Latest Tamil News Live : பேரறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை வாலாஜா சாலையிலிருந்து அண்ணா நினைவிடம் வரை திமுக சார்பில் அமைதிப் பேரணி தொடங்கியது.
முதல்கட்ட கொரோனா தடுப்பூசிக்கான செலவில் 82 சதவிகிதத்தை பிஎம் கேர்ஸ் நிதியம் ஏற்றுள்ளது. கடந்த ஜனவரி முதல் வருகிற மார்ச் மாதம் வரை தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது என்று மத்திய அரசின் செலவினங்கள் துறை செயலாளர் டி.வி. சோமநாதன் தெரிவித்தார். மேலும், மத்திய சுகாதார அமைச்சகம் 480 கோடி ரூபாயையும் பி.எம்.கேர்ஸ் இரண்டாயிரத்து 220 கோடியும் பகிர்ந்துகொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் நேற்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் மாநிலங்களவை தொடக்கம். நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் அறிக்கைகள் இன்று தாக்கல் செய்யப்படுகின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Live Blog
Today's Tamil News Live : தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்தியாவின் ஒற்றுமையை எந்த பிரசாரத்தினாலும் தடுக்க முடியாது. உள்நாட்டு விவகாரங்களில் மற்றவர்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. இந்தியா, ஒற்றுமையாக வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
வரும் 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இட நெருக்கடியை தவிர்க்க காலை, பிற்பகல் என வகுப்புகளை பிரித்து நடத்த உத்தரவு
ரயில்வே நிலையங்களை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என தெரிவித்துள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவை உறுப்பினர் சந்தேஷ்வர் பிரசாத் எழுப்பியிருந்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் இந்தியா பாதுகாப்பாக உள்ளது என்பது சாமானியர்களுக்கு தெரியும் என்றும் எங்களின் உள்விவகாரங்களை நாங்கள் தீர்த்துக்கொள்வோம் என்றும் விவசாயிகள் பிரச்சினை குறித்த வெளிநாட்டு பிரபலங்களின் கருத்துக்கு ஜே.பி.நட்டா விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பியிருந்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் திருவாரூர் - காரைக்குடி இடையே ரயில் சேவையை அறிமுகப்படுத்துவது சாத்தியமில்லை என தெரிவித்துள்ளார்.
மின்சார துறை அமைச்சர் பி தங்கமணியை அவரது இல்லத்தில் பாமகவின் நிர்வாகி ஜி.கே. மணி உட்பட முக்கிய பொறுப்பாளர்கள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சந்திப்பு கூட்டத்தில் கூட்டணி தொடர்பாகவும், தொகுதி பங்கீடு தொடர்பாகவும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
பாமகவின் நிர்வாகி ஜி.கே. மணி உட்பட முக்கிய பொறுப்பாளர்கள் அதிமுக அமைச்சர்களுடன் அரசு வேலை மற்றும் கல்வியில் வன்னியார் சமூகத்திற்கான 20% உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் பி தங்கமணியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
சசிகலா 7-ம் தேதி தமிழகம் வருகிறார் அவருக்கு வரவேற்பு கொடுக்க தயாராக இருங்கள் என ஆதரவாளர்களுக்கு டி.டி.வி தினகரன் வேண்டுகோள்விடுத்துள்ளார். மேலும், சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக இருந்து நம்மை வழி நடத்துவார் என்றும் கூறியுள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி ட்வீட் செய்துள்ளார்.
தாய்த்தமிழின் மீது அளவற்ற பற்றும், தீராக்காதலும் கொண்ட தமிழன்னையின் தலைமகன்.
நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு எனும் பெயரை சட்டப்பூர்வமாக்கி, இரு மொழிக்கொள்கையே தமிழகத்தில் தொடரும் என வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த சிறந்த மனிதநேய பண்பாளரின் நினைவு நாளில் அவரை நினைவுகூர்கிறேன். pic.twitter.com/mfk2zG40gr— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) February 3, 2021
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights