Advertisment

Chennai flood Highlights: புயல் பாதிப்பு: சிறு, குறு நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்க வேண்டும்: நிதியமைச்சருக்கு முதல்வர் கடிதம்

Chennai Floods 2023, Chennai Rains 2023, Cyclone Michaung, Chennai Weather, Tamilnadu rain Latest Updates - 9 December 2023- மிக்ஜாம் புயல் சென்னை மழை பாதிப்பு லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cyclone Michaung TN CM MK Stalin gave one month salary to Relief Fund Tamil News

Tamil news

chennai flood | Tamil Nadu | Cyclone Michaung : வங்கக் கடலில் உருவான மிக்ஜாம்புயல் காரணமாக கடந்த 3, 4-ம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால், பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. மக்கள் வெளியில் வரமுடியாமல் தவித்து வருகின்றனர். பால், உணவு பொருட்கள் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 450 கோடி, சென்னை வெள்ள தடுப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ரூ. 561.29 கோடி நிதி வழங்கியுள்ளது

சென்னை வெள்ளம் பாதிப்பு தொடர்பான அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

  • Dec 09, 2023 21:10 IST
    சேதமடைந்த சான்றிதழ்களை வழங்க சிறப்பு முகாம் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    வெள்ள பாதிப்பால் சேதமடைந்த சான்றிதழ்களை வழங்க சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், சான்றிதழ்களை பொதுமக்களுக்கு கட்டணமின்றி வழங்க உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வரும் டிச.11ம் தேதியிலும், சென்னையில் டிச.12ம் தேதி மாநகராட்சியின் கோட்ட அலுவலகங்களில் தொடங்கப்படும் முகாம்கள் நடைபெறும் இடம், நேரம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அறிவிக்கப்படும் என அறிவிப்பு



  • Dec 09, 2023 20:24 IST
    சென்னைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த விழுப்புரம் ஆட்சியர்

     விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ₹30 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார்.



  • Dec 09, 2023 19:55 IST
    மிக்ஜாம் புயல் பாதிப்பு; ஆய்வு செய்ய திங்கள் கிழமை சென்னை வரும் மத்திய குழு

    மிக்ஜாம் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை மறுநாள் மத்திய குழு சென்னை வருகிறது. பல்வேறு இடங்களில் 2 நாட்கள் ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் செவ்வாயன்று, தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது



  • Dec 09, 2023 19:35 IST
    தனிநபர் குடும்ப அட்டைக்கும் நிவாரணம் உண்டு; தமிழ்நாடு அரசு

    தனிநபர் குடும்ப அட்டைக்கும் வெள்ள பாதிப்பு நிவாரணம் ரூ.6000 வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது



  • Dec 09, 2023 19:02 IST
    நிவாரண தொகை ரொக்கமாக வழங்கப்படுவது ஏன்? தமிழ்நாடு அரசு விளக்கம்

    மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலு, பெரும்பாலான பகுதிகளில் ஏ.டி.எம்.,கள் வேலை செய்யவில்லை, சில ரேசன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லை எனவே நிவாரணத் தொகை ரொக்கமாக வழங்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது



  • Dec 09, 2023 18:36 IST
    தென்சென்னை பகுதிகளில் குடிநீர் சேவை சீரானது

    மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்சென்னையின் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிகளில் குடிநீர் சேவை சீரானதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்



  • Dec 09, 2023 18:16 IST
    சிறு - குறு நிறுவனங்களுக்கும் மின்கட்டண கால அவகாசம்; அமைச்சர் தங்கம் தென்னரசு

    மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களில் டிசம்பர் 18 வரை மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்தலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.



  • Dec 09, 2023 17:40 IST
    தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, திண்டுக்கல், சென்னை, காஞ்சி, திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, கடலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட 22 மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • Dec 09, 2023 17:17 IST
    சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் அறிவிப்பு

    மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் சேதமடைந்த படகுகளுக்கு ரூ.50 ஆயிரமும், கட்டுமரங்களுக்கு ரூ.15 ஆயிரம், வல்லம் வகை படகுகளுக்கு ரூ.1 லட்சம், வலைகளுக்கு ரூ.15,000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது



  • Dec 09, 2023 16:47 IST
    "பயிர்கள் சேதம்" - ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

     

    "நெல் மற்றும் இறவைப் பாசன பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17 ஆயிரமும், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதத்திற்கு ஹெக்டேருக்கு ரூ.22,500, மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500 நிவாரணம்" என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

    சேதமடைந்த படகுகள், வலைகளுக்கு ரூ.50 ஆயிரமும், கட்டுமரங்களுக்கு ரூ.15 ஆயிரம், வல்லம் வகை படகுகளுக்கு ரூ.1 லட்சம், வலைகளுக்கு ரூ.15,000 நிவாரணம் எனவும் அவர் அறிவித்துள்ளார். 



  • Dec 09, 2023 15:50 IST
    மிக்ஜாம் புயல் வெள்ளத்திற்கு ரூ.6000 நிவாரணம்: ஸ்டாலின் அறிவிப்பு

     

    மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ. 6000 வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த தொகை அந்ததந்த பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    புயல் வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரொக்கமாக வழங்கப்படும் எனவும், மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு 17 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

    எருது, பசு உயிரிழப்புகளுக்கு நிவாரணமாக ரூ.37,500 வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 



  • Dec 09, 2023 15:47 IST
    தண்ணீர் வடியாததால் விவசாயிகள் கவலை

     

    திருவள்ளூர் - பொன்னேரி சுற்றுவட்டார பகுதியில் பயிர்களை  மழைநீர் சூழ்ந்துள்ளது. சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் உள்ளது. அரசு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



  • Dec 09, 2023 15:46 IST
    மணிப்பூர் கலவரம் - 9 பேர் மீது குற்றப்பத்திரிகை

     

    மணிப்பூர் கலவரத்தின்போது பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கில் கவுகாத்தி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் 9 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. "சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகிறோம், புலன் விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என சி.பி.ஐ தெரிவித்துள்ளது. 



  • Dec 09, 2023 15:43 IST
    ஆட்டோ மீது கார் மோதி பயங்கர விபத்து

     


    திருப்பூர், பல்லடம் அடுத்த பனப்பாளையத்தில் ஆட்டோ மீது கார் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. பெண்கள், குழந்தை உட்பட 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

     

     



  • Dec 09, 2023 15:22 IST
    குழந்தைகள் மாயம் புகார் - நீதிமன்றம் உத்தரவு

     

    "குழந்தைகள் மாயம் தொடர்பான புகார்கள் வரும் போது உடனடியாக பெற்றோர்களின் மரபணு  விபரங்களை சேகரித்து டேட்டா வங்கியில் பாதுகாக்க வேண்டும்" என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 



  • Dec 09, 2023 15:04 IST
    மழைநீரில் எண்ணெய் கலப்பு - டிச.12ல் அறிக்கை தர உத்தரவு

     

    சென்னை எண்ணூர் அருகே மழைநீரில் எண்ணெய் கலந்தது தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சி.பி.சி.ல் எண்ணெய் நிறுவனம் வருகிற 12ம் தேதி அறிக்கை தர தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

     



  • Dec 09, 2023 15:00 IST
    தமிழிசை சவுந்தரராஜன் கவிதை

     

    "பள்ளம் தோண்டி வடிகால் இடுகிறோம் என்றார்கள், ஆனால் விடிவு காலம் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள். விடியல் இருக்கும் என்றார்கள், தண்ணீர் வடியல் கூட இல்லையே" என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கவிதை எழுதியுள்ளார். 



  • Dec 09, 2023 15:00 IST
    தமிழிசை சவுந்தரராஜன் கவிதை

     

    "பள்ளம் தோண்டி வடிகால் இடுகிறோம் என்றார்கள், ஆனால் விடிவு காலம் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள். விடியல் இருக்கும் என்றார்கள், தண்ணீர் வடியல் கூட இல்லையே" என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கவிதை எழுதியுள்ளார். 



  • Dec 09, 2023 14:57 IST
    கவிஞர் வைரமுத்து வெள்ள நிவாரண நிதி!

     


    “சக மனிதனின் துயரம் நம் துயரம்; ஒரு லட்ச ரூபாய் வழங்குகிறேன். இனியொரு விதிசெய்வோம்; அதை எந்தநாளும் காப்போம்” கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 



  • Dec 09, 2023 14:04 IST
    இன்ஃபினிட்டி ஃபோரம்: மோடி பேச்சு 

     

    இன்ஃபினிட்டி ஃபோரம் எனப்படும் சர்வதேச நிதிச் சேவை மையங்களின் ஆணைய அமைப்பு 2.0 நிகழ்வில் பிரதமர் மோடி பேசினார். அப்போது  அவர், "ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உற்று நோக்குகிறது. ஒட்டுமொத்த உலகமும் இன்று இந்தியாவை எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கையுடன் உற்றுநோக்கி கொண்டிருக்கிறது" என்று கூறினார். 



  • Dec 09, 2023 13:43 IST
    13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    சென்னை உள்பட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, ராமநாதபுரம் சிவகங்கை , திருநெல்வேலி , தூத்துக்குடி, தென்காசி மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Dec 09, 2023 13:04 IST
    கால்வாயில் ஆவின் பால் பாக்கெட்டுகள்

    தாம்பரத்தில் கால்வாயில் கொட்டப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஆவின் பால் பாக்கெட்டுகள். வெள்ள பாதிப்பால் பொதுமக்கள் பால் பாக்கெட்டுகள் கிடைக்காமல் அவதியுற்ற நிலையில் அதிர்ச்சி 



  • Dec 09, 2023 13:00 IST
    சென்னை மாநகராட்சியில் 20,000 டன் குப்பைகள் அகற்றம்: டி.ஆர்.பி.ராஜா

    சென்னை மாநகராட்சியில் 20,000 டன் குப்பைகள் அகற்றம் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

    சென்னை மாநகராட்சியில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் டிச.6-8 வரை 20,081.22 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா



  • Dec 09, 2023 12:55 IST
    மழை பாதிப்பு: நிவாரண நிதியாக ரூ.1 லட்சம் வழங்கிய வைரமுத்து

    மிக்ஜாம் புயல் - முதலலைச்சர் பொது நிவாரண நிதிக்கு கவிஞர் வைரமுத்து ரூ.1 லட்சம் வழங்கினார்



  • Dec 09, 2023 12:31 IST
    அரசு மழை பாதிப்பை முறையாக கையாளவில்லை: ஈபிஎஸ்

     

    அதிமுக ஆட்சியின் போது மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொண்டோம். அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து ஆய்வு கூட்டங்கள் நடத்தி நடவடிக்கைகள் எடுத்தோம். திமுக அரசு மழை பாதிப்பு பிரச்சினைகளை முறையாக கையாளவில்லை - ஈபிஎஸ்



  • Dec 09, 2023 12:27 IST
    மத்திய இணை அமைச்சர் நேரில் ஆய்வு

    சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு - மத்திய இணை அமைச்சர் நேரில் ஆய்வு

    மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் நேரில் ஆய்வு. காஞ்சியில் புகைப்படங்களைப் பார்த்து விவரங்களை கேட்டறிந்த மத்திய அமைச்சர்  



  • Dec 09, 2023 12:00 IST
    9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

    செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Dec 09, 2023 11:58 IST
    மீட்பு பணிக்காக ரூ.10 லட்சம் வழங்கினார் திருமாவளவன்

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மிக்ஜாம் புயல் மழை மீட்பு பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார்.

    விசிக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளனர்.



  • Dec 09, 2023 11:58 IST
    மிக்ஜாம் புயல் மீட்பு பணி: வி.சி.க சார்பில் ரூ.10 லட்சம்

    மிக்ஜாம் புயல் மழை மீட்பு பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 



  • Dec 09, 2023 11:57 IST
    மழைநீரில் கச்சா எண்ணெய்: விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும்

    சென்னை எர்ணாவூரில் மழைநீரில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம் தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் - தமிழ்நாடு அரசு 

    மழை நீரில் எண்ணெய் கலந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து பசுமை தீர்பாயம் விசாரணை நடத்தி வரும் நிலையில், தமிழக அரசு தரப்பில் வாதம். 



  • Dec 09, 2023 11:54 IST
    கோவிலம்பாக்கம் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்



  • Dec 09, 2023 11:49 IST
    சென்னையில் மழை

    சென்னையில் ஆலந்தூர், பழவந்தாங்கல், ஆதம்பாக்கம், ராமாபுரம், மீனம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது



  • Dec 09, 2023 11:49 IST
    மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

    மிக்ஜாம்புயல் பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெறுகிறது.

    இதில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் அனைத்து துறை செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.



  • Dec 09, 2023 10:56 IST
    எந்த இடத்தில் தாமதமானாலும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்- சென்னை மாநகராட்சி

    தயவு செய்து உங்கள் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்து, கொசு உற்பத்திக்கு உதவும் தண்ணீர், குப்பை மற்றும் பழைய பொருட்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும். சென்னை மாநகராட்சி போர்க்கால அடிப்படையில் நகரம் முழுவதும் தண்ணீர் தேங்குவதை அகற்றி வருகிறது, எந்த இடத்தில் தாமதமானாலும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

     



  • Dec 09, 2023 10:51 IST
    35 இடங்களில் லேசாகத் மழை நீர் தேங்கியுள்ளது- சென்னை மாநகராட்சி

    மழை நீர் தேங்கிய 363 பகுதிகளில் 328 பகுதிகளில் தண்ணீர் வடிந்துள்ளது. மீதமுள்ள 35 இடங்களில் லேசாகத் மழை நீர் தேங்கியுள்ளது.  அனைத்து விதமான சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து சீரானது-சென்னை மாநகராட்சி தகவல்



  • Dec 09, 2023 10:29 IST
    அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

    செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 9  மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Dec 09, 2023 10:22 IST
    தயாநிதி மாறன், சேகர் பாபு பேட்டி

    சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் 1,100 குடும்பங்களுக்கு குடிநீர், அரிசி, ரொட்டி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தயாநிதிமாறன் எம்.பி ஆகியோர் வழங்கினர்.

    Credit: Sun News Twitter



  • Dec 09, 2023 09:49 IST
    ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்

    மிக்ஜாம் புயல் காரணமாக கிண்டி, அம்பத்தூர், பெருங்குடி, திருமழிசை, திருமுடிவாக்கம், குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகள் தண்ணீரில் மூழ்கி போயுள்ளன;

    கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த கனமழையின் போதுகூட நிறுவனங்கள் பாதிக்கும் அளவுக்கு மழை நீர் வரவில்லை;

    இந்த நிலைமை நீடித்தால், பெரு வெள்ளத்தினால் இழப்பு ஏற்படும் என்ற மன நிலைக்கும், வேறு மாநிலங்களுக்கு நிறுவனங்களை மாற்றி விடலாமா என்ற சிந்தனைக்கும் தொழிலதிபர்கள் தள்ளப்படுவார்கள்:

    தொழிற்பேட்டைகளில் தண்ணீர் புகுந்திருப்பதால் ஏற்பட்டுள்ள பாதிப்பினை உடனடியாக களையவும், தொழில் நிறுவனங்களுக்கான இழப்பீட்டினை வழங்கவும் தி.மு.க. அரசை வலியுறுத்திக் கொள்கிறேன்- ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்



  • Dec 09, 2023 09:48 IST
    மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் தொடக்கம்

    மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்ததார்.

    மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொடர்ச்சியாக மருத்துவ முகாம் நடத்தப்படும்- மா.சுப்பிரமணியன்

     



  • Dec 09, 2023 09:30 IST
    உதகையில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு



  • Dec 09, 2023 09:28 IST
    மழை பாதிப்பு குறித்து முதல்வர் இன்று ஆலோசனை

    சென்னை, தலைமைச் செயலகத்தில் மழை பாதிப்பு குறித்து மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.



  • Dec 09, 2023 09:09 IST
    பச்சோந்தியை விட விரைவாக நிறம் மாறும் கமல்- இ.பி.எஸ்.

    எதிர்வரும் நாடாளுமன்றத்தில் திமுக ஆதரவில் எம்.பி. ஆக. கமல் முயற்சிக்கிறார். பச்சோந்தியை விட விரைவாக நிறம் மாறும் தலைவர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியில் அவர் ஒருவர் மட்டுமே இருக்கிறார். கமல்ஹாசனின் கருத்துக்கு செவி சாய்க்க தேவையில்லை- எடப்பாடி பழனிசாமி



  • Dec 09, 2023 08:56 IST
    பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகளை வழங்கினார் ஜவாஹிருல்லாஹ் MLA



  • Dec 09, 2023 08:54 IST
    உண்டியல் பணத்தில் ‘புயல் நிவாரணம்’ அளித்த சிறுவர்கள்... வீடியோ பகிர்ந்த சு.வெங்கடேசன் எம்.பி.



  • Dec 09, 2023 08:52 IST
    வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளிட வேண்டும்- செல்லூர் ராஜு

    மதுரை மாவட்ட அதிமுக சார்பில் சென்னையில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வாகனங்களை வழியனுப்பி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நிவாரணப் பொருட்களை எடுத்து செல்லக்கூடிய வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மழைநீர் வடிகால் பணிக்கு 4 ஆயிரம் கோடி செலவு செய்ததற்கான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளிட வேண்டும் என கூறினார்..



  • Dec 09, 2023 08:50 IST
    சென்னை கொடுங்கையூர் மக்கள் கவலை

    சென்னை கொடுங்கையூர் அருகே மழை நீரோடு கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி உள்ளனர். அதிலிருந்த உற்பத்தியாகும் கொசுக்கள் காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அச்சம் தெரிவித்த அப்பகுதி மக்கள், குடிநீர், பால் கிடைக்காமல், குழந்தைகளை வைத்து கொண்டு கஷ்டப்படுவதாக கூறினர்



  • Dec 09, 2023 08:48 IST
    சென்னையில் 24 மணி நேரமும் செயல்படும் 8 ஆவின் மையங்கள்

    பால் தட்டுப்பாட்டைப் போக்க, சென்னையில் அம்பத்தூர், மாதவரம், அண்ணா நகர், பெசன்ட் நகர், அண்ணா நகர் கிழக்கு, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம், மயிலாப்பூர் ஆகிய 8 ஆவின் மையங்களில் 24 மணி நேரமும் விற்பனை நடைபெறும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

     



  • Dec 09, 2023 08:45 IST
    சென்னை வெள்ளம்- இன்னும் மீளாத நம்மாழ்வார்பேட்டை

    Credit: News Tamil 24*7



  • Dec 09, 2023 08:44 IST
    இளைஞர்கள் களத்தில் இருக்காங்க- அண்ணாமலை பேட்டி

    Credit: News Tamil 24*7



  • Dec 09, 2023 08:35 IST
    மிக்ஜாம் புயல் பாதிப்பு- பொது நிவாரண நிதி வங்கி விவரம் அறிவிப்பு



chennai flood Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment