Tamil News Today: 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

Tamil News Live Updates-07-10-2024: இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil News Live Updates-07-10-2024: இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rain orange

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 204-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் ரூ100.75 –க்கும், டீசல், ரூ92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisment

ஏரிகளின் நீர் நிலவரம் 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 32.19% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 31.82% ; புழல் - 62.88% ; பூண்டி - 6.44% ; சோழவரம் - 5.73% ; கண்ணன்கோட்டை - 58.4%  நீர் இருப்பு உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Oct 07, 2024 22:54 IST

    அமமுக மாவட்ட செயலாளர் வன்கொடுமை சட்டததில் கைது

    அமமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் முத்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பழங்குடி இருளர் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா கல்வி மணி கொடுத்த, கொலை மிரட்டல் புகாரின் அடிப்படையில் திண்டிவனம் போலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.



  • Oct 07, 2024 22:52 IST

    சாம்சங் தொழிலாளர்கள் ஸ்டிரைக் - இருதரப்பு உடன்பாடு

    எட்டப்பட்டதுபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாட்களாக காஞ்சிபுரம் சாம்சங் நிறுவன பணியாளர்கள் போராடி வந்த நிலையில்அரசு தலையிட்டுசுமூக முடிவை எட்ட வைத்துள்ளது.தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் குழு நேற்றும் இன்றும் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் போராட்டக் குழுவினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து முடிவு எட்டப்பட்டுள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Oct 07, 2024 22:50 IST

    டென்ஷனில் இருந்து உங்களை இந்த பூங்கா காப்பாற்றும்: அமைச்சர் தகவல்

    சென்னை கதீட்ரல் சாலையில் 6.09 ஏக்கர் நிலத்தில் ரூ.45.99 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. டென்ஷனில் இருந்து உங்களை இந்த பூங்கா காப்பாற்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.



  • Oct 07, 2024 20:41 IST

    18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

    கோவை, தி.மலை, தருமபுரி, நீலகிரி, திருப்பூர், தென்காசி, குமரி, திருச்சி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • Oct 07, 2024 20:39 IST

    ஓய்வை அறிவித்த வீராங்கனை தீபா கர்மாகர் 

    2014ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் வெண்கலம் வென்ற தீபா கர்மாகர்(31) ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.



  • Oct 07, 2024 19:39 IST

    ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு - பிரதமர் மோடி சந்திப்பு

    டெல்லி சென்றுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது,



  • Oct 07, 2024 19:02 IST

    சாம்சங் தொழிலாளர்கள் விவகாரத்தில் நாளை முடிவு தெரியவரும் -அமைச்சர் தா.மோ.அன்பரசன்

    ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிலாளர்கள் விவகாரத்தில் நாளை (அக்டோபர் 8) முடிவு தெரியவரும் என சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் மற்றும் ஆலை நிர்வாகிகள் உடனான பேச்சுவார்த்தைக்கு பின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்



  • Oct 07, 2024 18:40 IST

    கலைஞர் நூற்றாண்டு பூங்காவை திறந்து வைத்தார் ஸ்டாலின்

    சென்னை கதீட்ரல் சாலையில் 45 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார் 



  • Oct 07, 2024 18:17 IST

    தமிழகத்தில் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

    தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், திருச்சி, தேனி, மதுரை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Oct 07, 2024 18:06 IST

    பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு, கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு

    பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு, கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நிலங்கள், கிராமத்தில் வசிக்கும் மக்களை கணக்கெடுக்க சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வருவாய்த்துறை அதிகாரிகளை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி பொது மக்கள் போராட்டம் நடத்தினர்



  • Oct 07, 2024 17:50 IST

    பதவியை ராஜினாமா செய்த ஊராட்சி ஒன்றிய தலைவர்

    நெல்லை மாவட்டம், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் பூங்கோதை சசிகுமார் ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் கட்சித் தலைமைக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. ஊராட்சி ஒன்றியத்தில் விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டை முன்வைத்து பூங்கோதை சசிகுமார் ராஜினாமா செய்துள்ளார். கடந்த 18ம் தேதி ஆட்சியருக்கு ராஜினாமா கடிதத்தை யூனியன் சேர்மன் மூலம் கொடுத்த பூங்கோதை சசிகுமார் உடனடியாக விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளார் 



  • Oct 07, 2024 17:41 IST

    சாம்சங் நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை – சி.ஐ.டி.யு

    சங்கம் அமைக்க அனுமதி அளித்தால் போராட்டத்தை வாபஸ் பெறுவோம். சாம்சங் நிர்வாகத்துடன் பேசுவதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக முடிவு இன்னும் எட்டப்படவில்லை. நிர்வாகத்தின் கருத்தை பெற்ற பின்னர் அடுத்த கட்டம் குறித்து பேசுவோம் என சி.ஐ.டி.யு மாநில தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்



  • Oct 07, 2024 17:20 IST

    வடகிழக்கு பருவமழை: சென்னை மேயர் பிரியா தலைமையில் ஆலோசனை

    வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்



  • Oct 07, 2024 17:17 IST

    தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு

    நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து கோரிய வழக்கு அக்டோபர் 19 ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகாததால் விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது



  • Oct 07, 2024 16:21 IST

    தங்கலான் படத்தை ஒடிடியில் வெளியிட தடை விதிக்கக்கோரி மனு; ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

    தங்கலான் படத்தை ஒடிடியில் வெளியிட தடை விதிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. புத்த மதம் குறித்து புனிதமான முறையிலும், வைணவத்தை நகைச்சுவையாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளன. திருவள்ளூரை சேர்ந்த பொற்கொடி என்பவர் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.



  • Oct 07, 2024 15:59 IST

    மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

    2024ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு விக்டர் அம்ப்ரோஸ், கேரி ருவ்குன் ஆகிய இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ ஆர்என்ஏ பற்றிய ஆராய்ச்சிக்காக மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10ம் தேதி இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.



  • Oct 07, 2024 15:39 IST

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரைகிறது சென்னை போலீஸ்

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலை பிடிக்க சென்னை காவல்துறை தனிப்படை துபாய்க்கு விரைகிறது. சென்னை தனிப்படை போலீசார், ஓரிரு தினங்களில் விமானம் மூலமாக துபாய் செல்ல உள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றப்பத்திரிகையில் சம்போ செந்தில் பெயர் ஏ2 வாக சேர்க்கப்பட்டுள்ளார்.



  • Oct 07, 2024 14:57 IST

    மெரினாவில் 5 பேர் மரணம் - விஜய் வேதனை

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னையில் இந்திய விமானப்படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்நிகழ்ச்சியின்போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன. இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்." என்று அவர் கூறியுள்ளார். 



  • Oct 07, 2024 14:43 IST

    மெரினாவில் 5 பேர் மரணம் - விஜய் வேதனை

    "மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அடிப்படை வசதிகள், போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என செய்திகள் வந்துள்ளன. இதுபோன்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில், இனிவரும் காலங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்" என்று த.வெ.க தலைவர் விஜய் வேதனை தெரிவித்துள்ளார். 



  • Oct 07, 2024 14:21 IST

     தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் தீவிர சோதனை

    தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் தீவிர சோதனைக்கு பின் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். காவல்துறையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனையிட்டு வருகிறார்கள். 

    கடந்த வாரம் ஆட்சியர் முன்பாக முதியவர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் எதிரொலியாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. போலீசாரின் முழு சோதனைக்கு பிறகே பொதுமக்களுக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். 



  • Oct 07, 2024 14:08 IST

    சாம்சங் ஊழியர்கள் போராட்டம்:  6ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி 

    சாம்சங் ஊழியர்கள் உடனான 6ஆம் கட்ட பேச்சுவார்த்தை, ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டை பகுதியில் உள்ள தொழிலாளர் துறை துணை ஆணையர் அலுவலகத்தில் நடந்தது. இந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. 



  • Oct 07, 2024 13:54 IST

    மெரினாவில் 18.5 டன் குப்பைகள் அகற்றம்  - சென்னை மாநகராட்சி

    விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்ற மெரினா கடற்கரையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 18.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அகற்றப்பட்ட குப்பைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மட்டும் 4 டன் இருந்துள்ளது. 30-க்கும் மேற்பட்ட குப்பை அள்ளும் வாகனங்கள் மண்ணில் புதையுண்டு இருக்கும் சிறு குப்பைகளை அகற்ற பயன்படுத்தப்பட்டன.

    128 தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். குப்பைகள் அகற்றப்பட்டு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு கடற்கரை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.



  • Oct 07, 2024 13:51 IST

    'நெரிசலில் யாரும் உயிரிழக்கவில்லை' - செல்வப்பெருந்தகை

    "வான் சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விமானப்படை கடந்த காலங்களில் மாலை நேரங்களில் இதுபோன்ற சாகசங்களை செய்துள்ளது. தற்போது உச்சி வெயிலில் சாகச நிகழ்ச்சிகளை நடத்த காரணம் என்ன?"

    தமிழக அரசு விரிவான ஏற்பாடுகளை செய்ததாக பார்வையாளர்களே கூறுகின்றனர். 5 பேர் உயிரிழப்பை வைத்து அரசியல் செய்ய கூடாது. மாலையில் நடத்தாமல், உச்சி வெயிலில் நிகழ்ச்சியை நடத்தியது ஏன்?. நீர்ச்சத்து குறைபாடு காரணமாக 5 பேர் மயங்கி உயிரிழந்துள்ளனர்"

    மதியம் 12 மணிக்கு, சாகச நிகழ்ச்சி தேவையா?. விசாரணை ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு விசாரிக்க வேண்டும். நெரிசலில் யாரும் உயிரிழக்கவில்லை, நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவே உயிரிழப்பு நடந்துள்ளது. பாதுகாப்பு குறைபாடு காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை" என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். 



  • Oct 07, 2024 13:49 IST

    3  மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு 

    கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 



  • Oct 07, 2024 11:57 IST

    தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

    கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல், இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். வகுப்பறையில் இருந்து மாணவர்களை வெளியேற்றி, சோதனை நடைபெற்றது. 



  • Oct 07, 2024 11:03 IST

    உயிரிழப்பில் அரசியல் செய்ய வேண்டாம்- மா.சுப்பிரமணியன்

    விமானப்படை கேட்ட அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுத்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 

    தலைமைச் செயலாளர் தலைமையில் 2 கூட்டங்கள் நடத்தி பல சேவைகள் துறையை ஒருங்கிணைத்து ஏற்பாடுகள் செய்தோம்.

    அவசர மருத்துவ உதவிக்கு 40 ஆம்புலன்ஸ்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தது வருத்தம் தான்.யாரும் அரசியல் செய்ய நினைக்க கூடாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 



  • Oct 07, 2024 10:18 IST

    தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்திருக்க வேண்டும்- எல்.முருகன்

    விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த 5 பேர் மரணம் அடைந்தது வருத்தம் அளிக்கிறது. போதிய நடவடிக்கை எடுக்க தவறியதால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

    முன்கூட்டியே தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்திருக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி அளித்துள்ளார். 



  • Oct 07, 2024 09:40 IST

    சமாளிக்க முடியாத கூட்டங்களை தவிர்க்க வேண்டும்- கனிமொழி

    சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என தி.மு.க எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். 



  • Oct 07, 2024 09:31 IST

    ரோப்கார் சேவை நிறுத்தம்

    பழனி முருகன் கோயிலில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரோப்கார் சேவை இன்று முதல் 40 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. 



  • Oct 07, 2024 09:09 IST

    தொகுத்தறி மதிப்பெண்கள்- தொடக்கக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தல்

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1-5ம் வகுப்பு மாணவர்களின் தொகுத்தறி மதிப்பெண்களை பள்ளிக்கல்வித்துறையின் TNSED செயலில் பதிவேற்றுமாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது. 

    விடைத்தாள்களை திருத்திய பின்னர் தொகுத்தறி மதிப்பெண்களை அக்டோபர் 9ம் தேதிக்குள் உள்ளீடு செய்வது அவசியம். இதற்கான வழிகாட்டுதல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்க அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,



  • Oct 07, 2024 08:47 IST

    பள்ளிகள் மீண்டும் திறப்பு

    தமிழ்நாட்டில் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கடந்த செப்.28-ம் தேதி முதல் நேற்று வரை 8 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பியவர்களால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 



Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: