்ட தகவல்

கனமழைக்கு வாய்ப்பு

7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல். கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு.

 கொடுக்கப்படாத வாக்குறுதிகளையும் சேர்த்து நிறைவேற்றினோம்

அதிமுக ஆட்சியில், கொடுக்கப்படாத வாக்குறுதிகளையும் சேர்த்து நிறைவேற்றினோம். சேலத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு.

 சேலம் மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பியோடிய விவகாரம். ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் சிக்கினார். தப்பவைத்து பணிநீக்கம் செய்யப்பட்ட காவலரே போலீசாருக்கு பிடித்துக் கொடுத்த சுவாரஸ்யம்

அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்- பிரேமலதா 

காவிரி  நீர் விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை பெற்றுத் தர அனைத்து விதத்திலும் முயற்சி எடுக்க வேண்டும். காவிரி  விவகாரத்தில் கர்நாடக கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன- தேமுதிக பொருளாளர் பிரேமலதா

தனியார் ஏஜென்சி மூலம் தேர்வு - இ.பி.எஸ் கண்டனம்

அரசுப் போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்கும் வகையில் வெளியிட்ட ஒப்பந்த புள்ளியை ரத்து செய்ய வேண்டும். தனியார் ஏஜென்சி மூலம் ஓட்டுநர் நடத்துநர்களை தேர்ந்தெடுக்க முயல்கிறது தி.மு.க அரசு. ஓட்டுநர், நடத்துநர் தேர்வுக்கு ஆன்லைனில் பதிவு செய்துள்ளோரின் விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி 

என்.எல்.சி விவகாரம்- கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த மக்கள்

கடலூர்: என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த கத்தாழை கிராம மக்கள். இதுவரை பலமுறை என்எல்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியும் எந்த பயனும் இல்லை என குற்றச்சாட்டு

ஹீலியம் பலூன்கள் வெடித்து விபத்து- 4 குழந்தைகள் காயம்

பெங்களூருவில் பிறந்தநாள் விழாவில் ஹீலியம் பலூன்கள் வெடித்து விபத்து. ஹீலியம் பலூன்கள் மின் கம்பியில் உரசி வெடித்து தீ விபத்து. விளையாடி கொண்டிருந்த 4 குழந்தைகள் உட்பட 5 பேர் காயம். காயமடைந்த 5 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி

நந்தினி அகசரா மீது சக வீராங்கனை குற்றச்சாட்டு

இந்திய வீராங்கனை நந்தினி அகசரா மீது சக வீராங்கனை குற்றச்சாட்டு. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனை மீது சக இந்திய வீராங்கனை குற்றச்சாட்டு. HEPTATHALON  விளையாட்டில் 4-ம் இடம் பிடித்த தனக்கு வெண்கலப் பதக்கம் தர வேண்டும். வெண்கலம் வென்ற நந்தினி ஒரு திருநங்கை என்பதால் விதிப்படி தனக்கு பதக்கம் தர வேண்டும்- ஸ்வப்னா பர்மன்.  மகளிர் 800 மீட்டர் ஹெப்பத்லான் போட்டியில் இந்திய வீராங்கனை நந்தினி அகசரா வெண்கலப் பதக்கம் வென்றார். 

தமிழக விஞ்ஞானிகள் 9 பேருக்கும் தலா ரூ.25 லட்சம் பரிசு

தமிழக விஞ்ஞானிகள் 9 பேருக்கும் தலா ரூ.25 லட்சம் பரிசாக வழங்கப்படும். 7.5% ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிக்கும் 9 மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானி என்ற பெயரில் உதவித்தொகை வழங்கப்படும். தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா - முதல்வர் உரை

 

தமிழ்நாட்டை சேர்ந்த ISRO விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா

Stalin

இந்த நாட்டில் ஏன் ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன் உருவாகவில்லை என அப்போது கேட்டவர் அண்ணா. அதனால், அவர் பெயரிலான இந்த அரங்கில், விஞ்ஞானிகளான உங்களை அழைத்து பாராட்டுவதே சிறந்தது. 

இந்த மேடையில் நிற்பதை நான் பெருமையாக கருதுகிறேன். இஸ்ரோ விஞ்ஞானிகள் சிவன், மயில்சாமி அண்ணாதுரை பிறந்த மண் தமிழ்நாடு.

விஞ்ஞானி வீரமுத்துவேலின் பணி பெருமைக்குரியது. ஆகஸ்ட் 23 உலகத்திற்கே முக்கியமான நாள். உலகத்தையே வியக்க வைத்த விஞ்ஞானிகள் தமிழ்நாட்டில் உள்ளனர்- இஸ்ரோவின் தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

கபிணி அணைக்கு நீர் வரத்து 8200 கன அடியாக அதிகரிப்பு    

கேரளாவின் வயநாடு பகுதியில் பெய்துவரும் கனமழையால் கர்நாடகாவின் கபிணி அணைக்கு நீர் வரத்து 8200 கன அடியாக அதிகரித்துள்ளது

கபிணி, கே.ஆர்.எஸ். இரு அணைகளுக்கான நீர் வரத்து 12,300 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், நீர் வெளியேற்றம் 3179 கன அடியாக தொடர்ந்து உள்ளது.

இன்று முதல் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

ஐசிசி 50 ஓவர் உலக கோப்பை

வங்க தேசம் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் கவுஹாத்தியிலும், நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் திருவனந்தபுரத்திலும் நடைபெற உள்ளது.

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கிராமசபை கூட்டங்களை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

மகாத்மா காந்தி பிறந்தநாளை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் கிராமசபை கூட்டங்களை காணொலி வாயிலாக மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Stalin

மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள்தான். திராவிட மாடல் ஆட்சி அமைந்தபிறகுதான் முறையாக தடங்கல் இன்றி கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறோம்

கிராமப்புற மக்களின் குரல் எப்போதும், எந்த சூழலிலும் தடையின்றி ஒலிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

சென்னை புறநகர் ரயில் சேவை இன்று 4 மணி நேரம் நிறுத்தம்

தாம்பரம், கோடம்பாக்கம்  ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், சென்னை கடற்கரை- தாம்பரம் இடையிலான மின்சார ரயில்கள் இன்று காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Chennai

சென்னையில் மாரத்தான் நடைபெறுவதை ஒட்டி, மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில், இன்று மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கிராம சபை கூட்டம்

காந்தி ஜெயந்தி தினமான இன்று தமிழ்நாடு முழுவதும் 12,525 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டி

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை 13 தங்கம், 21 வெள்ளி, 19 வெண்கலம் என 53 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment