பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 203-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் ரூ100.75 –க்கும், டீசல், ரூ92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை மெரினா விமானப்படை சாகச நிகழ்ச்சியை நேரலையில் இங்கே பாருங்கள்:
முதல் டி20 போட்டி
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி குவாலியரில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. முன்னதாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா வென்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Oct 06, 2024 21:29 ISTஉதயநிதிக்கு சட்டை இல்லை என்றால் நாங்கள் வாங்கி தருகிறோம் - ஜெயக்குமார்
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: “துணை முதல்வர் உதயநிதி அரசு நிகழ்ச்சியில் சட்டை போடாமல் டீ சர்ட் போட்டு, அதில் கட்சி சின்னத்தை பதிவு செய்து வருகிறார். சட்டை இல்லை என்றால் நாங்கள் வாங்கித் தருகிறோம். உடை விஷயத்தில் உதயநிதி இப்படி தொடர்ந்தால் அ.தி.மு.க வழக்கு தொடரும். அரசு பொறுப்பில் உள்ளவர்கள் சட்டை, வேட்டி, பேண்ட் அணிவது மரபு” என்று கூறியுள்ளார்.
-
Oct 06, 2024 19:53 ISTமெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி: உயிரிழப்பு 3 ஆக உயர்வு
சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. நிகழ்சியின்போது வெயில்தாக்கம் காரணமாக 230 பேர் மயக்கம் அடைந்தனர். உடல் நலக்கோளாறு ஏற்பட்டு 93 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
Oct 06, 2024 18:49 ISTமெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த 2 பேர் உயிரிழப்பு
ன்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த 2 பேர் உயிரிழந்தனர். 60 வயது மதிக்கத்தக்க நபர் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (34) நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். 30-க்கும் மேற்பட்டோர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
-
Oct 06, 2024 17:29 ISTமகளிர் டி20 உலக கோப்பை; இந்திய அணிக்கு 106 ரன்கள் இலக்கு
மகளிர் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி 106 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் மட்டுமே எடுத்தது
-
Oct 06, 2024 17:03 ISTவட தமிழ்நாட்டிற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை
வட தமிழ்நாட்டிற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் வரும் 11-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது
-
Oct 06, 2024 16:15 ISTசென்னையில் போக்குவரத்து நெரிசல்
சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சி பார்த்துவிட்டு வீடு திரும்பும் மக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சேப்பாக்கம் விக்டோரியா விடுதி சாலையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் ஒன்று மாட்டிக் கொண்டது
-
Oct 06, 2024 15:57 ISTசாம்சங் நிர்வாகத்தினருடன் தொழில்துறை அமைச்சர் சந்திப்பு
சாம்சங் நிர்வாகத்தினரும் ஊழியர்களும் இணைந்து, எல்லா தரப்புக்கும் பயனுள்ள ஒரு நல்ல முடிவை எட்டுவார்கள் என உறுதியுடன் நம்புகிறோம் என சாம்சங் நிர்வாகிகளுடன் சந்திப்புக்குப் பின் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்
-
Oct 06, 2024 15:29 ISTதமிழக காவல்துறையினர் போதைப்பொருளை பிடிப்பதில்லை - ஆளுநர் ஆர்.என். ரவி
தமிழ்நாடு காவல்துறையினர் போதைப்பொருளை பிடிப்பதில்லை. தமிழ்நாட்டில் மத்திய துறையினர் பல கிலோ போதைப்பொருட்களை பிடிக்கின்றனர். ஆனால் தமிழக காவல்துறை கஞ்சாவை தவிர, ஒரு கிராம் போதைப்பொருளைக் கூட பிடிப்பதில்லை. போதைப்பொருள் கிடங்குகள் பாகிஸ்தான், துபாய் மற்றும் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன என தென்காசி சங்கரன்கோவிலில் நடைபெற்ற போதை ஒழிப்பு பேரணியில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார்
-
Oct 06, 2024 15:01 ISTபூரண மதுவிலக்கு தி.மு.க.,வின் லட்சியம் - அமைச்சர் ரகுபதி
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று சொன்னதாலேயே திருப்பூர், கோவை போன்ற இடங்களில் தி.மு.க.,வின் வாக்கு சதவீதம் குறைந்தது; இந்தத் தேர்தலில் கூட படிப்படியாக மதுக்கடைகளை குறைப்போம் என்று தான் சொன்னோமே தவிர, பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று சொல்லவில்லை; பூரண மதுவிலக்கு தி.மு.க.,வின் லட்சியம், மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பது நிச்சயம் என புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார்
-
Oct 06, 2024 14:52 IST3.5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கம்
சென்னை மெரினா விமானப்படை சாகச நிகழ்ச்சி கூட்ட நெரிசலை சமாளிக்க வண்ணாரப்பேட்டை மெட்ரோ – ஏ.ஜி டி.எம்.எஸ் மெட்ரோ இடையே 3.5 நிமிட இடைவெளியிலும், விம்கோ நகர் - விமான நிலையம் வழித்தடத்தில் 7 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
-
Oct 06, 2024 14:38 ISTலிம்கா சாதனை படைத்த மெரினா வான் சாகச நிகழ்ச்சி
அதிக மக்கள் கண்டுகளித்த சாகச நிகழ்ச்சி என்ற லிம்கா சாதனையை விமானப்படையின் மெரினா வான் சாகச நிகழ்ச்சி படைத்துள்ளது
-
Oct 06, 2024 13:41 ISTதீபாவளி பண்டிகை; குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் - புதுச்சேரி முதல்வர்
புதுச்சேரியில் தீபாவளிக்கு முன்னதாக அனைத்து ரேஷன் கடைகளும் திறக்கப்படும். தீபாவளியை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்
-
Oct 06, 2024 13:38 ISTவிமானப்படை வான் சாகச நிகழ்ச்சி; ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசு
சென்னை மெரினாவில் நடந்த விமானப்படை வான் சாகச நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விமானப்படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங் நினைவுப் பரிசு வழங்கினார்
-
Oct 06, 2024 13:37 ISTசென்னை மெரினா விமானப்படை சாகச நிகழ்ச்சி நிறைவு
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. 2 மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்
-
Oct 06, 2024 12:47 ISTமுதலாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஹார்வர்ட் விமானம் சாகசம்
சென்னை மெரினாவில் நடக்கும் வான் சாகச நிகழ்ச்சியில் முதலாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட அதிநவீன பயிற்சி விமானம் ஹார்வர்ட் வானில் பறந்து பார்வையாளர்களைக் கவர்ந்தது
-
Oct 06, 2024 12:25 ISTவானில் சீறிப் பாயும் போர் விமானங்கள்
மெரினாவில் மெய்சிலிர்க்க வைக்கும் விமானப்படை சாகசம் நடைபெற்று வருகிறது. மக்கள் ஆரவாரமாக கண்டு களித்து வருகின்றனர்
-
Oct 06, 2024 12:05 ISTபோதையில் மிதக்கும் இளைஞர்கள் - இ.பி.எஸ். வேதனை
சேலம் மாநகரின் மையப்பகுதியில் இளைஞர்கள் போதை மருந்து பயன்படுத்தி மயங்கி கிடப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. போதைப்பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்
-
Oct 06, 2024 11:41 ISTஸ்டாலின் வருகை
21 ஆண்டுகளுக்குப் பிறகு மெரினாவில் விமான சாகசம் நிகழ்ச்சி தொடக்கம்
மெரினாவில் நடக்கும் விமானப்படை வான் சாகச நிகழ்ச்சிகளைக் காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார்.
-
Oct 06, 2024 10:53 ISTஅடையாறு, திருவான்மியூரில் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை மெரினாவில் நடைபெறவுள்ள விமானப்படை வான் சாகச நிகழ்ச்சியக் காண சென்னை கடற்கரையை நோக்கி படையெடுத்த மக்கள். அடையாறு, திருவான்மியூர், OMR சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
-
Oct 06, 2024 10:43 ISTஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது வாபஸ்
ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதை வாபஸ் பெற்றது விருதுக் குழு
போக்சோ வழக்கில் கைதான நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதை வாபஸ் பெறுவதாக விருதுக் குழு அறிவித்துள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தில் மேகம் கருக்காதா பாடலுக்காக நடன இயக்குநர்கள் ஜானி மாஸ்டம் மற்றும் சதீஷுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
-
Oct 06, 2024 10:22 ISTஇன்னும் சற்று நேரத்தில் விமான சாகச நிகழ்ச்சி
மெரினாவில் விமானங்களின் பிரமாண்ட சாகச நிகழ்ச்சி இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.
விமான சாகச நிகழ்ச்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிடுகின்றனர்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முப்படைகளின் தளபதி அனில் சவுரா பங்கேற்கின்றனர், விமான சாகச நிகழ்ச்சியை காண மெரினாவில் திரண்டு வரும் பொதுமக்கள், காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
-
Oct 06, 2024 09:24 ISTசென்னை கவுன்சிலர் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்
சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் நடவடிக்கை என பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார்.
-
Oct 06, 2024 09:23 ISTமெரினாவுக்கு வரத் தொடங்கிய மக்கள்
மெரினாவில் நடைபெற உள்ள விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண மக்கள் வரத் தொடங்கினர்.
அவசர மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
சென்னை மெரினாவில் நடைபெற உள்ள விமானப்படை சாகச நிகழ்ச்சிக்காக விடிய விடிய நடைபெற்ற ஏற்பாடுகள்.
6500 போலீசார் மற்றும் 1500 ஊர்காவல் படையை சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
-
Oct 06, 2024 09:19 ISTராஜ்நாத் சிங், ஸ்டாலின் பங்கேற்பு
மெரினாவில் நடைபெற உள்ள விமானப்படை சாகச நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.