Advertisment

Tamil News updates: நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய சந்திராயன் 3- விக்ரம் லேண்டர் வெளியிட்ட புதிய படம்

Tamil Nadu News, Tamil News LIVE, Petrol price Today - 23-08-2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சந்திராயன் 3

சந்திராயன் 3- விக்ரம் லேண்டர் எடுத்த முதல் புகைப்படம்

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பிறகு விக்ரம் லேண்டர் எடுத்த நிலவின் சமதள புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டது.

Advertisment

நிலவின் சமதள பகுதியை தேர்வு செய்து பத்திரமாக லேண்டர் தரையிறங்கியது. லேண்டருக்கும் பெங்களூருவில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தொலைத்தொடர்பு இணைப்பு வெற்றி பெற்றுள்ளது- இஸ்ரோ

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”


  • 03:25 (IST) 24 Aug 2023
    புதினுக்கு எதிரான புரட்சி: வாக்னர் குழு தலைவர் விமான விபத்தில் உயிரிழப்பு?

    ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்ட வாக்னர் குழு தவைர் எவ்கேனி பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெலாரஸில் தஞ்சம் அடைந்த அவர் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 19:11 (IST) 23 Aug 2023
    சந்திரயான் வெற்றி: மு.க. ஸ்டாலின் வாழ்த்து

    சந்திரயான்3 வெற்றி குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில், “சந்திரயான்- 3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். நிலவின் மேற்பரப்பை கைப்பற்றிய 4வது நாடாக இந்தியாவை நிறுத்தும் ஒரு மகத்தான சாதனை.

    அயராத முயற்சிகள் மற்றும் புதுமைக்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் பாராட்டுக்கள். இந்தியாவின் விண்வெளி ஆய்வுக்கு ஒரு மாபெரும் பாய்ச்சல்” எனத் தெரிவித்துள்ளார்.


  • 18:33 (IST) 23 Aug 2023
    இமாச்சலப் பிரதேசத்துக்கு ரூ.10 கோடி நிதியுதவி

    இமாச்சலப் பிரதேசத்தில் சமீபகாலமாக ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவைச் சந்தித்தது.

    இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் இமாச்சலுக்கு ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.


  • 18:12 (IST) 23 Aug 2023
    அனல் மின்நிலையங்கள் மூடல்; அன்புமணி ராமதாஸ் அறிக்கை

    அனல் மின்நிலையங்கள் மூடல்; சென்னை உயர்நீதிமன்றத்தின் விருப்பத்தை மத்திய, மாநில அரசுகள் விரைவில் நிறைவேற்ற வேண்டும்!

    “அனல் மின்நிலையங்களும், அணுமின்நிலையங்களும் மூடப்படும் நாளை இயற்கை ஆர்வலர்களும், இந்த நீதிமன்றமும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். காவிரி ஆறு மீது சூரியஒளி மின் தகடுகளை அமைத்தால் என்.எல்.சி அளவுக்கு மின்சாரத்தை தயாரித்து விட முடியும்” என்று சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் தண்டபாணி கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    கடுமையான ஒடுக்குமுறைகளுக்கும், நெருக்கடிக்கும் இடையே இயற்கையையும், சுற்றுச்சூழலையும் காக்க போராடி வரும் எங்களைப் போன்றவர்களுக்கு உயர்நீதிமன்றத்தின் கருத்து நம்பிக்கையையும், வலிமையையும் அளிக்கிறது. அனல் மின்நிலையங்கள் மூடப்படுவது குறித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் விருப்பத்தை மத்திய, மாநில அரசுகள் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.


  • 17:49 (IST) 23 Aug 2023
    அனல் மின்நிலையங்கள் மூடல்; அன்புமணி ராமதாஸ் அறிக்கை

    அனல் மின்நிலையங்கள் மூடல்; சென்னை உயர்நீதிமன்றத்தின் விருப்பத்தை மத்திய, மாநில அரசுகள் விரைவில் நிறைவேற்ற வேண்டும்!

    “அனல் மின்நிலையங்களும், அணுமின்நிலையங்களும் மூடப்படும் நாளை இயற்கை ஆர்வலர்களும், இந்த நீதிமன்றமும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். காவிரி ஆறு மீது சூரியஒளி மின் தகடுகளை அமைத்தால் என்.எல்.சி அளவுக்கு மின்சாரத்தை தயாரித்து விட முடியும்” என்று சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் தண்டபாணி கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    கடுமையான ஒடுக்குமுறைகளுக்கும், நெருக்கடிக்கும் இடையே இயற்கையையும், சுற்றுச்சூழலையும் காக்க போராடி வரும் எங்களைப் போன்றவர்களுக்கு உயர்நீதிமன்றத்தின் கருத்து நம்பிக்கையையும், வலிமையையும் அளிக்கிறது. அனல் மின்நிலையங்கள் மூடப்படுவது குறித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் விருப்பத்தை மத்திய, மாநில அரசுகள் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.


  • 17:24 (IST) 23 Aug 2023
    கடலூரில் திருநங்கைகளுக்கு வீடு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

    திருநங்கைகளுக்காக அரசு பல்வேறு சட்டங்கள், கொள்கைகளை வகுத்தாலும், அவை முழு அளவில் அமல்படுத்தப்படவில்லை; அவர்கள் கிராம திருவிழாக்களில் கலந்துகொள்வது, கோயில்களில் வழிபாடு செய்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கடலூரில் திருநங்கைகளுக்கு நிலப்பட்ட வழங்கியதை எதிர்த்து கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட வழக்கில், பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர்களை நீக்கும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


  • 17:09 (IST) 23 Aug 2023
    உலக கோப்பை செஸ்: 2வது ஆட்டம் தொடக்கம்

    10ஆவது உலக கோப்பை செஸ் இறுதிப்போட்டியின் 2ஆவது ஆட்டம் தற்போது தொடங்கியுள்ளது.

    கார்ல்சன்-பிரக்ஞானந்தா இடையே நேற்று நடந்த கிளாச்சிக்கல் சுற்று முதல் ஆட்டம் டிராவில் முடிந்தது.


  • 16:18 (IST) 23 Aug 2023
    பிரிக்ஸ் மாநாட்டில், தரையில் இருந்த இந்திய கொடியை எடுத்து சட்டைப்பையில் வைத்துக்கொண்ட மோடி

    தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் BRICS மாநாட்டில், தலைவர்கள் நிற்கும் இடத்தை குறிக்க தரையில் இந்திய கொடி வைக்கப்பட்டிருந்தது. மேடை ஏறியதும், தரையில் இருந்து இந்திய கொடியை எடுத்து சட்டைப்பையில் பிரதமர் மோடி பிரதமர் வைத்துக்கொண்டார். மோடியை தொடர்ந்து, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவும், அவர்கள் நாட்டு கொடியை கையில் எடுத்துக்கொண்டார்


  • 16:00 (IST) 23 Aug 2023
    தமிழ்நாடு மீனவர்களின் 33 படகுகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.1.23 கோடி ஒதுக்கீடு

    இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களின் 33 படகுகளுக்கு நிவாரணம் வழங்க ரூ1.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 21 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம், 12 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் வழங்கப்பட உள்ளது


  • 15:37 (IST) 23 Aug 2023
    பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

    தென் ஆப்பிரிக்கா, ஜோகன்ஸ்பர்க்கில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று வருகிறார்


  • 15:36 (IST) 23 Aug 2023
    தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக சச்சின் டெண்டுல்கர் நியமனம்

    தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் தேர்தல் ஆணையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. வாக்களிக்கும் உரிமையை நிறைவேற்றுவது. நம்முடைய கடமை வாக்களிப்பதில் உலகிலேயே மிகவும் பொறுப்பான நாடாக இந்தியா திகழ்கிறது என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்


  • 15:04 (IST) 23 Aug 2023
    திருக்கோவிலூரில் கிடைத்த 2ம் குலோத்துங்க காலத்து கல்வெட்டு

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 2ம் குலோத்துங்க காலத்து கல்வெட்டு கிடைத்துள்ளது


  • 14:42 (IST) 23 Aug 2023
    புகழ்பெற்ற புள்ளியியல் வல்லுனர் சி.ஆர்.ராவ் மரணம்

    இந்தியாவின் புகழ்பெற்ற புள்ளியியல் வல்லுனர்களில் ஒருவரான கலியம்புடி ராதாகிருஷ்ண ராவ் தனது 102வது வயதில் புதன்கிழமை காலமானார். ராவின் பணி வணிகத்திலிருந்து மருத்துவம், மானுடவியல் முதல் பொருளாதாரம் வரையிலான ஆய்வுத் துறைகளில் புரட்சியை ஏற்படுத்தியது, மேலும் அவருக்கு 2023 ஆம் ஆண்டு புள்ளியியல் துறையில் நோபல் பரிசுக்கு சமமான சர்வதேசப் பரிசு வழங்கப்பட்டது.


  • 14:37 (IST) 23 Aug 2023
    ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு – மத்திய அரசு திட்டம்

    11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்தும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க மத்திய அரசின் கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது


  • 14:16 (IST) 23 Aug 2023
    சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க தி.மு.க தொடர்ந்து செயலாற்றும் - மு.க.ஸ்டாலின்

    சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க மக்கள் மன்றத்தில் திமுக தொடர்ந்து செயலாற்றும் என மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்


  • 13:47 (IST) 23 Aug 2023
    ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம்

    அதிமுக எழுச்சி மாநாடு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் இட்டுள்ளது;

    அதிமுக மாநாட்டில் மக்கள் நலனுக்காக 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது; திமுக தலைமையிலான அரசு கடன் வாங்குவதில் முதலிடத்தில் உள்ளது;

    ராகுல்காந்தி பிரதமர் ஆனவுடன் நீர் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறுகிறார்கள், ராகுல்காந்தி எப்போது பிரதமர் ஆவது, எப்போது நீர் தேர்வை ரத்து செய்வது- மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி


  • 13:20 (IST) 23 Aug 2023
    கர்நாடகா அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது.

    கர்நாடக மாநில விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் கர்நாடகா அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது. காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநில அரசின் உரிமையை காக்க சட்டப் போராட்டம் தொடரும்.

    அனைத்துக் கட்சித் தலைவர்களும் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்- கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சு


  • 13:08 (IST) 23 Aug 2023
    அமெரிக்க அதிபர் இந்தியா வருகை

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் “ஜி20” உச்சிமாநாட்டில் பங்கேற்க செப்டம்பர் 7-ம் தேதி இந்தியா வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 12:59 (IST) 23 Aug 2023
    பிரதமர் மோடி இரங்கல்

    மிசோரம் பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

    விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ₹2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ₹50,000 நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிப்பு


  • 12:58 (IST) 23 Aug 2023
    பிரதமர் மோடி இரங்கல்

    மிசோரம் பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

    விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ₹2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ₹50,000 நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிப்பு


  • 12:57 (IST) 23 Aug 2023
    கார்த்தி சிதம்பரம் எம்பி பேட்டி

    அதிமுக வலிமையான கட்சி என்பதை மதுரை மாநாடு நிரூபித்துள்ளது, ஆனால் கூட்டணி சேர்ந்துள்ள இடம் தான் சரியற்றது;

    அதிமுக - பாஜக கூட்டணியால் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது; நீட் தேர்வில் ஒரு வருடம் காத்திருந்து பயிற்சி பெற்ற மாணவர்களே வெற்றி பெறுகிறார்கள், ஆகையால் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்- ராமநாதபுரத்தில் கார்த்தி சிதம்பரம் எம்பி பேட்டி


  • 12:29 (IST) 23 Aug 2023
    சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    வேளாங்கண்ணி மாதா தேவாலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பல நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.


  • 12:24 (IST) 23 Aug 2023
    ரயில்வே பாலம் கட்டுமானப் பணியின்போது விபத்து, 17 பேர் பலி

    மிசோரம் மாநிலத்தில் ரயில்வே பாலம் கட்டுமானப் பணியின்போது இடிந்து விழுந்து விபத்தில் 17 பேர் பலி; இடிபாடுகளில் சிக்கியுள்ள 30க்கும் பேற்பட்டோரை மீட்கும் பணி தீவிரம்; இந்த விபத்தில் இன்னும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


  • 12:06 (IST) 23 Aug 2023
    இளம் பேச்சாளர்களை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும்

    எப்போதும் என்னை சுறுசுறுப்பாக வைத்து இருப்பவர்கள் மாணவர்களும், இளைஞர்களும் தான்; இந்த பேச்சு போட்டிகளின் மூலம் அடையாளம் காணப்பட்ட இளம் பேச்சளர்கள் தான் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் கிடைத்த பரிசு;

    பேச்சாற்றலை நம் தமிழ் நிலம் பயண்படுத்திக் கொண்ட வரலாற்றை அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டும்;

    திராவிட இயக்கம் என்பதே பேசியும், எழுதியும் வளர்ந்து இருக்கக்கூடிய இயக்கம்; இளம் பேச்சாளர்களை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும் - மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவின் பேச்சு போட்டி பரிசளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை


  • 12:05 (IST) 23 Aug 2023
    ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு தேவையில்லாத இடையூறுகள் செய்து வருகிறார்;

    TNPSC தலைவராக சைலேந்திர பாபுவை நியமனம் செய்வதற்கு ஆளுநர் தடையாக இருக்கிறார், ஆளுநர் மீது தமிழக மக்களுக்கு கோபம் இருக்கிறது;

    மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள் மட்டுமே நடந்துள்ளது, அந்த மாநாட்டை ஒரு புளியோதரை மாநாடாக பார்க்கிறேன்- காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி


  • 11:30 (IST) 23 Aug 2023
    நீதிமன்றம் நாட்டில் வாழும் குப்பனுக்கும், சுப்பனுக்கும் உரித்தானது

    சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் தங்கம் தன்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    வழக்கு விசாரணையின் போது பின்பற்றப்பட்ட நடைமுறைகள் தவறானவை; அமைச்சர்கள் இருவரையும் விடுவித்த உத்தரவுகளும் ஒரே மாதிரியாக உள்ளன;

    லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் நிலைபாடு 2021க்குப் பிறகு மாறி இருப்பதை காண முடிகிறது; யார் அதிகாரத்திற்கு வந்தாலும் வழக்கை நீர்த்துப் போகவே செய்கின்றனர்;

    நீதிமன்றம் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கோ, அதில் தொடர்புடையவர்களுக்கோ, அரசுக்கோ உரித்தானது அல்ல, நாட்டில் வாழும் குப்பனுக்கும், சுப்பனுக்கும் உரித்தானது- சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்


  • 11:29 (IST) 23 Aug 2023
    பேஸ்புக் குறித்து எலான் மஸ்க் விமர்சனம்

    பேஸ்புக் தளமானது உலகம் முழுவதும் உள்ள பொது மக்களை சாமர்த்தியமாக கட்டுப்படுத்தி வருகிறது; அதனால் தான் அவர்களின் அல்காரிதம் வெளிப்படைத் தன்மையுடன் இல்லை- பேஸ்புக்கை விமர்சித்து எலான் மஸ்க் X தளத்தில் பதிவு


  • 11:29 (IST) 23 Aug 2023
    தோ்தல் ஆணையத்தின் தேசிய தூதராக சச்சின்

    தேர்தலில் மக்களின் பங்கேற்பை ஊக்குவிக்க இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட உள்ளார்.


  • 10:47 (IST) 23 Aug 2023
    தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்யப்படும்

    தீபாவளியை முன்னிட்டு அக்.29 - நவ.12 வரை சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் அறிவிப்பு


  • 10:38 (IST) 23 Aug 2023
    இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே மோதல்: 5 மாணவர்கள் கைது

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே மோதல்; இந்த மோதலின் காரணமாக 12க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு, 5 மாணவர்கள் கைது


  • 10:05 (IST) 23 Aug 2023
    மாணவர் சின்னதுரையை சந்தித்து ஆறுதல் கூறிய சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

    பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாங்குநேரி மாணவர் சின்னதுரை, அவரது தங்கை சந்திரா செல்வி ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறிய சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்


  • 09:47 (IST) 23 Aug 2023
    நாகை மாவட்டம் வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல்

    நாகை மாவட்டம் வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் . கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 3 மீனவர்களை தாக்கி, படகில் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கிடாக்கி, பேட்டரி, செல்ஃபோன், 20 லிட்டர் டீசலை கொள்ளையடித்துச் சென்றனர் வேதாரண்யம் மீனவர்கள் ஏற்கனவே நேற்று மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர்


  • 09:41 (IST) 23 Aug 2023
    இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் பைடன்

    ஜி 20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் பைடன் . செப்டம்பர் 7 முதல் 10 தேதிகளில் இந்தியா வருகிறார்.


  • 09:39 (IST) 23 Aug 2023
    புற்றுநோய் காரணமாக காலமானார்

    ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக்(49) புற்றுநோய் காரணமாக காலமானார்


  • 08:36 (IST) 23 Aug 2023
    2ம் சுற்று ஆட்டம் நடைபெற உள்ளது

    செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பட்டம் வெல்லும் முனைப்பில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா .

    நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் சமனில் முடிந்தது . இன்று 2ம் சுற்று ஆட்டம் நடைபெற உள்ளது.


  • 08:32 (IST) 23 Aug 2023
    3வது டி20 கிரிக்கெட் போட்டி

    இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது


Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment