Advertisment

Tamil News Updates: சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 133-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல்  ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு நிலவரம். செம்பரம்பாக்கம் - 40.27% நீர் இருப்பு உள்ளது; புழல் - 78.39%; பூண்டி - 3.47%; சோழவரம் - 10.36%; கண்ணன்கோட்டை - 61.6%

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Jul 28, 2024 23:01 IST
    சி.யு.இ.டி தேர்வு முடிவு வெளியீடு

    பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான  சி.யு.இ.டி இளங்கலை 2024-ன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. nta.ac.in மற்றும் exams.nta.ac.in/CUET-UG இணையதளம் மூலம் தேர்வு முடிவுகள் அறியலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.



  • Jul 28, 2024 20:57 IST
    ஸ்டாலின் கர்நாடகாவுக்கு நேரில் சென்று காவிரி நீரைப்  பெறத் தவறிவிட்டார் - ஜி.கே. வாசன் விமர்சனம்

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்: “கர்நாடகாவிற்கு நேரடியாக சென்று காவிரி நீரை பெற முதல்வர் மு.க. ஸ்டாலின் தவறிவிட்டார். தண்ணீர் கேட்டு பெறாதது விவசாயிகளுக்கு செய்த துரோகம். மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரை கடைமடைக்கு செல்லும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.



  • Jul 28, 2024 20:40 IST
    மூக்கில் இருந்து திடீரென கொட்டிய ரத்தம்; தடுமாறிய மத்திய அமைச்சர் எச்.டி. குமாரசாமி

    மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் பா.ஜக மூத்த தலைவர் எடியூரப்பா ஆகியோருடன் மத்திய அமைச்சரும் ஜே.டி.எஸ் தலைவருமான எச்.டி. குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென அவருடய மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியதால் அதிர்ச்சியில் தடுமாறினார். இதனால், அங்கே பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரது மகன் நிகில் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எச்.டி குமாராசாமி ஒரு இதய நோயாளி, அவருக்கு ஏற்கெனவே, 2 முறை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 



  • Jul 28, 2024 20:30 IST
    மாணவனுக்கு சர்பிரைஸ்; கொடுத்த வாக்கை நிறைவேற்றிய அமைச்சர் பி.டி.ஆர்

    கடந்த ஆண்டு ஆகஸ்டு 25ம் தேதி முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கிவைப்பற்காக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், முத்துப்பட்டி கள்ளர் உயர்நிலைப்பள்ளிக்கு சென்றிருந்தார். அப்போது பேசிக்கொண்டிருக்கும்போதே 7ஆம் வகுப்பு மாணவன் விஷ்வா, "மயக்கம் வருகிறது" என்று கண்ணை மூடினார். அதை கவனித்த அமைச்சர், அந்த மாணவனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தினார். மேலும் மாணவன் வீட்டுக்கு குழந்தை நல மருத்துவர் மற்றும் டயட்டிசியன்களை அனுப்பி வைத்து பரிசோதனை செய்ய வலியுறுத்தினார். ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் செய்து பார்த்தபோது அவருக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.  ஒரு நாள் விஷ்வாவை தனது இல்லத்துக்கு அழைத்து உரையாடினார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அப்போது விஷ்வா, விளையாட்டாக சைக்கிள் வேண்டுமென கேட்டுள்ளார். உடனே அமைச்சர்,  “உனது உடல் எடை வெறும் 23 கிலோ மட்டுமே உள்ளது. சைக்கிள் ஓட்ட பலம் வேண்டாமா? 30 கிலோவாக எடையை உயர்த்திக் கொண்டு வா. உனக்கு சைக்கிள் வாங்கித் தருகிறேன்” எனக் கூறி அனுப்பிவைத்துள்ளார்.



  • Jul 28, 2024 19:53 IST
    போலி பேராசிரியர்கள் பெயரில் மோசடி: ஆளுநர் உத்தரவின் பெயரில் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்

    அண்ணாபல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் பெயரில் மோசடி செய்த கல்லூரிகளுக்கு ஆளுநர் உத்தரவின் பெயரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு பேராசிரியர் பல கல்லூரிகளில் பணியாற்றி மோசடி செய்ததாக எழுந்த புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறு செய்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார்.



  • Jul 28, 2024 18:12 IST
    தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு



    தமிழ்நாட்டில் கோவை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Jul 28, 2024 17:59 IST
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு

    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.



  • Jul 28, 2024 17:08 IST
    குற்றாலத்தில் அனுமதி மறுப்பு

    ஞாயிறு விடுமுறையையொட்டி குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். மெயின் அருவியில் திடீரென நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது



  • Jul 28, 2024 16:41 IST
    மேட்டூர் அணையில் வினாடிக்கு 12,000 கன அடி வீதம் நீர்திறப்பு

    டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் வினாடிக்கு 12,000 கன அடி வீதம் நீர்திறக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மலர் தூவி தண்ணீரை திறந்து வைத்தார்



  • Jul 28, 2024 16:12 IST
    பாரிஸ் ஒலிம்பிக்ஸ்; இந்தியாவுக்கு முதல் பதக்கம்!

    பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார்.



  • Jul 28, 2024 16:00 IST
    பாரிஸ் ஒலிம்பிக் - தமிழ்நாடு வீராங்கனை இளவேனில் வெளியேறினார்

    பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதி சுற்றில் 631.5 புள்ளிகளுடன் 5ம் இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரமிதா ஜிண்டால். இளவேனில் வாலறிவன் 10வது இடம்பிடித்து வெளியேறினார்



  • Jul 28, 2024 15:47 IST
    டேபிள் டென்னிஸ் மகளிர் இந்திய வீராங்கனை வெற்றி

    டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா வெற்றி பெற்றுள்ளார்



  • Jul 28, 2024 15:45 IST
    காங்கிரஸ் பிரமுகர் படுகொலை - 5 தனிப்படைகள் அமைப்பு

    கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் ஜாக்சன் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தை கொலை வழக்காகப் பதிவு செய்து 5 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Jul 28, 2024 15:08 IST
    வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி ஒருவர் பலி

    வடமாடு மஞ்சுவிரட்டு - மாடு முட்டி ஒருவர் பலி சிவகங்கை மாவட்டம் சூரக்குடியில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு



  • Jul 28, 2024 15:07 IST
    ஆபாச படம் பார்த்து தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன்

    மத்திய பிரதேசத்தில் ஆபாச படம் பார்த்து 13 வயது சிறுவன் தனது 9 வயது தங்கைகைய பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், தந்தையிடம் சொல்லிவிடுவேன் என்று தங்கை கூறியதால் கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. மகனின் தவறை மறைந்த தாய் 2 சகோதரிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். 



  • Jul 28, 2024 14:56 IST
    மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு உதவிகள்: அமைச்சர் தங்கம் தென்னரசு

    மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு வீட்டு மனை, வீடுகள், வாழ்வாதாரத்துக்கான உதவிகள் அனைத்தும் செய்து தரப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    மாஞ்சோலை பிபிடிசி தேயிலை நிறுவனத்தின் செயல்பாடுகள் முடிவுற்றதால் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உதவி.

    தேயிலை தோட்டத் தொழிலாளர்களை விருப்ப ஓய்வில் செல்ல நிறுவனம் கட்டாயப்படுத்தினால் தொழிலாளர் நலத்துறையில் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு வாழ்வாதார வசதிகள் வழங்கும் பொருட்டு 389 குடும்பங்களைச் சேர்ந்த 418 தொழிலாளர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    கிராமப் பகுதிகளில் வீடற்ற தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா மற்றும் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் புதிய தொழில் தொடங்க 35% மானியம் மற்றும் 6% வட்டி சலுகையுடன் சுயதொழில் தொடங்க கடன் வழங்கப்படும்.

    பெண்களுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் ₹1.50 லட்சம் வரை சிறு கடன்கள் வழங்கப்படும் எனவும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.



  • Jul 28, 2024 13:59 IST
    பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி

    பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியின் முதல் தகுதிச் சுற்று போட்டியில் மாலத்தீவு வீராங்கனை ஃபாத்திமாத்தை எதிர்கொண்ட இந்தியாவின் பி.வி.சிந்து 21-9, 21-6 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார்.



  • Jul 28, 2024 13:53 IST
    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று பிற்பகல் 3 மணிக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதற்கட்டமாக விநாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது



  • Jul 28, 2024 13:33 IST
    ரயில்கள் ரத்து எதிரொலி - தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் 2வது நாளாக போக்குவரத்து நெரிசல்

    ரயில்கள் ரத்து எதிரொலி - தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் 2வது நாளாக போக்குவரத்து நெரிசல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் 55 மின்சார ரயில்கள் ரத்து தாம்பரம் ரயில் நிலைய பணிமனை பராமரிப்பு பணிக்காக ரயில்கள் ரத்து ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பேருந்து இயக்கப்பட்டாலும், தொடரும் நெரிசல்



  • Jul 28, 2024 13:33 IST
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேரை கைது செய்த போலீசார்

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேரை கைது செய்த போலீசார்.முகிலன், அப்பு, நூர் விஜய் ஆகிய 3 பேர் கைது ஏற்கனவே 18 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேர் கைது ஹரிஹரனை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தியதில், இவர்கள் குறித்து தகவல் அறிந்து கைது செய்ததாக போலீசார் தகவல் கைதான 3 பேரும், நாட்டு வெடிகுண்டு சப்ளை செய்தவர்கள் என போலீசார் தகவல்.



  • Jul 28, 2024 13:07 IST
    இதுவரை 595 கொலைகள்: தமிழகத்தில் கொலை நடக்காத நாளே கிடையாது: இ.பி.எஸ்

    இந்தாண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மட்டும் இதுவரை 595 கொலைகள் நடந்துள்ளன .பொதுமக்கள், அரசியல்வாதிகள், பெண்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் கொலை நடக்காத நாளே கிடையாது. காவல்துறைக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும் -  எடப்பாடி பழனிசாமி



  • Jul 28, 2024 12:42 IST
    மேட்டூர் அணை நீர் திறப்பு தொடர்பாக, டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன், முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

    மேட்டூர் அணை நீர் திறப்பு தொடர்பாக, டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன், முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 108 அடியை நெருங்கும் நிலையில் ஆலோசனை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், செயலாளர் மணிவாசகம், உயர் அதிகாரிகள் பங்கேற்பு காணொலி வாயிலாக டெல்டா மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்பு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.34 லட்சம் கன அடியாக உள்ளது மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட குடிநீர் தேவைக்கு தற்போது 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.



  • Jul 28, 2024 12:09 IST
    பாஜக பிரமுகர் கொலை: சாலை மறியல்

    சிவகங்கை அருகே பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் - உடலை வாங்க மறுத்து பாஜகவினர் போராட்டம் வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார் பா.ஜ.க கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சென்ற போது, வழிமறித்து வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பல் குற்றவாளிகளை கைது செய்ய கோரி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் டிஎஸ்பி சாய் சவுந்தர்யன் பேச்சுவார்த்தை



  • Jul 28, 2024 12:06 IST
    காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டிக்கொலை

    காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டிக்கொலை கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டி கொலை தலைமறைவான பிரபல ரவுடி உட்பட 6 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலை முன்விரோதம் காரணமாக, கொலை நடைபெற்றுள்ளதாக விசாரணையில் தகவல் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, கொலையாளிகளை தேடி வரும் போலீசார்.



  • Jul 28, 2024 11:39 IST
    கடலூர்: அதிமுக வார்டு செயலாளர் வெட்டி படுகொலை

    கடலூர் நவநீத நகர் அதிமுக வார்டு செயலாளர் பத்மநாபன் (43) என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த 5 மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓட்டம்; புதுச்சேரி கடலூர் எல்லைப்பகுதியான பாகூர் அருகே நடந்த படுகொலை சம்பவம் தொடர்பாக பாகூர் போலீசார் விசாரணை



  • Jul 28, 2024 11:36 IST
    நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா?

    காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீது நாளை (ஜூலை 29) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில், சுற்றுலா சென்ற 22 கவுன்சிலர்கள்



  • Jul 28, 2024 11:13 IST
    நிலச்சரிவில் லாரியுடன் மாயமான கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அர்ஜுன் தேடும் பணி 13வது நாளாக நீடிப்பு

    கர்நாடகா: ஷிரூர் நிலச்சரிவில் லாரியுடன் மாயமான கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அர்ஜுன் என்பவரை தேடும் பணி 13வது நாளாக நீடித்து வருகிறது; கர்நாடகாவை சேர்ந்த நீருக்கடியில் மூழ்கி தேடும் நிபுணரான ஈஸ்வர் மால்பே மற்றும் உள்ளூர் மீனவர்கள், மீட்பு குழுவினர் உடன் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்



  • Jul 28, 2024 11:09 IST
    டெல்லி மாணவர்கள் உயிரிழப்பு : பயிற்சி மைய உரிமையாளர் கைது

    டெல்லி மாணவர்கள் பலி - பயிற்சி மைய உரிமையாளர் கைது .டெல்லியில் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் தண்ணீர் புகுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பயிற்சி மையத்தின் உரிமையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கைது டெல்லியில் பெய்த கனமழை காரணமாக பழைய ராஜேந்திர நகரில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளம் தண்ணீரில் மூழ்கியது வெள்ளத்தில் சிக்கி ஒரு மாணவர் மற்றும் 2 மாணவிகள் உயிரிழப்பு. 



  • Jul 28, 2024 10:43 IST
    அ.தி.மு.க வார்டு செயலாளர் வெட்டிக் கொலை

    கடலூரில் அ.தி.மு.க. வார்டு செயலாளர் வெட்டிக்கொலை

    நவநீதம் நகர் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. வார்டு செயலாளர் பக்தா (எ) பத்மநாதன்(43) வெட்டிக்கொலை

    புதுச்சேரி மாநில எல்லைப்பகுதியான திருப்பனாம் பாக்கம் என்ற இடத்தில் வெட்டிக் கொல்லப்பட்டார்

    கோயில் கலை நிகழ்ச்சியை பார்த்து விட்டு அதிகாலை வீடு திரும்பிய போது பயங்கரம்

    2 சக்கர வாகனத்தில் வந்த போது, காரை மோத விட்டு, கீழே விழுந்தவுடன் வெட்டிக் கொலை - கும்பல் தப்பி ஓட்டம்

    கடலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முன்விரோதம் காரணமாக வெட்டியதாக பாகூர் போலீசார் தகவல்



  • Jul 28, 2024 09:51 IST
    கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு 

    கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு 

    கபினி, கேஆர்எஸ் அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 1.43 லட்சம் கன அடியிலிருந்து 1.65 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

    நிரம்பும் தருவாயில் உள்ள கபினி அணை - மொத்த கொள்ளளவான 19.52 டிஎம்சியில் தற்போது 18.27 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது

    கே.ஆர்.எஸ் அணையின் மொத்த கொள்ளளவான 124.8 அடியில், 123.34 அடிக்கு நீர்மட்டம் உயர்வு

    கே.ஆர்.எஸ் அணையின் நீர்வரத்து 1.17 லட்சம் கன அடியாக உள்ளது



  • Jul 28, 2024 08:36 IST
    கிடுகிடுவென உயரும் மேட்டூர் அணை நீர்மட்டம்

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி, விநாடிக்கு 1.34 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது

    அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது

    அணையின் நீர் மட்டம் 107.69 அடியாகவும், நீர் இருப்பு 75.167 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. 



  • Jul 28, 2024 08:35 IST
    தமிழ் ராக்கர்ஸ் முக்கிய அட்மின் கைது

    புதிய திரைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் மதுரையில் கைது

    ஸ்டீபன் ராஜ் என்பவரை கேரள சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு படத்திற்கு ₹5000 கமிஷன் பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்

    புதிய படங்களின் முதல் நாள் காட்சியிலேயே சிறிய கேமரா வைத்து வீடியோ எடுத்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புதிய படங்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். 

    திருவனந்தபுரம் தியேட்டரில், தனுஷின் ராயன் படத்தை செல்போனில் பதிவு செய்த போது மதுரையை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் கைது

    புதுப்படங்களை செல்போனில் பதிவு செய்து, இணையதளத்தில் பதிவேற்றும் கும்பலை சேர்ந்தவர் என தகவல்

    கொச்சியை சேர்ந்த போலீசார் அதிரடி நடவடிக்கை

    ஏற்கனவே மலையாள படமான குருவாயூரம்பலநடையில் படம் இணையத்தில் வெளியான நிலையில், கும்பலை கண்காணித்து வந்த போலீசார்

    மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சுப்ரியா மேனன், ஏற்கனவே கொச்சி காக்கநாடு சைபர் போலீசில் புகார் அளித்திருந்தார்



  • Jul 28, 2024 07:51 IST
    புதுவைக்கு புதிய துணை நிலை ஆளுநர் நியமனம்

    நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

    குஜராத் மாநில முதலமைச்சர் அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.கைலாஷ்நாதன், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமனம்

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்த இவர், ஊட்டியில் பள்ளிக்கல்வியையும் சென்னை பல்கலை.யில் முதுகலை பட்டமும் முடித்துள்ளார்



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment