Advertisment

Tamil News Today: மக்களவை தேர்தல்: டிஜிபி முக்கிய சுற்றறிக்கை

03-01-2024: இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Police officers transferred

IE Tamil

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

 லாரி ஓட்டுநர்கள் போராட்டம் வாபஸ்

 புதிய குற்றவியல் சட்டத்துக்கு எதிரான லாரி ஓட்டுநர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ். மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தை தற்காலிகமாக கைவிட அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் முடிவு.

 பொங்கல் பரிசு தொகுப்பு - அரசாணை

 பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்க தமிழக அரசு அரசாணை . அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என அறிவிப்பு. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Jan 03, 2024 22:29 IST
    விரைவில் மாயாண்டி குடும்பத்தார் பாகம்2


    ‘மாயாண்டி குடும்பத்தார்' படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் தயாராகிறது.
    இதை முதல் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இயக்குநர் கே.பி.ஜெகன் இயக்குகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.



  • Jan 03, 2024 22:25 IST
    விஜயகாந்துக்கு மரியாதை


     கேப்டன் மில்லர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் விஜயகாந்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது



  • Jan 03, 2024 20:58 IST
    மக்களவை தேர்தல்: டிஜிபி முக்கிய சுற்றறிக்கை

     

    சொந்த ஊர் மற்றும் தொடர்ந்து 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
    அதில்,  உதவி ஆய்வாளர் முதல் ஏடிஜிபி வரை உள்ள அதிகாரிகளின் பட்டியலை தயாரித்து தலைமை அலுவலகத்திற்கு ஜன.10,2024க்குள் அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.



  • Jan 03, 2024 20:44 IST
    புதுச்சேரி: வங்கிக் கணக்கில் பணம்

    புதுச்சேரி மாநில அரசின் இலவச அரிசிக்கு நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கான பணம் இன்று முதல் குடும்ப தலைவி வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது



  • Jan 03, 2024 20:02 IST
    “8 வருட கோரிக்கை“- ஸ்டிரைக் குறித்து சிஐடியூ சவுந்தரராஜன்

     

    "8 வருட கோரிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் இருந்து உரிய பதில் வராததால் வரும் 9ம் தேதி முதல் ஸ்டிரைக்" அறிவிக்கப்பட்டுள்ளதாக சிஐடியூ தொழிற்சங்கத்தை சேர்ந்த சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.



  • Jan 03, 2024 19:31 IST
    ஜன.9, போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்-ஐ தவிர்க்க அன்புமணி வலியுறுத்தல்

    போக்குவரத்து தொழிற்சங்கங்களின்  கோரிக்கைகளை ஏற்க வேண்டும். 9-ம் தேதி முதல் நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தை தவிர்க்க வேண்டும்.
    சென்னையில் இன்று நடைபெற்ற 2ம் கட்ட பேச்சுகள் தோல்வியடைந்து விட்ட நிலையில், 3-ம் கட்ட பேச்சுகளை அடுத்த ஓரிருநாட்களில் அரசு நடத்த வேண்டும்” என பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.



  • Jan 03, 2024 19:09 IST
    போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஜன.9 முதல் போராட்டம்

    வரும் 9ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
    பழைய ஓய்வூதிய திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளது.



  • Jan 03, 2024 18:38 IST
    அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான மனு: நீதிமன்றம் முக்கிய உத்தரவு

    கடந்தாண்டு ஜூன் 23ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக, தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்தும், புதிய முடிவுகளை எடுக்க தடைகோரியும் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 



  • Jan 03, 2024 18:08 IST
    சென்னை புயல் பாதித்த மாவட்டமாக அறிவிப்பு

     

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகியவை புயல் பாதித்த மாவட்டங்களாகவும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளம் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.



  • Jan 03, 2024 17:56 IST
    செந்தில் பாலாஜி வழக்கு: 900 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்ப்பு;  கோர்ட்டில் காவல்துறை தகவல் 

    அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையில் அரசு அதிகாரிகள், போக்குவரத்து ஊழியர்கள் என 900 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இந்த வழக்கை நடத்துவதற்கான அனுமதி தமிழக அரசிடம் இருந்து இன்னும் கிடைக்கவில்லை காவல்துறை தெரிவித்துள்ளது. போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2017ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



  • Jan 03, 2024 17:11 IST
    பிளாஸ்டிக் கவர்களில் உணவுப் பொருட்களை விற்க தடையில்லை - ஐகோர்ட் உத்தரவு

    பிளாஸ்டிக் கவர்களில் உணவுப் பொருட்களை விற்க தடையில்லை - தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார். 2020-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வு உத்தரவு பிறப்பித்தது. பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கெட், எண்ணெய், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2020-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்த வழக்கில் நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வு உத்தரவிட்டுள்ளது. அன்றாட உணவுப் பொருட்களை அடைக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்களை தடை செய்யும் அரசாணையை முழுமையாக அமல்படுத்துவது சாத்தியமில்லாததால், அதை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.



  • Jan 03, 2024 16:46 IST
    சென்னை புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

    47வது சென்னை புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். உடன் அமைச்சர் அன்பில் மகேஷ், மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



  • Jan 03, 2024 16:14 IST
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ்

     


    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் நல ஆணையத்தில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்து துறை இணைந்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்தனர்.



  • Jan 03, 2024 16:07 IST
    அம்மோனியா கசிவு: ஆலையை மூட வலியுறுத்தி மீனவர்கள் போராட்டம்; கலெக்டர் பேச்சுவார்த்தை

    அம்மோனியா வாயு கசிவு விவகாரம் தொடர்பாக ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 8 வது நாளாக போராட்டம் நடத்தி வரும் மீனவ கிராம மக்களிடம் ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே பேச்சுவார்த்தை நடத்தினார்.



  • Jan 03, 2024 15:23 IST
    பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

    சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு



  • Jan 03, 2024 15:07 IST
    மு.க.ஸ்டாலின் அஞ்சலி

    சென்னை கோடம்பாக்கத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வத்தின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

     



  • Jan 03, 2024 14:40 IST
    நிவாரண பொருட்கள் வழங்கிய நடிகர் பிரசாந்த்!



  • Jan 03, 2024 14:37 IST
    ஆத்தூர் வனத்துறை அலுவலகத்தில் விசாரணை

    சாதி பெயரை குறிப்பிட்டு விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பிய விவகாரம்

    ஆத்தூர் வனத்துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

    வனத்துறை அளித்த புகாரின்பேரிலேயே வழக்குப்பதிவு செய்து சம்மன் அனுப்பியதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



  • Jan 03, 2024 14:37 IST
    ஆத்தூர் வனத்துறை அலுவலகத்தில் விசாரணை

    சாதி பெயரை குறிப்பிட்டு விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பிய விவகாரம்

    ஆத்தூர் வனத்துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

    வனத்துறை அளித்த புகாரின்பேரிலேயே வழக்குப்பதிவு செய்து சம்மன் அனுப்பியதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



  • Jan 03, 2024 14:23 IST
    காலம் வரும்போது வெளியிடுவேன்- ஓபிஎஸ்

    எடப்பாடி பழனிச்சாமி தாமாகவே முன்வந்து அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் வரை நாங்கள் நடத்தும் தொண்டர்கள் உரிமை மீட்பு யுத்தம் தொடரும்.

    எடப்பாடி தொடர்பான ரகசிங்களை பொதுவெளியில் இப்போது சொல்ல முடியாது. காலம் வரும்போது வெளியிடுவேன்- ஓபிஎஸ்



  • Jan 03, 2024 14:20 IST
    காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்

    நாகையில் போலீஸ் சீருடையில் பாஜகவில் இணைந்த காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்

    கடந்த 27 ஆம் தேதி, நாகை வெளிப்பாளையம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் போலீஸ் சீருடையில் பாஜகவில் இணைந்தனர்

    இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது சஸ்பெண்ட் செய்து டிஐஜி உத்தரவு



  • Jan 03, 2024 13:58 IST
    கனமழைக்கு வாய்ப்பு

    நாளை நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    "தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அதே பகுதிகளில் நிலவுகிறது"

    வரும் 7ஆம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்

    தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு



  • Jan 03, 2024 13:53 IST
    உரிய அங்கீகாரம் கிடைக்கும்

    அதிமுகவுக்காக உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    தகவல் தொழில்நுட்பப் பிரிவு என்னுடைய நேரடி கட்டிப்பாட்டில் உள்ளது. அதிமுக ஐடி பிரிவினர் எதற்காகவும் யாருக்காகவும் அஞ்ச வேண்டாம். பிற கட்சிகளின் ஐடி விங் போல வெறுப்பை உண்டாக்க வேண்டாம்.

    சமூக வலைத்தளங்கள் வாயிலாக செயல்படும் அதிமுகவினர் யாரையும் மரியாதை குறைவாகவோ நாகரிகமற்ற முறையிலோ விமர்சிக்க கூடாது. அதிமுகவின் சாதனைகளையும்,  திமுக அரசு செய்யும் தவறுகளையும் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்

    - அதிமுக ஐடி பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு



  • Jan 03, 2024 13:23 IST
    இந்தியர் அனைவரும் அறிய வேண்டும்- மு.க. ஸ்டாலின்



  • Jan 03, 2024 13:16 IST
    கலைஞர் மகளிர் உரிமை தொகை

    கலைஞர் மகளிர் உரிமை தொகை கோரி மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களின் வங்கி கணக்கில் இம்மாதமே உரிமை தொகை வழங்கப்பட உள்ளது

      - அரசு அதிகாரிகள் தகவல்



  • Jan 03, 2024 13:15 IST
    லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்க

    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு

    தான் இயக்கும் படங்களில், சட்ட விரோத செயல்கள், வாகனங்களை அதிவேகமாக இயக்குவது போன்ற காட்சிகள் மூலம் இயக்குனர் லோகேஷ், தவறாக வழிகாட்டுவதாக குற்றச்சாட்டு

    இயக்குனர் லோகேஷ் கனகராஜை முறையாக உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் - மனுவில் வலியுறுத்தல்

    வன்முறையை தூண்டும் வகையில் காட்சிகளை எடுத்து திரைப்படமாக்கியதற்கு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் - மனு

    விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகாததால், விசாரணையை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவு



  • Jan 03, 2024 13:14 IST
    ஆசாத்தின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி

    நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் விவகாரத்தில் கைதான நீலம் ஆசாத்தின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி

    இதுபோன்ற  ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து



  • Jan 03, 2024 13:02 IST
    உண்மை வென்றுவிட்டது - அதானி

    ஹிண்டன்பர்க் அறிக்கை வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் உண்மை வென்றுவிட்டது. இந்தியாவின் வளர்ச்சிக்கு எங்களது பணிவான பங்களிப்பு தொடரும். எங்களுக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு நன்றி- தொழிலதிபர் கெளதம் அதானி X தளத்தில் பதிவு 



  • Jan 03, 2024 12:59 IST
    வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்: அமைச்சர்கள் மரியாதை

    சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 265-வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் 



  • Jan 03, 2024 12:40 IST
    விஜயகாந்த் நினைவிடத்தில் சரத்குமார் அஞ்சலி

    விஜயகாந்த் நினைவிடத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அஞ்சலி

    விஜயகாந்த் மறைந்த போது வெளிநாட்டில் இருந்ததால், உடனடியாக வர முடியவில்லை

    தொடர்ந்து 5 படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் விஜயகாந்த் - சரத்குமார்

    விஜயகாந்த் முழுமையாக குணமடைந்து மீண்டு வருவார் என நம்பியிருந்தோம்

    விஜயகாந்த் மறைவை ஏற்று கொள்ள முடியவில்லை - சரத்குமார் உருக்கம்



  • Jan 03, 2024 12:23 IST
    ஜாமின் கோரி செந்தில் பாலாஜி 3-வது முறையாக மனு

    ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக மனு

    அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நோட்டீஸ்

    18-ம் தேதிக்கு மனுவை ஒத்திவைத்து முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி உத்தரவு

    உடல் நிலையை அடிப்படையாக வைத்து ஜாமின் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்ததை அடுத்து முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்



  • Jan 03, 2024 12:11 IST
    கேப்டன் மிகவும் அன்பான நண்பர்: விஜயகாந்த் பற்றி மோடி புகழாரம்

    அனைவருக்கும் சமூக நீதி மற்றும் வளர்ச்சி என்ற விஜயகாந்தின் தொலைநோக்கு சிந்தனையை நனவாக்க நாம் அனைவரும் பாடுபடுவோம். விஜயகாந்த்  உண்மையிலேயே அனைவருக்கும் ஒரு கேப்டனாக இருந்தவர். 

    மற்றவர்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை வாழ்ந்தவர் விஜயகாந்த். தனிப்பட்ட முறையில், கேப்டன் மிகவும் அன்பான நண்பர்

    ஜெயலலிதா, கருணாநிதி என இரு தலைவர்கள் ஆதிக்கம் செலுத்தியபோது அரசியலில் இறங்கியவர் விஜயகாந்த்

    2014 மக்களவைத் தேர்தலில் எங்கள் கூட்டணியில் போட்டியிட்டு 18.5% வாக்குகளைப் பெற்றபோது நான் கேப்டனுடன் இணைந்து பணியாற்றினேன். 

    சேலம் கூட்டத்தில், விஜயகாந்தின் அனல் பறக்கும் பேச்சாற்றலையும், மக்களுடன் அவர் கொண்டிருந்த தொடர்பையும் நான் கண்டேன் - பிரதமர் மோடி

    2014-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தவர் விஜயகாந்த்

    2014 வெற்றிக்குப் பின் NDA தலைவர்கள் சந்தித்தபோது நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அவர் அடைந்த மகிழ்ச்சியை என்னால் மறக்கவே முடியாது"

    விஜயகாந்தின் மறைவு குறித்து பிரதமர் மோடி தன்னுடைய தனிப்பட்ட இணையதளத்தில் அறிக்கை



  • Jan 03, 2024 12:01 IST
    பொங்கல் தொகுப்புடன் ரொக்கத் தொகை? உதயநிதி பதில்

    பொங்கல் தொகுப்புடன் ரொக்கத்தொகை வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். கேலோ இந்தியா நிகழ்வுக்கு அழைப்பிதழ் வழங்க நாளை பிரதமரை சந்திக்கிறேன்.

    அப்போது தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதி பெறுவது குறித்தும் கோரிக்கை வைக்கப்படும் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு



  • Jan 03, 2024 11:57 IST
    முன்னாள் எம்.எல்.ஏ கு.க.செல்வம் மறைவு

    தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ கு.க.செல்வம் உடல் நலக் குறைவால் இன்று  காலமானார். 2021-ல் பா.ஜ.க உடன் இணைந்த கு.க.செல்வம் மீண்டும் 2022-ல் திமுகவுக்கு திரும்பினார். தி.மு.கவின் தலைமை நிலைய செயலாளராக இருந்து வந்தார். 



  • Jan 03, 2024 11:35 IST
    அதானி மீதான வழக்கை செபியே விசாரிக்கும்

    அதானி குழுமம் மீதான வழக்கை செபியே விசாரிக்கும். அதானி குழுமம் மீதான வழக்கை பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (செபி)  விசாரிக்கும். வழக்கின் விசாரணையை செபியிடம் இருந்து மாற்ற எந்த அடிப்படையும் இல்லை. பங்குச் சந்தைகளில் அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு 



  • Jan 03, 2024 11:15 IST
    அதானி குழும மீதான புகார்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு 

    அதானி குழுமம் மீதான முறைகேடு புகார்: சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்கத் தேவையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு 

    அதானி குழுமம் மீதான முறைகேடு புகார் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.   முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்த செபிக்கு அதிகாரம் உள்ளது. 3 மாதத்தில் விசாரணையை நடத்தி முடிக்கவும உத்தரவு 



  • Jan 03, 2024 10:59 IST
    அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகப் போவதில்லை: அரவிந்த் கெஜ்ரிவால்

    முன்றாவது முறையாக அமலாக்கத் துறை சம்மனுக்கு ஆஜராகப்போவதில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். விசாரணைக்கு  ஒத்திழைக்கவே விரும்புவதாகவும், ஆனால் தேர்தலுக்கு முன்பாக, இப்படி சம்மன் அனுப்பப்படுவது ஏன் ? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.



  • Jan 03, 2024 10:39 IST
    பிரதமரை சந்திக்கும் உதயநிதி

    தமிழ்நாட்டில் ஜனவரி 19 – ஜனவரி 31 வரை நடைபெறவுள்ள கோலோ இந்திய விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை பிரதமரிடம் வழங்குவதற்காக இன்று டெல்லி செல்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். நாளை பிரதமர் மற்றும் மத்திய விளையாட்டுதுறை  அமைச்சரை சந்திப்பதாக திட்டம்



  • Jan 03, 2024 10:35 IST
    போக்குவரத்து ஊழியர்களுக்கு அழைப்பு

    போக்குவரத்து ஊழியர்களுக்கு அழைப்பு. போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் அழைப்பு. போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வர வேண்டும். பொங்கல் விடுமுறைக்கு பின் போக்குவரத்து தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்த திட்டம் ஊழியர்களின் கோரிக்கைகள், அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்



  • Jan 03, 2024 10:16 IST
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போராட்டம்

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போராட்டம் .சர்வீஸ் சாலை வழியாக பேருந்துகள் இயக்கப்படுவதால் சிரமம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு பேருந்துகள் செல்வதால் சர்வீஸ் சாலையை பயன்படுத்த முடியவில்லை என‌ மக்கள் புகார் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டம்.



  • Jan 03, 2024 09:53 IST
    மகளிர் உரிமை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த 8 தாசில்தார் மற்றும் 101 துணை தாசில்தார் பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை

    கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த 8 தாசில்தார் மற்றும் 101 துணை தாசில்தார் பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  தமிழ்நாடு முழுவதும் 1.06 கோடி பேருக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது.



  • Jan 03, 2024 09:27 IST
    மக்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு ரூ.3,000 ரொக்கப் பரிசாக தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்

    “பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு ரூ.3,000 ரொக்கப் பரிசாக தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்” - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்



  • Jan 03, 2024 08:49 IST
    இன்று கேரளா செல்கிறார் பிரதமர் மோடி

    இன்று கேரளா செல்கிறார் பிரதமர் மோடி .கேரள மாநிலம் திருச்சூரில் இன்று நடைபெறும் மகளிர் மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் மாநாடு.



  • Jan 03, 2024 08:39 IST
    தமிழ்நாடு, புதுச்சேரி: இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் நாளை, நாளை மறுநாள் என 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு



  • Jan 03, 2024 08:38 IST
    அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

    தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் -இந்திய வானிலை ஆய்வு மையம்



  • Jan 03, 2024 08:33 IST
    சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழை நீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை

    சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழை நீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட மாநகராட்சி திட்டம். வடிகால் பணிகளுக்கு எவ்வளவு  செலவு செய்யப்பட்டிருக்கிறது. எந்தெந்த நிதிகளின் கீழ் பணிகள் நடைபெற்றது. பணிகள் நிறைவடைய எவ்வளவு காலம் ஆகும். வெள்ளம் ஏற்பட்டதற்கான  காரணம் என்ன உள்ளிட்ட தகவல்களுடன் விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தகவல்.



  • Jan 03, 2024 07:45 IST
    பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்தது தமிழ்நாடு அரசு

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும்; இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.



  • Jan 03, 2024 07:44 IST
    சென்னையில் லேசான மழை

    சென்னை : நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் , ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது



  • Jan 03, 2024 07:44 IST
    அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Jan 03, 2024 07:41 IST
    ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ஆக உயர்வு

    ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. 300க்கும் மேற்பட்டோருக்கு காயம். காணாமல் போனவரிகளின் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை.



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment