Latest Tamil News Live : பேரறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை வாலாஜா சாலையிலிருந்து அண்ணா நினைவிடம் வரை திமுக சார்பில் அமைதிப் பேரணி தொடங்கியது.
முதல்கட்ட கொரோனா தடுப்பூசிக்கான செலவில் 82 சதவிகிதத்தை பிஎம் கேர்ஸ் நிதியம் ஏற்றுள்ளது. கடந்த ஜனவரி முதல் வருகிற மார்ச் மாதம் வரை தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது என்று மத்திய அரசின் செலவினங்கள் துறை செயலாளர் டி.வி. சோமநாதன் தெரிவித்தார். மேலும், மத்திய சுகாதார அமைச்சகம் 480 கோடி ரூபாயையும் பி.எம்.கேர்ஸ் இரண்டாயிரத்து 220 கோடியும் பகிர்ந்துகொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் நேற்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் மாநிலங்களவை தொடக்கம். நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் அறிக்கைகள் இன்று தாக்கல் செய்யப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Tamil News Live : தமிழகத்தில் வருகிற மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், அதிமுக கட்சியைத் தொடங்கிய முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு பாஜக, தேமுதிக உரிமை கொண்டாடி வந்த நிலையில், தற்போது அதிமுகவுக்கு எதிர் துருவமான திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் எம்.ஜி.ஆர்-ஐ பெரியப்பா என்று உரிமை கொண்டாடியுள்ளது தமிழக அரசியலில் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Web Title:Tamil news today live chennai annadurai tamil nadu politics eps stalin farmers
இந்தியாவின் ஒற்றுமையை எந்த பிரசாரத்தினாலும் தடுக்க முடியாது. உள்நாட்டு விவகாரங்களில் மற்றவர்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. இந்தியா, ஒற்றுமையாக வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கட்சியின் கொள்கை மற்றும் குறிக்கோளுக்கு எதிராக செயல்பட்டதால் அதிமுக கர்நாடக மாநில செயலாளர் யுவராஜ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்
வரும் 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இட நெருக்கடியை தவிர்க்க காலை, பிற்பகல் என வகுப்புகளை பிரித்து நடத்த உத்தரவு
இங்கிலாந்து அணியை எளிதாக நினைக்கவில்லை தற்போது இந்த தொடருக்காக முழு கவனம் செலுத்தி வருகிறோம் என இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.
ரயில்வே நிலையங்களை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என தெரிவித்துள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவை உறுப்பினர் சந்தேஷ்வர் பிரசாத் எழுப்பியிருந்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் இந்தியா பாதுகாப்பாக உள்ளது என்பது சாமானியர்களுக்கு தெரியும் என்றும் எங்களின் உள்விவகாரங்களை நாங்கள் தீர்த்துக்கொள்வோம் என்றும் விவசாயிகள் பிரச்சினை குறித்த வெளிநாட்டு பிரபலங்களின் கருத்துக்கு ஜே.பி.நட்டா விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பியிருந்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் திருவாரூர் - காரைக்குடி இடையே ரயில் சேவையை அறிமுகப்படுத்துவது சாத்தியமில்லை என தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் "1% மக்களுக்கு மட்டுமே பயன் தரும் : சாமானிய மக்களுக்கான பட்ஜெட் அல்ல"என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவில் எல்பிஜி சிலிண்டரை பயன்படுத்துவோர் அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல் தெரிவித்துள்ளார்.
டெல்லி வன்முறையில் 115 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட விவசாயிகளின் பெயர் பட்டியல் வெளியீடு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மும்பை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரில், அதிகாரி ஒருவர் தண்ணீருக்கு பதிலாக சானிடைசரை குடித்த குடித்துள்ளார்
“ஆஸ்திரேலியாவில் நடந்தத மறந்துடுங்க.. புதுசா விளையாடுங்க” என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனாவில் இருந்து குணமடைந்து மறுபிறவி எடுத்துள்ளார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
“விவசாயிகளைக் கண்டு மத்திய அரசு பயப்படுகிறதா?” என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
விவசாயிகள் போராட்டம் குறித்து பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை . ஆலோசனையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் பங்கேற்பு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசு பெற்றது உண்மை; கண்ணன் என்பவர் ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசு பெற்றுள்ளார், கோட்டாட்சியர் விசாரணை அறிக்கையில் தகவல்.
அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணை ஆணையத்திற்கு நீட்டிப்பு கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை 2 எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ரத்து விவகாரம் அரசு மற்றும் அண்ணா பல்கலை விளக்கமளிக்க உத்தரவு.மாணவர்கள் பாதிக்காத வகையில் தீர்வு கண்டறிய மத்திய அரசு, அண்ணா பல்கலை.க்கு உத்தரவு.
ஆணவ கொலைகளை தடுக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் காமராஜ் தொற்றில் இருந்து குணமடைந்தார் . கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் அமைச்சர் காமராஜ்.
சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. அதோடு அதிமுக - அமமுக இணைய 100% வாய்ப்பில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மின்சார துறை அமைச்சர் பி தங்கமணியை அவரது இல்லத்தில் பாமகவின் நிர்வாகி ஜி.கே. மணி உட்பட முக்கிய பொறுப்பாளர்கள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சந்திப்பு கூட்டத்தில் கூட்டணி தொடர்பாகவும், தொகுதி பங்கீடு தொடர்பாகவும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
பாமகவின் நிர்வாகி ஜி.கே. மணி உட்பட முக்கிய பொறுப்பாளர்கள் அதிமுக அமைச்சர்களுடன் அரசு வேலை மற்றும் கல்வியில் வன்னியார் சமூகத்திற்கான 20% உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் பி தங்கமணியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகினறனர்.
சசிகலா 7-ம் தேதி தமிழகம் வருகிறார் அவருக்கு வரவேற்பு கொடுக்க தயாராக இருங்கள் என ஆதரவாளர்களுக்கு டி.டி.வி தினகரன் வேண்டுகோள்விடுத்துள்ளார். மேலும், சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக இருந்து நம்மை வழி நடத்துவார் என்றும் கூறியுள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இந்த ஆண்டின் ஹிந்தி வார்த்தையாக பிரதமர் மோடி உபயோகப்படுத்தும் ‘ஆத்மநிர்பார்தா’ எனும் வார்த்தையை தேர்ந்தெடுத்துள்ளது. ‘ஆத்மநிர்பார்தா’ என்றால் "சுயசார்பு" என்று பொருள்.
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி ட்வீட் செய்துள்ளார்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரமும், நாளை கேள்வி நேரம் மற்றும் பூஜ்ய நேரமும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.